இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 90,632 பேருக்கு கொரோனா!!

0
208

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 90,632 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,13,811 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,065 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 70,626 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 73,642. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 31,80,865 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்றைய தேதியில் 8,62,320 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,92,654 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 4,88,31,145 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleகொரோனாவுக்கான தடுப்பூசியை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்
Next articleடி.என்.பி.எஸ்.ஸி தேர்வு கலந்தாய்வு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here