விரைவில் பாமிற்கு திரும்புவார்! ஷிக்கர் தவான் நம்பிக்கை!

0
208

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது.சூர்யகுமார் யாதவ் 34 பந்தில் 50 ரன்கள் விளாசினார் கேப்டன் ஷிகர் தவான் 36 பந்துகளில் 46 எடுத்திருக்கிறார். இலங்கை அணியின் சார்பாக சமீரா ஹசரன்கா தலா 2 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.

அதன் பின்னர் விளையாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக, இந்திய அணி 38 ரன்னில் அபார வெற்றி அடைந்தது. அசலன்கா அதிகபட்சமாக 26 பந்தில் 44 ரன்கள் விளாசி இருந்தார். புவனேஸ்வர் குமார் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் 2 விக்கெட்டும் க்ருணால் பாண்டியா மற்றும் வருன் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்டியா, உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்ததாவது, 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாக முதலில் நினைத்தேன் அதன் பின்னர் ஆடுகளத்தை கணித்து பார்த்த சமயத்தில் இது நல்ல ரன் என்பதை நான் உணர்ந்து கொண்டேன் என்று தெரிவித்தார்.

புவனேஸ்வர் குமார் பந்துவீச்சு மிக அருமையாக இருந்தது. வருண் சக்கரவர்த்தி தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே மிக நேர்த்தியாக பந்து வீசி இருக்கிறார். சூர்யகுமார் யாதவ் அவர்களின் பேட்டிங் மிக அற்புதமாக இருந்தது. பிரித்வி ஷா சிறந்த பேட்ஸ்மேன் அவர் அடுத்த ஆட்டத்தில் நல்ல பாமிற்கு திரும்புவார் என்று தெரிவித்திருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது இரண்டாவது ஆட்டம் இன்றைய தினம் நடைபெற இருக்கிறது.

Previous article10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிய வேலைவாய்ப்பு!! மாதம் 21,700 ரூபாய் சம்பளம்!!
Next articleநெல்லையா திருப்பூரா? டிஎன்பிஎல் கிரிக்கெட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here