சீசன் துவங்கியதையடுத்து கிருஷ்ணகிரிக்கு பண்ருட்டி பலாப்பழம் வரத்து அதிகரிப்பு!!

சீசன் துவங்கியதையடுத்து கிருஷ்ணகிரிக்கு பண்ருட்டி பலாப்பழம் வரத்து அதிகரிப்பு!!

சீசன் துவங்கியதையடுத்து கிருஷ்ணகிரிக்கு பண்ருட்டி பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது. சாலையோர கடைகளில் பலாப்பழ விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை பலாப்பழ சீசன் இருக்கும். அப்போது பண்ருட்டி, கொல்லிமலை மற்றும் கேரள, கர்நாடக மாநிலங்களிலிருந்து கிருஷ்ணகிரிக்கு பலாப்பழ வரத்து அதிகரிக்கும். இந்நிலையில் தற்போது கிருஷ்ணகிரி, பெங்களுரு ரோடு சாலையோர கடைகளில் பலாப்பழ வரத்து அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுற்று வட்டாரங்களில் விளையும் பலாப்பழம், தனித்த சுவை கொண்டது. தற்போது பண்ருட்டி … Read more

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி!

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி!

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு. நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முழக்கமிட்ட செல்வகுமார். கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பா.ஜ.க தொழிற்பிரிவு மாநில துணைதலைவராக இருந்து வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்தும், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் விதமாகவும் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து … Read more

டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும்- ஹசன் மெளலானா!!

டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும்- ஹசன் மெளலானா!!

கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தவிர்க்க டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என ஹசன் மெளலானா வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா, டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தைகளில் மது விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும். ஒரு மணி நேரம் நீட்டித்தால் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவது தவிர்க்கலாம் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கு … Read more

சென்னைக்கு 6 துணை மின் நிலையங்கள்!

சென்னைக்கு 6 துணை மின் நிலையங்கள்!

சென்னைக்கு 6 துணை மின் நிலையங்கள்!! சென்னை பெருநகர் மற்றும் சுற்றுள்ள பகுதியினுடைய மின் தேவை பூர்த்தி செய்ய 400 கிலோ வாட் 6 துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஆவடி தாம்பரம் மாநகராட்சிகளில் தொழில், வணிகம், கட்டுமானம், நகரமயமாக்கல், மற்றும் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளும், தகவல் தொழில்நுட்ப மையங்கள், மின்சாரமான வாகனங்கள் போன்ற பன்முக வளர்ச்சியால் மின் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, … Read more

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை. நீதிமன்றத்திற்கு அழுத்தம் தரும் வகையில் மாநில, தேசிய தலைவர்களை அழைத்து வந்து மேல்முறையீடு மனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ளார். ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புகார்தாரர் புர்னேஷ் மோடி சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் பதில் மனு. மேலும் அந்த பதில் மனுவில், கருத்து சுதந்திரம், விமர்சனம் என்ற பெயரில் பிறரை புண்படுத்தும் வகையில் ராகுல் … Read more

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சஞ்சய் தத் பெங்களூரில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது விபத்து!

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சஞ்சய் தத் பெங்களூரில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது விபத்து!

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சஞ்சய் தத் பெங்களூரில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது விபத்து. காயம் ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பை ரத்து செய்து சஞ்சய் தத் மும்பை புறப்பட்டுச் சென்றார் கே.டி என்ற கன்னட படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு மாகடி சாலையில் உள்ள சிகேஹல்லி நடைபெற்று வந்தது. இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இந்த நிலையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் … Read more

வேலூரில் 102 டிகிரியில் கொளுத்திய வெயில்!! பொதுமக்கள் அவதி!!

வேலூரில் 102 டிகிரியில் கொளுத்திய வெயில்!! பொதுமக்கள் அவதி!!

வேலூரில் 102 டிகிரியில் கொளுத்திய வெயில்!! பொதுமக்கள் அவதி!! வேலூரில் இன்று 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. செல்சியஸ்லில் 38.9 டிகிரி ஆகும். நேற்று 100.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகிய நிலையில் 2வது நாளாக இன்று 102 டிகிரி வெப்பம் பதிவாகி இருக்கிறது. வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறனர்.

செய்தித்துறை அமைச்சர் பெயர் என்ன என கேட்ட காங் உறுப்பினர்!!

செய்தித்துறை அமைச்சர் பெயர் என்ன என கேட்ட காங் உறுப்பினர்!!

செய்தித்துறை அமைச்சர் பெயர் என்ன என கேட்ட காங் உறுப்பினர்!! சட்டப்பேரவையில் எரிசக்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா, தனது உரையின் துவக்கத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர்கள், முதலமைச்சர் , மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார். அப்போது செய்தித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க முற்பட்ட போது, அருகில் இருந்த உறுப்பினரிடம், செய்தித்துறை அமைச்சர் பெயர் என்ன என கேட்ட போது அவையில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!!

தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை!!

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை. ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சுமார் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அதில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக வந்த ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தைச் சேர்ந்த நத்தம் கிராமம் பகுதியில் உள்ள தெளபீக் ராஜா என்பவர். இன்று … Read more

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்_நீர்வளத்துறை அமைச்சர்!!

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்_நீர்வளத்துறை அமைச்சர்!!

“நீர்நிலைப் புறம்போக்குகளில் வீடு கட்டி வாழ்வோரை தொல்லை செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இல்லை : ஆனால் நீர்நிலைப் புறம்போக்குகளை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்”. வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் கருத்துக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதில். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி ஹசன் மௌலானா ,சென்னையில் உள்ள 6 முக்கிய ஏரிகளில் 90 சதவீதம் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. நீர்நிலை புறம்போக்கு பகுதியில் இருப்பவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை … Read more