அடுத்த இரண்டு தினங்களில் கன மழை பெய்ய இருக்கும் முக்கிய மாவட்டங்கள்!

0
228

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழ்நாட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற உதகை, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வைத்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாளைய தினம் கோவை, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதே போல மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற தென்காசி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் மற்றும் வரும் 24ஆம் தேதி உள்ளிட்ட தினங்களில் உதகை, கோவை, போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நகரத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸில் ஒட்டியவாறு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

Previous articleசசிகலா பெருந் தன்மையுடன் செயல்பட வேண்டும்! முன்னாள் அமைச்சரின் பேட்டியால் பரபரப்பு!
Next articleஇன்று இங்கெல்லாம் பவர் கட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here