தீராத சளித்தொல்லை? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை பாலோ பண்ணுங்க!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

Photo of author

By Divya

தீராத சளித்தொல்லை? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை பாலோ பண்ணுங்க!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் பலர் சளி மற்றும் இருமல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் சோர்வாக காணப்படும். இதை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் முக்கியம். இல்லையென்றால் சாதரண சளி, இருமல் காய்ச்சலாக மாறி விடும்.

*தீராத இருமல் மற்றும் சளி பாதிப்பு நீங்க சிறிதளவு மிளகை ஒரு உரலில் போட்டு இடித்து பொடி செய்து கொள்ளவும். இதை ஒரு பவுலுக்கு மாற்றி அதில் சிறிதளவு தூயத் தேன் சேர்த்து பருகுவது நல்லது.

*சளி பாதிப்பு நீங்க கோழி சூப் சிறந்த தீர்வாக இருக்கும். நாட்டுக்கோழி, பூண்டு, மிளகு, சீரகம், வெங்காயம் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சூப் சளியை கரைத்து வெளியேற்றுவதோடு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

*சளி, இருமலால் ஏற்படும் தொண்டை வலி மற்றும் எரிச்சலை சரி செய்ய வாசனை நிறைந்த பட்டை சிறு துண்டு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை ஒரு பவுலில் சேர்த்து அதனோடு சிறிதளவு தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

*சூடான பாலில் மஞ்சள் தூள் சிறிதளவு கலந்து பருகுவதன் மூலம் சளி தொல்லை நீங்கும்.
அதேபோல் சூடான நீரில் மஞ்சள் தூள் சிறிதளவு கலந்து பருகினால் சளி, இருமல் பாதிப்பு உடனடியாக நீங்கி விடும்.

*தூதுவளை, துளசி, வெற்றிலை உள்ளிட்டவைகளை இடித்து ஒரு பவுலில் சாறு எடுத்துக் கொள்ளவும். அடுத்து சிறிதளவு தேன் கலந்து பருகினால் சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்டவை நீங்கும்.

*1 தேக்கரண்டி அளவு ஓமத்தை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் தீராத மார்பு சளி பாதிப்பு நீங்கும்.

*சளி மற்றும் இருமலால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். இதை சரி செய்ய 2 முதல் 3 பூண்டை இடித்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது.