கோவில் கருவறையில் அமர்ந்து மது அருந்தும் பூசாரி!! சிவன் பக்தர்கள் அதிர்ச்சி!!

0
98
Priest sitting in temple sanctum and drinking wine!! Shiva devotees shocked!!
Priest sitting in temple sanctum and drinking wine!! Shiva devotees shocked!!

Amaravati: ஆந்திரா மாநிலத்தில் பல்நாடு மாவட்டத்தில் வேணுகோண்டா பகுதியில் உள்ள 700 ஆண்டு பழமையான சிவன் கோவிலில் பூசாரி ஒருவர் கோவில் கருவறையில் மது அருந்தி செல்போனில் பேசி கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவன் கோவில் கருவறையில் பூசாரி ஒருவர் மது அருந்தும் வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் சிவன் கோவில் கருவறைக்குள் அமர்ந்துள்ளார். அப்போது அவர் செல் போனில் யாரிடமோ பேசிக் கொண்டு கால் மேல் கால் போட்டு உரையாடுகிறார்.

அவர் கையில் ஒரு வட்டார் பாட்டில் உள்ளது. அந்த வாட்டர் பாட்டிலில் தான் மதுபானம் இருக்கிறது. அந்த மதுவை குடிப்பதை நிறுத்தாமல் பக்தர்கள் வருவது கூட தெரியாமல் போதையில் இந்த செயலை செய்துள்ளார். இதை பார்த்த சிவன் பக்தர்கள் ஒரு பூசாரி கடவுள் முன் இந்த செயல்களை செய்கிறார்கள் என மன வேதனையில் சென்றுள்ளார்கள்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் விசாரணை நடத்தி அந்த கோவில் ஆந்திர மாநிலத்தில் உள்ளது என கூறப்படுகிறது. அந்த கோவிலில் உள்ள பூசாரி பிரசாத் என்பவர் தான் இந்த செயலை செய்துள்ளார் என தெரிய வந்தது. இந்த வீடியோவை பார்த்த மக்கள் அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். மேலும் அவர்கள் மீது கடுமையான வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

Previous articleLIC-யின் இணையதளம் முழுவதும் இந்தி மொழி மாற்றம்!! அரசியல் தலைவர்கள் கண்டனம்!!
Next articleமத்திய தணிகை குழு அறிவிப்பு!! வருகிறது இனி 6 வகையான சென்சார் சான்றிதழ்!!