பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பிறப்புறுப்பு வெட்டப்படும்! அதிரடி சட்டம் பிறப்பித்த அரசு!

0
204

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பிறப்புறுப்பு வெட்டப்படும்! அதிரடி சட்டம் பிறப்பித்த அரசு!

கொரோனவைரஸ் தொற்றால்,உலகமே முடக்கப்பட்டிருக்கும் நிலையிலும் கூட இந்த பாலியல் வன்கொடுமை குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை.இதில் நைஜீரியா நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.நைஜீரியா நாட்டில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 800 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன.இவ்வாறு பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதினால் அந்நாட்டில் ஏற்கனவே உள்ள சட்டத்தை மாற்றியமைத்து,கடுமையான சட்டத்தை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே இருந்த சட்டத்தின்படி பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 21 ஆண்டுகள் சிறை தண்டனையும்,குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்துவோருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப் பட்டிருந்தது.தற்போது இந்த சட்டம் அந்நாட்டில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில்,இனி பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு,ஆண்களின் பிறப்புறுப்பு வெட்டப்படும் என்றும்,குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும்,குற்றவாளிகள் பெண்ணாக இருப்பின் அவர்கள் அது கர்ப்பபை அகற்றப்படும் என்றும் அதிரடி சட்டம் பிறப்பித்து உள்ளது அந்நாட்டு அரசு.

அந்நாட்டில் இந்த கடுமையான சட்டத்திற்கு ஒருபுறம் வரவேற்பும் ஒருபுறம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.நம் இந்தியாவிலும் இதுபோன்ற கடுமையான சட்டங்களை கொண்டு வந்தால் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் குறையுமா என்பதைப் பற்றி உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.

Previous articleஇறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Next articleசுயதொழில் ஆரம்பிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு “ஊக்கத்தொகையும் சலுகையும் வழங்கப்படும்”:! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here