முகப்பரு தொந்தரவா? பருக்கள் தழும்பை மறைக்க இப்படி ஒரு வழியா! 

0
210

முகப்பரு தொந்தரவா? பருக்கள் தழும்பை மறைக்க இப்படி ஒரு வழியா!

இன்றைய டீன்ஏஜ் பருவத்தினரை பாடாய்படுத்தும் ஒரு பிரச்சனை தான் முகப்பரு. வெயில் காலங்களில் சில பேருக்கு மிக அதிகமான முகப்பருக்கள் வரக்கூடும். பல்வேறு வகையான கிரீம்கள், சோப்புகள் பயன்படுத்தினாலும் எவ்வித தீர்வும் கிடைக்காது.

இதனால் அதிக தாழ்வு மனப்பான்மையும் மன உளைச்சலும் தான் ஏற்படும். வெளியில் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதும், போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் பொழுதும், சங்கடத்தை உருவாக்கும். முகப்பரு மறைந்தாலும் அதனால் ஏற்படும் தழும்புகள் சீக்கிரம் மறைவதில்லை.

முகப்பருவை போக்கி அதனால் ஏற்படும் வடுக்களையும் போக்கக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.

1. இதற்கு நாம் முதலில் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் வேப்பிலை. வேப்பிலை முகப்பருவை போக்கி முகச்சுருக்கத்தையும் குறைக்கிறது. சரும அழற்சியை போக்குகிறது. உடல் ஆரோக்கியத்தைப் போல் சரும ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். ஐந்து கொத்து வேப்பிலையை தண்ணீரில் நன்றாக அலசி மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஸ்பூன் மட்டும் நீர் விட்டு அரைத்து தனியாக ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும்.

2. இரண்டாவதாக நாம் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் கற்றாழை. இது சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கி இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

ஒரு மடல் கற்றாழையில் ஒரு சிறிய துண்டை நறுக்கி தனியாக வைக்கவும். மீதமுள்ள மடலில் இருந்து கற்றாழை ஜெல் எடுக்கவும்.

ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் வேப்பிலை பேஸ்ட், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், மற்றும் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலக்கவும்.

தனியாக கட் பண்ணி வைத்த கற்றாழை தூண்டில் ஒரு பக்க தோலை மட்டும் எடுத்து விடவும். கடலைமாவு ஒரு ஸ்பூன் எடுத்து ஜெல் உள்ள பகுதியில் தடவி முகப்பரு உள்ள இடத்தில் நன்றாக தேய்க்கவும். இதனால் அந்த பகுதியில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்து சுத்தமாகும்.

பிறகு  சுத்தமான நீரால் முகத்தை கழுவி விட்டு அந்த இடத்தில் வேப்பிலை கலவையை பூசவும். சுமார் ஒரு மணி நேரம் ஊற விட்டு பின்பு நீரால் கழுவும். ஒரு நான்கு நாட்கள் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பருக்கள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும். அதன் பிறகு வாரத்திற்கு ஒரு நாள் என செய்து வரலாம்.