உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா மாறியுள்ளார்! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேட்டி !!

0
38
#image_title
உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா மாறியுள்ளார்! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேட்டி
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக மாறியுள்ளார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அவர்கள் புகழ்ந்துள்ளார்.
நேற்று(அக்டோபர்29) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்தியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களின் முடிவில் 229 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெறும் வாய்ப்பை நெருங்கியுள்ளது.
இந்த போட்டியில் இந்திய நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மூன்று விக்கெட்டுகளையும் முகம்மது ஷமி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதையடுத்து பும்ரா அவர்களின் அசத்தலான பந்துவீச்சை பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அவர்கள் புகழ்ந்துள்ளார்.
பும்ரா குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அவர்கள் “இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக மாறியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் பந்துவீச்சில் கட்டுப்பாடும் வேகத்தில் மாறுபாடும் எல்லாம் துல்லியமாக இருக்கின்றது.
உண்மையை கூற வேண்டும் என்றால் என்னை விடவும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்தவர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் விடவும் ஜஸ்பிரித் புகார் அவர்கள் மிகச் சிறந்தவர்” என்று வாசிம் அக்ரம் அவர்கள் கூறியுள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள  ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் சிறப்பாக பந்துவீசி 14 விக்கெட்டுகளை கைப்பற்றி உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கேட்டுகளை கைப்பற்றியவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் ஆடம் சாம்பா 16 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.