தமிழ்நாட்டில் கரையை கடக்கும் புயல்!! இந்த மாவட்டங்களுக்கு கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

Storm crossing the coast in Tamil Nadu!! Due to heavy rain in these districts, school holidays!!

வங்கக்கடலில் உருவான புயல் வலுவிழந்ததால் நாளை கரையை கடக்கிறது. இதன் காரணமாக சில மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வந்தது. அது சூறாவளி புயலாக உருமாறி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கு பெங்கல் என பெயரிடப்பட்ட நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறாமல் வலுவிழந்தது. இந்த சூழ்நிலையில் வலுவிழந்த … Read more

திட்டம் ரெடி ஆயுதமும் ரெடி!! மோடியை கொலை செய்வது ஒன்றுதான் பாக்கி மும்பை பெண்ணின் பகீர் செயல்!!

The plan is ready and the weapon is ready!! Killing Modi is the only act of Baghi Mumbai girl!!

 பிரதமர் மோடியை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து பெண் ஒருவர் பரபரப்பை கிளப்பியுள்ளார். பிரதமருக்கே கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் மும்பை போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசியுள்ளார். அந்தப் பெண் காவல் நிலைய அதிகாரிகளிடம் பிரதமரை கொலை செய்வதற்கான முழுமையான திட்டமும், அதற்கென பிரத்தியேக ஆயுதமும் தன்னிடம் தயாராக இருப்பதாக கூறி பிரதமர் மோடியை கொலை செய்யப் … Read more

சூர்யாவிற்கு தொடரும் அடுத்தடுத்த சோதனைகள்!! சூர்யா 44 படத்திற்கு வந்த சிக்கல்!!

Further trials for Surya!! Trouble coming to Suriya 44!!

சூர்யா தற்போது நடித்து வரும் சூர்யா 44 படத்திற்கு புதியதொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவிற்கு தற்போது அடுத்தடுத்து சோதனைகள் வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே நடிகர் சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் அவரின் அடுத்த படமான சூரியா 44 படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தினை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் … Read more

உறவு கசந்து விட்டதா?? இதுதான் இப்போ நியூ ட்ரெண்டிங்!! அந்நிய நாட்டு மோகத்தால் அதிகரித்து வரும் கலாச்சார சீர்கேடுகள் வேதனையான சுப்ரிம் கோர்ட்டு!!

The Supreme Court is saddened by the increasing cultural corruption due to the fascination with foreign countries!!

தற்போது அதிகரிக்கும் கலாச்சார சீர்கேடுகள் வேதனை அளிக்கும் வகையில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. உறவில் இருந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி ஆண் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரிட்டிஷார் இந்திய நாட்டை விட்டு வெளியேறி சுதந்திரம் கிடைத்தாலும் அவர்களின் பழக்கவழக்கங்கள் நம் நாட்டை விட்டு வெளியேறவில்லை. அந்நிய நாடுகளின் கலாச்சார மோகமானது தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்களின் உணவு பழக்கவழக்கங்கள், ஆடைகள் அணிதல் … Read more

எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் ரஜினியின் பிறந்தநாள் பரிசு!! 

Rajini's birthday gift to be released with high expectations!!

ரஜினியின் பிறந்தநாள் பரிசாக அப்டேட் ஒன்றினை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 2023 -ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் இவர்களுடன் வசந்த் ரவி, யோகி பாபு,விநாயகன்,போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்த இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் உலகெங்கும் ரூ.600 … Read more

மாதந்தோறும் உதவித்தொகை!! பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Stipend every month!! Important announcement released by the Government Examinations Department for Class 10 students!!

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடைபெறும் தேதியை அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வினை அரசு பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம். இந்த தேர்வானது வருகின்ற ஜனவரி மாதம் 25-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு தமிழ்நாடு … Read more

அவர் முதுகை அவர் திரும்பி பார்க்கட்டும்!! துணை முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர்!! 

Let him turn his back!! Former Minister who responded to the Deputy Chief Minister!!

அதிமுக குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தக்க பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் சேலத்தில் இன்னும் ஒரு ரெய்டு நடத்தினால் போதும். அதிமுக கட்சியையே பாஜகவுடன் இணைத்து விடுவார் இபிஎஸ் என விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பெரிய கட்சியில் சில சமயங்களில் … Read more

5 மாநிலங்களில் 35 நாட்களில் 5 கொலைகள்!! கல்லூரி மாணவியின் கொலை வழக்கில் மிரளவிட்ட  சீரியல் கில்லர்  பற்றிய அதிர்ச்சி பின்னணி!!

5-murders-in-5-days-in-5-states-shocking-events-of-the-serial-killer-that-scares

 கல்லூரி மாணவியின் கொலை வழக்கை விசாரித்த போது போலீசாருக்கு அதிர்ச்சி தரும் தகவலாக சீரியல் கில்லர் செய்த கொலை பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 14-ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் தோழியுடன் மொபைல் போனில் பேசியபடி தனியாக நடந்து சென்ற போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வல்சாத் நகர போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 2000 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சந்தேகத்திற்கு உரிய … Read more

வெளியானது எஸ்கே – 23 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!! எகிறும் எதிர்பார்ப்பு!!

first-look-of-sk-23-released-soaring-expectations

சிவகார்த்திகேயன் முருகதாஸ் கூட்டணியில் எஸ்.கே- 23 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான  ஏராளமான வெற்றி படங்களில் நடித்து  தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி சிவகார்த்திகேயன், சாய்பல்லவி,  நடிப்பில் வெளியான அமரன் மிகப்பெரும் பிளாக்பஸ்டர் வெற்றி படமாக அமைந்தது. 300 கோடி வசூலை தாண்டி இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக … Read more

பொதுமக்களுக்கு உஷார்!! பிற்பகல் ஒரு மணி வரை இந்த மாவட்டங்களில் கனமழை!!

Public alert!! Heavy rain in these districts till 1 o'clock in the afternoon!

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அது சூறாவளி புயலாக உருமாறி தமிழகத்தின் கடலோர பகுதிகளை நெருங்க உள்ளது. இதனால் பிற்பகல் ஒரு மணி வரை குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள சூழ்நிலையில் அதற்கு பெங்கல் என சவுதி அரேபியா பெயரிட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாக்கியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு இது பெங்கல் புயலாக மாறியதும் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்க உள்ளது.

மேலும் இந்த புயலால் சென்னைக்கு அதிக பாதிப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த புயல் சென்னை புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புயலானது கரையை நெருங்கும் சமயத்தில் பலத்த தரைக்காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்க கடலில் உருவான இந்த பெங்கல் புயல் கரையை கடக்கும் முன்னரே வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் காரணமாக கடலூர் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் அதிக கனமழையும் சில இடங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த இரண்டு மாவட்டங்களிலும் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல தமிழகத்தின் சுமார் 15 மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை விழுப்புரம் செங்கல்பட்டு கடலூர் மயிலாடுதுறை நாகை திருவாரூர் புதுக்கோட்டை சிவகங்கை தூத்துக்குடி ராமநாதபுரம் தென்காசி நெல்லை கன்னியாகுமரி தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Read more