Home Blog Page 272

எங்கள் சாதி பசங்களுக்கு தான் வாய்ப்பு.. நீங்களெல்லாம் கட்சியை விட்டு கிளம்புங்க!! நயினார் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!!

0

BJP: தமிழகத்தின் புதிய பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றதை அடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருக்கு வரவேற்பு அளிக்கும் விதத்தில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளனர். அதன்படி நேற்று சென்னையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜகவின் முக்கிய தலைகள் பலரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய முன்னாள் துணை மேயர் ஆன கராத்தே தியாகராஜன் அண்ணாமலை வைத்து திமுகவில் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

இது திமுக காரர்களை மட்டுமின்றி பாஜக அண்ணாமலை விசுவாசிகளுக்கும் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் பாஜக தலைவராக பொறுப்பேற்றதும் ஸ்டாலினே உங்களை பாராட்டியுள்ளார். பல்வேறு தலைவர்கள் உங்கள் காலில் விழுவதுண்டு. அதிலும் குறிப்பாக திமுக அமைச்சர்களை மட்டும் நம்பி விடாதீர்கள். ஒருபோதும் அண்ணாமலை போல அவர்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கக் கூடாது என பேசியிருந்தார். ஒரு பக்கம் திமுகவை விமர்சனம் செய்திருந்தாலும், தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில் அண்ணாமலையையும் போட்டு தாக்கியுள்ளார்.

மேற்கொண்டு நயினார் நாகேந்திரன் பதவியேற்றுள்ளதால் முக்கிய நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்ணாமலை இருந்த நாட்களில் யாரெல்லாம் தலைமைக்கு மரியாதை அளிக்கவில்லையோ அவர்களையெல்லாம் கூண்டோடு கட்சியை விட்டு நீக்க உள்ளாராம். மேற்கொண்டு தென் தமிழகத்தில் பாஜக கொடி மேலோங்க தங்கள் சாதியை சேர்ந்தவர்களை நியமிக்க உள்ளாராம். அதேபோல அண்ணாமலை பதவியிலிருந்த போதிலிருந்து பூத் கமிட்டி அமைப்பது ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதே தவிர அமைக்க முடியவில்லை. இதனால் இம்முறை வரப்போகும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள பூத் கமிட்டி அமைக்க ஆலோசனை செய்து வருகிறாராம்.

நான் அழவும் மாட்டேன், காலில் ஊர்ந்து போய் விழவும் மாட்டேன்!.. மோடிக்கு சவால் விட்ட ஸ்டாலின்…

0

கடந்த சில வருடங்களாகவே தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை பாஜக அரசு கொடுக்க மறுக்கிறது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் தேவைப்படும் நிதியை கொடுப்பது மத்திய அரசின் பணி. ஆனால், பாஜக அரசு அதை சரியாக செய்வது இல்லை. பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்குள் நிதியை அள்ளிக்கொடுக்கும் ஒன்றிய அரசு பாஜக அல்லாத மாநிலங்களுக்கு கிள்ளி கூட கொடுப்பது இல்லை. கடந்த 4 வருடங்களாகவே தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு கொடுப்பதே இல்லை. இத்தனைக்கும் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிக ஜி.எஸ்.டி வரி கொடுப்பது தமிழ்நாடுதான்.

ஆனாலும், தமிழ்நாட்டை பாஜக அரசு பாராமுகமாகவே பார்க்கிறது. அதற்கு காரணம் தமிழகத்தில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பது இல்லை. அதோடு, பாஜக கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் திமுக அரசு கடுமையாக எதிர்க்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கான நிதியை கொடுப்போம் என மத்திய அமைச்சர் சொன்னார்.

சில நாட்களுக்கு முன்பு புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி ‘தமிழ்நாட்டுக்கு பல மடங்கு நிதி அதிகமாக வழங்கிவிட்டோம். ஆனால் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அழுதுகொண்டே இருக்கட்டும்’ என திமுகவை மறைமுகமாக சொன்னார்.

இந்நிலையில், இன்று ஒருவிழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘நாங்கள் நிதி கேட்பது அழுகை இல்லை. தமிழ்நாட்டு மக்களின் உரிமை. நான் அழுது புலம்புவனும் அல்ல. யார் காலில் ஊர்ந்து போய் விழுபவனும் அல்ல. ‘ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க மாநிலங்கள் என்ன பிச்சைக்காரர்களா?’ என குஜராத் முதல்வராக நீங்கள் பேசியதை உங்களுக்கே நினைவு படுத்துகிறேன்’ என பேசியிருக்கிறார்.

ரெய்டு நடத்தி மிரட்டும் உங்க ஃபார்முலா இங்க செல்லாது!. சீறிய முதல்வர் ஸ்டாலின்..

0

2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதிமுகவை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து தமிழகத்தில் காலூன்ற எல்லாவகையிலும் முயற்சி செய்து வந்த பாஜகவுக்கு அந்த தேர்தல் முடிவு ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில், பாஜகவின் கொள்கைகளை மட்டுமல்ல. பாஜக அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது.

நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, வக்பு திருத்த சட்டம் என எல்லாவற்றிலும் பாஜகவிற்கு எதிர்மறையான கருத்துக்களை திமுக முன்வைக்கிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் காய் நகர்த்தி வரும் பாஜக அரசுக்கு திமுக பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

தங்களுடன் ஒத்துப்போகத மாநிலங்களில் அமைச்சர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தி அவர்களை பணிய வைப்பதுதான் பாஜகவின் ஸ்டைல். சமீபத்தில் கூட அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். இது நடந்து சில நாட்களில் அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருவள்ளூரில் நடந்த ஒரு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ‘டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு எப்போதும் அடிபணியாது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ரெய்டு மூலம் மிரட்டி ஆட்சியை அமைக்கும் உங்களின் ஃபார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது. அமித்ஷா அல்ல. எந்த்ட ஷா வந்தாலும் சரி. உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது. உங்கள் பரிவாரங்களை எல்லாரையும் சேர்த்துக்கிட்டு வாங்க. ஒரு கை பார்ப்போம்.

எங்கள் தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு Out of Control-தான். 2026-லும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்’ என பேசியிருக்கிறார்.

என்னால முடியல.. ப்ளீஸ் இதை செய்யாதீங்க!. அமைச்சர்களுக்கு அறிவுரை சொன்ன ஸ்டாலின்….

0

திமுக அரசில் வனத்துறை அமைச்சர் பதவி வகித்து வருபவர் பொன்முடி. இவர் ஏற்கனவே பல முறை சர்ச்சையாக பேசியிருக்கிறார். பேருந்தில் பெண்கள் இலவசமாக செல்வதை ‘ஓசி’ என கிண்டலடித்தார். அப்போதே அவரை பலரும் கண்டித்தனர். திமுகவின் கவனமாக பேச வேண்டும். ஒவ்வொரு நாளும் இவர்களால் என்ன பிரச்சனை வருமோ என நான் பயப்படுகிறேன் என மேடையிலேயே ஸ்டாலின் பேசும் அளவுக்கு சென்றது.

சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெண்களை சைவம், வைணவம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இதையடுத்து பொன்முடியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். திமுகவின் டி.என்.ஏ-வே இப்படித்தான். அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் எனவும் பலரும் பதிவிட்டார்கள்.

அதோடு, ஸ்டாலின் சகோதரியும், திமுக எம்.பியுமான கனிமொழியும் இதை கண்டித்திருந்தார். அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது’ என பதிவிட்டிருந்தார்.

BJP took a class from Ponmudi.. First read yourself correctly and then tease others!! Viral Twitter Post!!
BJP took a class from Ponmudi.. First read yourself correctly and then tease others!! Viral Twitter Post!!

பொன்முடி இப்போது அமைச்சர் மட்டுமில்லை. திமுக துணை பொதுச்செயலாளர் பதவியிலும் இருக்கிறார். இதைதொடர்ந்து அந்த பதவியிலிருந்து அவரை மு.க.ஸ்டாலின் தூக்கிவிட்டார்.. பொன்முடியிடமிருந்த துணை பொதுச்செயலாளர் பதவி திருச்சி சிவாக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், இப்படி பேசியதற்கு பொன்முடியின் அமைச்சர் பதவியை பறித்திருக்க வேண்டும் என பாஜகவினரும், அதிமுகவினரும் சொல்லி வருகிறார்கள். பொன்முடி பிரச்சனை முடிவதற்கு முன்பே அமைச்சர் துரைமுருகன் பேசிய பேச்சும் சர்ச்சையை கிளப்ப அதன்பின் அவர் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டத்தை கூட்டிய ஸ்டாலின் ‘அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்படக்கூடாது’ என அறிவுரை செய்திருக்கிறார்.

மருத்துவர்களின் கண்காணிப்பில் ஸ்ரீ!.. குடும்பம் வெளியிட்ட பரபரப்பான அறிக்கை!..

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் தொடர் மூலம் நடிக்க துவங்கிவர் ஸ்ரீ. அதன்பின் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், மிஷ்கின் இயக்கிய ஒநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களில் நடித்தார்.

வில் அம்பு படம் இவரை அதிகம் பிரபலப்படுத்தியது. இறுதியாக இறுகப்பற்று படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில்தான், அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரை நிர்வாணத்தோடு அதாவது சட்டை ஏதும் போடாமல், நீண்ட தலைமுடியுடன் அவர் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

sri

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் ‘இவருக்கு என்னாச்சி?’ என விசாரிக்க துவங்கினார்கள். அதோடு, ஸ்ரீக்கு மது மற்றும் போதை மருந்து பழக்கம் ஏற்பட்டிருக்கிறது எனவும் பலரும் பதிவிட்டார்கள். அவரின் வீடியோ வைரலானதால் அவரின் நண்பர்களும் அவரை தேடினார்கள். ஆனால், யாருடைய செல்போன் அழைப்பையும் ஸ்ரீ எடுக்கவில்லை.

sri ram

ஒருபக்கம் வில் அம்பு மற்றும் இறுகப்பற்று படங்களில் நடித்ததற்கு ஸ்ரீக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. அதனால்தான் ஸ்ரீ மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டார் என்றும் சிலர் கூறினார். இந்நிலையில், தற்போது ஸ்ரீயின் குடும்பம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ஸ்ரீ-யை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். அவர் இப்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவர்களின் அறிவுரைப்படி சமூகவலைத்தளங்களிலிருந்து அவர் விலகி இருக்கிறார். அவரது உடல் நலம் பற்றிய வதந்திகளை சமூகவலைத்தளங்களில் பரப்ப வேண்டாம். அது அவரின் மனநிலையை பாதிக்கும் என அவரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த அறிக்கையை இயக்குனர் லோகேஷ் கனகராஜும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. நாயோட விலை 50 கோடியெல்லாம் இல்லயாம்!. விசாரணையில் திருப்பம்!..

0

பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் என்பவர் 50 கோடிக்கு ஒரு நாயை வாங்கியிருக்கிறார் என்கிற செய்தி சில நாட்களுக்கு முன்பு செய்தியில் வெளியாகி பலரையும் வயிற்றெரிச்சல் பட வைத்தது. அவனவன் வாழவே வழியில்லாம இருக்கும்போது 50 கோடிக்கு நாயா?.. அந்த காசை பிரித்து ஏழைகளுக்கு கொடுத்து உதவியிருக்கலாம் என சமூகவலைத்தளங்களும் பலரும் கோபப்பட்டார்கள்.

மேலும், தொழிலதிபர் சதீஷுக்கு நாய் வளர்ப்பது பொழுதுபோக்கு. இவரிடம் பல வகையான வெளிநாட்டு நாய்கள் இருக்கிறது என்றெல்லாம் பில்டப் ஏற்றினார்கள். சதிஷும் 50 கோடி விலை என சொல்லப்பட்ட அந்த நாயை கூட்டி வந்து மீடியாக்களுக்கு போஸ் கொடுத்தார்.

dog

இந்நிலையில், அமலாக்கத்துறையினர் சதீஷின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அந்த நாயை எவ்வளவு விலைக்கு வாங்கினீர்கள்?. அதற்கான ஆதாரம் எங்கே? என கேட்க சதீஷோ மழுப்பலான பதிலை கூறியிருக்கிறார். அதோடு, அந்த நாயும் அவருடன் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. அதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில்தான் திடுக்கிடும் தகவல் வெளியானது.

தன்னை ஒரு பிரபல நாய் வளர்ப்பாளராக காட்டிக்கொள்வதற்காக ஊடக நண்பர் ஒருவர் உதவியுடன் சதீஷ் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. அந்த நாயின் விலை 50 கோடியெல்லாம் இல்லை என்பதும் அதன் விலை ஒரு லட்சம் மட்டுமே என்பது தெரியவந்தது. அதோடு, அந்த நாய் சதீஷுடையது இல்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்த அந்த நாயை அழைத்துக்கொண்டு வந்து 50 கோடி என சதீஷ் ஏமாற்றியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது சதீஷ் என்ன தொழில் செய்கிறார்? அவரின் மாத வருமானம் எவ்வளவு, அவரின் செலவுகள் என எல்லாவற்றை பற்றியும் வருமானவரித்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

கூலி படை வைத்து கொல்ல பார்க்கிறார்!.. தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மருமகன் பகீர் புகார்!…

0

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் சில மாதங்களுக்கு முன்பு கூலிப்படை மூலம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால், உண்மையான குற்றவாளிகளை தப்பவிட்டு பொய்யான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவிருப்பதாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கூறியிருந்தார்.

ஆர்ம்ஸ்ட்ராங் மரணமடைந்ததை அடுத்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சி பதவிக்கு வந்திருப்பவர் ஆனந்தன். இவர்தான் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை அந்த பதவியிலிருந்து நீக்கினார். இந்நிலையில்தான் இவர் மீது இவரின் மருமகன் பரபரப்பு புகார்களை கூறியிருக்கிறார்.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ள என் மாமனார் ஆனந்தன் என்னை கூலிப்படை வைத்து கொல்ல முயற்சி செய்து வருகிறார். அவரின் மகளும், நானும் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஒருநாள், உன் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை. வந்து பார் என என் மாமியார் அழைக்க என் மனைவி அவரின் வீட்டுக்கு போனார்.

அதன்பின், இப்போது வரை என்னிடம் பேசவில்லை. அவரை மூளைச்சலவை செய்து என்னிடமிருந்து பிரிந்துவிட்டனர். என் குழந்தையையும் கண்ணில் காட்ட மறுக்கிறார்கள். அதோடு, வியாபாரரீதியாகவும் எனக்கு பல குடைச்சல்களை கொடுத்தனர். இதுவரை 3 முறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன். அப்போது ‘என்னால் என் மருமகனுக்கு பிரச்சனை வராது’ என என் மாமனார் உறுதியளித்தார். ஆனால் இப்போது கூலிப்படை வைத்து என்னை கொல்ல முயற்சி நடக்கிறது. இது தெரிந்து நான் வீட்டிலிருந்து வெளியேறி மறைந்து வாழ்ந்து வருகிறேன். எனக்கு ஏதேனும் நடந்தால் என் மாமனார் ஆனந்தன், அவரின் மனைவி கவிதா மற்றும் என் மனைவி ஆகிய 3 பேர் மட்டுமே காரணம். எனக்கு வேறு எந்த பகையும் இல்லை’ என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

தலைமுடி ஈரத்தால் சளி பிடிப்பது ஏன்? முடி வெட்டவில்லை என்றால் சளி பிடிக்குமா?

0

குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் சளி பாதிப்பு ஏற்படுவது இயல்பான விஷயமாக இருக்கிறது.ஒவ்வாமை,பருவகாலம் போன்ற பல காரணங்களால் சளி தொந்தரவு ஏற்படுகிறது.சிலருக்கு தலை ஈரமாக இருந்தாலே சளி பிடிக்கும்.மழையில் நனைவது,தலையில் அதிகம் வியர்ப்பது,தலைக்கு குளித்துவிட்டு துவட்டாமல் இருப்பது போன்ற காரணங்களால் சளி பிடிக்கிறது.

உண்மையில் தலை ஈரத்திற்கும் சளி பிடிப்பதற்கும் என்ன காரணம் இருக்கிறது என்பதை அறிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.முதலில் தலை ஈரத்திற்கும் சளி பிடிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை.வைரஸ் தொற்று காரணமாகத் தான் சளி பிடிக்கிறது.முடி ஈரப்பதத்துடன் இருப்பதனால் சளி பிடிப்பதில்லை.

நமக்கு சளி பிடிக்க ரைனோ என்ற வைரஸ் தான் முக்கிய காரணமாக இருக்கிறது.இந்த ரைனோ வைரஸ் ஈரம் இருக்கும் தலைக்குள் எளிதில் சென்றுவிடும்.இவை காற்றின் மூலம் பரவும் ஒரு வைரஸாகும்.இந்த வைரஸ் நமது தலை முடிக்குள் ஊடுருவி பெருகி சளி பாதிப்பை அதிகரிக்கும்.

தலை முடி ஈரத்தினால் பரவும் இந்த வைரஸால்தான் சளி பிடிக்கின்றது தவிர வேறு எந்த உண்மை காரணமும் இல்லை.அதேபோல் தலைமுடி வெட்டவில்லை என்றால் சளி பிடிக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.இப்படி சொல்ல காரணம் இருக்கிறது.தலைமுடி அதிகமாக இருந்தால் வியர்த்து ஈரப்பதம் அதிகமாகும்.இதனால் ரைனோ வைரஸ் எளிதில் ஊடுருவி சளி பிடித்துவிடும்.இதனால் ஆண்கள் அடிக்கடி தலைமுடியை வெட்ட வேண்டும்.

தலைக்கு குளித்த பின்னர் துடைத்துக் கொள்ள வேண்டும்.வியர்வை தலையில் இருந்தால் அதன் ஈரப்பத்தால் வைரஸ் பரவி சளி பாதிப்பு ஏற்பட்டுவிடும்.தலையில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் தலையில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தெரிஞ்சிக்கோங்க.. இது தெரிந்தால் இனி பாக்கட் பாலை கொதிக்க வச்சி குடிக்க மாட்டீங்க!!

0

இன்று பெருமபாலானோர் பாக்கெட் பாலை பயன்படுத்தி வருகின்றனர்.நகரங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பாக்கெட் பால் பயன்பாடு அதிகரித்து வருகிறது.நம் தமிழகத்தில் ஆவின் பால் பயன்பாடு இருக்கிறது.

பாக்கெட் பால் அல்லது கறந்த பால் எதுவாக இருந்தாலும் நாம் முதலில் செய்வது கொதிக்க வைத்து பயன்படுத்துவதுதான்.ஆனால் இந்த செயல்முறை தவறானது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பாலை காய்ச்சிய பின்னர் பயன்படுத்துவதை நாம் காலம் காலமாக பின்பற்றி வருகின்றோம்.

ஆனால் அப்படி இருக்கையில் பாக்கெட் பாலை கொதிக்க வைக்காமல் குடித்தால் அதன் முழு சத்தையும் பெறமுடியுமாம்.பாலை கொதிக்க வைத்தால் அதன் முழு ஊட்டச்சத்தும் போய்விடும்.பாலில் கிருமிகள் இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.இதன் காரணமாகத் தான் பாலை கொதிக்க வைத்து குடிக்கின்றோம்.பாலில் டீ,காபி போன்ற பானங்கள் செய்யப்படும் பொழுது கொதிக்க வைத்து பயன்படுத்துவது வழக்கம்.ஆனால் பால் குடிப்பவர்கள் அதை கொதிக்க வைக்காமல் பயன்படுத்தலாம்.

பாலை கொதிக்க வைக்கும் பொழுது அதன் முழு சத்தும் நீங்கிவிடும்.பெரும்பாலும் பாக்கெட் பால் சரியான முறையில் பதப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது.அப்படி இருக்கையில் அதை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை.

பாலை கொதிக்க வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

பாக்கெட் பாலை கொதிக்க வைக்கும் பொழுது அதன் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக அழிந்துவிடும்.இது தவிர கொழுப்பு,புரதம் ஆகியவை சிதையக் கூடும்.பாலில் இருக்கின்ற லாக்டோஸ் க்ரீமி பதத்திற்கு மாறி இனிப்பு சுவையை அதிகப்படுத்திவிடும்.இப்படி கொதிக்க வைத்த பால் உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.எனவே பதப்படுத்திய பாக்கட் பாலை மீண்டும் கொதிக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படாது.

உங்களுக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் இருந்தால் இந்த 08 பிரச்சனைகளை சந்திப்பீங்க!!

0

அரிசி உணவுகள் தென் இந்தியர்களின் பிரதான உணவாக இருக்கின்றது.அரிசி உணவுகள் சாப்பிடுவதால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும் என்றாலும் அதை வேகவைக்காமல் சாப்பிட்டால் உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

உங்களில் சிலருக்கு வெறும் அரிசி சாப்பிடும் பழக்கம் இருக்கலாம்.சிலர் அரிசி சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றனர்.இப்படி சாப்பிடுவதால் உடலுக்கு பல தீங்குகள் ஏற்படலாம்.வேக வைக்காத அரிசியை சாப்பிட்டு வந்தால் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

வேகவைக்கப்படாத அரிசியை சாப்பிட்டால் என்னென்னெ பிரச்சனைகள் வரும்?

1)முதலில் அரிசியை பச்சையாக அதாவது வேகவைக்காமல் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.

2)வேகவைக்கப்படாத அரிசி உட்கொண்டால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.அரிசியில் இருக்கின்ற மாவுச்சத்து மலச்சிக்கல் பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும்.

3)வேகவைக்கப்படாத அரிசியை உட்கொண்டால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்.வெறும் அரிசி சாப்பிட்டால் வயிற்று வலி,வயிற்றுப்போக்கு போன்ற பல பாதிப்புகள் ஏற்படும்.

4)வேகவைக்கப்படாத அரிசியை உட்கொண்டால் குடலில் பாக்டீரியா தொற்றுகள் அதிகரித்துவிடும்.

5)அரிசியில் லெசித்தின் என்ற பூச்சிக்கொல்லி மருந்து இருக்கின்றது.வெறும் அரிசியை சாப்பிட்டால் நமது உடலில் செரிமான செல்கள் அழிந்துவிடும்.

6)வேகவைக்கப்படாத அரிசியை உட்கொண்டால் உடலுக்குள் கேன்சர் செல்கள் உருவாகிவிடும்.

7)வெறும் அரிசி இரத்த சர்க்கரை அளவை உயர்த்திவிடும். கர்ப்பிணி பெண்கள் அரிசி சாப்பிட்டால் இரத்தசோகை பிரச்சனை ஏற்படும்.

8)வேக வைக்காத அரிசியை உட்கொண்டால் வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.