15 சீட், மத்திய அமைச்சர் பதவி.. “தேமுதிக போடும் ரகசிய டீல்”.. தலையசைக்கப் போகும்பாஜக..

BJP DMDK: சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் இருக்கும் வேலையில் ஆளும் கட்சி முதல் எதிர்கட்சி வரை கூட்டணி குறித்த முடிவில் உறுதியாக இல்லை. குறிப்பாக தேமுதிக-வானது மாநாட்டில் தங்களது கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என கூறியது. ஆனால் தற்போது வரை யாருடன் கூட்டணி எனக் கூறாமல் மறைமுக பேச்சு வார்த்தையே நடத்தி வருகிறது. ஆதிக்கம் இருக்கும் ஒவ்வொரு கட்சியினரிடமும் தேமுதிக பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியானது.

இது ரீதியாக பிரேமலதா விஜயகாந்த் கூட, நாங்கள் ஏன் பேரம் பேசக்கூடாது என்று கூறியிருந்தார். இவ்வாறு இருக்கையில் தேமுதிக பாஜகவிற்கு கொடுத்த நிபந்தனையில், எங்களுக்கு 15 சீட்டுக்கு மேல் வேண்டும் அது மட்டுமில்லாமல் மத்திய அமைச்சரவையில் ஒரு பதவி என டிமாண்ட் வைத்துள்ளனர். ஆனால் இது சாத்தியமில்லாதது என அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருப்பினும் சமரச பேச்சு வார்த்தை மூலம் கூட்டணிக்குள் இணைக்க பாஜக முயன்று வருகிறது.

அதன்படி மத்திய இணையமைச்சர் வேல்முருகன் கூறியதாவது, மேலிடம் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இதன் இறுதி முடிவை தேசிய தலைமை அறிவிக்கும் என கூறியுள்ளார். தேமுதிக வைக்கும் நிபந்தனைகளுக்கு ஏதேனும் ஒன்றையாவது பாஜக செய்து கொடுத்தால் தான் கூட்டணி உறுதியாகும் என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆனால் பாஜக சார்ந்த மற்ற கூட்டணி கட்சிகள் இதற்கு இடம் கொடுக்குமா என்பது கேள்விக்குறிதான்.