திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதிக்கு (வயது 73) கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். லேசான அறிகுறி மட்டும் இருந்ததால் அவர் தற்போது குணமடைந்து … Read more

அனுமதியின்றி தயாரித்த பட்டாசுகள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

அனுமதியின்றி தயாரித்த பட்டாசுகள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

புதுச்சேரி அருகே உரிய அனுமதியின்றி தயாரித்த பட்டாசுகள் வெடித்ததில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுச்சேரி அரியாங்குப்பம், அந்தோனியர் கோவில் வீதியை சேர்ந்தவர் நெப்போலியன். இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நெப்போலியன் அரசிடமிருந்து எந்த அனுமதியும் பெறாமல் வீட்டு அருகே பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை அருகில் இருந்த ஒரு கட்டட வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும் தொழிலில் … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,589 பேர் பாதிப்பு; 70 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,589 பேர் பாதிப்பு; 70 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,86,397 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 70 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,383 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,554 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கடந்த 22ம் தேதி சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்ய சென்ற போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், விஜயகாந்த் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா … Read more

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. ஒருவர் பலி!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. ஒருவர் பலி!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் அருகே குந்தலபட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம்போல் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது, மருந்து கலக்கும் அறையில் செங்குன்றாபுரத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் (வயது 55) என்பவர் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட … Read more

தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை :! வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை :! வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் நிலவி வரும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக , தமிழகத்தின் உள் மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி ,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக புதுச்சேரி, … Read more

இந்திய விவசாயிகளுக்கு மரண தண்டனை வழங்கிய மத்திய அரசு :! ராகுல் காந்தி டுவிட் !!

இந்திய விவசாயிகளுக்கு மரண தண்டனை வழங்கிய மத்திய அரசு :! ராகுல் காந்தி டுவிட் !!

கொரோனா பாதிப்பு இருந்தபோதிலும் , நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரானது கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது.அதில் விவசாயிகளுக்காக வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தனர். இதற்கு பஞ்சாப், ஹரியானா ,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சேர்ந்தவர்கள் ,இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த்ததோடு , விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதனால் … Read more

அக்டோபர் 1 முதல் திரையரங்குகளை திறக்கலாம்..! முதல்வர் அறிவிப்பு!!

அக்டோபர் 1 முதல் திரையரங்குகளை திறக்கலாம்..! முதல்வர் அறிவிப்பு!!

அக்டோபர் 1ம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் திரையரங்குகளை திறக்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில், … Read more

இன்று தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு !

இன்று தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு !

இன்று பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இன்று பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இந்த தர வரிசை பட்டியலானது, செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு கோரியிருந்த நிலையில்,சான்றிதழ் பதிவு பதிவேற்றம் செய்யாத மாணவர்களுக்காக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. கொரோனாவால் மாணவர்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத மாணவர்கள் கால அவகாசம் கேட்டதனை தொடர்ந்து, வெளியிடப்பட்டிருந்த தரவரிசை பட்டியலானது தாமதமாக இன்று  வெளியிடப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் 458 கல்லூரிகளில் … Read more

சீனர்களுக்கு இந்தியா அளித்த வார்னிங்! எங்ககிட்ட வச்சுக்காதீங்கடா!

சீனர்களுக்கு இந்தியா அளித்த வார்னிங்! எங்ககிட்ட வச்சுக்காதீங்கடா!

இந்தியா-சீனா இடையேயான பிரச்சனை கடந்த மே மாதம் முதல் தொடங்கி தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க இருதரப்பு அதிகாரங்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஜூன் 15 ஆம் தேதி அன்று கல்வான் பள்ளத்தாக்கில் 2 இராணுவத்தினரும் மோதிக் கொண்டதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் இந்திய சீன உறவில் கசப்புத் தன்மையும் அதிகரித்தது எனினும் பிரச்சனையை சுமுகமான முறையில் முடிக்கவே சீனா விரும்புகிறாராம். ஆனால் எல்லையில் பிரச்சினையை … Read more