அதிர்ச்சி! வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை திருச்சியில் பரபரப்பு!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் ஆங்காங்கே கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.அந்த விதத்தில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியிலிருக்கின்ற வளநாடு பகுதியில் 2 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று இரவு 10 மணி அளவில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்ததாக சொல்லப்படுகிறது. அங்கே பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது..

அந்த வீட்டின் அருகே இருந்த மற்றொரு வீட்டிலும் கொள்ளையர்கள் தங்களுடைய கைவரிசையை காட்டியிருக்கிறார்கள். இரு வெவ்வேறு வீடுகளில் ஒட்டுமொத்தமாக 18 பவுன் நகை மற்றும் 15,000 ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள்.

இந்த கொள்ளை தொடர்பாக வளநாடு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டில் கொள்ளையடித்து விட்டு தப்பியோடிய கொள்ளையர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருக்கிறார்கள்.