Home Blog Page 366

டிராகன் டீமுக்கு செம ஹேப்பியை கொடுத்த தளபதி.. சொன்னா புரியாது பாஸ்!.. ஃபீல் பண்ணும் இயக்குனர்!…

0

Dragon: ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. அதன்பின் பிரதீப் ரங்கநாதனை வைத்து அவர் இயக்கிய படம்தான் டிரகான். கல்லூரி வாழ்க்கையை சரியாக கையாளாத ஒருவன் என்ன ஆகிறான் என்பதை யதார்த்தமாக சொல்லியிருந்தார். குறிப்பாக இளைஞர்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், நேர்மையாக முன்னேறுவதே எப்போதும் நிலைக்கும் என்கிற கருத்தையும் இந்த படத்தில் வலியுறுத்தியிருந்தார்.

லவ் டுடே ஹிட்டுக்கு பின் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும், ரசிகர்களின் கனவு கன்னியான கயாடு லோஹர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்திருந்தார்கள். மேலும், இயக்குனர் மிஷ்கின் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

aswath

இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனதால் சூப்பர் ஹிட் அடித்து 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து இந்நிலையில்தான், டிராகன் பட டீமை விஜய் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ள அஸ்வத் மாரிமுத்து ‘ஒரு நாள் நல்ல படத்தை கொடுத்து விஜய் சாரை சந்திப்பதற்காக கடுமையாக நான் உழைத்து வந்தது என்னுடன் நெருக்கமாக பழகியவர்களுக்கு தெரியும். அவருடன் வேலை செய்ய முடியுமா என தெரியவில்லை.

aswath

ஆனால், அவரை பார்த்துவிட்டேன். நான் அவரின் தீவிர ரசிகர் என்பதால் என்னை பேச விட்டு எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். அவர் என்னை பார்த்தபோது என் கண்களில் நீர் கசிந்துவிட்டது. அவர் மீதான அதீத அன்பு அது. அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது. என் ஃபிரண்ட் பிரதீப்புக்கு படம் பண்ண வந்தேன். சர்க்கிள் முடிந்துவிட்டது. ‘கிரேட் வொர்க் புரோ’ என அவர் சொன்னார். இது போதும்’ என உருகியிருக்கிறார்.

பள்ளி ஆண்டு விழாவுக்கு குற்றவாளியை அழைத்த ஆசிரியர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்!

0

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கன்றாம்பள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மார்ச் 22 அன்று ஆண்டு விழா நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு நடன போட்டி, பாடல் போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விழாவில் துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவிதா கணேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அவருடன், அவரது கணவர் கணேஷ் மேடையில் இருந்தார். இவர் நிகழ்ச்சியில் பாடல் பாடி மாணவர்களுடன் உற்சாகமாக கலந்து கொண்டார்.

இந்த நிலையில், கணேஷ் மீது தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இதற்கு முன்பு பலமுறை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால், சரித்திர குற்றவாளியான அவரின் அரசு பள்ளி விழாவில் பங்கேற்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஒரு குற்றவாளி பள்ளி விழாவில் எப்படி பங்கேற்றார்? அவருக்கு யார் அனுமதி வழங்கினார்? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகரிடம் கேட்டபோது, “சுவிதா ஊராட்சி மன்றத் தலைவர் என்பதால், அவரை விழாவிற்கு அழைத்தோம். ஆனால், அவரது கணவர் கணேஷ் மேடையில் பேசவும் பாடல் பாடவும் அனுமதி பெறவில்லை. இது அவருடைய தனிப்பட்ட செயலாகும்,” என்று தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் காணொளி பரவி சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், அரசு பள்ளியில் குற்றவாளிகள் கலந்து கொள்ளுவதை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

திமுக ஆட்சியை சிக்கலில் தள்ளிய சம்பவங்கள்: சட்டசபை நடக்கும் போதே தமிழகம் முழுக்க பகீர்!

0

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்கள் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியது. இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச கொலைகள் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்ததாக புள்ளிவிவரங்களை கொண்டு விளக்கம் அளித்தார். 2012ல் 1,943 கொலைகள், 2013ல் 1,927 கொலைகள் நடந்துள்ளன. கொரோனா காலத்திலும், 2020ல் 1,661 கொலைகள் பதிவாகியுள்ளன. 2024ல் 1,540 கொலைகள் மட்டுமே நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பே, மாநிலம் முழுவதும் கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஓசூரில் 12ம் தேதி முதியவர் தம்பதி கொலை செய்யப்பட்டனர். 13ம் தேதி அவிநாசியில் மற்றொரு தம்பதி கொல்லப்பட்டனர். 15ம் தேதி ஈரோட்டில் முக்கிய பிரமுகர் கொல்லப்பட்டார். 16ம் தேதி கரூரில் ரவுடி சந்தோஷ்குமார், 18ம் தேதி திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹிர் உசேன், 19ம் தேதி ஈரோட்டில் ரவுடி ஜான், 21ம் தேதி காரைக்குடியில் மனோஜ்குமார் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

சமீபத்திய கொலைகளில், நீதிமன்றம், காவல் நிலையங்களுக்கு செல்லும் வழியிலேயே குற்றவாளிகள் வெட்டிக்கொல்லப்படுவது கவலைக்கிடமான அம்சமாக உள்ளது. தமிழகத்தில் உயர் பதவிகளை அரசியல் காரணங்களால் வழங்கியதன் விளைவாக, முக்கிய அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டிருப்பது, சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. எதிர்வரும் 2026 தேர்தலில், இந்த பிரச்சனை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக்கு பெரும் தலைவிதையாக அமையலாம்.

சவுக்கு சங்கர் வீட்டில் மலத்தை கொட்டிய கும்பல்!. பின்னணியில் யார்?…

0

திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர். இதனால் இவரை 6 மாதங்கள் குண்டர் சட்டத்தில் அடைத்தனர். கரூரில் செந்தில் பாலாஜி பினாமி பெயரில் இடம் வாங்கி பிரம்மாண்ட மாளிகையை கட்டி வருகிறார் என்கிற செய்தியக் ஊடகங்களில் வெளிக்கொண்டு வந்தவர்தான் சவுக்கு சங்கர். இதனால், செந்தில் பாலாஜியின் தூண்டுதலின் பேரில்தான் தான் கைது செய்யப்பட்டதாக அப்போது சொன்னார் சவுக்கு சங்கர்.

சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் திமுகவை மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் சவுக்கு சங்கர். மேலும், டிவி சேனல்களையும் கட்டுப்படுத்தி திமுகவுக்கு எதிரான செய்திகளை வரவிடாமல் தடுக்கிறார்கள் எனவும் பகீர் புகார்களை கூறிவந்தார். மேலும், ஸ்டாலினின் பொம்மை முதல்வராக இருக்கிறார். அதிகாரிகள்தான் ஆட்சியை நடத்துகிறார்கள் எனவும் அவர் கூறினார்.

savukku shanakr

இந்நிலையில்தான், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 9.30 மணியளவில் துப்புறவு பணியாளர்கள் உடைகளை அணிந்த 50க்கும் மேற்பட்டோர் நுழைந்தனர். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் மலக்கழிவுகளை கொட்டினார்கள். அப்போது சவுக்கு சங்காரின் தாய் மட்டும் வீட்டில் இருந்தார் அவரையும் அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 


காலை 9.30 மணி முதல் சுமார் 3 மணி நேரங்கள் அவர்கள் என் வீட்டில் இருந்தும் போலீசர் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை வீட்டிற்கு போக வேண்டாம் என சொல்கிறார்கள். அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களும் அந்த கும்பல் தாக்கியிருக்கிறது. இதற்கு பின்னணியில் திமுதான் இருக்கிறது என புகார் சொல்லியிருக்கிறார் சவுக்கு சங்கர். அவரின் வீட்டில் நடந்த இந்த செயலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

திமுகவை யாராவது விமர்சித்தால் போலீசாரை அனுப்பி கைது செய்வது, குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளுவது, அசிங்கப்படுத்துவது போன்ற வேலைகளில் திமுக தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..

 

ஜெயிலர் 2-வுக்கு கூப்பிட்டா நடிப்பேன்!.. மோகன்லால் ஜாலி பேட்டி!…

Mohanlal: மலையாளத்தில் முக்கிய நடிகராக இருப்பவர் மோகன்லால். 50 வருடங்களாக மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் ரஜினி – கமல் போல மல்லுவுட்டில் மம்முட்டி – மோகன்லால் இருக்கிறார்கள். இப்போதும் இவர்களின் படங்களுக்கு கேரளாவில் நல்ல மவுசு இருக்கிறது. இப்போதும் இருவரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழிலும் மோகன்லால் அவ்வப்போது நடிப்பதுண்டு. இருவர், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து சூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் படத்திலும் கேமியோ வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்போது பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து உருவாகியுள்ள திரைப்படமான எம்புரான் வருகிற 27ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே பிரித்திவிராஜும், மோகன்லாலும் தமிழக ஊடகத்தை சந்தித்து பேசி வருகிறார்கள்.

mohanlal

பல யுடியூப் சேனல்களுக்கும் அவர்கள் பேட்டி கொடுத்து வருகிறார்கள். அப்போது எம்புரான் படம் பற்றிய பல தகவல்களையும் பிரித்திவிராஜ் பகிர்ந்துகொண்டார். எம்புரான் படத்திற்கு மோகன்லால் சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்திருக்கிறார்.; எனவே, மொத்த பட்ஜெட்டையும் படத்தை எடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். படம் வெளியாக வசூலை பெற்றபின் மோகன்லாலுக்கு சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த மோகன்லாலிடம் ‘ஜெயிலர் படத்தில் கேமியோ வேட்த்தில் உங்களை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த படத்திற்கு பின் உங்களுக்கு தமிழ் படங்களில் வாய்ப்பு வந்ததா?’ என கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன மோகன்லால் ‘நிறைய கதைகள் வந்தது. ஆனால், எம்புரான் படத்தில் நான் பிஸியாக இருந்தேன். ஜெயிலர் 2 இப்போது துவங்கியிருக்கிறது. அந்த படத்தில் என்னை அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்’ என சொல்லியிருக்கிறார்.

டூப் போலீஸ் அண்ணாமலை!. லஞ்சம் வாங்கிய பேர்வழி!.. வெளுத்து வாங்கிய சேகர்பாபு…

0

தமிழக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு பின் தமிழகத்தில் கால் ஊன்றும் வேலையில் பாஜக தீவிரமாக இறங்கியிருக்கிறது. முதலில் அதிமுகவை கட்டுப்படுத்த துவங்கியது. பாஜக தலைமை என்ன சொல்கிறதோ அதை எடப்பாடி பழனிச்சாமியும் பின்பற்ற துவங்கினார்.

அதன்பின் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சில தேர்தல்களில் போட்டியிட்டது. கடந்த பாரளுமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வி அடையவே சுதாரித்த எடப்பாடி பழனிச்சாமி இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டார். அதிமுகவை சம்மதிக்க வைக்க பாஜக எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து திமுகவுக்கு சரியான எதிர்கட்சி நாங்கள்தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளை விட திமுகவை மட்டுமே குறிவைத்து விமர்சனம் செய்து வருகிறது பாஜக. அதோடு, டாஸ்மாக்கில் 1000 கோடி ஊழல் என செய்தி வெளியான நிலையில் அதற்கு எதிராக பாஜக போராட்டமும் நடத்தியது.

மேலும், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக திருச்சியில் பாஜக சாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை ‘சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டின் கல்விக்கொள்கை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா?’ என காட்டமாக பேசியிருந்தார்.

அண்ணாமலையின் பேச்சு பற்றி அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘அண்ணாமலை ஒரு டூப் போலீஸ். லஞ்சம் வாங்கிய பேர்வழி என நான் குற்றம் சாட்டுகிறேன். போகிற போக்கில் வாரி தூவி விட்டு போனால் எப்படி முறையாகும்?.. ஆதாரத்தை காட்ட சொல்லுங்க்கள்’ என கூறினார். மேலும் 2024 பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பாஜகவை அலற வைத்தது திமுக. 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்’ என பதிலடி கொடுத்திருக்கிறார்.

திமுகவில் ஒருத்தன் கூட படிச்சவன் இல்ல!.. அண்ணாமலை பரபரப்பு பேச்சு….

0

ஹிந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில் மும்மொழிக்கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும் என பாஜக கருதுகிறது. அதாவது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் ஹிந்தி மொழியையும் கற்க வேண்டும் என்பதே பஜாகவின் நோக்கமாக இருக்கிறது. அதோடு, மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தினால் தான், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி பரபரப்பை கிளப்பினார். அதேசமயம், முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள், இந்த மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக சமீபத்தில் கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில், “அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்கிற வித்தியாசமின்றி அனைத்து குழந்தைகளுக்கும் தரமான மற்றும் சமமான கல்விக் கிடைக்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு தான் தமிழக பாஜக சார்பில் சமக்கல்வி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

இதில், ஒரு கோடி பேர் கையெழுத்து என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது தமிழக மக்களின் பேராதரவுடன் களத்திலும், இணையதளம் மூலமும் 20 என்ற இலக்கை எட்டியுள்ளோம். எனவே, விரைவில் ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்கை எட்டுவோம். மும்மொழிக் கல்வியை, நம் குழந்தைகள் படிக்கும் தமிழக அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வருவோம்” என டிவிட்டரிலும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நேற்று திருச்சியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை ‘திமுகவில் யாருமே படித்துவிட்டு அதிகாரத்திற்கு வரவில்லை. கூட்டுக் களவாணிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய போறாங்களாம். கர்மவீரர் காமராஜர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை’ என காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

ரவுடியெல்லாம் அமைச்சரானா இப்படித்தான்!.. சேகர்பாபுவை தாக்கும் அண்ணாமலை!…

0

தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட்ட வேண்டும் என பாஜக கருதுகிறது. தமிழக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு பின் தமிழகத்தில் கால் ஊன்றும் வேலையில் பாஜக தீவிரமாக இறங்கியது. முதலில் அதிமுகவை கட்டுப்படுத்த துவங்கியது. பாஜக தலைமை என்ன சொல்கிறதோ அதை எடப்பாடி பழனிச்சாமி பின்பற்ற துவங்கினார். ஒருபக்கம் சசிகலாவை சிறைக்கு அனுப்பியதோடு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியை விட்டே நீக்கினார்கள்.

அதன்பின் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சில தேர்தல்களில் போட்டியிட்டது. கடந்த பாரளுமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வி அடையவே சுதாரித்த எடப்பாடி பழனிச்சாமி இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டார். அதிமுகவை சம்மதிக்க வைக்க பாஜக எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து திமுகவுக்கு சரியான எதிர்கட்சி நாங்கள்தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளை விட திமுகவை மட்டுமே குறிவைத்து விமர்சனம் செய்து வருகிறது பாஜக. அதோடு, டாஸ்மாக்கில் 1000 கோடி ஊழல் என செய்தி வெளியான நிலையில் அதற்கு எதிராக பாஜக போராட்டமும் நடத்தியது.

இந்நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக திருச்சியில் பாஜக சாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை ‘சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டின் கல்விக்கொள்கை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா?’ என காட்டமாக பேசியிருக்கிறார்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! கோடை காலத்தில் வெளியான அறிவிப்பு!!

0

தமிழகத்தில் இருக்கக்கூடிய போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கான கோடைகால அறிவிப்புகளை போக்குவரத்து துறை வெளியிட்டிருக்கிறது.

கோடை காலம் துவங்கிய நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கமானது அதிகரித்து வருவதாகவும் இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து ஏசி அல்லாத பேருந்துகளில் பயணிக்க கூடிய இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து ஏசி அல்லாத பேருந்துகளில் பயணிக்க கூடிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் போன்றவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் பேருந்துகளில் பயணிக்க கூடிய பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் போன்றவற்றை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பேருந்துகளில் குடிநீர் வசதி ஒஆர்எஸ் வழங்குதல் போன்றவை செயல்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

போக்குவரத்து துறையின் சார்பில் வெளியிடப்பட்ட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறையின் சார்பில் வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகள் :-

✓ தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களின் பணியிடங்களான பேருந்து நிலையங்கள், நேரக் கண்காணிப்பாளர் அறைகள், உணவகம், ஓய்வு அறைகள் போன்றவைகளில் குடிநீர் மற்றும் மோர் வசதிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவை பயணிகள் எளிதாக பெற்றுக்கொள்ள கூடிய இடங்களில் வைப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ பயணிகளுக்கு நல்ல குடிநீரை வழங்கும் நோக்கோடு RO இயந்திரங்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் அவற்றை சுத்தம் செய்தல் பராமரித்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது நீர் அருந்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை குறைப்பதற்காக பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு பணிநேரத்தின் பொழுது ஓஆர்எஸ் பொட்டலங்கள் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ போக்குவரத்து பணியாளர்கள் நேரடியாக வெயிலில் நடக்க வேண்டி இருந்தால் கட்டாயமாக தொப்பி அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ உடலில் வெப்பம் அதிகரித்து மயக்கம் அதிகப்படியான வியர்வை தலைவலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மேலாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதற்கான மருத்துவ வழிபாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ வெயில் காலங்களில் ஏற்படக்கூடிய உடல்நல குறைவுகளுக்கு மருந்துகளை முதலுதவி பெட்டிகளில் அவசியம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

✓ பேருந்துகளில் ஏர்கண்டிஷனர் சரியாக இருக்கிறதா என்பதை சோதிப்பதோடு காற்றோட்டமாக பேருந்து உள்ளதா என்பதையும் சோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டை விடுதியாக மாற்றிய மம்முட்டி!! ஏப்ரல் 2 தேதி முதல் முன்பதிவு தொடக்கம்!!

0

மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ் உட்பட பல மொழி திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் மம்மூட்டி அவர்களுக்கு தற்பொழுது 70 வயதாகிறது. இவர் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல் பரவி ரசிகர்களை வருத்தமடைய செய்திருந்தது. ஆனால் ஒரு சிலரும் நோன்பு காலத்தில் அவருடைய முதுமை காரணமாக சோர்வாக இருக்கிறார் என்றும் இவருக்கு புற்று நோய் கிடையாது என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இது போன்ற ஒரு சூழ்நிலையில் தான் நடிகர் மம்முட்டியின் நெருங்கிய நண்பரான மோகன்லால் அவர்கள் சபரிமலை சாஸ்தா கோவிலில் மம்முட்டியுடன் நலம் தீர வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடத்தி வந்தது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. எது எப்படி இருந்தாலும் மம்முட்டி அவர்களுக்கு குணமடைய வேண்டும் என்பதில் அவருடைய ரசிகர்கள் தீவிரமாக பிரார்த்தனை செய்து வருகின்றனர். நடிகர் மம்முட்டி இன்றுவரையும் மலையாளத்துறையுள்ளாக்கில் ஹீரோவாகவே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா மாநிலத்தில் இருக்கக்கூடிய பனம்பில்லி என்ற இடத்தில் மம்முட்டி அவர்களுக்கு சொந்தமான வீடு ஒன்று இருக்கிறது இந்த வீட்டில் 2008 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை நடிகர் மம்முட்டி அவர்கள் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறார். அதன்பின்பு, அம்பேலி பாதம் என்ற இடத்தில் உள்ள தன்னுடைய மற்றொரு வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், பனம்பில்லியில் உள்ள தன்னுடைய வீட்டை தங்கும் விடுதியாக மற்ற முடிவு செய்து வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அதற்கான முன்பதிவு தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மம்முட்டி அவர்களின் பனம்பல்லி வீட்டில் நான்கு படுக்கையறை இருப்பதாகவும் ஹோம் தியேட்டர் வசதி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய ரசிகர்கள் இவருடைய வீட்டில் தங்க நினைத்தால் அதற்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் இந்த வெயிட்டானது தங்கக்கூடிய நபர் ஒருவருக்கு ரூ.75,000 வரை வசூலிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.