Cinema: மதுபானம் முறைகேடு சம்பந்தமாக அமலாக்கத்துறை முக்கிய நிர்வாகிகளின் வீடுகளை சோதனை செய்து வருகிறது. அந்த வகையில் திமுகவின் முக்கிய புள்ளியின் நெருங்கிய நண்பராக இருக்கும் ஆகாஷ் ஆறு மாதங்களிலேயே 450 கோடி ரூபாயை சினிமாவில் முதலீடு செய்துள்ளார். அதாவது தனுஷ் நடிக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் 49 வது படம் என்று பலருக்கும் கமிட்மென்ட் கொடுத்துள்ளார். இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஆகாஷ் மனைவி வழி தான் என கூறுகின்றனர்.
இவர் மனைவி தாரணி, முதல்வர் குடும்பத்தின் கொள்ளுப்பேத்தி ஆவார். அதனால் அங்கிருந்து பணம் கொடுக்கப்பட்டு தான் இவர் சினிமாவில் முதலீடு செய்துள்ளதாக கூறுகின்றனர். அந்த வகையில் இவர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் நடிப்பதற்காக 70 கோடி ரூபாய்க்கு அக்ரிமெண்ட் போட்டுள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் பழைய வீடானது கிழக்கு கடற்கரை ஓரத்தில் உள்ளது. அதனை இடித்து விட்டு புதிய வீட்டை 70 கோடி செலவில் கட்டி தருவதாக ஒப்பந்தம் பேசிக் கொண்டுதான் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவே சம்மதம் தெரிவித்தாராம்.
தற்போது அமலாக்கத்துறை சோதனையால் தலைமறைவாக இருக்கும் ஆகாஷ் எப்போது இந்த வழக்கிலிருந்து மீண்டு வருவார்?? எப்போது இந்த படங்கலெல்லாம் திரைக்கு வரும் என்பது தெரியவில்லை. அதேபோல நடனத்தில் பிரபலமான ஸ்ரீலீலாவும் சிவகார்த்திக் கேயனுடன் இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்காக இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது இந்த படத்திற்கு தேவ இல்லாத ஒன்று. தன்னிடமிருக்கும் பணத்தை தண்ணீயாக செலவு செய்துள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.