தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்! சற்றுமுன் வெளியான அதிர்ச்சியளிக்கும் தகவல்

0
74
Corona Infections Rate in Tamilnadu
Corona Infections Rate in Tamilnadu

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்! சற்றுமுன் வெளியான அதிர்ச்சியளிக்கும் தகவல்

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்பான கட்டுப்பாடுகள் இன்று முதல் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக சலூன் கடைகள், பியூட்டி பார்லர்கள் தவிர பெரும்பாலான கடைகள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது குறையாமல் வழக்கம் போல நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 7204 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று புதிதாக 798 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 538 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சென்னையில் இன்று மட்டுமே 538 நபர்களுக்கு கொரோனா பாதித்த நிலையில் தற்போது வரையில் மொத்த கொரோனா பாதிப்பானது 4371 ஆக உயர்ந்துள்ளது. இதே போல தமிழகத்தில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8002 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக திருவள்ளூரில் 97 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 90 நபர்களுக்கும் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் திருவண்ணாமலையில் 10 நபர்களுக்கும், அரியலூரில் 33 நபர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இன்று மேலும் 6 பேர் உயிரிழந்திருப்பதால், தமிழக அளவில் கொரோனா பாதிப்பினால் பலியானோர் எண்ணிக்கையானது 53 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் 92 பேர் குனமடைந்துள்ளதால், தமிழக அளவில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 2051 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
Ammasi Manickam