அயோத்தி ராமர் கோவில்: 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்.. கட்டுமான பணிகளில் களமிறங்கும் சென்னை ஐஐடி நிபுணர்கள்..!!

அயோத்தி ராமர் கோவில்: 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்.. கட்டுமான பணிகளில் களமிறங்கும் சென்னை ஐஐடி நிபுணர்கள்..!!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையிலான கற்களால் கட்டப்பட்டு வருவதாக அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்று 40 கிலோ வெள்ளியினால் ஆன செங்கல்லை கொண்டு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து கோவில் கட்டுமான பணிகளும் தற்போது தொடங்கியுள்ளது. அயோத்தி நகரில் மொத்தம் 67 ஏக்கர் நிலப்பரப்பில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் அமைய உள்ளது. நகரா … Read more

எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

அலெக்ஸி நவல்னி என்பவர் ரஷ்ய நாட்டைச் சார்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.  இவர் தனது தேநீரில்  விஷம் கலந்து குடித்ததாக இன்று சைபீரிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது செய்தித் தொடர்பாளரான கிரா யர்மிஷ் டுவிட்டரில் நவல்னி  வென்டிலேட்டரில் கோமாவில் வைக்கப்பட்டுள்ளார் மேலும்        வேண்டுமென்றே விஷம் கொடுத்திருக்கலாம் என்று கூறினார். ஊழல் தடுப்பு பிரச்னைக்காக புதினின் கடுமையான விமர்சகர்களில் ஒருவராக இருந்தார் என்று தெரிவித்தார்.

இப்படிப்பட்ட அதிபரைதான் தேர்வு செய்ய வேண்டும்

இப்படிப்பட்ட அதிபரைதான் தேர்வு செய்ய வேண்டும்

ஜனநாயக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரும், ஆப்பிரிக்க அமெரிக்கருமான கமலா ஹாரிஸ்அறிவிக்கப்பட்டார். . இதன் மூலம் அமெரிக்கத் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் தெற்காசிய, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஆப்பிரிக்க அமெரிக்க பெண் எனும் புதிய வரலாற்றைப் படைத்தார். ஒரு வலிமையான கறுப்பின பெண்ணாக இன்று தான் இருப்பதற்கு முக்கிய காரணம் தனது தாய் ஷாமலா கோபாலன் என குறிப்பிட்டார். என்னை பெற்றெடுத்த போது இந்த நாளை நினைத்திருக்க மாட்டார். … Read more

மோடிக்கு நன்றி தெரிவித்தாரா தோனி?

மோடிக்கு நன்றி தெரிவித்தாரா தோனி?

தோனிக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில்,   வெற்றி கேப்டனாக வலம் வந்துள்ளீர்கள் என கூறியுள்ள பிரதமர் மோடி, உலக அளவில் இந்திய அணியின் பெயரை உச்சத்துக்கு எடுத்துச் சென்றதாக புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வந்த தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதன் மூலம், 130 கோடி மக்களின் மனதையும் வருத்தப்பட வைத்துள்ளதாக  கூறியுள்ளார். தோனியை ஒரு விளையாட்டு வீரராக மட்டும் பார்க்க முடியாது .இதுகுறித்து தோனி கூறும்போது கலைஞர்கள், ராணுவ வீரர், … Read more

எஸ்.பி.பிக்கு அளிக்கும் சிகிச்சை விவரம்!!

எஸ்.பி.பிக்கு அளிக்கும் சிகிச்சை விவரம்!!

பின்னணி  எஸ் பி  பாலசுப்பிரமணியத்துக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் தீவிர அளிக்க அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தாலும் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது: கொரோனா பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். எக்மோ மற்றும் வென்டிலேட்டர் போன்ற உயிர்காக்கும் மருத்துவ சாதனங்களின் மூலம் … Read more

கரீபியன் லீக் இன்றைய போட்டி யார்யாருக்கு?

கரீபியன் லீக் இன்றைய போட்டி யார்யாருக்கு?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று!!

மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று!!

மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அமைச்சர்கள், முதல்வர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது … Read more

புதிய சகாப்தம் படைத்தவர் டோனி

புதிய சகாப்தம் படைத்தவர் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனியை வாழ்த்தி பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி உள்ளார். தோனி  புதிய இந்தியாவின் அடையாளம் ஆவார்.  உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன், கேப்டன், விக்கெட் கீப்பர் என்று வரலாறு டோனியை பெருமைப்படுத்தும். உலகின் சிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர். அவர் இந்தியாவிற்கு கோப்பையை வென்ற தருணம் யாராலும் மறக்க முடியாது. இளைஞர்கள் … Read more

ஒரே வார்த்தையில இயக்குனர்களை தன் வசப்படுத்திய பிரபல நடிகை!!

ஒரே வார்த்தையில இயக்குனர்களை தன் வசப்படுத்திய பிரபல நடிகை!!

தமிழ்சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராசி கண்ணா. இவருடைய  கொழு கொழு  கன்னத்தை ரசிக்கவே, இவருடைய படத்தை ரசிகர்கள் ஆவலோடு  பார்ப்பதுண்டு.  இவர் தெலுங்கில் முன்னணி  நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் அவர் அடங்க மறு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  சுந்தர் சி இயக்கும் அரண்மனை 3 படத்தில் நடிக்கிறார் ராஷி கன்னா. தமிழில் அருவா படத்திற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு சம்பளம் குறைவா இருந்தா … Read more

மக்கள் அதிர்ச்சி அதிபர் திடீர் பதவி விலகலா?

மக்கள் அதிர்ச்சி அதிபர் திடீர் பதவி விலகலா?

மாலி என்ற நாடு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது அங்கு கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 77 சதவீத வாக்குகள் பெற்று இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மீண்டும் 2018-ல் நடந்த தேர்தலிலும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக அந்நாட்டு மக்கள் 2 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாலி ராணுவத்தினரில் ஒரு பிரிவினர் திடீரென கிளர்ச்சியாளர்களாக மாறி புரட்சியில் ஈடுபட்டனர். தலைநகர் பமாகோவை ஆக்கிரமித்த கிளர்ச்சி ராணுவ … Read more