பொதுநலனில் யாருக்குமே அக்கறை இல்லை! உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!

0
55

கடந்த 2006 ஆம் வருடம் துணை நடிகையாக இருந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பழனி, ஜெயக்குமார், மணி பாரதி, கோபிநாத், போன்ற 4 பேருக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றம் 10 வருட கால சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இந்த தண்டனையை எதிர்க்கும் விதமாக 4 பேரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த சமயத்தில் கைது மற்றும் செல்போன்கள் பறிமுதல் குறித்த சாட்சியம் வழங்கிய ஜெபராஜ் என்பவர் காவல்துறை தரப்பில் இருப்பு சாட்சி எனவும், அவருடைய சாட்சியத்தை கருத்தில் கொள்ள முடியாது எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும், வலியுறுத்தப்பட்டது.

இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி குற்ற வழக்குகளில் புலன் விசாரணையில் பொதுமக்கள் சாட்சி சொல்வதற்காக முன் வருவதில்லை என்பதை மறந்து விட இயலாது. பொதுநலனில் அக்கறை கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக முன்வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

காவல்துறையில் இருப்பு சாட்சி என்பதற்காக கைது மற்றும் பறிமுதல் குறித்த சாட்சியம் வழங்கிய ஜெபராஜ் சாட்சியத்தை ஒதுக்கி விட இயலாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேருக்கும் எதிராக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்திருந்தாலும் கூட தலைமறைவு குற்றவாளியான சரவணன் தான் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளியிருக்கிறார்.

மனுதாரர்கள் தங்களுடைய இச்சைக்காக சரவணனுக்கு இறையாகி விட்டதாக சுட்டி காட்டிய நீதிபதி 4 பேருக்கும் விதிக்கப்பட்ட 10 வருட கால சிறை தண்டனையை 3 வருடங்களாக குறைத்து தீர்ப்பு வழங்கினார்.