Home Blog Page 340

இந்து தர்மத்தை காக்க உயிர் தியாகம் செய்தாரா நித்யானாந்தா?!. பரபரப்பு வீடியோ….

0

திருவண்ணாமலையில் தனது ஆன்மிக பணியை துவங்கியவர் நித்யானந்தா. இவரை தேடி பக்தர்கள் பலரும் சென்றனர். வீட்டில் நடக்கும் பல நல்ல காரியங்களுக்கு இவரை அழைத்தார்கள். இதன் மூலம் அவருக்கு நல்ல வருமானம் வந்தது. அதன் மூலம் பெங்களூரில் ஆசிரமம் துவங்கினார் நித்யானந்தா. அங்கு அவருக்கென சீடர்கள் உருவானார்கள்.

திருமணமாகாத பல இளம்பெண்களும், ஆண்களும் கூட அவரிடம் தீட்சை பெற்று சாமியார்களாக மாறினார்கள். வெளிநாட்டை சேர்ந்த பலரும் கூட அவரின் ஆசிரமத்தில் சீடர்களாக மாறினார்கள். இதன் காரணமாக மக்களிடம் பிரபலமாக துவங்கினார் நித்யானந்தா. கதவை திற காற்று வரட்டும் என ஆனந்த விகடனில் கூட இவரின் ஆன்மீக போதனைகள் வார வாரம் வெளிவந்தது.

நடிகை ரஞ்சிதாவையும் இவரையும் இணைத்து ஒரு வீடியோவும் சன் டிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை நித்யானந்தாவை பின்பற்றுபவர்கள் தவிர மற்ற எல்லோரும் நம்பினார்கள். நித்யானந்தா மீது பல வழக்குகளும் தொடரப்பட்டது. திடீரென ஒரு நாள் இந்தியாவிலிருந்து வெளியேறிய நித்யானந்தா ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாஷ் என பெயர் வைத்து அதுவே தனது நாடு எனவும் அறிவித்தார். அங்கிருந்து அவர் சீடர்களிடம் பேசும் வீடியோக்கள் அடிக்கடி யுடியூப்பில் பதிவேற்றப்படும்.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தி இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நித்யானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் இந்த தகவலை வீடியோ மூலம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். கடந்த 24 வருடங்களாக தொடர்ந்து ஆன்மீக பிரசங்க செய்து வந்த சாமி இந்து தர்மத்தையும், சமாதானத்தையும் காப்பாற்றுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்திருக்கிறார்’ என வீடியோ காலில் அவர் பேசியிருக்கிறர். இது நித்யானந்தாவை பின்பற்றுபவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுபற்றி கைலாசா நாட்டில் உள்ள நித்யானந்தா ஆஸ்ரமம் எந்த விளக்கும் கொடுக்கவில்லை.

தலைமறைவாக உள்ள நித்தியானந்தா இறந்துவிட்டாரா? சகோதரி மகன் அதிர்ச்சி வீடியோ!

0

இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஆன்மிக குரு நித்தியானந்தா, 2019 ஆம் ஆண்டு குஜராத்தில் பதிவான ஒரு வழக்கில் போலீசாரின் தேடுதல் வேட்டையிலிருந்து தப்பிக்க இந்தியாவை விட்டு வெளியேறினார். பின்னர், தென் பசிபிக் கடலில் ஒரு தனியார் தீவை கைலாசா என்ற பெயரில் அறிவித்து, அதை தனி நாடாகவும் பிரகடனம் செய்தார். இதற்கிடையில், ஆன்மிக சொற்பொழிவுகள், பத்திரிகை செய்திகள், மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் தொடர்ந்து வெளியேறி வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக காணாமல் போய்விட்டார்.

2022 ஆம் ஆண்டு மே மாதத்தில், நித்தியானந்தா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் என தகவல்கள் பரவின. ஆனால் அதற்கு பதிலாக அவர், “நான் இறக்கவில்லை, சமாதி நிலையை அடைந்துள்ளேன். 27 மருத்துவர்கள் எனது உடலின் பிரபஞ்ச சக்திகளை ஆய்வு செய்கின்றனர்” என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்குப் பிறகு, அவரது காணொளிகள் மிகவும் குறைவாகவே வெளியாகின. சில வீடியோக்கள் வந்தாலும், அவை பழையவையாகவே இருந்தன.

இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, நித்தியானந்தா மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த போது, “சாமி ஹிந்து தர்மத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்துவிட்டார்” என பக்தர்களுக்கு அறிவித்தார்.

இந்த தகவல் உண்மையானதா? அல்லது இது போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்க நித்தியானந்தாவின் புதிய நாடகமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், கடந்த சில ஆண்டுகளாக அவர் தொடர்பைத் தவிர்த்து வந்ததோடு, கைலாசா நாட்டின் நிலவரம் பற்றிய எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.

நித்தியானந்தாவின் மரணம் உண்மையானதென்றால், அவருடைய ரூ.4,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் யார் வசம் செல்லும்? இது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. பலரும் நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவின் மிக நெருங்கியரானவர் என்பதால், அவர் இந்த சொத்துக்களை நிர்வகிக்க வாய்ப்புள்ளது என கருதுகின்றனர். அதேசமயம், கைலாசா நாட்டின் நிர்வாகத்தினர், அல்லது அவருடைய குடும்பத்தினரும் இதில் உரிமை கோரலாம்.

இந்த மர்ம மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள், “இந்த தகவல் உண்மையா? அல்லது இது ஒரு தப்பிக்கும் திட்டமா?” என்பதைக் கண்டறிய முயலுகின்றனர். ஏற்கனவே இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நித்தியானந்தா மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதால், அவருடைய மரணம் உண்மையாக இருந்தால் கூட, அவருடைய சொத்துக்கள் மீதான உரிமை தொடர்பாக பல சிக்கல்கள் உருவாகும் என்பதே நிச்சயம்.

பிஎஃப் பணத்தை எடுக்கும் ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை 5 லட்சமாக உயர்த்த EPFO பரிந்துரை 

0

பிஎஃப் திரும்பப் பெறுவதற்கான ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை 5 லட்சமாக உயர்த்த EPFO பரிந்துரை செய்துள்ளது.

பிஎஃப் திரும்பப் பெறுவதற்கான ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பு அதிகரிப்பு, கோடிக்கணக்கான உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பரிந்துரை இப்போது மத்திய அறங்காவலர் குழுவின் ஒப்புதலுக்குச் செல்லும்.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சமீபத்திய ஆண்டுகளில் PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு உதவ பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது – சில சந்தர்ப்பங்களில் முன்கூட்டிய உரிமைகோரல்களுக்கு ஒரு ஆட்டோ-செட்டில்மென்ட் பயன்முறையை அறிமுகப்படுத்தியது உட்பட. பிஎஃப் திரும்பப் பெறுவதற்கான ஆட்டோ செட்டில்மென்ட்டை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், கடந்த வாரம் மக்களவையில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறுகையில், 60% க்கும் அதிகமான முன்கூட்டிய கோரிக்கைகள் இப்போது அத்தகைய முறையில் செயல்படுத்தப்படுகின்றன.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் சுமிதா தாவ்ரா, கடந்த வாரம் ஸ்ரீநகரில் நடைபெற்ற கூட்டத்தின் போது வரம்பை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்ததாக ஆதாரங்கள் திங்களன்று ANI இடம் தெரிவித்தன. இந்த திருத்தம் கோடிக்கணக்கான உறுப்பினர்களின் வாழ்க்கை வசதியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பரிந்துரை இப்போது மத்திய அறங்காவலர் குழுவின் ஒப்புதலுக்குச் செல்லும்.

EPFO ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதால், ஒரு ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் அல்லது UPI மூலம் PF திரும்பப் பெறுதல் விரைவில் மேற்கொள்ளப்படலாம். NPCI வழங்கிய பரிந்துரையை அமைச்சகம் அங்கீகரித்ததாக கடந்த வாரம் தாவ்ரா சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு மே அல்லது ஜூன் மாத இறுதிக்குள் உறுப்பினர்கள் UPI மற்றும் ATM மூலம் PF எடுக்க முடியும்.

PF திரும்பப் பெறுவதற்கான சரிபார்ப்பு முறைகளும் 27ல் இருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதை 6 ஆகக் குறைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உரிமைகோரல்களின் தகுதி/அனுமதிப்பு குறித்து உறுப்பினர்களுக்கு வழிகாட்டவும் மற்றும் உறுப்பினர்கள் தகுதியற்ற உரிமைகோரல்களை தாக்கல் செய்யாமல் இருப்பதை உறுதிசெய்யவும் சில வெளிப்படையான சரிபார்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நோய் அல்லது மருத்துவமனை முன்னேற்றத்திற்காக ஏப்ரல் 2020 இல் தானாக உரிமைகோரல் தீர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது பின்னர் திருமணம், கல்வி மற்றும் வீடு தொடர்பான உரிமைகோரல்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது – EPFO ​​ஆனது மேம்பட்ட க்ளெய்ம் வரம்பின் ஆட்டோ செட்டில்மென்ட்டை ரூ.50,000லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தியது.

EPFO மேலும் 3 பிரிவுகளுக்கான முன்கூட்டிய உரிமைகோரல்களின் தானியங்கு முறையில் தீர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது: கல்வி, திருமணம் மற்றும் வீடு. 99.31% க்கும் அதிகமான உரிமைகோரல்கள் இப்போது ஆன்லைன் பயன்முறையில் பெறப்பட்டுள்ளன, மேலும் அந்த தானியங்கு முறை மூன்று நாட்களுக்குள் செயலாக்கப்படும்.

“இப்போது செயலாக்கப்பட்ட முன்கூட்டிய உரிமைகோரல்களில் 60% ஆட்டோ பயன்முறையில் உள்ளன. ஆட்டோ-மோட் உரிமைகோரல்கள் மூன்று நாட்களுக்குள் செயல்படுத்தப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் 06.03.2025 அன்று EPFO ​​வரலாற்று உயர்வான 2.16 கோடி ஆட்டோ-க்ளைம்களை அடைந்துள்ளது,” என்று கரண்ட்லாஜே மார்ச் 17 அன்று விளக்கினார்.

அண்ணாமலையை தூக்கிவிட்டு அவரா?!.. தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில்!….

0

கர்நாடகாவில் ஐபிஎஸ் வேலை பார்த்து கொண்டிருந்த அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமித்தது பாஜக மேலிடம்… அண்ணாமலையும் ஆக்டிவாக அரசியல் செய்ய துவங்கினார். ஜனநாயக கூட்டணியில் அதிமுகவும் இணைந்தது. ஆனால், 2021 சட்ட மன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இதற்கு பாஜக கூட்டணியே காரணம். சிறுபான்மையினர் ஓட்டுக்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என அதிமுக சொன்னது. இதனால் கோபமடைந்த அண்ணாமலை அதிமுக தலைவர்களை மோசமாக விமர்சித்தார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியது அதிமுக.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்கை இப்போதே துவங்கிவிட்டன. எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமையை தலைமையாக கொண்டு பாஜக கூட்டணி அமைவதையும், முதல்வர் வேட்பாளராக பழனிச்சாமி அறிவிக்கப்படுவதிலும் அண்ணாமலைக்கு உடன்படு இல்லை.

annamalai

எடப்பாடி பழனிச்சாமி வந்த பின் அதிமுக பலவீனமடைந்து விட்டது. அதன் வாக்கு குறைந்துவிட்டது. பல சாதியினரின் ஓட்டுகளை இழந்துவிட்டது. எனவே, வேறொருவரை முதல்வர் வேட்பாளராக நியமிக்கலாம் என அமித்ஷாவிடம் அண்ணாமலை சொன்னதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதில், அமித்ஷாவுக்கு விருப்பம் இல்லை. அதிமுக, பாஜக இடையே கூட்டணி, அதோடு, ஒபிஎஸ் ஆகிய எல்லோரையும் ஒன்றாக்கி தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டிருக்கிறார்.

ஏற்கனவே சொன்னபடி எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்றால் தனது கட்சியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறியிருக்கிறார். எனவே, அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்துவிட்டு வேறு யாரையாவது தமிழக பாஜக தலைவராக போடலாம் என அமித்ஷா கருதுகிறார். அந்த பட்டியலில் நயினார் நாகேந்திரன் முதலிடத்தில் இருக்கிறாராம்.

மீண்டும் பழனிசாமி என்றால் டெபாசிட் கூட மிஞ்சாது: அமித் ஷாவுக்கு பறந்த ரிப்போர்ட்!

0

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. – பா.ஜ. கூட்டணியின் நிலை குறித்து விரிவாக விளக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமையும்பட்சத்தில், தே.ஜ. கூட்டணிக்கு பெரிய பின்னடைவு ஏற்படும் என அண்ணாமலை உறுதியாக தெரிவித்தார்.

2024 பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. 20% வாக்குகளை பெற்றதோடு, பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.) 18% வாக்குகளை பெற்றது. இதனால், கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதம் 38% ஆக உயர்ந்தது. ஆனால், இது கடந்த 2014, 2019 தேர்தல்களை விட அதிகரித்திருந்தாலும், அ.தி.மு.க. வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவே இதற்குக் காரணம் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா காலத்தில் இருந்த மொத்த ஆதரவினை இழந்த பிறகு, பல முக்கிய சமூகக் குழுக்கள் அ.தி.மு.க.-வை விட்டு விலகியுள்ளன. சசிகலா, தினகரன் ஆகியோரை நீக்கியபின் 2019, 2021 தேர்தல்களில் முக்குலத்தோர் சமூக ஆதரவு இருந்தது. ஆனால், பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின், அந்த சமூகத்தின் ஆதரவு கணிசமாக குறைந்துள்ளது.

2024 தேர்தலில், முக்கியமான தொகுதிகள் பலவற்றில் அ.தி.மு.க. மோசமான தோல்வியை சந்தித்தது. ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மற்றும் சென்னை தொகுதிகளில் கூட்டணி மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது. இதன் மூலம் பழனிசாமிக்கு மக்களின் முழுமையான ஆதரவு இல்லையெனத் தெரிய வந்தது.

அ.தி.மு.க.-வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் குறைந்ததால், இரட்டை இலை சின்னத்தின் மதிப்பு குறைந்துள்ளது. வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாய ஆதரவை மட்டும் 10.5% இடஒதுக்கீடு மூலம் தக்கவைத்துள்ளது. ஆனால், நாடார், முக்குலத்தோர் உள்ளிட்ட முக்கிய சமூகங்களின் ஆதரவை இழந்துள்ளது.

அ.தி.மு.க.- பா.ஜ. கூட்டணி தொடரும் நிலையில், பழனிசாமி தலைமையிலான அணியை ஏற்கக்கூடாது எனவும், வாக்கு கணக்குகளை முன்வைத்து தனது நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளார். இதனால், அடுத்த தமிழக அரசியலில் இந்த விவாதம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கட்சியில நடக்குறது எதுவும் விஜய்க்கே தெரியல!.. போட்டு தாக்கும் தாடி பாலாஜி

0

TVK Vijay: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். தற்போது ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின் அவர் தனது அரசியல் பணிகளை துவங்கிவிருக்கிறார். தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செல்லும் திட்டமும் அவரிடம் இருக்கிறது. ஏனெனில், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது பலத்தை நிரூபிப்பது என்கிற முடிவில் இருக்கிறது.

விஜய் வலது கையாக செயல்பட்டு வருபவர் புஸ்ஸி ஆனந்த். இவர் புதுச்சேரியை சேர்ந்தவர். புஸ்ஸி என்கிற தொகுதியில் வெற்றி பெற்றதால் அவருக்கு பெயர். அதன்பின் விஜயின் ரசிகர் மன்ற தலைவராக இருந்தார். இப்போது விஜய்க்கு ஆல் இன் ஆலாக மாறிவிட்டார். விஜயை யார் சந்திக்க வேண்டும்? யாருக்கு அனுமதி என்பதை கூட அவர்தான் முடிவு செய்கிறார்.

ஏற்கவே விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் புஸ்ஸி ஆனந்த் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். புஸ்ஸி ஆனந்த் நன்றாக நடித்து விஜயை நம்ப வைத்து ஏமாற்றி வருகிறார். என்னை விடவும் புஸ்ஸி ஆனந்தை விஜய் நம்புகிறார் என பகீர் புகார் சொன்னார். இப்போது நடிகர் தாடி பாலாஜியும் ஆனந்த் மீது புகார் கொடுத்திருக்கிறார்.

தலைவர் விஜய் புஸ்ஸி ஆனந்தை நம்புகிறார். கட்சிக்காக பலரும் தங்களின் சொந்த பணத்தை செலவு செய்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். ஆனால், புஸ்ஸி ஆனந்த் எதையுமே விஜயிடம் சொல்வது இல்லை. நான் பலமுறை தலைவரை பார்க்க முயற்சி செய்தும் புஸ்ஸி ஆனந்த் அதை தடுத்து வருகிறார். தான் மட்டுமே விஜய்க்கு முக்கியமானவராக இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். தவெக முதலாமாண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் என இரண்டுக்கும் என்னை அழைத்தார்கள். ஆனால், அங்கே போனால் அனுமதி இல்லை என்கிறார்கள். இந்த கோபம் எனக்கு மட்டும் இல்லை. கட்சியில் பலருக்கும் இருக்கிறது. புஸ்ஸி ஆனந்த் இப்படி செயல்படுவது தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியை தடுக்கும்’ என பொங்கியிருக்கிறார் தாடி பாலாஜி.

பழனிச்சாமிக்கு எதிராக 8 அமைச்சர்கள்!.. காய் நகர்த்தும் செங்கோட்டையன்!.. அதிமுகவில் நடப்பது என்ன?!…

0

எடப்பாடி பழனிச்சாமி தலைமியின் கீழ் இப்போது அதிமுக செயல்பட்டு வருகிறது. போன ஆட்சியில் கட்சி, ஆட்சி என இரண்டையும் கையில் வைத்திருந்தார் பழனிச்சாமி. தர்ம யுத்தம் நடத்திகொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வத்தை பழனிச்சாமியுடன் சேர்த்து வைத்து அதிமுகவில் இரட்டை தலைமையை உருவாக்கியது பாஜக. இரண்டு பேருமே பாஜகவுக்கு விஸ்வாசமாகவே இருந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் செய்த விஷயங்கள் பழனிச்சாமிக்கு பிடிக்காமல் போக அவரை கட்சியிலிருந்தே தூக்கிவிட்டார். இப்போது தனியாக செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ்.

ஒருபக்கம், இனி எந்த நிலையிலும் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் கட்சிக்குள் விடக்கூடாது என்பதில் பழனிச்சாமி உறுதியாக இருக்கிறார். மேலும், 2 வருடங்களுக்கு முன்பே பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியது அதிமுக. ஆனால், திமுகவை வீழ்த்த பாஜகவுடன் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அமித்ஷாவின் நோக்கமாக இருக்கிறது. சமீபத்தில் பழனிச்சாமி டெல்லி சென்றபோது அவரிடம் அமித்ஷா இதைத்தான் கூறியிருக்கிறார். ஆனால், பழனிச்சாமி பிடிகொடுக்கவில்லை.

eps
eps

எனவே, பழனிச்சாமி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சிலரை வைத்து பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கிறார் அமித்ஷா. ஏற்கனவே அதிமுகவில் தனியாக செயல்பட்டு வரும் செங்கோட்டையன் இதற்கான வேலைகளை செய்ய துவங்கிவிட்டார்.. இதுவரை 2 முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். பழனிச்சாமி மீது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களை ஒருங்கிணைத்து மேலும் பல எம்.எல்.ஏக்களையும் தன் பக்கம் இழுத்து அதிமுக தலைமையை நாம் கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் செங்கோட்டையனுக்கு இருக்கிறது. இப்போது இது வேண்டாம். பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுத்து அவரை ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வரவேண்டும் என்பதே அமிஷாவின் நோக்கமாக இருக்கிறது.

அதிமுக, பாஜக, சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் போன்ற எல்லோரையும் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க பழனிச்சாமி ஒப்புகொண்டால் அவரின் தலைமையில் அதிமுக தொடர்ந்து செயல்படும். இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து அதிமுகவை உடைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். நடப்பதை பார்க்கும்போது அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்றே கணிக்கப்படுகிறது.

அதிமுகவை உடைக்கும் அமித்ஷா!. செங்கோட்டையனுக்கு பொதுச்செயலாளர் பதவியா?!….

0

ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அதிமுக அவரின் மறைவுக்கு பின் ஓ.பன்னீர் செல்வத்திடம் சென்று அதன்பின் சசிகலா கைக்கு போனது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றுவிட கூவத்தூர் விடுதியில் சசிகலாவால் முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாம். அதன்பின் ஓ.பி.எஸ், சசிகலா என எல்லோரையும் கட்சியிலிருந்து தூக்கிவிட்டு ஆட்சி, கட்சி என இரண்டையும் தனது கையில் வைத்துக்கொண்டார் பழனிச்சாமி.

இனி எந்த நிலையிலும் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை கட்சிக்குள் விடக்கூடாது என்பதில் பழனிச்சாமி உறுதியாக இருக்கிறார். ஆனால், திமுகவை வீழ்த்த பாஜகவுடன் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அமித்ஷாவின் நோக்கமாக இருக்கிறது. சமீபத்தில் பழனிச்சாமி டெல்லி சென்றபோது அவரிடம் அமித்ஷா இதைத்தான் வலியுறுத்தினார். ஆனால், பழனிச்சாமி பிடிகொடுக்கவில்லை.

eps

எனவே, பழனிச்சாமி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சிலரை வைத்து பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கிறார் அமித்ஷா. முதலில் இதை செய்தது செங்கோட்டையன்தான். இதுவரை 2 முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். பழனிச்சாமி ஒத்துவரவில்லை எனில் பழனிச்சாமியை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு செங்கோட்டையனின் கையில் அதிகாரத்தை கொடுத்து அவர் மூலம் பாஜக கூட்டணியை உறுதி செய்யலாம் என்கிற எண்ணமும் அமித்ஷாவுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

sengottayan

அதிமுக, பாஜக, சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் போன்ற எல்லோரையும் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க பழனிச்சாமி ஒப்புகொண்டால் அவரின் தலைமையில் அதிமுக தொடர்ந்து செயல்படும். இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து அதிமுகவை உடைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

பழனிச்சாமி என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருஞ்சீரகத்தை இப்படி சாப்பிட்டால் இரத்தக் குழாயில் படிந்துள்ள கொழுப்பு கரைந்துவிடும்!!

0

உங்கள் இரத்தக் குழாயில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1.கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2.வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
3.தண்ணீர் – ஒரு கப்
4.ஓமம் – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

கருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிரகள வெந்தயம் மற்றும் ஓமம் ஆகிய இரண்டையும் தலா ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை வாணலியில் போட்டு குறைவான தீயில் வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் நீங்கள் ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைக்க வேண்டும்.அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த பொடியை அதில் கொட்டி குறைந்த தீயில் கொதிக்க வேண்டும்.

இந்த பானத்தை ஆறவிட்டு காலை நேரத்தில் குடித்து வந்தால் இரத்தக் குழாயில் படிந்துள்ள கொழுப்பு கரையும்.

தேவையான பொருட்கள்:-

1சீரகம் – ஒரு தேக்கரண்டி
2.தண்ணீர் – ஒரு கிளாஸ்

பயன்படுத்தும் முறை:-

ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இதை ஆறவைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பிறகு அரைத்த சீரகத் தூளை அதில் கொட்டி கோதிக்ஸ் வைத்து குடித்தால் இரத்தக் குழாயில் படிந்து கிடக்கும் கொழுப்பு கரையும்.

தேவையான பொருட்கள்:-

1.இஞ்சி சாறு – ஒரு தேக்கரண்டி
2.எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
3.ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி
4.தண்ணீர் – ஒரு கப்

பயன்படுத்தும் முறை:-

ஒரு கப் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.இதை கிண்ணத்தில் ஊற்றி
ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு,ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து குடித்தால் இரத்தக் குழாயில் இருக்கின்ற கொழுப்பு நீங்கும்.

வெறும் 7 நாளில் தொந்தி குறைய.. இந்த மாவில் அடை தோசை செய்து சாப்பிடுங்கள்!!

0

வயிற்றுப் பகுதியில் தேங்கி இருக்கும் அளவிற்கு அதிகமான கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்க ராகி மாவில் உணவு செய்து சாப்பிடுங்கள்.

ராகியில் கால்சியம்,பொட்டாசியம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.கெட்ட கொழுப்பு கரைய,இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட இதை உணவாக சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)ராகி மாவு – ஒரு கப்
2)சின்ன வெங்காயம் – பத்து
3)கறிவேப்பிலை – இரண்டு கொத்து
4)உப்பு சிறிதளவு
5)வர மிளகாய் – இரண்டு
6)தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ராகியை தண்ணீர் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை வெயிலில் பரப்பி காய வைக்க வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த ராகி மாவை நன்கு சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு கறிவேப்பிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு இரண்டு வர மிளகாயை கட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ராகி மாவை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு வர மிளகாய்,நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையை அதில் போட்டு கிளற வேண்டும்.

அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசய வேண்டும்.

பிறகு அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு தயாரித்து வைத்துள்ள ராகி மாவை அடை போல் தட்டி கல்லில் போட்டு வேக வைக்க வேண்டும்.தேவைப்பட்டால் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து சுடலாம்.

இந்த ராகி ரொட்டியை சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீக்கிரம் குறையும்.உடலில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய இந்த ராகி ரொட்டியை சாப்பிடலாம்.

அதேபோல் ராகி மாவை தண்ணீரில் கொட்டி கரைத்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து குடிக்கலாம்.ராகியில் தோசை,களி போன்றும் செய்தும் சாப்பிடலாம்.