இந்தியா நாடகம் ஆடுகிறது.. நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை!. லஷ்கர் இ தொய்பா விளக்கம்!…

Photo of author

By அசோக்

இந்தியா நாடகம் ஆடுகிறது.. நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை!. லஷ்கர் இ தொய்பா விளக்கம்!…

அசோக்

kashmir

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்ட மற்றும் பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர்.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

இந்நிலையில், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என லஷ்கர் இ தொய்பா தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி வெளியிட்டுள்ள வீடியோவில் ‘காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. பாகிஸ்தானில் அமைதியைக் குலைக்க யாரே முயற்சி செய்கிறார்கள். உலக நாடுகள் இந்தியாவை ஆதரிக்க வேண்டாம். இந்தியா நாடகம் ஆடுகிறது. இந்த தாக்குதலை அவர்களே நடத்தியிருக்கிறார்கள்’ என அவர் பேசியிருக்கிறார்./

பஹல்காம் தாக்குதலுக்கு சைஃபுல்லா கசூரி முளையாக செயல்பட்டர் என குற்றச்சாட்டு வைக்கப்படும் நிலையில்தான் அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.