கடந்த 24 மணி நேரத்தில் 6531 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு!

0
248

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகின்றது. இன்று காலை நிலவரத்தின் அடிப்படையில் இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 578 என்ற நிலையில் அதிகரித்து இருக்கிறது. இதுவரை 150 பேர் சிகிச்சை பெற்று ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிகபட்சமாக புதுடெல்லியில் 142 பேருக்கும், இந்த புதிய வகை நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 34 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று கண்டறியப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையின் முடிவில் தெரிய வந்திருக்கிறது என்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியிருக்கிறார். இதன் மூலமாக, அந்த மாநிலத்தில் புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக 19 மாநிலங்களுக்கு இந்த புதிய வகை நோய் தொற்று பரவியிருக்கிறது.

இன்று காலை நிலவரத்தின் அடிப்படையில் மேலும் 6531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 7 ஆயிரத்து 140 ஒரு பேர் சிகிச்சைக்கு பின் இந்த நோயிலிருந்து மீண்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 7 லட்சத்து 57,841 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Previous articleதிமுகவின் உடன்பிறப்புகளை வைத்து உதயநிதி ஸ்டாலின் போடும் பலே திட்டம்! செவி சாய்ப்பாரா முதலமைச்சர்?
Next articleஒமிக்ரானை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை !! அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here