சளி தொல்லை நீங்க அதிக பவர் கொண்ட தேநீர்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

0
30
#image_title

சளி தொல்லை நீங்க அதிக பவர் கொண்ட தேநீர்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

நன்மை எளிதில் பாதித்து விடும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.அதனால் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம்.இதற்கு வீட்டு வைத்தியத்தை கடைபிடித்து உடனடி தீர்வு காணுங்கள்.

தேவையான பொருட்கள்:-

*கற்பூரவள்ளி இலை – 2

*கருஞ்சீரகம் – 1/4 தேக்கரண்டி

*அரிசி திப்பிலி – 2

*கருப்பு மிளகு – 5

செய்முறை:-

கற்பூரவல்லி இலை இரண்டு எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.அடுத்து அதை பொடியாக நறுக்கி கொள்ளவும்.அடுத்து ஐந்து கருப்பு மிளகு மற்றும் இரண்டு திப்பிலி எடுத்து உரலில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் அதில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள கற்பூரவல்லி,இடித்து வைத்துள்ள மிளகு + திப்பிலி ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பின்னர் 1/4 தேக்கரண்டி கருஞ்சீரகம் எடுத்து கொதிக்கும் நீரில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து அதை ஓரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.

குறிப்பு:-

*இந்த பானத்தை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

*இதில் சுவைக்காக சர்க்கரை,தேன் என்று எதையும் கலந்து பருக கூடாது.

*கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண்கள் பருகக் கூடாது.