1985 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் பகல் நிலவு. திரைப்படத்தின் கதை சுருக்கமானது, ஒரு மாஃபியா டான் மீதான அவரது விசுவாசத்திற்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் சகோதரியின் மீதான அவரது அன்புக்கும் இடையில் சிக்கிய கவலையற்ற இளைஞனைப் பற்றியது ஆகும்.
இந்த திரைப்படத்தினை பார்த்துவிட்டு வந்த ரஜினிகாந்த் அவர்கள் மற்ற அனைவரிடமும் மணிரத்தினம் அப்படின்னு ஒரு புதிய பையன் இப்படத்தை இயக்கியுள்ளான். அனைவரும் சென்று திரைப்படத்தை பாருங்கள் என்று கூறியதாக சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
பேட்டி ஒன்று சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக, தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றிய மணிரத்தினம் அவர்கள் ஏன் ஒரு படத்திற்கு மேல் மீண்டும் உங்களுடன் இணைந்து வேலை பார்க்கவில்லை என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் அவர்கள், எல்லாவற்றிற்கும் சூழ்நிலை தான் காரணம். அவர் எங்களுடன் ஒரு படம் பண்ணுவதாக தான் கூறியிருந்தார். அதற்குப் பின் நேரம் அப்படியே கடந்து சென்று விட்டது என்று கூறி இருக்கிறார்.
குறிப்பு :-
பகல் நிலவு என்பது மணிரத்னத்தின் தனிப்பாடல்களைக் கொண்ட முதல் திரைப்படமாகும், அதை படமாக்க வேண்டியிருந்தது, மேலும் அவர் “மைனா மைனா” மற்றும் “நீ அப்போது” வீடியோக்களை ஒன்றன் பின் ஒன்றாக படமாக்கினார். திரைப்படத்தை வணிகரீதியாக மேலும் சாத்தியமாக்க, தியாகராஜன் ஜே. லிவிங்ஸ்டன் மற்றும் குமார் எழுதிய நகைச்சுவை துணைக் கதையைச் சேர்த்தார் , அதில் கவுண்டமணி மலையாளியாக நடித்து மக்களின் மனம் கவர்ந்து உள்ளார்.