நெய்வேலி NLC நிறுவனத்தில் அப்ரெண்டீஸ் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.10,000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

0
78
Apprentice Jobs in Neyveli NLC!! Apply now to get Rs.10,000 monthly salary!!
Apprentice Jobs in Neyveli NLC!! Apply now to get Rs.10,000 monthly salary!!

மத்திய அரசு கட்டுபாட்டில் செயல்பட்டு வரும் நெய்வேலி NLC நிறுவனத்தில் காலியாக உள்ள 803 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: NLC இந்திய லிமிடெட்

பணி: அப்ரெண்டீஸ்

காலிப்பணியிடங்கள்: அப்ரெண்டீஸ் பணிக்கு மொத்தம் 803 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பணியிடம்: நெய்வேலி

விண்ணப்பிக்க இறுதி நாள்: நவம்பர் 06

வயது வரம்பு:

அப்ரெண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 14 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

அப்ரெண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கிகாரம் பெற்ற கல்விநிலையத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ITI படித்தவர்களும் அப்ரெண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

மாத ஊதியம்:

அப்ரெண்டீஸ் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.10,000/- ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

விண்ணப்பக்கட்டணம்: அப்ரெண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி விருப்பம் இருக்கும் நபர்கள் www.nlcindia.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவண நகலை இணைத்து நவம்பர் 06 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅடடே.. இந்த ஒரு இலையில் இத்தனை நன்மைகள் அடங்கியிருக்கிறதா? தினமும் ஒன்று சாப்பிடுங்கள் போதும்!!
Next articleஇரத்த சோகை உங்களுக்கு வராமல் இருக்க.. இந்த அரசியில் கஞ்சி செய்து சாப்பிடுங்கள்!!