திமுக-வின் அடுத்த அரசியல் வாரிசு இவர் தான்.. இதற்காகத் தான் நின்றேன்!! மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம்!!

0
189
he-is-the-next-political-successor-of-dmk-i-stood-for-this-explanation-given-by-district-collector
he-is-the-next-political-successor-of-dmk-i-stood-for-this-explanation-given-by-district-collector

DMK: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காண உதயநிதி மகனுக்கு மரியாதை அளித்தது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி எனது வருணம்தோறும் மிகவும் விமர்சையாக நடைபெறும். இதில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாடு பிடி வீரர்கள் சிறந்த காளை இருட்டு அறையில் இருக்கும் பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக அமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இவர்களின் உடனே உதயநிதியின் மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.

இவரது மகன் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் அமர்வதற்காக அங்கிருந்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோரும் நின்றனர். இவ்வாறு இவர்கள் நின்ற புகைப்படமானது இணையத்தில் வைரலாகி பலரது தரப்பிலிருந்து கண்டனம் எழுந்து வருகிறது. இது ஆட்சி அதிகாரம் என்றும் மேற்கொண்டு பதவி துஷ்பிரயோகம் என பாஜக உள்ளிட்டோர் கூறுகின்றனர். இவ்வாறு இருக்கும் பொழுது இது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது நான் துணை முதல்வர் உதயநிதி நின்றதால் தான் நின்றேன், மற்றபடி வேறு காரணம் இல்லை எனக் கூறியுள்ளார். ஆனால் மூத்த அதிகாரிகள் இடத்தை மாற்றி மகன் மற்றும் அவரது நண்பர்களை முதல் வரிசையில் அமர வைப்பது பதவி துஷ்பிரயோகம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இவ்வாறு செய்வது வருங்கால அரசியல் வாரிசு இவர் தான் என்பதை நிரூபிக்கும் விதமாக உள்ளது. மேற்கொண்டு இந்த நடைமுறை குறித்து பல தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Previous articleமோசடி அழைப்புகளை தடுக்க DoT புதிய திட்டம்!! இனி கவலை வேண்டாம்!!
Next articleஇனி கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் தேவை!! ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு!!