தமிழுக்கு தலை வணங்கு; அதிகாரிகளுக்கு கமலஹாசன் கண்டனம்!

தமிழுக்கு தலை வணங்கு; அதிகாரிகளுக்கு கமலஹாசன் கண்டனம்!

நேற்று, நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது எழுந்து நிற்காத சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் போது எழுந்து நிற்க மறுப்பது, விதி மீறல் மட்டுமல்ல; மாநிலத்தின் தாய்மொழியை அவமதிக்கும் செயல் என தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை … Read more

வெடித்து சிதறிய திமிங்கலம்; சாலை எங்கும் ரத்த வெள்ளம்!

வெடித்து சிதறிய திமிங்கலம்; சாலை எங்கும் ரத்த வெள்ளம்!

உலகில் நடக்கும் சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், விசித்திரமான சம்பவங்கள் பல நூற்றாண்டுகள் நினைவில் நிற்கும். 18 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் ரத்த வெள்ளம் ஏற்படும் வகையிலான சம்பவம் நடந்தது. 18 ஆண்டுகளுக்கு முன்பு, பல நூற்றாண்டுகளாக நினைவில் இருக்கும் வகையில், நேற்று தைவானில் ஒரு சம்பவத்தில் சாலை வழியாக சென்றவர்கள் மீது திமிங்கலத்தின் ரத்தம் மற்றும் உள்ளுறுப்புகள் விழுந்ததால் பீதியில் அலறிக் கொண்டு ஓடினர். திமிங்கலத்தின் உடல் வெடித்து சிதறியதால் பீதி அடைந்த பாதசாரிகள் மற்றும் வாகன … Read more

35.89 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

35.89 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில்,சற்றுமுன் வெளியான தகவலின்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35.89 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 358,984,694 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 5,633,311 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 284,494,358 பேர் மீண்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. … Read more

வந்துவிட்டது கொரோனாவின் அடுத்து திரிபு! ஒமைக்ரானை விட வேகமாக பரவுகிறதா?

வந்துவிட்டது கொரோனாவின் அடுத்து திரிபு! ஒமைக்ரானை விட வேகமாக பரவுகிறதா?

கொரோனா வைரஸின் ஒமைக்ரான் மாறுபாடு உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தினம் 2 லட்சத்துக்கு அதிகமான தொற்று பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதற்கிடையில் உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸின் அடுத்த மாறுபாடு மிகவும் வேகமாக பரவும் என குறிப்பிடுகிறது. கொரோனாவின் ஒமைக்ரான் மாறுபாடு டெல்டா மாறுபாட்டை விட குறைவான ஆபத்தானது என்றாலும், இதுவரை இல்லாத வகையில் மிகவும் வேகமாக பரவும் தொற்று நோயாக கூறப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் covid-19 தொடர்பான ஆய்வு … Read more

மார்ச் முதல் பள்ளிகள் திறப்பு- பச்சைக்கொடி காட்டிய அரசு!

மார்ச் முதல் பள்ளிகள் திறப்பு- பச்சைக்கொடி காட்டிய அரசு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் மார்ச் மாதம் முதல், அனைத்து மாணவிகளும் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தாலிபான் அமைப்பு. தாலிபான் அமைப்பின் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசு செயல்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் பள்ளிகளுக்கு மாணவிகள் செல்ல தடை விதித்தனர் மேலும், பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது … Read more

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, வருகின்ற 26. 01.2022 , 27. 01. 2022; கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களான ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மற்ற … Read more

பிரிட்டன் செல்வோருக்கு அரிய வாய்ப்பு -அரசு சூப்பர் அறிவிப்பு!

பிரிட்டன் செல்வோருக்கு அரிய வாய்ப்பு -அரசு சூப்பர் அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திய, வெளிநாட்டு பயணிகள் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிக்கப்படுவார்கள் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய, நாடான பிரிட்டனில் கரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது. இதில் அடுத்த மாதம் 11ம் தேதி வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழுமையாக, கரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணியர் பிப்ரவரி மாதம் 11ம் தேதி முதல் எவ்வித பரிசோதனையும் … Read more

ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்- ஆந்திராவில் பரபரப்பு!

ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்- ஆந்திராவில் பரபரப்பு!

ஆந்திராவில், திருப்பதி அருகே உள்ள சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜெகன்மோகன் ரெட்டி அரசை கண்டித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்துகின்றனர். சித்தூர் காந்தி சிலை அருகே இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக வந்தனர். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலின்போது, மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார். அப்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வேன் … Read more

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை; 20 நிமிடத்தில் முடிவு!

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை; 20 நிமிடத்தில் முடிவு!

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனையை செய்யும் முறையை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. மிகவும் குறைந்த கட்டணத்தில், வெறும் 20 நிமிடத்தில் முடிவை தெரிந்து கொண்டு விடலாம் என கூறப்படுகிறது. உலக அளவில், கொரோனா பரிசோதனைக்கு ஆர்.டி.பி.சி.ஆர் முறை உள்ளது. ஆனால் இதன் முடிவு வருவதற்கு பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில், வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செல்போன் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான புதிய முயற்சியை செய்துள்ளனர். ஹார்மனி கொரோனோ பரிசோதனை என்று அழைக்கப்படுகிற இந்த … Read more

தேசியக்கொடி அவமதிக்கப்பட்ட விவகாரம்; அமேசான் மீது வழக்கு பாய்கிறதா?

தேசியக்கொடி அவமதிக்கப்பட்ட விவகாரம்; அமேசான் மீது வழக்கு பாய்கிறதா?

குடியரசு தினத்தை முன்னிட்டு, அமேசானில் மூவர்ணக்கொடி அச்சிடப்பட்ட பல பொருட்கள் வெகுவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, அமேசான் நிறுவனம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா நிறுவனம், தேசியக்கொடி அச்சிடப்பட்ட சாக்லேட், கோப்பைகள், ஆடைகள், காலணிகள், மற்றும் கீ செயின் போன்றவற்றை விற்பனைக்காக புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியது. குடியரசு தினத்தை முன்னிட்டு, அமேசானில் மூவர்ண அச்சுடன் கூடிய பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் … Read more