சற்று முன் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் பத்திரிக்கையாளர் சந்திப்பு! தமிழகத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

0
194

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக நோய் தடுப்பு ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் இருக்கின்ற நுங்கம்பாக்கத்தில் பத்திரிக்கையாளர்களை அவர் சற்று முன் சந்தித்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக மக்களுக்கு பல்வேறு விஷயங்களை அவர் எடுத்துரைத்து இருக்கின்றார்.

அதாவது தமிழக மக்கள் எல்லோரும் மன வலிமையுடன் இந்த நோயினை எதிர்கொள்ள வேண்டும், மருத்துவர்களின் அறிவுரைப்படி மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், பொதுமக்கள் அரசின் நோய்தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும் அரசியல் கட்சி என்ற எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் இந்த நோய்த்தொற்றை ஒழிப்பதற்கு தமிழக அரசு சிறப்பு ஆலோசனைக் குழு அமைத்து இருக்கிறது. இந்த குழு சிறப்பாக செயல்படும். இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை என்பது நாடு முழுவதும் இருந்திருக்கிறது. இந்த நோய்த்தொற்றின் முதல் அலையின் போது மகாராஷ்டிரா அதிக அளவில் பாதிக்கப்பட்டதைப்போல தற்சமயம் கூட மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவுகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் விஜயபாஸ்கர்.

அத்துடன் மக்கள் இயக்கமாக கொரோனா மாறினால்தான் இந்த நோய் தாக்கத்தில் இருந்து நாம் விடுபட முடியும். அத்துடன் தமிழக அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் தயவுசெய்து ஒத்துழைப்பு தாருங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜயபாஸ்கர்.

Previous articleமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்! தர்மபுரியில் நடந்த அவலம்!
Next articleஉடலில் இது உள்ளோரை அது கண்டிப்பாக தாக்கும்! மக்களுக்கு அடுத்த  அதிர்ச்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here