கொரோனா வைரஸின் கொடூரம் இன்று ஒரே நாளில் 92 பேர் பலி

கொரோனா வைரஸின் கொடூரம் இன்று ஒரே நாளில் 92 பேர் பலி

கொரோனா பாதிப்பில் கர்நாடக மாநிலம் இந்திய அளவில் 4-வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,503 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,12,504 ஆக உள்ளது.  இன்று 92 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  2,155  ஆக அதிகரித்துள்ளது.  

நயன்தாரா ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி ஆகியோரிடம் 8 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிய தனியார் நிறுவனம்

நயன்தாரா ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி ஆகியோரிடம் 8 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிய தனியார் நிறுவனம்

முறைகேடான, ஆதாரங்கள் அற்ற நிலத்தினை வாங்கி நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோர் ஏமாந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தின் பகுதியில் உள்ள ராவிர்யால் ஏரிக்குச் சொந்தமான நிலத்தினை நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோருக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் ரியல் எஸ்டேட், மற்றும் கட்டுமான நிறுவனம் ஏமாற்றி விற்றுள்ளது.   இதனை அவர்கள் மூவரும் எட்டு கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கியதாகவும், … Read more

ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு

ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்ந்தியாவில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் வெளியிடப்பட்டு  வந்தன. இந்நிலையில் மூன்றாம் கட்ட தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு: இரவு நேர ஊரடங்கு ரத்து … Read more

தமிழகத்திற்கு சேரவேண்டிய ஜிஎஸ்டி தொகையினை மத்திய அரசு கொடுக்க முடியாது! பாஜகவின் மத்திய நிதிச் செயலாளர்

தமிழகத்திற்கு சேரவேண்டிய ஜிஎஸ்டி தொகையினை மத்திய அரசு கொடுக்க முடியாது! பாஜகவின் மத்திய நிதிச் செயலாளர்

ஜிஎஸ்டி மூலம் கிடைத்த தொகையில் மாநிலத்திற்கு தரவேண்டிய பணத்தை மத்திய அரசு தர இயலாது என மத்திய நிதி செயலாளர் கூறியுள்ளார்.   இதுகுறித்து மத்திய அரசின் நிதி செயலாளரான அஜய் பூஷண் பாண்டே, மத்திய அரசின் வருவாய் பகிர்வில் இருந்து மாநிலங்களுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி பங்கினை தற்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க முடியாது என பாஜகவின் எம்.பியான ஜெயந்த் சின்கா தலைமையில் நடைபெறும் நிதி நிலைக் குழுவிடம் கூறியுள்ளார் என அரசின் நெருங்கிய வட்டாரங்கள் … Read more

சுஷாந்த் சிங்கின் ‘தில் பேச்சாரா’: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சுஷாந்த் சிங்கின் ‘தில் பேச்சாரா’: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இவர் கடைசியாக நடித்த படம் “தில் பேச்சாரா” ஆனது   “தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும்.  இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை  டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில்  வெளியிட படக்குழு முடிவு செய்த நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜூலை … Read more

இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்

இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து அனைத்து விதன்மான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கிரிக்கெட்  போட்டியை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஏற்பாடு செய்தன. இதற்க்கு சம்மதம் தெரிவித்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சென்று கடந்த 8-ந்தேதி முதல் விளையாட தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி 2-1 எனத் தொடரை கைப்பற்றியது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் … Read more

போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

இங்கிலாந்தில் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என இங்கிலாந்து பிரதமர் அஞ்சுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் ஆங்காங்கு கொரோனா தொற்று உருவாகி வருவது பிரதமரை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக மூத்த அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், கடந்த ஏழு நாட்களில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை, ஏப்ரலுக்குப் பிறகு அதிகம் பதிவான எண்ணிக்கை என கருதப்படுகிறது. கடந்த ஏழு நாட்களில் … Read more

கொரோனா உருவானது எப்படி?

கொரோனா உருவானது எப்படி?

கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் குழு, அவர்களின் கண்டுபிடிப்புகள் சார்ஸ் கோவ்-2 க்கு வழிவகுக்கும் வைரஸ் பல ஆண்டுகளாக வவ்வால்களில் கவனிக்கப்படாமல் பரவி வருகிறது என்பதைக் காட்டுவதாக கூறுகின்றன. இந்த ஆய்வில் பல குறிப்பிடத்தக்க தாக்கங்கள் உள்ளன என டுவிட்டரில் விருது பெற்ற அறிவியல் எழுத்தாளர் லாரி காரெட் கூறியுள்ளார். சார்ச், கோவ்-2 எங்கிருந்து தோன்றிய என்பதை கண்டறிய உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் குழு 3 … Read more

புதிய கல்விக் கொள்கை விளக்கம்

புதிய கல்விக் கொள்கை விளக்கம்

புதிய கல்விக் கொள்கைக்க்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கல்விக்கொள்கை குறித்து மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது  கல்வித்துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம்  எந்த மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. மத்திய மனித வள அமைச்சகம் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடையவே புதிய கல்விக்கொள்கை உயர்கல்வி அமைப்புகளை … Read more

ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக பதிலடி

ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக பதிலடி

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் பதவிக்காலம் முடிந்தபின் ஆளுநராக பதவியேற்றவர் உர்ஜித் படேல். குறுகிய காலமே பதவியில் இருந்த உர்ஜித் படேல், தனிப்பட்ட காரணங்களால் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். உர்ஜித் படேல் சமீபத்தில் ‘ஓவர் டிராஃப்ட்: சேவிங் தி இன்டியன் சேவர்’ எனும் நூல் எழுதியுள்ளார். அந்தப் புத்தகம் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் ஆச்சார்யா சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த … Read more