Home Blog Page 187

கருவளையம் மாயமாக.. முகம் தங்கம் போல் மின்ன இந்த ஒரு அதிசய வேர் போதும்!!

0

உங்கள் முகத்தில் வந்துள்ள கருவளையம்,கருமை நீங்கி எப்பொழுதும் முகம் பிரகாசமாக இருக்க வெட்டி வேர்,மஞ்சள் தூள்,ரோஸ் வாட்டர் போன்ற பொருட்களை கொண்டு பேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வெட்டி வேர்
2)பசும் பால்
3)கஸ்தூரி மஞ்சள்
4)ரோஸ் வாட்டர்

செய்முறை விளக்கம்:-

முதலில் 20 கிராம் வெட்டி வேரை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கிண்ணம் ஒன்றில் இந்த பொடியை கொட்டி கொள்ள வேண்டும்.

பிறகு அதில் காய்ச்சாத பசும் பால் கால் தேக்கரண்டி ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து கால் தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.

பிறகு அரை தேக்கரண்டி ரோஸ் வாட்டர் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.இந்த பேஸ்டை முகம் முழுவதும் தடவி ஸ்க்ரப் செய்ய வேண்டும்.குறிப்பாக கண்களை சுற்றி இந்த பேஸ்டை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.

இவை நன்றாக உலர்ந்த பிறகு தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.இப்படி செய்தால் கருவளையம,முகக் கருமை நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள:-

1)வெட்டி வேர்
2)கோரைக்கிழங்கு
3)மஞ்சள் தூள்

செய்முறை விளக்கம்:-

முதலில் வெட்டி வேர்,கோரைக்கிழங்கை வெயிலில் நன்றாக காய வைத்து பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதில் கால் தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்து கொள்ளுங்கள்.இந்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு கிண்ணம் போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கலக்குங்கள்.இதை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் கருமை ஏற்படாமல் இருக்கும்.

உங்கள் வீட்டு கருத்த வெள்ளிப் பொருட்கள் வெள்ளையாக டூத் பேஸ்டை இப்படயூஸ் பண்ணுங்க!!

0

பெண்களுக்கு பிடித்த வெள்ளிப் பொருட்களை எப்படி கருத்துப்போகாமல் பராமரிப்பது என்பது குறித்து இங்கு சொல்லப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)டூத் பேஸ்ட்
2)சமையல் சோடா

செய்முறை விளக்கம்:-

ஒரு தேக்கரண்டி டூத் பேஸ்ட் மற்றும் ஒரு தேக்கரண்டி சமையல் சோடா ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இதை கருத்த வெள்ளிப் பொருட்கள் மீது அப்ளை செய்து பிரஸ் பயன்படுத்தி தேய்க்க வேண்டும்.இவ்வாறு செய்தால் கருத்த வெள்ளி பளபளப்பாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)டூத் பேஸ்ட்

செய்முறை விளக்கம்:-

கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி டூத் பேஸ்ட் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட வேண்டும்.

பிறகு இதை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை சில்வர் பொருட்கள் மீது ஊற்றி பிரஷ் கொண்டு தேய்த்தால் கருத்த பொருள் பளபளப்பாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)கார்ன்ஃப்ளார் பொடி
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

கிண்ணத்தில் கார்னஃப்ளார் பொடி கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்குங்கள்.இதை கருத்துப்போன வெள்ளிப் பொருட்கள் மீது தடவி ஸ்க்ரப் செய்தால் புதிது போன்று பளிச்சிடும்.

தேவையான பொருட்கள்:-

1)சோப் பவுடர்
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

ஒரு தேகர்ந்தோ சோப் பவுடரை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ள வேண்டும்.இதை வெள்ளிப் பொருட்கள் மீது ஊற்றி தேய்த்தால் கருத்த வெள்ளி பளிச்சிடும்.அதேபோல் கற்பூரத்தை வெள்ளிப் பொருட்களுடன் வைத்தால் அவை எப்பொழுதும் கருக்காமல் இருக்கும்.

தமிழில் எழுத பேச தெரிந்தால் போதும்.. Indian Overseas Bank அருமையான வேலை காத்திருக்கு!!

0

நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி
காலியாக உள்ள 400 பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு,ஒடிசா,குஜராத்,மேற்கு வங்கம்,பஞ்சாப்,மகாராஸ்டிரா போன்ற மாநிலங்களில் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்பட இருக்கின்றனர்.

வேலை வகை: அரசு வங்கி வேலை

நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 400

கல்வித் தகுதி:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு 20 முதல் 30 வயது வரை உள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்:

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.48,000/- முதல் ரூ.85,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

ஆன்லைன் தேர்வு
நேர்முக எழுத்து தேர்வு

விண்ணப்பிக்க இறுதி நாள்: 31/05/2025

விண்ணப்பம் செய்வது எப்படி?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக இருக்கின்ற பணிகளுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.iob.in/upload/CEDocuments/IOB-Recruitment-of-Local-Bank-Officer-2025-26.pdf என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரதத்தை அள்ளிக்கொடுக்கும் தோசை!! இதை சுவையாக செய்வது எப்படி?

0

உடலில் புரதச் சத்து அதிகரிக்க பயறு வகைகளை அரைத்து தோசை வார்த்து சாப்பிடலாம்.புரோட்டின் பவுடருக்கு பதில் இந்த தோசை சாப்பிட்டால் இயற்கையான முறையில் உடலில் புரதம் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பச்சை பயறு – 25 கிராம்
2)துவரம் பருப்பு – 20 கிராம்
3)சுண்டல் – 20 கிராம்
4)ஜவ்வரிசி – 10 கிராம்
5)உளுந்து பருப்பு -20 கிராம்
6)உப்பு – சிறிதளவு
7)வெங்காயம் – ஒன்று
8)கறிவேப்பிலை – ஒரு கொத்து
9)பச்சை மிளகாய் – இரண்டு
10)எண்ணெய் – தேவையான அளவு
11)பச்சரிசி – 25 கிராம்

செய்முறை விளக்கம்:-

முதலில் கிண்ணம் ஒன்றை எடுத்து பச்சை பயறு,துவரம் பருப்பு,பச்சரிசி,உளுந்து பருப்பு,ஜவ்வரிசி,சுண்டல் ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.

பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு இவற்றை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இந்த மாவை ஒரு கிண்ணத்திற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு மிகஸ் செய்யவும்.அதன் பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.

பிறகு அரைத்த மாவில் தோசை வார்க்க வேண்டும்.பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை தோசை மீது பரப்பிவிட வேண்டும்.அதன் பிறகு எண்ணெய் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும்.

இந்த தோசைக்கு சட்னி தேவைப்படாது.இருப்பினும் சட்னி விரும்பிகள் தக்காளி சட்னி,தேங்காய் சட்னி செய்து தோசையுடன் தொட்டு சாப்பிடலாம்.

தேங்காய்,இஞ்சி,கறிவேப்பிலை,பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்தால் தேங்காய் சட்னி தயார்.தக்காளி,பெரிய வெங்காயம்,பூண்டு,வரமிளகாய் ஆகியவற்றை மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு,கறிவேப்பிலை போட்டு பொரியவிட வேண்டும்.பின்னர் அரைத்த தக்காளி கலவையை அதில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.

புதுச்சேரியில் கிராம நிர்வாக உதவியாளர் பணி!! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

0

நமது அண்டை மாநிலமான புதுவையில் அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் இருந்து வேலைவாய்ப்பு தொடரான தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி புதுவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: புதுவை அரசு வேலை

நிறுவனம்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

பதவி: கிராம நிர்வாக உதவியாளர்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பணியிடம்: புதுவை

கல்வித் தகுதி:

கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்:

கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மூலம் பணியமர்த்தபட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழி

கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் துறையில் 580+ காலிப்பணியிடங்கள்!! உதவிப் பேராசிரியர் பணிக்கு அழைப்பு!!

0

நம் இந்திய வேளாண் துறைக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அதன்படி காலியாக உள்ள உதவிப் பேராசியர் மற்றும் சீனியர் டெக்னிக்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மொத்தம் 582 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: அரசு வேலை

நிறுவனம்: இந்திய வேளாண் துறை(விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மையங்கள்)

பதவி:

உதவிப் பேராசியர் – 41
சீனியர் டெக்னிக்கல் – 83
அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் சைன்டிஸ்ட் – 458

கல்வித் தகுதி:

விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த பேராசியர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு 21 முதல் 32 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

உதவிப் பேராசியர்,சீனியர் டெக்னிக்கல்,அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் சைன்டிஸ்ட் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.57,000/- முதல் ரூ.1,82,000/- ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் நடைபெறும் நெட் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்பட இருக்கின்றனர்.

முதல்நிலை தேர்வு: செப்டம்பர் 02

முதன்மை தேர்வு: டிசம்பர் 07

விண்ணப்பக்கட்டணம்:

பொது பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.1000/-

இதர வகுப்பினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.250/-

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிகளுக்கு தகுதி விருப்பம் இருக்கும் நபர்கள் www.asrb.org.in என்ற இணையதள பக்கத்தில் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்:

21/05/2025

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஷாஹீன் ஏவுகணையை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது!!

0

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தானால் ஏவப்பட்ட அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஷாஹீன் ஏவுகணையை இந்தியாவின் S-400 பாதுகாப்பு அமைப்பு இடைமறித்ததாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது. வியத்தகு புதிய காட்சிகளில் பிடிக்கப்பட்ட இந்த இடைமறிப்பு, அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது.

பாகிஸ்தான் நாட்டின் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து நடந்த கடுமையான ஷெல் தாக்குதலின் போது, ​​அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ஏவுகணையை இந்தியா மீது பாகிஸ்தான் ஏவியதை இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.

இந்தியாவின் மேம்பட்ட S-400 வான் பாதுகாப்பு அமைப்பால் இந்த ஏவுகணை நடுவானில் இடைமறிக்கப்பட்டு, சாத்தியமான சேதத்தைத் தவிர்த்தது என்று NDTV மற்றும் India Today செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன .

இந்திய இராணுவத்தின் மேற்கு கட்டளைப் பிரிவு வெளியிட்ட சக்திவாய்ந்த காணொளியுடன் இந்த உறுதிப்படுத்தல் வந்துள்ளது, இதில் ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல் மற்றும் இந்தியாவின் வெற்றிகரமான இடைமறிப்பு ஆகியவற்றின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சிகள் நடந்து கொண்டிருக்கும் மோதலின் அளவைப் படம்பிடித்து, இந்தியாவின் விரைவான இராணுவ பதிலடியை எடுத்துக்காட்டுகின்றன.

அணு ஆயுதங்கள் மற்றும் வழக்கமான போர்க்கப்பல்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையான ஷாஹீன் ஏவுகணை, அணுசக்தி அல்லாத ஆயுதங்களைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் அதன் பயன்பாடு பாதுகாப்பு ஆய்வாளர்களிடையே கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.

பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை, 2,500 கிலோமீட்டர் வரை சென்று பல வகையான போர்க்கப்பல்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது, இது பாகிஸ்தானின் ஆயுதக் களஞ்சியத்தில் மிகவும் சக்திவாய்ந்த சொத்துக்களில் ஒன்றாகும்.

இந்திய ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி NDTV செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஏவுகணை, நீண்ட தூரம் மற்றும் துல்லியத்திற்கு பெயர் பெற்ற ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பான S-400 Triumf அமைப்பால் இடைமறிக்கப்பட்டு தாக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கிய S-400, உலகின் மிகவும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பாலிஸ்டிக் ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களைக் கண்காணித்து நடுநிலையாக்கும் திறன் கொண்டது.

“எஸ்-400 அமைப்பு இந்தியாவின் பல அடுக்கு வான் பாதுகாப்பு கேடயத்தின் ஒரு முக்கிய அங்கமாகும், இது பல்வேறு வரம்புகளில் வரும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, கண்காணித்து, நடுநிலையாக்கும் திறன் கொண்டது” என்று மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

ஏவுகணை இடைமறிப்புடன், ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 26 உயிர்களைக் கொன்ற பெரிய அளவிலான இராணுவ பதிலடி நடவடிக்கையான, நடந்து வரும் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய ஒரு வியத்தகு வீடியோவை இந்திய இராணுவம் வெளியிட்டது. இந்த வீடியோவில், மே 7 அன்று பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய இராணுவப் பிரிவுகள் தாக்குவதைக் காட்டுகிறது, இதில் பாகிஸ்தான் விமானத் தளங்களை அழிக்க ‘முன்னும் பின்னும்’ சித்தரிக்கும் செயற்கைக்கோள் படங்கள் அடங்கும்.

 

எல்லை தாண்டிய தீவிரமான மோதல்களின் போது அவர்களின் மீள்தன்மை மற்றும் துணிச்சலுக்காக இராணுவம் தனது துருப்புக்களை “அசைக்க முடியாத நெருப்புச் சுவர்” என்று பாராட்டியது. வீடியோவில் பேசும் ஒரு சிப்பாய், “இது (ஆபரேஷன் சிந்தூர்) பஹல்காம் தாக்குதலுடன் தொடங்கியது. இது கோபம் அல்ல, ஆனால் எதிர்காலத்தில் நினைவில் கொள்ளப்படும் ஒரு பாடம் கற்பிக்கும் உறுதி. இது நீதி, பழிவாங்கல் அல்ல” என்று கூறினார்.

மே 7 அன்று நடந்த இந்தியத் தாக்குதல்கள் பாகிஸ்தானிடமிருந்து கடுமையான பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் உட்பட பலத்த பதிலடியைத் தூண்டின. தரை, வான் மற்றும் கடல் நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு சுருக்கமான போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், அறிவித்த சில மணி நேரங்களுக்குள் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறியதாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை கூறியது. இருப்பினும், பாகிஸ்தான் மேலும் ஆத்திரமூட்டல்களைத் தவிர்த்தால், பதற்றத்தைத் தணிக்க இந்தியா தயாராக இருப்பதைக் குறிக்கிறது, காலாவதி தேதி இல்லாமல், போர் நிறுத்தம் அமலில் உள்ளது என்று ராணுவம் தெளிவுபடுத்தியது.

இதை தினமும் சாப்பிட்டால்.. வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி குட் பாய் சொல்லிடுவீங்க!!

0

இளம் பருவத்தில் ஆரோக்கியமான உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே முதுமை காலத்தில் நோய் அபாயத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் அளவிற்கு உடலில் எதிர்ப்பு சக்தி இருக்கும்.

வயதான பிறகு பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது மூட்டுவலிதான்.இந்த மூட்டு வலி தொந்தரவு நம்மை நெருங்காமல் இருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள் மூட்டு வலிமையை அதிகப்படுத்தக் கூடியது.ஆளிவிதை,பாதாம் பருப்பு,வால்நட்,சியாவிதை,மீன் போன்றவற்றை சாப்பிட்டால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.

பூண்டு,முட்டைக்கோஸ்,வெங்காயம் போன்ற சல்பர் நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

சோயா,முட்டை போன்ற புரதம் நிறைந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்.கோதுமை,ராகி,கம்பு போன்ற சிறு தானிய உணவுகளை சாப்பிட்டால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.

மூலிகை டீ,பிரண்டை சட்னி,முடக்கத்தான் கீரை சூப்,முடவாட்டுக்கால் கிழங்கு சூப் போன்றவற்றை செய்து கசாப்பிட்டு வந்தால் மூட்டுகள் வலுப்பெறும்.பால்,பாதாம் பால் போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு எலும்பு வலுப்பெறும்.கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.பருப்பு வகைகள்,முளைகட்டிய பயறு வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதிக உப்பு மற்றும் புளிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

தினமும் ஒரு கிளாஸ் பூண்டு பால் அல்லது பூண்டு தேநீர் செய்து குடித்தால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.தினமும் ராகி கஞ்சி செய்து குடிக்கலாம்.பாலில் வால்நட் பொடி,பாதாம் பருப்பு பொடி போட்டு குடிக்கலாம்.

நெஞ்சு சளி போக நெஞ்சு எலும்பு சூப் எப்படி வைக்கிறது? வாங்க பார்க்கலாம்!!

0

மார்பு பகுதியில் உருவாகும் சளியால் மூக்கடைப்பு,தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.அதேபோல் நெஞ்சு சளியால் மூச்சு விடுவதில் அதிக சிரமம் ஏற்படும்.இந்த நெஞ்சு சளி கரைய ஆட்டு நெஞ்சு எலும்பில் சூப் செய்து பருகலாம்.

நெஞ்சு சளியை கரைத்து தள்ளும் ஆட்டு நெஞ்சு எலும்பு சூப்:

தேவையான பொருட்கள்:-

1)ஆட்டு நெஞ்சு எலும்பு – 1/4 கிலோ
2)வெள்ளைப்பூண்டு பற்கள் – 10
3)சின்ன வெங்காயம் – 10
4)கரு மிளகு – கால் தேக்கரண்டி
5)சீரகம் – கால் தேக்கரண்டி
6)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
7)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
8)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
9)உப்பு – தேவையான அளவு
10)கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஆட்டு நெஞ்சு எலும்பை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கால் தேக்கரண்டி கருப்பு மிளகு மற்றும் சீரகம்,ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை வருத்து ஆறவைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது அடுப்பில் குக்கர் வைத்து சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அடுத்து இடித்து வைத்துள்ள பூண்டு,இஞ்சி விழுதை போட்டு வதக்க வேண்டும்.அடுத்து அரைத்த கொத்தமல்லி கலவையை அதில் கொட்டி வதக்க வேண்டும்.பின்னர் ஆட்டு நெஞ்சு எலும்புகளை அதில் போட்டு நன்கு வதக்கி எடுக்க வேண்டும்.

பிறகு சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.அதன் பிறகு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஐந்து,ஆறு விசில் விட்டு எடுக்க வேண்டும்.பிறகு அடுப்பில் இருந்து குக்கரை இறக்க வேண்டும்.நெஞ்சு எலும்பு சூப்பில் கொத்தமல்லி தழை தூவி பருகலாம்.

தினமும் ஒரு முழு கேரட் சாப்பிட்டு இந்த 08 மருத்துவ குணங்களை பெறுங்கள்!!

0

நாம் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் முக்கிய இடத்தில் கேரட் இருக்கின்றது.இந்த கேரட் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு காய்கறியாகும்.இதை தினமும் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.கேரட் உடல் நலக் கோளாறுகள் மற்றும் சருமம் சார்ந்த பாதிப்புகளை சரி செய்யக் கூடியது.

கேரட் சாலட்,கேரட் ஜூஸ்,கேரட் கீர் என்று கேரட்டை தங்களுக்கு பிடித்தவாறு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

கேரட் ஊட்டச்சத்துக்கள்:

*பொட்டாசியம் *வைட்டமின் சி *வைட்டமின் பி6 *வைட்டமின் கே

1)சருமம் சார்ந்த பிரச்சனைகள் தீர கேரட்டை சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து சருமம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

2)கண் சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாக கேரட் சாப்பிடலாம்.தினமும் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.

3)உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கேரட் சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற வைட்டமின் பி6 நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது.

4)குறைவான கலோரி கொண்ட கேரட்டை சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு கரையும்.கேரட்டில் இருக்கின்ற நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

5)இதில் இருக்கின்ற வைட்டமின் கே சத்து எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.சர்க்கரை நோய் கட்டுப்பட கேரட்டை சாப்பிடலாம்.

6)உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க கேரட்டை சாப்பிடலாம்.கேரட்டில் இருக்கின்ற சோடியம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

7)குடல் இயக்கத்தை சீராக்க கேரட்டை சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

8)கேரட் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் பல் ஆரோக்கியம் மேம்படும்.

கேரட் ஜூஸ் செய்முறை:

தேவைப்படும் பொருட்கள்:

கேரட்
தேன்
தண்ணீர்

ஒரு முழு கேரட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.

இந்த கேரட் ஜூஸை வடிக்கட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.