திங்கட்கிழமை, செப்டம்பர் 8, 2025
Home Blog Page 40

ஆதார் அட்டையில் கொண்டு வரப்படும் பெரிய மாற்றம்; இனி வீட்டில் இருந்தே அப்டேட் பண்ணிக்கலாம்!

0

ஆதார் அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. எங்கு போனாலும் ஆதார் அட்டை தேவைப்படும் நிலையில் ஆதார் அட்டையில் விரைவில் பெரிய மாற்றம் கொண்டு வர இருக்கின்றனர். இதன் மூலமாக ஆதார் அட்டையின் நகலை சரி பார்க்கும் தேவை இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூ ஆர் கோடு அடிப்படையில் புதிய செயலி விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்றனர்.

இதன் மூலமாக ஆதார் அட்டையை நாம் எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும். பொது மக்கள் ஆதார் மையங்களுக்குச் சென்று தங்கள் தகவல்களை அப்டேட் செய்வதை குறைத்துக் கொள்ளலாம் ஆதார் அமைப்பு புதிய நடைமுறையை கொண்டு வர இருக்கும் நிலையில் நவம்பர் மாதத்திற்குள் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. கைரேகை மற்றும் கண் விழி பதிவு தவிர முகவரி மற்றும் பிற தகவல்களை புதுப்பிக்கும் முறை தற்போது எளிமையாக பட இருக்கின்றனர். பிறப்புச் சான்றிதழ்கள், மெட்ரிகுலேஷன் பதிவுகள், ஓட்டுநர் உரிமங்கள், பாஸ்போர்ட்டுகள், பான் கார்டுகள் போன்ற பல்வேறு அதிகாரப்பூர்வ தகவல்கள் இருக்கும் தளங்களுடன் ஆதார் தளமும் ஒருங்கிணைக்கப்பட இருக்கின்றனர்.

இதன் மூலமாக பொது மக்கள் எளிதாக சேவையை பெற்றுக் கொள்ள முடியும். இந்த புதிய நடைமுறை அமல்படுத்தினால் மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும். இது குறித்து ஆதார் தலைமை நிர்வாகி கூறுகையில் புதிய செயலி ஒன்றை உருவாக்கி வருகின்றோம்.

இதன் மூலம் விரைவில் கைரேகை மற்றும் கருவிழி பதிவு தவிர மற்ற எல்லாவற்றையும் வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ள முடியும். இந்த செயலி மூலமாக தொலைபேசி எண், பெயர், முகவரிகள் மற்றும் தவறான பிறந்த தேதி திருத்தங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அப்டேட் செய்து கொள்ள முடியும். கியூ ஆர் கோடு மூலம் ஆதார் தகவல்களை அனுப்பும் வசதியும் கொண்டு வரப்படும்.

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; உடனே புக் பண்ணி பயன்படுத்திக்கோங்க!

0

தமிழகத்தில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக வேளாண்மை பொறியியல் துறை குறைந்த வாடகையில் வாகனத்துடன் இயக்கக்கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரத்தில் உயர் அழுத்த தெளிப்பான் பொருத்தப்பட்டு மருந்துகள் தெளிக்கலாம் எனவும் அறிவித்தது.தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்யும் நிலையில் வேளாண்மை உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு மானியங்கள் தொழில்நுட்ப மேம்பாட்டை மையமாக கொண்ட திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றது.

அந்த வகையில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக 2,525 கிராம ஊராட்சிகளில் விவசாய வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. மேலும் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் 20 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றார்கள். இவர்களுக்கு பயிர் கடன், கால்நடைகள் கடன் மூலம் கூட்டுறவு வங்கிகள் மூலமாக 81 லட்சம் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கப்படுகின்றது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

விவசாயிகள் பண்ணை குட்டை அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு 50% மானியம் வழங்கப்படும். பிற விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் விவசாயிகளை இயற்கை சீற்றம் ஒருவகையில் பாதிப்படையை செய்தால் மற்றொரு பக்கம் பூச்சிகளால் விவசாயம் பாதிப்படைந்து இழப்பீடு சந்திக்கும் நிலை உருவாகி வருகின்றது. தமிழகத்தில் தென்னை மர உற்பத்தி வேளாண்மையில் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் தென்னை உற்பத்தி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. தேங்காய் மற்றும் அதன் பிறப்பொற்களின் உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் நிலையில் ஆண்டுக்கு சுமார் 600 முதல் 700 கோடி தேங்காய் உற்பத்தி செய்யப்படுகின்றது. தஞ்சாவூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், மற்றும் பொள்ளாச்சி போன்ற பகுதிகள் தென்னை உற்பத்தியில் மிக முக்கிய இடங்களாக திகழ்ந்து வருகின்றது.

தென்னை மரத்தில் ஏற்படும் பூச்சிகளை கொள்வதற்காக உயர் மின்னழுத்த தெளிப்பான் இயந்திரத்தை பயன்படுத்தலாம். இந்த இயந்திரமானது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, ஈரோடு, கோபிசெட்டிபாளையம் உட்பட 20 இடங்களில் வேளாண்மை பொறியியல் துறையிடம் இருப்பதால் இ -வாடகை கைபேசி செயின் மூலம் விவசாயிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு 450 ரூபாய் வாடகையாக பெறப்படுகின்றது. இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thug Life படத்தின் நஷ்டம் நட்பில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ன செய்ய போகிறார்கள் கமல் and உதயநிதி and கோ?

0

சமீபத்தில் கமலஹாசன் சிலம்பரசன் நடிப்பில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான Thug Life படம் மிகவும் மோசமான விமர்சனத்தை பெற்றது. கமலுக்கு இந்த அளவுக்கு அடி விழுவுமா என்று அவர் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். இந்தியன் 2 படம் இதுக்கு எவ்வளவோ மேல் என்று சொல்லும் அளவுக்கு Thug Life படம் அமைந்துவிட்டது.

இந்த படத்தை மணி ரத்னம் இயக்கி இருந்தார். கமலஹாசன் தயாரித்திருந்தார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் redgiant நிறுவனம் இந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருந்தனர். படத்தை மிகப்பெரிய ரேட்டிற்கு விற்றதால் படத்தை நம்பி வாங்கிய யாருக்கும் லாபம் கிடைக்கவில்லை. படத்தை நம்பி வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பல கோடி நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது.

இப்போது அவங்க எல்லாரும் கமலிடம் நஷ்டஈடு கேட்க முடிவெடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் படத்தை விரைவில் OTT தளத்தில் வெளியிட netflix முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே பேசிய விலையை விட மிகக்குறைந்த தொகைதான் கொடுக்க முடியும் என்றும் OTT தளங்கள் கறாராக சொல்லிவிட்டதாம். இதனால் ஏற்பட்ட எல்லா நஷ்டத்தையும் ஈடு செய்ய வேண்டுமென்றால் உதயநிதி தான் நஷ்டஈடு கொடுத்து உதவ வேண்டும் என்று கமல் யோசித்து வருகிறாராம். கூடிய விரைவில் உதயநிதியிடம் இது குறித்து பேசவும் கமல் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அரசியலில் நீங்கள் என்னுடைய கூட்டணி கட்சியாக இருக்கலாம், ஆனால் சினிமா என்பது வியாபாரம், இங்க எல்லாம் என்னால் ஒன்னும் உதவி பண்ண முடியாது என்று உதயநிதி கையை விரித்து விட்டால் கமலின் நிலைமை படுமோசமாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பாக்கல! முத்தமழை பாடல் வீடியோ வெளியீட்டால் அதிர்ந்த ரசிகர்கள்!

0

உலகநாயகன் கமலஹாசன், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன், த்ரிஷா போன்ற மிகப்பெரிய நடிகர் பட்டாள நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் தயாரிப்பில் அண்மையில் வெளியான படம் Thug Life. படம் வெளியாவதற்கு முன்பிருந்த படம் மீதான ஆர்வம் வெளியான பிறகு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. காரணம் படம் யாரையும் திருப்தி படுத்தவில்லை.

இத்தனை பேர் இருந்தும் யாருடைய ரசிகர்களும் படத்தை கொண்டாடவும் வில்லை, கண்டுகொள்ளவும் இல்லை. மாறாக எல்லோரும் கழுவி ஊற்ற ஆரம்பித்தனர். இந்த் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. முக்கியமாக படம் வெளியாவதற்கு முன்னர் முத்தமழை என்ற பாடல் மிகவும் வைரலானது.

படத்தில் இந்த பாடல் எப்போ வரும் என ரசிகர்கள் ஏங்கினர். ஆனால் படத்தில் இந்த பாடல் இடம்பெறவில்லை. படத்தின் நீளத்தையும், படத்திற்கு இந்த பாடல் தேவை இல்லை என்பதையும் கருத்தில் கொண்டு பாடலை படத்தில் சேர்க்கவில்லை. இந்த படத்தில் முத்த மழை பாடல் இருந்தாலாவது கொடுத்த காசுக்கு ஏதாவது தேறி இருக்கும் என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்தனர்.

 

இந்நிலையில் முத்தமழை பாடலின் வீடியோ அண்மையில் வெளியானது. இந்த வீடியோவை பார்க்கும்போது இது திடீரென செட் போட்டு படப்பிடிப்பு நடத்திய போல இருப்பதாகவும், இவ்வளவு நல்ல பாட்டை விசுவலில் இப்படி கொன்னுட்டிங்களே என்றும் ரசிகர்கள் கதறி வருகின்றனர். இந்த கொடுமையை திரையரங்குகளில் திரையிட்டால் ரசிகர்கள் கடுப்பாகி விடுவார்கள் என்று நினைத்து தான் இந்த முத்தமழை பாடலை நீக்கி விட்டனர் எனவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

RTE விவகாரம்! கையில் எடுத்த எடப்பாடி! தமிழக அரசை கடுமையாக விமர்சித்த முன்னாள் முதல்வர்!

0

RTE பற்றி நம்ம எல்லாருக்கும் தெரியும். RTE மூலம் மிகவும் நலிந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெறும் 25 சதவீதம் மட்டுமே பள்ளிக்கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியும். மீதமுள்ள 75 சதவீதம் தொகையை மத்திய மாநில அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு கட்டிவிடும்.

கடந்த இரு வருடங்களாக தனியார் பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டிய தொகையை அரசு கொடுக்கவில்லை. காரணம் மத்திய அரசு RTEக்கான நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை. இதனால் இந்த வருடம் RTE அட்மிஷன் இதுவரை ஆரம்பமாகவில்லை. இதனால் ஏழை குழந்தைகளின் தனியார் பள்ளியில் குறைந்த தொகையில் படிக்கும் கனவு இதுவரை நிறைவேறாமல் உள்ளது.

இது தொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. தேசிய கல்வி கொள்கையை ஏற்காததால் தான் RTE கல்வி நிதியை தமிழகத்திக்கு ஒதுக்கவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் நீதிமன்றம் மத்திய அரசு ஒதுக்க வேண்டிய கல்வி நிதியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்று அறிவித்துவிட்டது. மத்திய அரசு சார்பாக இதுவரை இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த தகவல்களும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக கட்சி பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். உங்களுக்கும், மத்திய அரசுக்கும் இருக்கும் பிரச்சனையை இதில் கொண்டு வரவேண்டாம். எங்கள் ஆட்சி காலத்தில் கூட கல்வி நிதி வராதபோது நாங்கள் தமிழக அரசு நிதியில் இருந்து பணத்தை செலுத்தி இந்த திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தினோம். பிள்ளைகளின் கல்வி மற்றும் படிப்பில் விளையாடாதீர்கள், கூடிய விரைவில் இந்த RTE திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை தமிழக அரசு ஆரம்பிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்துள்ளார்.

இப்போவே அதிக தொகுதி கேட்க ஆரம்பிச்சுட்டாங்களே? பதற்றத்தில் திமுக!

0

2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில் திமுக முதல் முறையாக 133 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. திமுக இதுவரை இத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை. ஜெயலலிதா இறப்பு, அதிமுக பாஜக கூட்டணி ஒரு காரணமாக இருந்தாலும் திமுக வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் கூட்டணியில் இருந்த கட்சிகள் தான்.

அந்த 2021 ஆண்டு காலத்தில் அதிமுக எதிர்ப்பு அதிகமாக இருந்ததால் சிறிய கட்சிகள் திமுகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டின. நிலைமை தங்களுக்கு சாதகமாக இருந்ததால் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை மட்டுமே கொடுத்து விட்டு நிறைய தொகுதிகளில் நின்று திமுக வென்றது. ஆனால் இன்றைய நிலைமையே வேற. திமுக வெற்றிக்கு நம்மைப்போன்ற கூட்டணி கட்சிகள் தான் காரணம் என்பதை கூட்டணி கட்சிகள் உணரத்தொடங்கியுள்ளன.

CPM கட்சியினர் தாங்கள் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு நேரடியாகவே திமுகவை விமர்சனம் செய்கின்றனர். திமுக கட்சி ஆட்சிக்கு வந்து இதுவரை முழுமையாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நேரடியாகவே விமர்சனம் செய்கின்றனர். கூட்டணியில் இருக்கும் CPM கட்சி இப்படி பேசுவதை திமுகவினர் இதுவரை யாரும் கண்டிக்கவில்லை.

அதேபோல எங்களுக்கு இந்த முறை அதிக தொகுதிகள் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். திமுக மிக முக்கியமாக நம்பி இருக்கும் திருமாவளவனும் எங்கள் கூட்டணிக்கு இந்த முறை அதிக தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் கொடுக்க மறுத்தால் விஜய்யுடனும், அதிமுகவுடன் எந்த நேரத்திலும் கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே திமுக இந்த பிரச்சனையில் என்ன செய்யப்போகிறது என்பது புரியாத புதிராக இருப்பதாக கட்சி தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

எளிமையின் சிகரத்திற்கு ஹெலிகாப்டரில் மலர் தூவல்? காவல்துறையின் கிடுக்கிப்பிடி!!

0

DMK: திமுக கட்சியின் கூட்டணிக்கட்சிகளில் மிகவும் முக்கிய அங்கமாக பார்க்கப்படுவது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் திருச்சியில் மதச்சார்பிமை காப்போம் என்னும் பேரணி ஒன்றை நடத்தினார். அந்த பேரணியில் கலந்து கொள்ள கடந்த வாரம் திருமா திருச்சி வந்திருந்தார்.
அப்போது அவர் மேடைக்கு வரும்போது அவர் நிற்கும் இடத்திற்கு மேலே ஹெலிகாப்டர் மூலம் மலர் துவ நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக 5 லட்சம் ரூபாய் ஹெலிகாப்டர் வாடகை பேசப்பட்டது.

ஆனால் காவல் துறை இந்த ஹெலிகாப்டரிலிருந்து மலர் துவ அனுமதி மறுத்துவிட்டது.
இதனால் விசிக நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். அனுமதி மறுப்பு குறித்து சமூக வலை தளங்களில் செய்திகள் வேகமாக பரவியவுடன் நெட்டிசன்கள் திருமாவளவனை கிண்டல் செய்து வறுத்தெடுத்துவிட்டனர். நீங்க தான் எளிமையின் சிகரமாச்சே அப்புறம் எதுக்கு 5 லட்சத்துக்கு ஹெலிகாப்டர் மலர் தூவல் என்றும், போராளிக்கு இந்த மாதிரியான ஆடம்பர அணிவகுப்பு தேவையா என்றும் கிண்டல் செய்தனர்.

உண்மை திமுக முகம் இது தான்! இதை விட்டுட்டு விஜய்யை குறை பேசும் திருமா? இதெல்லாம் உங்களுக்கு எப்போ விளங்கப்போகுதோ?

0

சமீப காலமாக திமுக கட்சி நிர்வாகிகள், முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை விட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தான் திமுகவிற்காக களத்திலும், ஊடகங்களிலும் அதிக நேரங்களில் திமுக ஆதரவாக பேட்டி கொடுக்கிறார். திருமா திமுகவின் கூட்டணி என்பதை மறந்துவிட்டு திமுக கட்சிக்கு ரொம்பவே சப்போர்ட் செய்கிறார்.
குறிப்பாக TVK கட்சி தலைவர் விஜய் பற்றி பேசுவதென்றால் என்ன விஷயம் என்று தெரியாமலேயே விஜய்யை எதிர்க்க ஆரம்பித்து விடுகிறார்.

பாஜக அதிமுக போன்ற எதிர்கட்சிகளை திமுக அமைச்சர்கள் நிர்வாகிகள் கூட திருமா அளவிற்கு விமர்சனம் செய்யமாட்டார்கள். திமுகவை பற்றி பேசுபவர்களை திருமா தான் முழு மூச்சாக எதிர்த்து வருகிறார். ஆனால் திமுகவோ திருமா கேட்கும் எந்த கோரிக்கைகளையும் கண்டு கொள்வதில்லை. குறிப்பாக தொகுதி பங்கீடு, கூட்டணி கட்சிகளுக்கு அதிக சீட்டுகள் தேவை என்று இவர் கேட்ட எதையும் கண்டுகொள்வதில்லை. திமுகவுக்கு இவ்வளவு ஆதரவு தரும் திருமாவை பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. திருமாவை பாராட்டி யாரும் பேசுவதில்லை.

அண்மையில் திருச்சியில் நடந்த மதச்சார்பின்மை காப்போம் என்னும் பேரணியில் திருமாவை வரவேற்க ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ விசிக நிர்வாகிகள் செய்திருந்த ஏற்பாட்டை காவல் துறையினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர். திமுக நினைத்திருந்தால் அந்த நிகழ்வு நடந்திருக்கும். ஆனால் அவர்கள் இந்த விஷயத்தை கண்டுகொள்ளவில்லை. இவருக்கெல்லாம் இது தேவையா என்பதைப் போல அசால்டாக விட்டுவிட்டனர். திமுக நிர்வாகிகளுக்கே இந்த விஷயம் பிடிக்கவில்லை எனவும், இதனால் தான் இந்த விஷயத்தில் விசிகவுக்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும், இவருக்கெல்லாம் ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவணுமா என்று நினைத்ததாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி விசிக நிர்வாகிகளை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலவச சிலிண்டர் பெற வேண்டுமா; உடனே இதை பண்ணிடுங்க!

0

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் மக்களுக்காக இலவச சிலிண்டர் இணைப்புகளை மத்திய அரசு வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக ஒரு சிலிண்டர் பெறுவதற்கு அனைத்து பயனாளிகளும் கேஒய்சி சரிபார்ப்பை முடித்திருப்பது அவசியம்.

இந்த அப்டேட்டை முடிக்கவில்லை என்றால் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படலாம். அல்லது நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் சிலிண்டர் மானிய பணமும் நின்றுவிடும். மோசடியை தடுக்கவும் இத்திட்டத்தின் நன்மைகளில் உண்மையான மற்றும் தகுதியான பெண்களுக்கு மட்டும் சென்றடைய மத்திய அரசு கேஒய்சி சரிபார்ப்பை கொண்டுவந்துள்ளது. மேலும் 18 வயது அல்லது அதற்கு மேல் இருக்கும் பெண்கள் தான் விண்ணப்பிக்க முடியும்.

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கார்டில் பெயர் பதிவு செய்யப்பட்ட பெண்கள் தகுதியுடையவர்களாக கருதப்படும் நிலையில் சிலிண்டர் இணைப்பு உள்ளவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது. இந்த திட்டத்தை பெற குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் சிலிண்டர்களை பெற முடியும் லட்சக்கணக்கான பெண்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி வரும் நிலையில் அனைத்து பயனாளிகளும் கேஒய்சி சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும். அதற்கு ஆதார் அட்டை ,வங்கி பாஸ் புக், ஆதரவுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், சிலிண்டர் இணைப்பு எண் என இந்த ஆவணங்கள் அனைத்தையும் தயாராக வைத்திருந்தால் கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை முடித்துக் கொள்ளலாம்.

முதலில் சிலிண்டர் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தை திறக்க வேண்டும். வலைதளத்தின் முகப்பு பக்கத்தில் eKYC ஆப்ஷன் இருக்கும் l. அதனை கிளிக் செய்தால் உங்கள் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் ஆதாரம் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். தகவலை உள்ளிட்ட பிறகு ஓடிபி விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

உடனே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி கிடைக்கும். அதனை பதிவிட வேண்டும். இதன் வழிமுறைகள் முடித்த பிறகு செயல்முறை முடிந்து விடும் அருகில் உள்ள சிலிண்டர் நிறுவனம் அல்லது பொதுச் சேவை மையத்திற்கு சென்று ஆதார் கார்டு நகல் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கையில் இருந்தால் சிலிண்டர் நிறுவனம் அல்லது பொது சேவை மையத்தில் கேஒய்சி சரிபார்ப்பு விண்ணப்ப படிவத்தை பெற வேண்டும்.

பெயர் முகவரி, எரிவாயு இணைப்பு எண் மற்றும் ஆதார் எண் போன்றவை அந்த படிவத்தில் சரியாக உள்ளிட வேண்டும். அனைத்து தகவலையும் நிரப்பிய பிறகு ஆவணங்களின் நகலை படிவத்துடன் இணைக்க வேண்டும். இப்போது நிரப்பப்பட்ட படிவம் மற்றும் இணைக்கப்பட்ட ஆவணங்களை சிலிண்டர் நிறுவனம் அல்லது பொது சேவை மையத்தில் சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் பயனாளிகளின் கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை முடித்துக் கொள்ளலாம்.

பெண் காவலர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்பு; இனி நீங்கள் விரும்பும் இடத்திலேயே பணியாற்றலாம்!

0

அரசு ஊழியர்களுக்காக தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. கடந்த ஒரு மாதத்தில் ஏராளமான அறிவிப்புகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்து வருகின்றார். இதனால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இன்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீட்டை கட்டணம் இன்றி வழங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகின்றது. இலவச திட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கூடியவர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பினை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு சட்டசபையில் முன்கூட்டியே அறிவித்தார்.

அதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ 2000 ஊதிய உயர்வு ஏப்ரல் மாதம் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. விவசாயிகளுக்கு 50,000 மின் இணைப்புகள் இந்த ஆண்டு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் மகப்பேறு விடுப்பு முடிவடைந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 209 பெண் காவலர்களுக்கு தங்கள் பேறுகால விடுபிற்கு பிறகு குழந்தைகளை கவனித்து கொள்வதற்கு மற்ற மாநகரம் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பி இருந்தால் அந்த பணியிடமாறுதல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.