மிகவும் அவசரம்! மோடிக்கு முக்கிய கடிதத்தை எழுதிய பிரபலம்!

மிகவும் அவசரம்! மோடிக்கு முக்கிய கடிதத்தை எழுதிய பிரபலம்!

ஊரடங்கு அமலில் இருக்கின்ற மாநிலங்களின் ஏழை மக்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் மத்திய அரசு 6 ஆயிரம் ரூபாய் செலுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மேற்குவங்க மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, பல மாநிலங்களில் தற்போது … Read more

அவர் செய்தது தவறு என்றால் ஸ்டாலின் செய்வதும் தவறு தானே உணர்ந்து கொள்வார்களா திமுகவினர்?

அவர் செய்தது தவறு என்றால் ஸ்டாலின் செய்வதும் தவறு தானே உணர்ந்து கொள்வார்களா திமுகவினர்?

நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வந்ததால் பதினைந்து நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்தது மாநில அரசு. இதன் காரணமாக,வருமானத்தை இழக்கும் ஏழை, எளிய, மக்களுக்கு உதவி புரியும் விதமாக நான்காயிரம் ரூபாய் நிவாரண தொகையை இரண்டு தவணையாக வழங்குவதாகவும், தமிழக அரசு அறிவித்தது. இதில் முதல் தவணையாக 2000ரூபாய் நேற்று முன்தினம் முதல் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிவாரண நிதி வாங்குவதற்காக நியாய விலை கடை முன்பு ஏராளமானோர் நின்று வருகிறார்கள். … Read more

முதலமைச்சர் தலைமையில் புதிய குழு!முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய இடம் அளித்த காரணம் என்ன தெரியுமா?

முதலமைச்சர் தலைமையில் புதிய குழு!முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய இடம் அளித்த காரணம் என்ன தெரியுமா?

நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது. அதோடு தற்சமயம் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு சட்ட சபையில் பங்காற்றும் கட்சிகளின் சட்டசபை உறுப்பினர்கள் உடைய ஒரு ஆலோசனைக் குழுவை தமிழக அரசு சார்பாக அமைத்திருக்கிறார்கள். இது குறித்து தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது அதில் தமிழகத்தின் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டசபை கட்சித் … Read more

கொரோனா நிவாரணம்! தஞ்சையில் மக்கள் அவதி!

கொரோனா நிவாரணம்! தஞ்சையில் மக்கள் அவதி!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியடைந்தது. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற முதல் தினத்திலேயே நோய் தொற்று நிவாரண நிதியாக ஒவ்வொரு அரிசி அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இந்த நிலையில், இதன் முதல் தவணையாக 2000 ரூபாய் கொடுப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.. அதன்படி முதல் தவணை பணம் வினியோகம் செய்ய தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வாங்குவதற்காக நான்கு … Read more

செல்ஃபியால் வந்த விபரீதம்! கிணற்றில் விழுந்த இளைஞர்!

செல்ஃபியால் வந்த விபரீதம்! கிணற்றில் விழுந்த இளைஞர்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இருக்கின்ற சின்ன மோட்டூர் கிராமத்தைச் சார்ந்த சஞ்சீவி என்ற 19 வயது இளைஞர் கேட்டரிங் படித்து வந்திருக்கிறார். நோய் தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்த அவர் வீட்டின் அருகே இருக்கின்ற விவசாயத்திற்கு சென்று இருக்கிறார். அந்த சமயத்தில் ராஜேந்திரன் என்பவரின் விவசாய நிலையத்தில் டிராக்டரில் ஏர் உழுது கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் சஞ்சீவ் அந்த சமயத்தில் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் … Read more

அதிமுகவின் ஊராட்சி மன்ற தலைவர் மீது சரமாரி தாக்குதல்! திமுக பிரமுகர்கள் அட்டூழியம்!

அதிமுகவின் ஊராட்சி மன்ற தலைவர் மீது சரமாரி தாக்குதல்! திமுக பிரமுகர்கள் அட்டூழியம்!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட பெருமாள்பட்டு ஊராட்சியில் அதிமுகவின் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் என்பவர் இன்று காலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட ரூபாய் 2000 பணம் சரியாக வழங்கப்படுகிறதா என்று சோதனை செய்வதற்காக நியாயவிலை கடைக்கு வருகை தந்திருக்கிறார். பெருமாள்பட்டு ஓம்சக்தி நகர் நியாயவிலை கடைக்கு அவர் வருகை தந்த சமயத்தில் அந்த பகுதியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் சீனிவாசனிடம் தகராறு செய்திருக்கிறார்கள். அவர் நான் ஊராட்சி மன்ற … Read more

புதுவையில் அதிமுகவிற்கு ஒரு நியமன எம்எல்ஏ பதவியா? பாஜக அதிரடி முடிவு!

புதுவையில் அதிமுகவிற்கு ஒரு நியமன எம்எல்ஏ பதவியா? பாஜக அதிரடி முடிவு!

சமீபத்தில் நடந்த தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி 6 இடங்களையும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி 10 இடங்களையும், கைப்பற்றி கூட்டணி ஆட்சியை அமைத்தது. பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சென்ற ஆறாம் தேதி இரவு பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்கள் பட்டியலை முதலமைச்சர் ரங்கசாமி இடம் கொடுத்து இருக்கின்றார். ஆனால் ரங்கசாமி நான் மட்டும் முதலில் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்கிறேன். … Read more

வருகிறது பெரும் புயல்! தப்புமா தமிழகம்!

வருகிறது பெரும் புயல்! தப்புமா தமிழகம்!

தென்கிழக்கு அரபிக்கடலின் பகுதியில் உருவாகியிருக்கின்ற காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற இடங்களில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி இன்று புயலாக உருவாகி இருக்கிறது. அரபிக் கடலில் உருவாகியிருக்கும் இந்த புயலுக்கு டவ் தே என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று 18ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக, தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, … Read more

பாட்டி வீட்டிற்கு சென்ற பேரக்குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாப சாவு; காரணம் என்ன தெரியுமா?

பாட்டி வீட்டிற்கு சென்ற பேரக்குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாப சாவு; காரணம் என்ன தெரியுமா?

தர்மபுரி மாவட்டத்தில் இருக்கின்ற பாப்பிரெட்டிப்பட்டி கௌரிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் இவர் விவசாயியாக இருக்கிறார். இவருடைய மனைவி இளையராணி இந்த தம்பதியருக்கு ராதிகா என்ற 5 வயது மகள் தனுஸ்ரீ என்ற மூன்று வயது மகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் இருந்து வருகிறார்கள். தர்மபுரி பகுதியில் இருக்கின்ற கோடலு மார்ரம்பட்டி என்ற பகுதியில் சிறுமிகளின் பாட்டி சத்தியவாணி தன்னுடைய வீட்டிற்கு சிறுமிகளையும் மற்றும் அந்த சிறுவனையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், … Read more

நாளை முதல் குறைகிறது ஆவின்பால் விலை பொதுமக்கள் நிம்மதி!

நாளை முதல் குறைகிறது ஆவின்பால் விலை பொதுமக்கள் நிம்மதி!

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் கடந்த ஏழாம் தேதி பதவியேற்றதிலிருந்து பொதுமக்களுக்கு தேவையான பல நல்ல திட்டங்களை அறிவித்து வருகிறார். முதல்கட்டமாக கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் மற்றும் ஆவின் பாலின் விலை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் போன்ற பல அறிவிப்புகளை தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் அறிவித்திருந்தார். அதன்படி பதவியேற்ற அன்றே ஐந்து முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். அதில் ஆவின் பால் விலையை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்பதும் … Read more