Home Blog Page 292

கணவன் இறந்த பின்பும் மாங்கல்யம், பொட்டு அணியும் பிரபல பாடகி!! இப்படியும் ஒரு நம்பிக்கையா!!

0

இந்தியாவின் மிகச்சிறந்த பாடகி மற்றும் குரல் வல்லமை பெற்றவராக விளங்கக்கூடிய பெண்தான் பாடகி உஷா உதூப். முதலில் இந்திய திரையுலகில் பாடகியாக அறிமுகமாகி தன்னுடைய கணீர் என்ற குரல் வளர்த்தால் தனி ராஜ்ஜியம் நடத்தக்கூடிய பெண்ணாகவே இவர் அனைவராலும் அறியப்படுபவராக விளங்குகிறார்.

பாப் குயின் என கொண்டாடப்படக்கூடிய இவர் முதலில் ஹிந்தி திரை உலகில் அறிமுகமாகி அதன் பின் தமிழ் மலையாளம் கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் தன்னுடைய குரல் வல்லமையை காட்டத் தொடங்கினார். இதற்காக இவர் பத்மபூஷன் விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட பிரபல பாடகி தன் கணவர் இறந்த பின்பும் மாங்கல்யம் அணிந்து கொள்வது நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது போன்ற மங்களகரமான செயல்களை செய்வது ஏன் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து பிரபல பாடகி உஷா தெரிவித்திருப்பதாவது :-

இந்தியாவில் கணவனை இழந்து விட்டால் அந்தப் பெண் மாங்கல்யம் அணிவதோ, பொட்டு வைத்துக் கொள்வதோ அல்லது பூ வைத்துக் கொள்வதோ செய்வதில்லை. அவர்களை அமங்களி என அழைப்பதோடு இதனைத் தான் பின்பற்ற வேண்டும் என்றும் இதுதான் கலாச்சாரம் என்றும் பின்பற்றி வருகின்றனர்.

எனக்கு என் கணவரை பற்றி நன்றாகத் தெரியும் என தெரிவித்த அவர் நான் பொட்டு வைக்கவில்லை பூ அணியவில்லை மாங்கல்யம் சுடவில்லை என்றால் தான் என்னுடைய கணவர் ஏன் முட்டாள் மாதிரி செய்து கொண்டிருக்கிறாய் ? எனக் கேட்பார் என்றும் நான் நானாக வாழ்வதே அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பதால் அவர் இறந்த பின்பும் நான் இவ்வாறு என்னுடைய வாழ்க்கையை போலியாக இல்லாமல் உண்மையாக வாழ்கிறேன் என தெரிவிக்கிறேன்.

கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக கணவர் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கணவர் இறந்த பின்பும் இவ்வாறு தான் இருப்பதற்கு காரணம் தனக்கு அது மன வலிமையை அதிகம் கொடுக்கிறது என தெரிவிக்கிறார்.

தன்னுடைய தவறை உணரும் அதிபர் ட்ரம்ப்!! அதிரடியாக எடுத்த 2 முக்கிய முடிவுகள்!!

0

அமெரிக்காவில் தற்பொழுது பணம் வீக்கம் மற்றும் பொருளாதார மந்தத்தன்மை அதிகரித்து இருப்பதால் அதிபர் ட்ரம்பவர்கள் உலக நாடுகளின் மீது விதித்திருந்த வரியை குறைப்பது மற்றும் நீக்குவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்.

அதன்படி, அதிபர் ட்ரம்பவர்கள் எடுத்து முக்கிய முடிவு பின்வருமாறு :-

✓ சீன நாட்டை தவிர்த்து மற்ற நாடுகளின் மீது அமெரிக்கா அரசு விதித்திருக்கக்கூடிய வரிகளை 90 நாட்களுக்குள் விலக்கி விடவும், பழைய படியே அதாவது முன்பிருந்தது போலவே அனைத்து பொருட்களின் மீதும் 10 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ ஸ்மார்ட்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் இதர எலக்ட்ரிகல் பொருட்களின் மீது அமெரிக்கா அரசு விதித்திருந்த ரெசிப்ரோக்கல் வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

இதன் மூலம், அமெரிக்காவின் மந்தத்தன்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சி பணவீக்கம் போன்றவற்றிலிருந்து மீண்டும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என அதிபர் டிரம்ப் இது போன்ற முடிவுகளை எடுத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இந்த முடிவுகள் எலக்ட்ரானிக் உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தியாகவும் முதலீட்டாளர்களுக்கு அதிக அளவு பலன் தரக்கூடிய மற்றும் லாபம் தரக்கூடிய செய்தியாகவும் இந்த வரி விலக்கு அமைந்திருக்கிறது.

அமெரிக்காவின் டிஜிட்டல் வர்த்தகத்தில் ஏற்பட்டிருக்க கூடிய சிக்கலை தவிர்ப்பதற்காக அமெரிக்க அதிபர் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், ஹார்ட் டிரைவ்கள், கம்பியூட்டர் பிராசசர் மற்றும் மெமரி சிப்கள் போன்றவற்றிற்கான இறக்குமதி வரிகளை குறைத்திருக்கிறார். காரணம் எலக்ட்ரிக் பொருட்களில் 100 க்கு 99 பொருட்கள் அமெரிக்காவிற்கு வெளியில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் அமெரிக்காவில் எலக்ட்ரிக் வர்த்தகம் மிகவும் பாதிப்பை சந்தித்த நிலையில் இது போன்ற ஒரு முடிவுக்கு அமெரிக்கா வந்து இருக்கிறது.

அதிபராக பதவியேற்ற உடன் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு நேர் மாறாக அதல பாதாளத்தை நோக்கி அமெரிக்காவை கொண்டு சென்று இருந்த நிலையில், திடீரென தன்னால் விதிக்கப்பட்ட வரிகளை தானே முன்வந்து விலக்கு அளிக்க முடிவு செய்து இருக்கிறார். இதனால் அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை விரும்பும் என அமெரிக்கர்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5 நாட்களில் ரூ.480 வரை உயர்ந்த தங்கம் விலை!! இன்றைய (ஏப்ரல் 13) விலை நிலவரம்!!

0

தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களில், அதிலும் குறிப்பாக 22k தங்கத்தின் விலை ரூ.480 வரை உயர்ந்திருக்கிறது. கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக 4 சரிவை சந்தித்த தங்கத்தின் விலை ஆனது தற்பொழுது தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

கோயம்புத்தூரில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் பின்வருமாறு :-

22K தங்கத்தின் விலை நிலவரம் :-

✓ 1 கிராம் – ரூ. 8770
✓ 8 கிராம் – ரூ. 70,160
✓ 10 கிராம் – ரூ. 87,700

24K தங்கத்தின் விலை நிலவரம் :-

✓ 1 கிராம் – ரூ. 9567
✓ 8 கிராம் – ரூ. 76536
✓ 10 கிராம் – ரூ. 95670

தற்பொழுது 22 கேரட் தங்கத்தின் விலை அமைத்து ஒரு பவுனுக்கு 70 ஆயிரத்தில் கடந்து மக்களை அதிர்ச்சி அலையில் தள்ளியுள்ளது. ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ஆனது ரூ.66,320 விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் 5 நாட்கள் வித்தியாசத்தில் தற்பொழுது 70,160 ரூபாய் என அதிகரித்து இருக்கிறது. அதுவே 24K தங்கத்தின் விலை ஆனது கடந்த 5 நாட்களில் இதுவரை 523 ரூபாய் வரை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விலை உயர்வுகள் சர்வதேச சந்தை நிலவரம் இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி போன்ற காரணிகளால் ஏற்படுகிறது தங்கம் வாங்கும் முன்பு உங்கள் நகை கடையில் தற்போதைய விலையை உறுதிப்படுத்துவது நல்லது.

உங்க டிக்கெட் இன்னும் கன்ஃபார்ம் ஆகலையா.. அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க!!

0

ரயிலில் பயணம் செய்யக்கூடிய பல தங்களுடைய ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். இதில் ஒரு சிலருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது கன்ஃபார்ம் செய்யப்பட்டு விடுகிறது. ஆனால் ஒரு சிலருக்கோ வெயிட்டிங் லிஸ்டில் டிக்கெட் ஆனது வைக்கப்படுகிறது.

இந்த வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் பலரும் தங்களுடைய ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் எந்தெந்த பெட்டியில் கன்ஃபர்மேஷன் இல்லாத டிக்கெட்டை பயன்படுத்துவதால் எவ்வளவு அபராதங்கள் போடப்படும் என்பதை இந்த பதிவில் விளக்கமாக காணலாம்.

காத்திருப்போர் பட்டியலில் இருக்கக்கூடியவர்களின் டிக்கெட்டுகளுக்காக புதிய விதிமுறைகளை ரயில்வே துறை ஆனது உருவாக்கியுள்ளது. இதன்படி ஸ்லீப்பர் கோச்சில் காத்திருப்பு பட்டியலில் இருக்கக்கூடியவர்கள் பயணித்தாலும் அல்லது வேறு ஏதும் கம்பார்ட்மெண்டில் பயணித்தாலும் அவர்கள் பயணிக்க கூடிய பெட்டிகளுக்கு ஏற்றவாறு அபராதங்கள் விதிக்கப்படும் என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்திருப்போர் பட்டியலில் இருக்கக்கூடியவர்கள் பயணிக்கக்கூடிய பெட்டிகளும் அதற்குரிய அபராதங்களும் :-

✓ ஸ்லீப்பர் கோச் – ரூ.250 அபராதம் + பயணத்திற்கான செலவு

✓ AC கோச் – அதிகப்படியான அபராதம் + பயணத்திற்கான செலவுடன் ரூ.440 கூடுதல் கட்டணம் + எப்பொழுது வேண்டுமானாலும் இறக்கி விடுவதற்கான உரிமை

அபராதத்திலிருந்து தப்பிக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் :-

ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால் முன்பதிவு செய்யப்பட்ட உங்களுடைய டிக்கெட் ஆனது காத்திருப்போர் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுடைய டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறது என்றால் அந்த பயணத்தை உங்களால் தொடர முடியாது. அதையும் மீறி பயணிக்க நினைப்பவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும்.

உதவித் தொகை + ஓய்வூதியம்!! விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!!

0

மத்திய அரசானது விவசாயிகளுக்கு பல்வேறு உதவி தொகைகளை வழங்கி வரக்கூடிய நிலையில் தற்போது அதனோடு கூடவே ஓய்வூதியத்திற்கான திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, பிஎம் கிசான் மான் தன் யோஜனா திட்டத்தின் கீழ் பி எம் கிஷான் வங்கி கணக்கு வைத்திருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஒரு வருடத்திற்கு 42,000 ரூபாய் வரை ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டம் செயல்பட்டு வருகிறது.

இனி விவசாயிகளுக்கு உதவித்தொகை மற்றும் அதனோடு கூடவே ஓய்வூதியமும் கிடைப்பதற்கான வழிவகையை மத்திய அரசு செய்துள்ளது. இவை இரண்டிலும் விவசாயக் கல் இணைந்து பயன் பெறுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிரதான் மந்திரி கிஷான் மான் தன் யோஜனா :-

இந்த திட்டமானது மத்திய அரசால் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். மேலும் வயதிற்கு ஏற்றவாறு சேமிப்பானது ஒரு மாதத்திற்கு 55 ரூபாய் முதல் 200 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயத்திருக்கிறது. அதன்படி, இணைந்து தங்களுடைய சேமிப்பை முடிக்கக்கூடிய விவசாயிகளுக்கு 60 வயதிற்கு மேல் மாதத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் என வருடத்திற்கு 36,000 இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. விவசாயிகள் எவ்வளவு சேமிக்கிறார்களோ அதற்கு ஈடாக மத்திய அரசும் அவர்களுடைய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வூதியம் பெறுவதற்கான வழிமுறைகள் :-

பிரதான் மந்திரி கிக்ஷான் திட்டத்தில் இணைந்திருந்தாலே விவசாயிகளுக்கு போதுமான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இவர்கள் சேர்த்து வைக்கக் கூடிய வங்கி கணக்கில் இருந்து இதற்கான பணம் தானாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இதற்காக தனியாக அப்ளை செய்வதோ அல்லது சேமிப்பு தொடங்குவதோ என்பது தேவையில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் பெறப்படும் பொழுது முதல் மூன்று மாதங்களுக்கு 2000 ரூபாய் சேர்த்து ஒரு வருடத்திற்கு 42 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுக்கு போய் இப்படியா.. நெருங்கிய நண்பரையே நடுரோட்டில் இறக்கி விட்ட இளையராஜா!! 

0

தமிழ் திரையுலகில் இளையராஜாவின் இசை என்பது காலத்தால் அழிக்க முடியாத காவியமாக மாறி இருக்கிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இவருடைய இசை தமிழ் திரையுலகை ஆண்டு வருகிறது என்றே கூறலாம். ஒரு புறம் இசையில் ஜாம்பவானாக இருந்தாலும் மறுபுறம் ஒரு வருடம் நடந்து கொள்ளும் முறை என்பதில் இவர் பல இடங்களில் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

காரணம், இளையராஜாவிற்கும் பாரதிராஜாவின் சகோதரரான ஜெயராஜ் இருவருக்கும் நீண்ட கால மற்றும் நெருக்கமான நட்பு இருந்துள்ளது. இளையராஜா அன்னக்கிளி திரைப்படத்தின் மூலமாக முதன் முதலில் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக காலடி எடுத்து வைத்தார். அந்த திரைப்படத்தை காண்பதற்காக இளையராஜா ஜெயராஜ் மற்றும் அவரது அண்ணி உட்பட அனைவரையும் அழைத்து சென்று இருக்கிறார். திரைப்படத்தை பார்த்தவுடன் ஜெயராஜ் இந்த திரைப்படம் 50 நாட்கள் ஓடும் என உறுதியளித்திருக்கிறார்.

ஆனால் இளையராஜாவோ, எனக்காக கூற வேண்டாம் உண்மையை சொல்லுங்கள் எனக் கேட்டதற்கு மீண்டும் ஜெயராஜ் உண்மையாகவே திரைப்படம் 50 நாட்கள் ஓடும் என கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அந்த திரைப்படம் 100 நாட்கள் 150 நாட்கள் 175 நாட்கள் என தொடர்ந்து கூடிய பொழுது ஒவ்வொரு நாளுக்கும் நேரில் சென்று ஜெயராஜ் பார்த்தீர்களா இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள் என்பது போல கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இவர்களுடைய நட்பு இருக்கும்பட்சத்தில், அடுத்ததாக 16 வயதினிலே திரைப்படத்தை காண்பதற்காக ஜெயராஜ் அவர்களை இளையராஜா அழைப்பு சென்று படம் முடிந்த பின்பு ஜெயராஜ் அவர்களை தானே வீட்டில் விட்டு விடுவதாக கூறி தன்னுடைய காரைக்கு அழைத்துச் சென்று இளையராஜா படம் குறித்து கேள்வி கேட்டுள்ளார். அப்பொழுது இந்த படத்தில் நடுநடுவே லேக் ஆகிறது என ஜெயராஜ் கூறியவுடன், முகத்தை கடுமையாக மாற்றிக்கொண்டு கீழே இறங்கு என இளையராஜா கூறியிருக்கிறார். அதன்பின் ஜெயராஜ் அவர்கள் தன்னுடைய வீட்டிற்கு நடந்து சென்றுவிட்டாராம். படம் வெளியான பின்பு 16 வயதினிலே திரைப்படத்தை பின்னணி இசையோடு பார்க்கும் பொழுது நன்றாக இருந்தது என நேரில் சென்று ஜெயராஜ் அவர்கள் மன்னிப்பு கேட்டு அன்று பின்னணி இசை இல்லாமல் கேட்கும் பொழுது எனக்கு அவ்வாறு தோன்றியது என்றும் பின்னணிசையோடு இந்த திரைப்படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஏண்டா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.. பெட்டிக்குள் ஒரு பெண்ணை அடைத்து விடுதிக்குள் கூட்டி செல்ல முயன்ற மாணவன்!! 

0

ஹரியானாவில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகம் ஒன்று படிக்கக்கூடிய மாணவன் தன்னுடைய கல்லூரி விடுதிக்குள் தன்னுடைய காதலியை அழைத்து செல்ல முயன்ற பொழுது காவலாளிகளிடம் கையும் காலும் ஆக சிக்கியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஹரியானா மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஓபி ஜிண்டால் யூனிவர்சிட்டி என்ற பல்கலைக்கழகத்தில் பஞ்சாப் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கக்கூடிய தொழிலதிபர்களின் மகன்களும் படித்து வருகின்றனர். அந்த அளவிற்கு மிகப்பெரிய பல்கலைக்கழகமாக இருக்கக்கூடிய இந்த கல்லூரியில் தன்னுடைய காதலியை ட்ராலியில் வைத்து ஒரு மாணவன் தன் விடுதிக்கு அழைத்து சென்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விடுமுறை நாட்களை கழிப்பதற்காக தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று வந்த மாணவன் வரும்பொழுது மிகப்பெரிய அளவில் ட்ராலி ஒன்றை எடுத்து வந்திருக்கிறார். ட்ராலியை பார்த்தவுடன் சந்தேகம் அடைந்த பாதுகாவலர்கள் இதில் என்ன இருக்கிறது என கேள்வி எழுப்ப பலவாறு பதில் கூற முற்பட்டு ஒரு கட்டத்தில் என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் அமைதியாக மாணவர் நின்று இருக்கிறார். அப்பொழுது திடீரென அந்த ட்ராலி அசைய தொடங்கியதோடு அதனுள் இருந்து முணுமுணுப்பு சத்தமும் வெளிவந்திருக்கிறது.

இதனை கண்டு காவலாளிகள் அதிர்ச்சி அடைந்ததோடு மாணவன் யாரோ ஒருவரை கொன்று ட்ராலியில் எடுத்து வந்திருப்பானோ என்பது போன்ற சந்தேகங்களும் எழுந்திருக்கிறது. திறந்து பார்த்த பின்பு தான் அதில் ஒரு பெண் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை குறித்து விசாரிக்கும் பொழுது அந்தப் பெண் தன்னுடைய காதலி என்றும் விடுதியின் அறைக்கு சென்று விட்டால் இருவரும் சில நாட்களுக்கு ஒன்றாக இருக்கலாம் என்பதற்காக இது போன்ற ஒரு நாடகம் நடத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் அந்தப் பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எந்த கல்லூரியில் படிக்கிறார் என்பது போன்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

அமெரிக்காவில் திறக்கப்பட இருக்கும் நிர்வாண பெண்ணின் சிலை!! எதுக்கு என்று தெரியுமா.. காரணத்தைக் கேட்டால் அசந்து போவீர்கள்!!

0

அமெரிக்காவில் இருக்கக்கூடிய சன் பிரான்சிஸ்கோ நகரில் 42 அடி உயர நிர்வாண பெண்ணினுடைய சிலை திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இந்த படைப்பிற்கு ஆர் எவல்யூஷன் என பெயரிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர் எவல்யூசன் என பெயரிடப்பட்டிருக்கக்கூடிய இந்த பெண்ணின் சிலையானது பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் அதிகாரம், வலிமை போன்றவற்றை பறைசாற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிலும் குறிப்பாக சான்பிரான்சிஸ்கோவில் இருக்கக்கூடிய பெர்ரி கட்டிடத்தின் முன்பாக இனி சிலை 6 மாத காலங்களுக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையினை வடிவமைத்தவர் மார்க்கோ கோக்ரேன் என்பவர் ஆவார்.

இவர் இந்த சிலை குறித்து கூறும் பொழுது, இந்த சிலையானது பெண்களுக்கு ஆன சுதந்திரம் மற்றும் பயமின்றி நடக்கக்கூடிய உலகிற்கான அழைப்பு என தெரிவித்திருக்கிறார். இந்த சிலையானது இதற்கு முன்பாக லாஸ் வேகாஸ் பெட்டுலுமா மற்றும் ஃபர்னிமேன் விழா போன்றவற்றில் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிற்பத்தின் சிறப்பு அம்சங்கள் :-

நாளொன்றுக்கு ஒரு முறை சுவாசிப்பது போன்று தொடர்ந்து 1 மணி நேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மின் விளக்குகளால் ஜொலிக்கும் என்றும் இதனுடைய மொத்த எடை 32 ஆயிரம் பவுண்டுகள் என்றும் இந்த சிலையில் மொத்தமாக 55,000 வெல்டுகள் இடம் பெற்று இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொங்கும் தொப்பையை குறைக்க முடியலையா? வெறும் 7 நாளில் தொப்பை கொழுப்பு காணாமல் போகும் அதிசயம் இதோ!!

0

உங்கள் உடல் ஒல்லியாக இருந்தாலும் வயிற்று பகுதியில் தொப்பை உருவாகி ஆரோக்கியம் மற்றும் அழகை பாழாக்கிவிடும்.எனவே உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய,உடல் சூடு தனிய வரகு அரிசியில் கஞ்சி செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)வரகு அரிசி – கால் கப்
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
3)நெய் – ஒரு தேக்கரண்டி
4)பாசி பருப்பு – கால் கப்
5)மிளகு – கால் தேக்கரண்டி
6)பூண்டு பல் – பத்து
7)தேங்காய் துருவல் – கால் கப்
8)உப்பு – தேவையான அளவு
9)தண்ணீர் – தேவைக்கேற்ப

செய்முறை விளக்கம்:-

1.முதலில் கால் கப் வரகு அரிசி மற்றும் கால் கப் பாசி பருப்பை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.மூன்று முதல் நான்கு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

2.அதன் பின்னர் அடுப்பில் குக்கரை வைத்து சூடாக்க வேண்டும்.அடுத்து நெய் ஊற்றி சூடானதும் ஒரு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் கால் தேக்கரண்டி மிளகு சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.அடுத்து பத்து பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு அதில் போட்டு வதக்க வேண்டும்.

3.பின்னர் ஊறவைத்த வரகரிசி கலவையை தண்ணீரை ஈர்த்துவிட்டு அதில் போட்டு கலந்து விட வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் 5 முதல் 6 கப் தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும்.

4.பின்னர் குக்கர் விசில் நின்றதும் அடுப்பை பற்ற வைத்து கஞ்சியை கலந்துவிட வேண்டும்.அடுத்து கால் கப் அளவிற்கு தேங்காய் துருவி அதில் கொட்டி மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கஞ்சியை தினமும் குடித்து வருபவர்களின் உடலில் கெட்ட கொழுப்பு சேராது.

இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற சத்தான கஞ்சியாக இது திகழ்கிறது.தினமும் ஒரு கிளாஸ் வரகரிசி கஞ்சி செய்து குடித்து உடலை சூடாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சோம்பலை விரட்டும் சோம்பு!! பெண்கள் ஏன் இதை சாப்பிட வேண்டும் தெரியுமா?

0

நாம் உணவில் பல வகை மசாலா பொருட்கள் சேர்த்துக் கொள்கின்றோம்.நாம் பயன்படுத்தும் மிளகு,சீரகம்,சோம்பு,பட்டை,இலவங்கம் என்று அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக உள்ளது.ஒவ்வொரு மசாலாவும் தனி சுவை,மணம்,மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.

இதில் சோம்பு அதாவது பெருஞ்சீரகம் ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது.பெருஞ்சீரகத்தில் வயிறு கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கின்றது.பெருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து பானமாக குடித்து வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.

பெருஞ்சீரகத்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

1)செரிமானப் பிரச்சனை நீங்க பெருஞ்சீரகத் தண்ணீர் குடிக்கலாம்.உணவு உட்கொண்ட பிறகு 15 நிமிடங்கள் கழித்து கால் தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிட்டால் வயிறு உப்புசமாகாமல் இருக்கும்.

2)உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க தினமும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை சாப்பிடலாம்.கண் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள சோம்பு பானம் குடிக்கலாம்.

3)மாதவிடாய் கால பாதிப்புகள் குணமாக பெருஞ்சீரகத்தை சாப்பிடலாம்.கேன்சர் செல்கள் அழிய சோம்பு சாப்பிடலாம்.

4)உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள சோம்பு பானம் பருகலாம்.

5)தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாக சோம்பு தண்ணீர் பருகலாம்.இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய சோம்பு தேநீர் செய்து பருகலாம்.

6)கருப்பையில் இருக்கின்ற அழுக்கு கழிவுகள் நீங்கி சீக்கிரம் கருவுற தினமும் ஒரு கிளாஸ் பெருஞ்சீரக பானம் குடிக்க வேண்டும்.