தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீர் தீ விபத்து!

0
188

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.

பெங்களூரைச் சேர்ந்த, அப்துல் மஜீத் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சென்று விட்டு தனது காரில் பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அண்ணா நகர் அருகே, கார் சென்றபோது காரின் ஒரு பகுதியில் இருந்து புகை வந்ததை கண்டு சுதாரித்துக்கொண்ட மஜீத், காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு நண்பர்களுடன் கீழே இறங்கினார். அவர் காரை விட்டு இறங்கிய சில நிமிடங்களில் கார் முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

Previous articleசென்னையில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதா? ராதாகிருஷ்ணன் விளக்கம்.!
Next articleவன்னியருக்கு துணை முதல்வர் பதவி! அதிமுகவின் அதிரடி வியூகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here