குழப்பத்தில் உள்ள பாஜக

குழப்பத்தில் உள்ள பாஜக

சிவசேனாவுடன் கூட்டணி சேர எந்த திட்டமும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.  பா.ஜ.க. தலைவர்களின் இந்த முரண்பட்ட கருத்துகள் குறித்து சிவசேனா விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் உங்கள் அரசியல் விளையாட்டை மகாராஷ்டிராவில் விளையாட முடியாது. எனவே மாநிலத்தில் உங்களது ஆட்சியை பற்றி ஆசைப்படவும் முடியாது. ஜே.பி.நட்டா மாநில பா.ஜ.க. சொந்த பலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மாநில நன்மைக்காக சிவசேனாவுடன் கைகோர்க்க பா.ஜ.க. தயாராக உள்ளது … Read more

அதிகாலை 2.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் : மக்கள் அச்சம்

அதிகாலை 2.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் : மக்கள் அச்சம்

பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை 2.50 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தேசிய புவியியல் மையம் உறுதி செய்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.1 என்ற கணக்கில் பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 196 பேர் பலி

கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 196 பேர் பலி

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,98,909 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 196 பேர் பலி. இதனால் உயிர்ழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 343 ஆக  அதிகரித்து வருகிறது.  இதுவரை 2.59 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

மாநில மாவட்டங்களுக்கிடையே தனிநபர் சரக்கு போக்குவரத்திற்கு ஈ பாஸ் தேவையில்லை – மத்திய உள்துறை அமைச்சகம்.

மாநில மாவட்டங்களுக்கிடையே தனிநபர் சரக்கு போக்குவரத்திற்கு ஈ பாஸ் தேவையில்லை - மத்திய உள்துறை அமைச்சகம்.

மாநிலங்களில் உள்ள மாவட்டங்களுக்கு இடையேயான எல்லைகளுக்குள் செல்ல இனி கட்டாயம் ஈ பாஸ் தேவை இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து, இது குறித்தான அறிக்கையை வெளியிட்டுள்ளது.   இது குறித்தான மத்திய அரசின் உத்தரவுகள், அந்தந்த மாநிலங்களில் கொரோனா பரவலைக்கருத்தில் கொண்டு மாநிலங்கள் முடிவெடுக்கவும் அதிகாரமளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுமுடக்க நீட்டிப்பு வழிகாட்டுதல்கள் இன்னும் வெளியாகவில்லை.   மத்திய அரசு வெளியிட்டுள்ள தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கைகள் பின்வருமாறு,   … Read more

நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தினால் என்ன? உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு

நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தினால் என்ன? உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு

நீட் தேர்வை ஏன் ஆன்லைனில் நடத்தக்கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. முன்னதாக, கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் அஸீஸ் என்பவர் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுத தயாராகியுள்ளனர். ஆனால் தற்போது கொரோனா மற்றும் பொது முடக்கத்தாலும் உலகமே முடங்கியுள்ள நிலையில் உள்ளது. மேலும் இந்த முடக்கத்தின் தளர்வுகள் எப்போது இயல்பு நிலைக்குத் … Read more

பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா!

பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா!

 பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை உருவாக்கி இந்தியா முழுவதும் ஃபேமஸான இயக்குனர்  எஸ்எஸ் ராஜமௌலி.  உலகத்தையே ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் கொரோனா, இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.  இந்நிலையில், இன்று ராஜமௌலிக்கும், இவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:                               சில நாட்களுக்கு முன்பு எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் லேசான … Read more

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 9 பேர் பலி

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 9 பேர் பலி

நேப்பாளத்தில் பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளமும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பெய்த கன மழை காரணமாக நரஹரிநாத் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் இறந்துள்ளனர். 9 பேரில் 7 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் 58 பேரைக் காணவில்லை என்றும் 87 பேர் காயமுற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் அங்கு வெள்ளத்திற்கும் நிலச்சரிவுக்கும் 160 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திமுக விற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்! சோனியா காந்தி கடிதம்!

திமுக விற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்! சோனியா காந்தி கடிதம்!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார் இதுபற்றி மேலும்,மம்தா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 13 பேருடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவபடிப்பில் ஓபிசி இடஒதிக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி திமுக … Read more

அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் , தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை … Read more

கேம் மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.!

கேம் மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.!

ஊரடங்கு காரணமாக பள்ளி செல்ல முடியாமல் போனதால் வீட்டிலிருக்கும் முழுநேரமும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், தன் பெற்றோர் கண்டித்த காரணத்தால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். கோயம்புத்தூர் மாவட்டம் செல்வபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவருக்கு 12 வயதில் இராமகிருஷ்ணன் என்னும் மகன் ஒருவர் உள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் தற்போது ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுவனுக்கு செல்போனில் கேம் விளையாடுவது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. மேலும், … Read more