உடல் எடை மளமளவென குறைய “தேங்காய் எண்ணெய்” ஒன்று போதும்!!
ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கத்தால் உடல் எடை விரைவில் கூடி விடுகிறது.இதனால் எந்த ஒரு வேலைகளையும் செய்ய முடியாமல் சோம்பேறிகளாகி விடுவதால் எளிதில் நோய் பாதிப்பு நம்மை தொற்றி விடுகிறது.உடலில் தேங்கி கிடைக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்புகளை விரைவில் கரைத்து வெளியேற்ற தேங்காய் எண்ணெய் ஒன்று போதும்.
தேங்காய் எண்ணெயில் குறைந்த அளவு கொழுப்பு அமிலங்கள் இருப்பதினால் இவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற பெரிதும் உதவுகிறது.இந்த தேங்காய் உடல் எடை குறைக்க மட்டுமே அல்ல இதயத்தை பாதுகாக்க,வாய் துர்நாற்றம் நீங்க,தலைமுடி வளர்ச்சி,உடல் சூட்டை தணிக்க,சரும பாதுகாப்பு உள்ளிட்ட பலவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.
*அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வரை சூடு படுத்தவும்.பின்னர் அடுப்பை அணைத்து அந்த தண்ணீரை ஒரு கிளாஸுக்கு மாற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் 1 தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி கலந்து கொள்ளவும்.இதை காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு குடிக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் உடல் எடை விரைவில் குறையும்.
*ஒரே மாதத்தில் எடை மளமளவென குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெயை குடிப்பதன் மூலம் உரிய தீர்வு கிடைக்கும்.
*உடலில் உள்ள கெட்ட கொழுப்பு முழுவதும் கரைந்து வெளியேற தினமும் காலையில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் + 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.
*அதேபோல் தேங்காய் எண்ணெயை சமையலில் தொடர்ந்து உபயோகிப்பதன் மூலமும் உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.