Home Blog Page 246

வீட்டில் இருக்கும் சகல விதமான பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய கல் உப்பு பரிகாரம்..!!

0

உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் கொண்டது. எனவே இதனை வீட்டில் எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். வீட்டில் உப்பு குறையாமல் இருந்தால் செல்வ வளமும் குறையாமல் இருக்கும். இந்த உப்பு என்பது செல்வ வளத்தை பெருக்குவதுடன், பல விதமான திருஷ்டிகளையும் போக்கக் கூடியது.

உப்பு வாங்குவதாக இருந்தால் முடிந்த அளவிற்கு வெள்ளிக் கிழமைகளில் வாங்குவது மிகவும் சிறப்பு. அதேபோன்று உப்பினை மண் ஜாடி அல்லது பீங்கான் ஜாடியில் தான் வைக்க வேண்டும். எவர்சில்வர், பித்தளை, இரும்பு போன்ற பொருட்களில் உப்பினை வைக்க கூடாது. இது உடல் ரீதியாகவும், ஆன்மீகம் ரீதியாகவும் பல தீங்குகளை விளைவிக்கும்.

வீட்டின் செல்வ வளத்தை பெருக்குவதற்கும், வீட்டில் இருக்கும் கண் திருஷ்டிகளை நீக்குவதற்கும் இந்த கல் உப்பினை கொண்டு செய்யக்கூடிய பரிகாரம் மிகுந்த பலன்களை கொடுக்கக்கூடிய சிறந்த பரிகாரமாகும். எனவே செல்வ வளம் உயர மற்றும் கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டிய ஐந்து விதமான கல் உப்பு பரிகாரத்தை இந்த பதிவில் காண்போம்.

1. வெள்ளிக்கிழமை நாட்களில் புதியதாக உப்பினை வாங்கி உப்பு ஜாடி முழுவதுமாக நிரப்பி கொள்ள வேண்டும். அந்த உப்பினுள் ஒரு துண்டு வசம்பினை மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு வைப்பதன் மூலம் வீட்டில் தேவையற்ற மருத்துவ செலவுகள் வருவதை தடுத்து நிறுத்தும்.

வசம்பு என்பது உடல் நிலைக்கு மிகவும் நல்லது. எனவே இதனை உப்பில் வைத்து பயன்படுத்தும் பொழுது, செரிமான பிரச்சனைகள் வராமல் இருக்கும். மேலும் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டும்.

2. ஒரு சிறிய மண் ஜாடி அல்லது கண்ணாடி ஜாடியில் உப்பினை நிரப்பி, அதில் ஒரு விரலி மஞ்சள் மற்றும் ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். இப்பொழுது இந்த ஜாடியை பூஜை அறையில் வைத்து, அதற்கு முன்பாக கண்ணாடி ஒன்றை வைக்க வேண்டும். அந்த கண்ணாடியில் அந்த உப்பு ஜாடியின் பிம்பம் படும்படி வைக்க வேண்டும்.

இவ்வாறு வைப்பதன் மூலம் பணவரவு அதிகரிக்கும், கடன் சுமை குறையும், நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும், வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை ஈர்த்துக் கொள்ளும். வாரத்திற்கு ஒரு முறை இந்த உப்பினை மாற்றிக் கொள்ளலாம்.

3. பிரம்ம முகூர்த்த நேரத்தில் கீழே அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளிலும் கல் உப்பை வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் இரண்டு கால் தொடைகளின் மீது வைத்து கண்களை மூடி உங்களுக்கு என்ன வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமோ அதனை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர் அந்த உப்பினை தண்ணீரில் கரைத்து, கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் செய்தால் நிச்சயம் உங்களது வேண்டுதல்கள் நிறைவேறும்.

4. இரண்டு மண் அகல் விளக்கில் சிறிதளவு கல் உப்பை போட்டுக் கொள்ள வேண்டும். அதில் ஒரு மண் அகல் விளக்கை நிலை வாசல் கதவுக்கு பின்புறம் வைத்து விட வேண்டும். இன்னொரு மண் அகல் விளக்கை உங்களது குளியல் அறையில் கைப்படாத இடத்தில் வைத்து விட வேண்டும். இவ்வாறு வைப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டிகள் விலகும்.

இதனை மாதத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம். சிறிதளவு கல் உப்பை தண்ணீரில் கரைத்தும் குளிக்கலாம், இது உடல் சோம்பேறித்தனத்தை அகற்றும்.

5. ஒரு மண் அகல் விளக்கில் சிறிதளவு கல் உப்பு, 21 மிளகு, 3 அல்லது 4 கற்பூரம் ஆகியவற்றை வைத்து குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோரின் தலையை சுற்றி திருஷ்டி கழிக்கலாம். இவ்வாறு சுற்றிய பின்னர் அந்த கற்பூரத்தை வாசலில் வைத்து எரித்து விட வேண்டும். மிளகினை வீட்டின் நான்கு புறங்களிலும் தூக்கி எறிந்து விட வேண்டும். உப்பினை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் திருஷ்டிகள் அனைத்தும் விலகும், மனதில் இருக்கும் பாரம் விலகி மன நிம்மதி ஏற்படும், குடும்பத்தில் உள்ள அனைவரையும் அமர வைத்து திருஷ்டி கழிப்பதன் மூலம் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் விலகி குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

உஷார் மக்களே! இப்படி சாப்பிட்டால்.. உங்களுக்கு நெஞ்செரிச்சல் வருவது கன்பார்ம்!!

0

மார்பு பகுதியில் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படுவதை நெஞ்செரிச்சல் என்கின்றோம்.வயிற்றுப் பகுதியில் உள்ள உணவுக் குழாயில் அமிலங்கள் அதிகமாக உற்பத்தியாவதால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.

கொழுப்பு உணவுகள்,காரமான உணவுகள்,சர்க்கரை உணவுகள்,சிட்ரஸ் உணவுகள் நெஞ்செரிச்சல் பாதிப்பை அதிகப்படுத்தும்.அதேபோல் உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.புகைப்பழக்கம்,தூக்கமின்மை போன்ற பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.

வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரித்தால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.நமது வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் உணவுக் குழாய் பகுதியை நோக்கி வருவதன் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.நெஞ்செரிச்சல் ஏற்பட முக்கிய காரணம் நாம் பின்பற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கமே.செரிமானப் பிரச்சனை இருப்பவர்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு வரக்கூடும்.

அல்சர்,இரைப்பை புண்,பித்தப்பை கட்டி போன்ற காரணங்களால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த நெஞ்செரிச்சல் பாதிப்பு நாளடைவில் புற்றுநோய் கட்டியாக உருவாக வாய்ப்பிருக்கிறது.

நெஞ்செரிச்சல் அறிகுறிகள்:

1)உணவு விழுங்குவதில் சிரமம்
2)தொண்டை பகுதியில் வலி உணர்வு
3)தண்ணீர் தாகம் அதிகரிப்பு
4)என்ன உணவு சாப்பிட்டாலும் வயிற்றுப்பகுதியில் எரிச்சல் உணர்வு

நெஞ்செரிச்சல் பாதிப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு வரக் கூடாது என்றால் வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் நொறுக்கு தீனி,காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக புளிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

சாப்பிட்ட உடன் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.இதனால் நெஞ்செரிச்சல் பாதிப்பு வர வாய்ப்பிருக்கிறது.சாப்பிட்ட உடன் படுத்தால் உணவுக் குழாயில் அமிலங்கள் அதிகரித்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்.

உங்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு நீண்ட வருடங்களாக இருந்தால் அலட்சியம் செய்யக் கூடாது.உடனடியாக மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டும்.

கோவிலில் மறந்தும் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்..!!

0

மனிதர்களாய் பிறந்த அனைவருக்குமே கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கும் பழக்கம் என்பது கண்டிப்பாக இருக்கும். என்னதான் பூஜை அறையில் தினமும் விளக்கேற்றி கடவுளை வணங்கினாலும், வாரத்திற்கு ஒருமுறை கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கும் பழக்கத்தை பலரும் வைத்திருப்பர். முடியாதவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கோவிலுக்கு சென்று விடுவார்கள்.

மக்கள் அனைவரும் கடவுளை வணங்குவதற்கு முதல் காரணம் அவர்களுடைய பிரச்சனைகள் சரியாக வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும், மன நிம்மதி வேண்டும் என்பதற்காகத் தான். கோவிலுக்கு சென்று வந்தால் மன நிம்மதி கிடைக்கிறது என்று பலரும் கூறுவதை நாம் கேட்டிருப்போம். கடவுளால் மட்டுமே நமக்கு தேவையான அனைத்தையும் கொடுக்க முடியும். அதற்கு முதலில் நாம் சரியான முறையில் கடவுளை வணங்க வேண்டும்.

நம்முடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்பதற்காக கோவிலுக்கு செல்வோம், ஆனால் அங்கு நாம் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகளே நமக்கு மென்மேலும் புதிய பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொடுத்து விடும். எனவே கோவிலுக்கு சென்றால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது? என்பதை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.

அப்பொழுதுதான் நம்முடைய பிரச்சனைகளை கடவுள் ஏற்று நமக்கு அருள் புரிவார். மாறாக கடவுளின் கோபத்திற்கு காரணமாக நாம் இருந்து விடக்கூடாது. கோவிலுக்கு செல்லும் பொழுது எந்தெந்த விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்பதையும், இதனால் கிடைக்கும் நன்மைகளையும் இந்த பதிவில் காண்போம்.

1. கோவிலுக்கு சென்றவுடன் முதலில் அங்கு இருக்கும் விநாயகரை தான் வழிபட வேண்டும். இல்லை என்றால் காரியத்தடை உண்டாகும். அதேபோன்று கோவிலில் இருக்கும் அனைத்து கடவுளையும் வணங்கிய பிறகு, இறுதியாக தான் அங்கு இருக்கும் நவகிரகங்களை வணங்க வேண்டும்.

2. கோவிலில் நேர்மறையான கதிர்வீச்சுகள் நம் மீது படும் என்பதை பலரும் கேள்விப்பட்டிருப்போம். எனவே கோவிலுக்குள் நுழைந்த உடனேயே செல்போன்களை ஆஃப் செய்து விட வேண்டும். ஏனென்றால் செல்போனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு, தெய்வத்திடம் இருந்து வரக்கூடிய கதிர்வீச்சுகளை தடுத்துவிடும்.

3. கோவிலில் அர்ச்சகர் தரும் திருநீரை கோவில் தூண்கள் அல்லது ஏதேனும் ஒரு இடத்தில் கொட்டி விட்டு சென்றால், உங்களுக்கு கிடைத்த வரத்தை நீங்கள் விட்டு சென்றதற்கு சமமாகும். எனவே கோவில் பிரசாதத்தை கண்டிப்பாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

4. அதேபோன்று மற்றவர்கள் கோவில் தூண்களில் கொட்டி வைத்திருக்கும் திருநீரை நீங்கள் எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்தால் மற்றவர்களின் பாவங்களை நீங்கள் எடுத்துக் கொண்டதற்கு சமமாக கருதப்படும். மேலும் அவர்களது வாழ்க்கை துன்பங்கள் அனைத்தும் உங்களது வாழ்க்கையிலும் வந்துவிடும்.

5. கோவில் படிக்கட்டுகளில் சூடம் ஏற்றக்கூடாது. ஏனென்றால் கோவில் படிகட்டுகளில் நீங்கள் சூடம் ஏற்றினால், அது அணைந்த பின்னர் மற்றவர்கள் அதனை மிதித்து நடப்பர். நீங்கள் எதை வேண்டி அந்த சூடத்தை ஏற்றினீர்களோ அதை கடவுள் கொடுத்தாலும் இறுதியாக மிதிக்கப்படும்.

6. கோவிலுக்கு சென்றால் கடவுளைத் தவிர அங்கு வேறு யாரையும் வணங்க கூடாது. அர்ச்சகர் காலில் விழுந்து வணங்கினால் கடவுளை அவமதித்ததற்கு சமமாக கருதப்படும். அதேபோன்று கோவிலில் திருமணம் நடைபெற்றாலும் கூட, அங்கு கடவுளைத் தவிர வேறு யாருடைய காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க கூடாது.

7. கோவிலில் கடவுளை வணங்கிய பின்னர் ஐந்து நிமிடமாவது கோவிலில் அமர்ந்திருக்க வேண்டும். இவ்வாறு அமர்வதன் மூலம் கோவில் பாதுகாவலர்கள் என்று கருதப்படும் ஏழு சிரஞ்சீவிகளை நாம் வணங்குவதாக அர்த்தம்.

இவர்கள் நாம் வீடு செல்லும் வரை நமக்கு பாதுகாப்பாக நம்முடன் வருவார்கள். எனவே கோவிலில் இருந்து நேராக வீட்டிற்கு சென்று விளக்கேற்றி வழிபட்டால், அவர்களை வரவேற்க வேண்டும் என்பது நம்முடைய மரபு.

8. கோவிலில் அர்ச்சகர் கொடுத்த மலர் கீழே விழுந்து விட்டால் மறுபடியும் அதனை எடுத்து சூடிக்கொள்ளக் கூடாது.

சசிக்குமார் – சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி டிரெய்லர் வீடியோ!..

0

சுப்பிரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக களம் இறங்கியவர் சசிக்குமார். அதன்பின் பல படங்களிலும் நடித்திருக்கிறார், நிறைய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். பல இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார். சுப்பிரமணியபுரம், ஈசன் போன்ற 2 படங்களை மட்டுமே இயக்கினார்.

இப்போது சிம்ரனுடன் இணைந்து டூரிஸ்ட் பேமிலி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. அயோத்தி படத்திற்கு பின் சசிக்குமாருக்கு இது முக்கிய படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் யோகிபாபுவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இலங்கையிலிருந்து தப்பி சென்னை வந்த ஒரு ஃபேமிலி இங்கு என்ன பிரச்சனையை சந்திக்கிறார்கள் என்பதை காட்டியிருக்கிறார்கள். எனவே, காமெடியான காட்சிகளும், சீரியஸான காட்சிகளும் இதில் இடம் பெற்றிருக்கிறது.

தங்களை டூரிஸ்ட் ஃபேமிலி என சொல்லி காவல் துறையை ஏமாற்ற நினைக்கும் அவர்கள் எப்படிப்பட்ட பிரச்சனைகளெய்ல்லாம் சந்திக்கிறார்கள் என்பதை காமெடியாகவும், சீரியஸாகவும் காட்டியிருக்கிறார்கள்.  அவர்களுக்கு சென்னையில் இருக்கும் யோகிபாபு உதவுவது போலவும், இங்குள்ள தமிழை பேச தெரியாமல் அவர்கள் மாற்றி மாற்றி பேசும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. அதேபோல், சசிக்குமாரின் மகன் வழியாக காமெடியும் செய்திருக்கிறார்கள்.

ராணுவம் தயார் நிலையில் இருக்க பாகிஸ்தான் உத்தரவு!. இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா?…

0

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர்.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரக்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

அதோடு, பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் தூதரகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை டெல்லி காவல்துறை அகற்றியுள்ளது. ஏற்கனவே, சிந்து நதி ஒப்பந்தத்தையும் இந்தியா ரத்து செய்துவிட்டது. பாகிஸ்தான் 95 சதவீத தண்ணீருக்கு இந்த நீரைத்தான் நம்பியிருக்கிறது.

இந்தியா செய்ததற்கு பதிலடியாக சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகங்களும் நிறுத்தி வைபப்தாக பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது. மேலும், பாகிஸ்தானின் ராணுவம் தயார் நிலையில் இருக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தியா தாக்கினால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராக இருக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒருபக்கம், பாகிஸ்தானிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ராஜாங்க நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லையில் படைகளை குவிக்கிறது பாகிஸ்தான். வான் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாக்க முழு அளவில் எச்சரிக்கையுடன் இருக்க படைகளுக்கு உத்தரவு பறந்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இரு நாட்டுக்கும் இடையே போர் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

நான் இப்படி இருக்க டி ராஜேந்திரன் மேஜிக் தான் காரணம்!! வாழ்வில் நிகழ்ந்த சுவாரஸ்யத்தை பகிரும் ஏ ஆர் ரகுமான்!!

0

இசை புயல் என அழைக்கப்படக்கூடிய ஏ ஆர் ரகுமான் அவர்கள் தமிழ் சினிமாவிற்காகவும் தன்னுடைய இசையின் சாதனையாகவும் பலமுறை பல விருதுகளை வென்று குவித்திருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசை என்றாலே அதற்கு தனி கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கக்கூடிய ஏ ஆர் ரகுமான் அவர்கள் தன்னுடைய வாழ்வை முழுவதுமாக மாற்றியது டிஆர் அவர்கள் தான் என தெரிவிப்பது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்து இருக்கிறது.

80 90 கால கட்டங்களில் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த ரஜினி கமல் அவர்களே பொறாமைப்படும் அளவு உயர்ந்து நின்றவர் டி ஆர் ராஜேந்திரன் அவர்கள். இவர் தன்னுடைய பாடல்கள் ஆளும் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய தன்னுடைய தனி திறமையாலும் திரைக்கதை இயக்கம் போன்றவற்றாலும் மக்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவராக இன்றளவும் விளங்கி வருகிறார். தன்னுடைய தக் லைஃப் திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கமல் அவர்கள் கூட எங்களுக்கு இணையாக எங்களுடைய காலகட்டத்தில் டி ஆர் அவர்களின் பேனர்களை பார்க்கும்பொழுது பல நாள் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஏ ஆர் ரகுமான் அவர்கள் டி ஆர் குறித்து தெரிவித்திருப்பதாவது :-

இளையராஜா எம் எஸ் வி என பல முன்னணி இசையமைப்பாளர்களோடு தான் பணியாற்றி இருப்பதாகவும் ஆனால் டி ஆர் அவர்களோடு பணியாற்றியது தன்னுடைய மொத்த வாழ்வையும் மாற்றியது மட்டுமல்லாது தனக்கு இன்றளவும் டி ஆர் அவர்கள் இன்ஸ்பையராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எப்பொழுதும் தனிமையை மட்டுமே விரும்பக் கூடியவனாக இருந்த நான் அனைவருடனும் பழகுவதற்கு காரணமாக அமைந்ததும் டி ஆர் அவர்கள் தான் என பெருமைப்பட ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் பேசி இருப்பது ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் அரசின் திட்டங்கள்!! சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டதை அடுத்து அதிரடி முடிவு!!

0

நேற்று முன்தினம் ஏப்ரல் 22 ஆம் தேதியான அன்று பஹல் காம் பகுதியில் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் மீது ஐ
எஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது. இதில் 26 சுற்றுலா பயணிகள் மரணமடைந்த நிலையில் 18 மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

உலகம் முழுவதும் மிகப்பெரிய கோவ அலைகளை உருவாக்கிய இந்த நிகழ்வின் காரணமாக இந்தியா தரப்பில் இருந்து பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அது மட்டுமல்ல அதை இன்று தேசிய பாதுகாப்பு கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா மீது நடத்தப்பட்ட அதுவும் குறிப்பாக காஷ்மீர் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இந்த பயங்கரவாதத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அதிரடியாக 5 உத்தரவுகளை வெளியிட்டார். அதில் முதல் மற்றும் முக்கியமான ஒன்று நதிநீர் ஒப்பந்தம். இது இது போன்ற ஒரு தாக்குதலை நடத்தியதால் பாகிஸ்தானுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக மத்திய அரசு நிறுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு சில முக்கிய முடிவுகளை வெளியிட்டிருப்பதாவது :-

✓ இந்தியாவிற்கு சிந்து நதி நீ ஒப்பந்தத்தை திடீரென நிறுத்துவது முறைகேடானது என்றும் இதை எதிர்க்க பேசிய அளவில் போராட இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்து இருக்கிறது.

✓ இந்தியாவுடன் பாகிஸ்தான் போட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

✓ அதேபோன்று இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் உடைய வான்வெளியை பயன்படுத்துவதற்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உன் ஜாதி பெருசா.. என் ஜாதி பெருசா!!வா அடிச்சிப் பார்க்கலாம்..இயக்குனர் விட்ட சவால்!!

0

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை சாதிய படங்கள் என்பது பெரிதளவில் பேசப்படாமல் இருந்த ஒரு படமாகும். ஆனால் சமீப காலமாகவே குறிப்பிட்ட ஜாதி சார்ந்த படங்கள் அதிக அளவில் வெளிவருவதோடு அதனை இயக்கிய இயக்குனர் தங்கள் சாதியினுடைய வலிகளை எப்பொழுதும் எடுத்துக் கூறுவோம் என தெரிவித்திருக்கின்றனர்.

ஆரம்ப காலகட்டத்தில் தேவர் மகன், சின்ன கவுண்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜாதியை முன்வைத்து எடுக்கப்பட்ட பொழுதிலும் அது பெரும் அளவில் மக்களை காயப்படுத்தாததால் எந்தவித சிக்கலும் இன்றி ஓடின. ஆனால் அவற்றை தொடர்ந்து தமிழ் சினிமா துறையில் ஜாதிய படங்கள் பெறுதலும் வெளிவரவில்லை.

சமீபத்திய காலத்தில் இயக்குனர் ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் தங்களினுடைய ஜாதியில் மக்கள் சந்திக்கிற பிரச்சனைகளை வெளி உலகத்திற்கு எடுத்துக் கூறுவேன் என தொடர்ந்து அது குறித்த படங்களையே எடுத்த வண்ணம் உள்ளார். அதிலும் குறிப்பாக தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்கள் சந்தித்த கொடுமைகளை எடுத்துக் கூறுவதையே தன் படங்களின் கருவாக மாறி செல்வராஜ் பின்பற்றி வருகிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் உன் ஜாதியை பற்றி நீ கூறும் பொழுது உன்னோடு போட்டியிட நான் வருகிறேன் என்பது போல திமிரு , காளை ஆகிய இரு படங்களை இயக்கி இருக்கக்கூடிய இயக்குனர் தருண் கோபி அவர்கள் கூறி இருப்பதோடு, உன்னோட ஜாதிய பெருமையா பேசணுமே தவிர மற்ற ஜாதியை தப்பா காட்டக் கூடாது என கொந்தளித்து இருக்கிறார். தமிழ் சினிமா துறையில் தற்பொழுது ஜாதி பிரச்சனை தலையெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

படிப்படியாக குறையும் பால் விலை!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

0

கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த பாலின் விலையானது தற்பொழுது இரண்டு முறை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை ஒரு லிட்டர் பாலுக்கு 4 ரூபாய் குறைக்கப்பட்டு இருப்பது மக்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருமுறை, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு முறை மற்றும் மார்ச் மாதத்தில் ஒரு முறை என தொடர்ந்து 3 முறை உயர்த்தப்பட்ட பாலின் விலையால் பொதுமக்கள் மட்டுமல்லாத சில்லறை வியாபாரம் செய்யக்கூடிய கடைக்காரர்களும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தனர். முதன்முதலில் ஹட்சன் நிறுவனமானது பாலில் உயர்த்தியதை தொடர்ந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருக்கக்கூடிய பால் நிறுவனங்களும் தங்களுடைய நிறுவனத்தின் பால் பாக்கெட்களின் விலையை உயர்த்தினர்.

விலையை உயர்த்தியதால் சரிவை சந்தித்த ஹட்சன் நிறுவனமானது தற்பொழுது ஏப்ரல் 21ஆம் தேதி 1 லிட்டர் பாலுக்கு 2 ரூபாய் மற்றும் 24 ஆம் தேதியான இன்று 1 லிட்டருக்கு 2 ரூபாய் என இதுவரை படிப்படியாக 4 ரூபாய் வரை தங்களுடைய நிறைகொழுப்பு பால் பாக்கெட்டுகளின் விலையை குறைத்து இருக்கிறது. இதனால் 40 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த 500 ml ஹட்சன் நிறை கொழுப்பு பால் பாக்கெட் 38 ரூபாய்க்கும் 1 l ஹட்சன் நிறை கொழுப்பு பால் பாக்கெட் 75 ரூபாயிலிருந்து 71 ரூபாயாக குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பு எப்போது?.. உயர்கல்வித்துறை அறிவிப்பு!…

0

ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளி மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்கிற எதிர்ப்பார்ப்பு மாணவ, மாணவிகளிடம் மட்டுமில்லாமல் பெற்றோர்களிடமும் இருக்கும். சமீபத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அறிவித்தது.

தமிழகத்தில் 10, 11. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் துவங்கி ஏப்ரல் வரை நடைபெற்றது. எனவே, தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்ரல் 22ம் தேதியில் இருந்தும், 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதோடு, ஜூன் 2ம் தேதிகள் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. ஆனால், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. 2025-2026ம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.