உங்களின் ஆண்டு வருமானம் ரூ.300000 லட்சத்திற்குள்ளா? இதோ உங்களுக்கான அரசின் கடனுதவி!

0
148
Rs 3 crore in 3 hours! Is it so much income in one day?
Rs 3 crore in 3 hours! Is it so much income in one day?

உங்களின் ஆண்டு வருமானம் ரூ.300000 லட்சத்திற்குள்ளா? இதோ உங்களுக்கான அரசின் கடனுதவி!

கொரோனா தொற்றானது ஆரம்ப கட்டக்காலத்தில் சீனா நாட்டில் வுஹான் என்ற பகுதியில் ஆரம்பித்தது.அத்தொற்றானது படிப்படியாக பிற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.இத்தொற்றின் முதல் அலையில் ரஷ்யா.அமெரிக்கா,பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிகளவு பாதிப்படைந்தது.அந்த பட்டியலில் நாளடைவில் இந்தியாவும் இடம் பெற்றது.கொரோனாவின் முதல் அலையில் இந்தியா பெருமளவு உயிர் சேதத்தை சந்திக்கவில்லை என்றாலும்,கொரோனாவின் இரண்டாவது அலையின் போது அதிகளவு உயிர் சேதத்தை சந்தித்து விட்டது.

அதுமட்டுமின்றி கொரோனாவின் இரண்டாவது அலையின் போது  முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்றி இருந்ததால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும்,போதுமான அளவு மருத்துவ படுக்கை வசதி இன்றியும் மக்கள் அவதிப்பட்டனர்.அத்தோடு கொரோனா தடுப்பூசியை முதலில் மக்கள் செலுத்திக்கொள்ள முன் வராததால் தொற்றானது அதிக விரைவில் பரவ ஆரம்பித்தது.அதனால் கொரோனாவின் இரண்டாவது அலையில் அதிகளவு உயிர்களையும் சந்திக்க நேரிட்டது.

அந்தவகையில் கொரோன தொற்றால் பல உயிர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.அதில் குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.300000 லட்சம் முதல் ரூ. 500000 வரை அரசாங்கம் உதவி செய்து வருகிறது.அதேபோல டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது,பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் அவர்களின் படிப்பிற்கு உதவி தொகை வழங்கப்படும் எனக் கூறினார்

இதுபோலா அனைத்து மாநிலங்களிலும் மக்கள் நலன் கருதி பல உதவிகளை செய்து வருகின்றனர்.அந்தவகையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பங்களுக்கு கடன் உதவி வழங்கப்படும் என குமரி மாவட்டம் ஆட்சியர் அரவிந்த் கூறியுள்ளார்.இவர் கூறியதாவது,தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை முடிந்து அனைவரும் நடிமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துக் கொண்டிருக்கிறோம்.இந்நிலையில் பல குடும்பங்கள் தங்களின் உறவுகளை இழந்து செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் விதமாக தேசிய பொருளாதர வளர்ச்சி கழகம் ஸ்மைல் என்ற திட்டத்தின் அடிப்படையில் கடன் உதவி வழங்குகிறது.யாருக்கெல்லாம் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம் என்று மூன்று வகையாக பிரித்துள்ளனர். அவை பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர். இந்த கடனுதவி பெறுபவர் வீட்டில் யாரேனும் ஒருவர் வருமானம் ஈட்டுபராக இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தை பெற முடியும்.அத்தோடு இந்த திட்டதை பெற நினைப்பவரின் ஆண்டு வருமானம் ரூ.30000 லட்சம் ஆக இருக்க வேண்டும் எனக் கூறினார்.