அவனோட வேணாம் விட்டுடு! மனைவியை கண்டித்த கணவர்! கடைசியில் நேர்ந்த சோகம்!

0
183

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் என்ற பகுதியில் கள்ளக்காதலுடன் மனைவி தொடர்பு வைத்திருந்ததால் மனைவியை கண்டித்த கணவரை கள்ளக்காதலனும் மனைவியும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டம் அருகே பெத்தநாயக்கன்பாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவருடைய மனைவி பெயர் உதயா. கடந்த 8 ஆம் தேதியன்று ரவி அருகில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். குடும்ப தகராறு காரணமாக ரவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ரவியின் மனைவி உதயா போலீசிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை நடத்தியதில் உதயா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
ரவி ,உதயாவையும் சதீஷ் என்பவரையும் பல முறை கண்டித்தும் இருவரும் கேட்க மறுத்துள்ளனர். உதயாவும் சதீஷூம் சேர்ந்து திட்டமிட்டு ரவியை அருகில் உள்ள கிணற்றில் தள்ளி விட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து உதயா மற்றும் சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Previous articleகிழித்து தொங்க விட்ட போஸ்டர்…! கடும் ஆத்திரத்தில் ஆதரவாளர்கள்…!
Next articleஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here