60 வயதிலும் 20 வயது நபரின் எனர்ஜி வேண்டுமா? அப்போ இதை தினமும் குடிங்க!

0
421
#image_title

60 வயதிலும் 20 வயது நபரின் எனர்ஜி வேண்டுமா? அப்போ இதை தினமும் குடிங்க!

மூட்டு, முதுகெலும்பு வலிமையாக இருந்தால் எந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கலாம். இந்த சுறுசுறுப்பை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை தயாரித்து குடித்து வரவும்.

தேங்காய்
கசகசா
பால்
சோம்பு
கற்கண்டு

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி 1 ஸ்பூன் கசகசா, 1 ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரியவிடவும்.

பிறகு 1 டம்ளர் பால் சேர்த்து காய்ச்சவும். அடுத்து 2 அல்லது 3 துண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து காய்ச்சி ஒரு டம்ளருக்கு மாற்றி பருகவும். இவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

வெந்தயம்
சுக்கு
ஓமம்

மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு துண்டு சுக்கு, ஒரு ஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி இந்த பொடி 1 1/2 ஸ்பூன் அளவு சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் உடல் வலிமை பெறும்.

பாதாம் பருப்பு
எள்
கற்கண்டு

ஒரு கப் பாதாம் பருப்பு, தேவையான அளவு கற்கண்டு மற்றும் ஒரு கப் கருப்பு/வெள்ளை எள்ளை மிக்ஸியில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.

ஒரு அளவு பாலில் ஒரு ஸ்பூன் அளவு பாதாம் + எள்ளு பொடியை சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். எலும்பு தொடர்பான பாதிப்பு அனைத்தும் நீங்கும்.

Previous article“மஞ்சள் + ஏலக்காய்”.. இப்படி பயன்படுத்தினால் மலச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!
Next articleமங்கு, தேமல், அரிப்பு, அலர்ஜி, படர்தாமரைக்கு தீர்வு தரும் குப்பைமேனி சோப்..!