தெருவில் காய்கறி விற்கும் எம்.எல்.ஏ மனைவி: ஆச்சரியத்தில் பொதுமக்கள்

0
226

தெருவில் காய்கறி விற்கும் எம்.எல்.ஏ மனைவி: ஆச்சரியத்தில் பொதுமக்கள்

மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்தவரின் மனைவி தெருவில் கூவிக்கூவி காய்கறி விற்பனை செய்து வருவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பட்காகோன் என்ற தொகுதியின் 3 முறை எம்எல்ஏவாக இருந்த லோக்நாத் மஹ்தோ என்பவர் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றா தேர்தலிலும் போட்டியிட பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒரு கவுன்சிலரின் மனைவியே நடமாடும் நகைக்கடை போல் பந்தா செய்து வரும் இந்த காலத்தில் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்தவரின் மனைவி இன்றும் தெருவில் காய்கறி விற்பனையை செய்து வருகிறார்

விவசாய குடும்பத்தை சேர்ந்த லோக்நாத் மனைவி மவுலினிதேவி, தங்களுடைய தோட்டத்தில் விளையும் காய்கறிகளை இன்றும் தெருவில் சென்று விற்பனை செய்து வருகிறார். எம்.எல்.ஏ மனைவியாக இருந்தாலும் கடந்த பல வருடங்களாக செய்து வரும் தொழிலை விட மனமில்லை என்றும், இதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்ப செலவை கவனித்து கொள்வதாகவும், கணவரின் சம்பாதித்யத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒருபுறம் கணவர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்க இன்னொரு புறம் அவரது மனைவி தெருத்தெருவாக சென்று காய்கறி வியாபாரம் செய்து வருவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Previous articleதமிழகம் முழுவதும் கனமழை: 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு
Next articleதிமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் ஆலோசகரையே தூக்கிய பாமக நிறுவனர் ராமதாஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here