திமுகவின் உடன்பிறப்புகளை வைத்து உதயநிதி ஸ்டாலின் போடும் பலே திட்டம்! செவி சாய்ப்பாரா முதலமைச்சர்?

0
73

முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் தற்சமயம் திமுகவின் இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வருகிறார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்ட அவர் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.

இதனை தொடர்ந்து கட்சியின் இளைஞரணி செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உதயநிதியின் ரசிகர் மன்ற நிர்வாகியான பரம்பரை, பரம்பரையாக கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நெருக்கம்மான குடும்பத்தினராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. அமைச்சரவையில் இடம் இல்லை இருந்தாலும் அனைத்து அமைச்சர்களும் தலைவரைப் போலவே வணங்கி செல்லும் அளவிலேயே உதயநிதி கருதப்பட்டு வருகிறார்.

இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதயநிதி ஸ்டாலின் 234 தொகுதிகளையும் சொந்தம் கொண்டாடும் அளவிற்கு வளரவேண்டும் என்றும், அவருடைய திறமையை ஒரு தொகுதியில் மட்டும் சுருக்கி விடக்கூடாது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அவரும் அவருக்கு இருக்கின்ற திறமைகளும், பயன்படவேண்டும் என்ற காரணத்தால், அவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று முதலில் குரல் எழுப்பினார்.

அடுத்ததாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியின்போது பேசும் சமயத்தில் மூன்று முறை சட்டசபை உறுப்பினராக இருக்கும் தன்னால் கூட மக்கள் பணி செய்ய இயலவில்லை என்றும், சேப்பாக்கம் தொகுதியை உதயநிதி ஸ்டாலின் தாரம் உயர்த்துவார் என்றும் ஸ்டாலின் வழியில் உதயநிதி ஸ்டாலின் செயல்படுவதாகவும், அவரை அமைச்சாக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினார்.

இப்படி சென்று கொண்டிருந்த சூழ்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர் எஸ் ராஜன் ஒரு படி மேலே சென்று உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. தமிழக மக்கள் ஆதரவு பெருகி வருகிறது, ஆகவே அவரை துணை முதலமைச்சராக வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பரிந்துரை கடிதம் எழுதினார். இப்படி நாளுக்கு நாள் திமுகவினரின் கோரிக்கைகள் வந்துகொண்டே இருக்க நேற்று கோவைக்கு வந்த உதயநிதிக்கு ஒரு பிரமாண்ட வரவேற்பு வழங்கி அசத்தி இருந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதுமே வருங்கால துணை முதல்வரே, அமைசசரே வருக, வருக. என்று உதயநிதி அவர்களை புகழ்ந்து சுவரொட்டிகள் ஒட்டி பிரமாண்ட படுத்தி இருந்தார்கள். காலடியில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார். இதில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் அல்லது அமைச்சர் பொறுப்புகளுக்கு என்னை நினைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, அமைச்சர் செந்தில்பாலாஜி, உள்ளிட்டோர் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் எனக்கு அந்த பொறுப்புகளின் மீது எந்தவிதமான ஆசையும் இல்லை அந்த பொறுப்புகளுக்கு நான் ஆசைப்படாதவன் கோவை மாவட்ட மக்களுக்கு குசும்பு மட்டுமல்ல ஒரு சில சமயங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள். இதே கோயம்புத்தூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து இரு நாட்கள் தங்கியிருந்து இந்த மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்தேன். எப்படியும் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பத்து தொகுதியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்ற ஆதங்கம் தெரிவித்திருந்தார்.

தமிழகம் முழுக்க வெற்றி பெற்றோம் கோயம்புத்தூர் மக்களாகிய நீங்கள் எங்களை ஏமாற்றி விட்டீர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏமாற்றி விடாதீர்கள் என்று தெரிவித்தார். திமுகவின் உடன்பிறப்புகள் துணை முதல்வரே, அமைச்சரே, என்று சுவரொட்டிகள் ஒட்டி இருக்கின்ற சூழ்நிலையில், இந்த பொறுப்புகளில் எனக்கு எந்தவிதமான ஆசையும் இல்லை என்று தடாலடியாக அவர் பேசியது திமுகவை சார்ந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அதேநேரம் அனைவரும் அமைச்சர் பொறுப்பில் உதயநிதி அமர்த்த வேண்டும் என்று குரல் எழுப்பிக் கொண்டிருக்க அவரோ எனக்கு இந்த பதவிகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று ஒரு புறம் பேசிக்கொண்டு இருந்தாலும் மறைமுகமாக திமுகவின் உடன் பிறப்புகளையும் மற்றும் முக்கிய நிர்வாகிகளையும், வைத்து தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமாக அவர் நினைக்கும் பதவியை அடைந்து விடலாம் என்று திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.