Home Blog Page 5661

பிரதமருக்கே கொரோனா தொற்று உறுதியானது! அதிர்ச்சியளிக்கும் தகவல்

0

பிரதமருக்கே கொரோனா தொற்று உறுதியானது! அதிர்ச்சியளிக்கும் தகவல்

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும்பாலான நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் ஏறத்தாழ 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இவ்வாறு உலக அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த 4 மாதங்களாக 210 க்கும் அதிகமான நாடுகளை கடும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலுக்கு பொது மக்கள் மட்டுமல்லாமல் பல முக்கிய அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் முக்கியமாக சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து சில நாட்கள் அவர் வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்வதாக நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார்.

ஆனால் நாட்கள் ஆக அவரின் உடல்நிலை மேலும் பாதிப்படைந்ததையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு கொரோனா பாதிப்பிற்காக ஒரு வாரத்துக்கு மேலாக மருத்துவமனையில் எடுத்து கொண்ட சிகிச்சைக்கு பிறகு அவர் கடந்த வாரம் தான் வீடு திரும்பினார்.

russian-prime-minister-says-he-tested-positive-for-virus

இந்நிலையில் தற்போது அடுத்த அதிர்ச்சி தகவலாக உலக அளவில் முக்கிய தலைவராக விளங்கும் ரஷ்ய பிரதமர் மிக்கல் மிஸ்சுஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர் நாட்டு மக்களிடம் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவின் மிக உயர்ந்த பதவியை வகித்து வரும் ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும். இதற்கு முன்னர் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து தற்போது அவருடைய அலுவலகப் பணிகளை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் உலகளவில் 2-வது அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவரான ரஷ்ய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமருக்கே கொரோனா தொற்று உறுதியானது! அதிர்ச்சியளிக்கும் தகவல்

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் காணொலி மூலம் கூறியதாவது, எனக்கு கரோனா பாஸிட்டிவ் என்று மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது. இது குறித்த தகவலை நான் அதிபர் புதினுக்கு தெரிவித்துவி்ட்டேன். இதனையடுத்து என்னை தனிமைப்படுத்திக்கொண்டாலும், அரசின் முக்கிய கொள்கை முடிவுகளில் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். மேலும் என்னுடைய வேலைகளை தற்காலிகமாக துணைப் பிரதமர் ஆன்ட்ரி பெலுசோவ் கவனிப்பார்” என்றும் கூறியுள்ளார்.

54 வயதாகும் மிஷுஸ்டின் இதற்கு முன்னர் நிதியமைச்சராக பணியாற்றியுள்ளார். அதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் தான் அவர் ரஷ்யாவின் பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களை விட இவர்களுக்கு அனுபவம் அதிகம்! அதனால் இதை செய்ய அரசு முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அதிரடி

அவர்களை விட இவர்களுக்கு அனுபவம் அதிகம்! அதனால் இதை செய்ய அரசு முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அதிரடி

தமிழக காவல் துறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்ட தமிழ்நாடு இளைஞர் காவல் படையில் பணிபுரிந்தவர்களை விட தற்போதுள்ள ஊர்க்காவல் படையில் பணிபுரிவர்களின் அனுபவம் அதிகம் என்பதால் ஊர்க்காவல் படையினரை தகுதியின்படி
காவல்துறையில் சேர்க்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை செயல்படுத்தும் பணியில் காவல்துறையினருடன் சேர்த்து ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர். ஆனால், அவர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு எந்தவித நோய்த்தடுப்பு வசதியும், ஆயுள் காப்பீடும் செய்து தரப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

கொரோனா தடுப்புப் பணியில் தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் இரண்டாம் நிலைக் காவலர்கள் எத்தகைய பணிகளை செய்கிறார்களோ, அதே பணிகளை செய்யும்படி ஊர்க்காவல் படையினரும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்த பணியின் போது சாலைகளில் விதிகளை மீறிச் செல்பவர்களை தடுத்து விசாரிக்கும் போது அவர்களிடமிருந்து ஊர்க்காவல் படையினருக்கும் கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் ஆபத்து உள்ளது. அதைத்தடுக்க காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக் கருவிகள், சிறப்புப்படிகள், இலவச ஆயுள்காப்பீடு உள்ளிட்ட அனைத்தையும் ஊர்க்காவல் படைவீரர்களுக்கும் வழங்குவது தான் நியாயம். இக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்.

ஊர்க்காவல் படை வீரர்கள் அனைவரும் காவல்துறையின் கட்டுப்பாட்டில், காவல்துறையினருக்கு இணையான பணிகளைத் தான் செய்கின்றனர். அதனால், தகுதியின் அடிப்படையில் தங்களையும் காவல்துறையில் சேர்க்க வேண்டும்; அதுவரை மாதத்தில் 24 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல முறை வலியுறுத்தியுள்ளது. ஆனால், ஊர்க்காவல் படையினரின் இந்த நியாயமான கோரிக்கை அரசால் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

ஊர்க்காவல் படையினரின் பணி என்பது மிகவும் சிக்கலானது. அது விருப்பத்தின் அடிப்படையிலான பணி மட்டுமே. ஆனால், காவல்துறையினர் எப்போது அழைத்தாலும் ஊர்க்காவல் படையினர் பணிக்கு வர வேண்டும். ஊர்க்காவல் பணி நிரந்தரமற்றது என்பதால், அந்த படையினரில் பெரும்பான்மையினர் வேறு ஏதேனும் பணியில் இருந்து கொண்டு, பகுதி நேரமாக ஊர்க்காவல் பணியை மேற்கொள்வார்கள். ஊர்க்காவல் பணி அதிகாரப்பூர்வமற்ற முறையில் நீட்டிக்கப்படும் என்பதால், அவர்களால் அவர்களின் முழுநேர பணியில் கவனம் செலுத்த முடியாமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.152 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.2,800 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. இதை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது. மாதத்திற்கு 24 நாட்கள் பணி வழங்கி, ஒரு நாளைக்கு ரூ.560 ஊதியம் வழங்கினால் கூட ஊர்க்காவல்படை வீரர்களுக்கு சந்திக்கும் பொருளாதார நெருக்கடி தீரும். அது சாத்தியமில்லை என்றால், ஊர்க்காவல் படையினரில் உடல் தகுதி மற்றும் கல்வித் தகுதி உள்ளவர்களை காவலர்களாக நியமிக்கலாம். அது ஊர்க்காவல் படை வீரர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமின்றி, காவல்துறையையும் வலுப்படுத்துவதற்கு உதவும்.

தமிழகக் காவல்துறையின் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 1,24,761 ஆகும். இவற்றில் 14,975 பணியிடங்கள் கடந்த ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி காலியாக உள்ளன. இவற்றில் 90 விழுக்காடு காவலர் பணியிடங்கள் ஆகும். கொரோனா தடுப்புப் பணிக்கு போதிய காவலர்கள் இல்லாத நிலையில், பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருந்த 8500 காவலர்கள் பயிற்சி முடியும் முன்பே பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டாலும் கூட, 700 பேருக்கு ஒரு காவலர் தான் இருப்பார் என்பதாலும், காவல்துறைக்கான பணிச்சுமை அதிகரித்திருப்பதாலும் இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல. இத்தகைய சூழலில் ஊர்க்காவல் படையினரை காவலர்களாக நியமிக்கலாம்.

தமிழக காவல்துறையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு இளைஞர் காவல் படை என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அந்த பிரிவில் இருந்தவர்கள் குறிப்பிட்ட கால பணிக்கு பிறகு காவல்துறையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். தமிழ்நாடு இளைஞர் காவல் படையில் இருந்தவர்களை விட ஊர்க்காவல் படையில் இருப்பவர்களுக்கு அனுபவம் அதிகம். ஆகவே, ஊர்க்காவல் படையினரில் தகுதியும், திறமையும் உள்ளவர்களை தமிழ்நாடு காவல்துறையில் சேர்க்க அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் ஐ.டி நிறுவனங்கள் எடுக்க போகும் அதிரடி முடிவுகள்! கலக்கத்தில் ஊழியர்கள்

கொரோனாவால் ஐ.டி நிறுவனங்கள் எடுக்க போகும் அதிரடி முடிவுகள்! கலக்கத்தில் ஊழியர்கள்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் ஒவ்வொரு தொழில்துறையும் கடுமையான பின்னடைவை சந்திந்து வருகின்றன. இதில் முக்கியமாக சேவைத் துறையை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப துறையானது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உலக அளவில் பரவிய இந்த வைரஸ் பாதிப்பை எதிர்த்து ஒவ்வொரு நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தி வந்தாலும் அதே அளவிற்கு புதிய பாதிப்புகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருவதால் பாதிப்பானது ஓரளவு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் மத்திய அரசு ஊரடங்கை மேலும் நீட்டிக்குமா அல்லது நிறுத்தி கொள்ளுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஊரடங்கு நீக்கப்பட்டாலும் மக்கள் நம்பிக்கையுடன் அன்றாட பணிகளில் ஈடுபட முடியுமா என்ற அச்சமும் அவர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் முக்கிய சேவை துறையான தகவல் தொழில்நுட்ப துறையில் என்னனென்ன மாற்றங்கள் ஏற்பட போகும் என்று அதில் பணி புரிபவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதியதாக வேலை தேடுபவர்கள் முதல் ஏற்கனவே பணி புரிந்து சம்பள உயர்வை எதிர்பார்ப்பவர்கள் வரை அனைவருக்கும் இது குறித்து நிறைய சந்தேகங்கள் ஏற்பட்டு வருகிறது.

அதிகப்படியான இடமும் கிடைக்கும்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சமூக விலகலை ஏற்படுத்த பெரும்பாலும் புதிய ஊழியர்களை தேர்வு செய்வது நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், அனுபவம் வாய்ந்த மூத்த நிர்வாகிகளை தேர்வு செய்வது கூட தள்ளி வைக்க படலாம் அல்லது அவர்களின் சம்பளத்தை குறைத்து பணியமர்த்தலாம் என்று அந்த துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி, நாடு முழுவதும் 90 சதவீதத்திற்கும் மேலான ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றும் வகையில் வாய்ப்பை ஏற்படுத்தி, நம்பமுடியாத சிறப்பான முயற்சியை ஐடி துறை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களில் ஒரு பகுதியினரை வீட்டிலிருந்து பணி புரிய வைக்கலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. மேலும் பணி நீக்கம் ,சம்பள குறைப்பு மற்றும் புதிய ஆட்களை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட கடுமையான முடிவுகளையும் சில நிறுவனங்கள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது

ஒரே நாளில் ரஜினி – கமலின் கடைசி படங்கள் வெளியீடு?

0

ஒரே நாளில் ரஜினி – கமலின் கடைசி படங்கள் வெளியீடு?

தமிழ் திரையுலகில் நடிகராக ரஜினி அடியெடுத்து வைத்த போது, கமல் மக்களுக்குத் தெரிந்த நடிகராகத் தன்னை நிலை நிறுத்தியிருந்தார்.

ரஜினி வில்லனாக நடிக்கத் துவங்கும் போது கமல் தன்னை கதாநாயகனாக உயர்ந்திருந்தார். கமல் ரஜினி கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து இருவரும் ஒன்றாக நடித்து வந்தனர். இந்நிலையில் தான் கமலின் ஆலோசனையின் பெயரில் இருவரும் இனைந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்தனர்.

‘பைரவி’ படத்தின் மூலம் முதன் முதலாக அடியெடுத்து வைத்த ரஜினிக்கு அதன் பின் ஏறுமுகம் தான். மற்றொரு பக்கம் கமலும் நல்ல வளர்ச்சியடைய, ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் – சிவாஜியின் இடத்தை ரஜினி – கமல் எட்டி பிடித்தனர்.

இருவருக்கும் சரி சமமாக ரசிகர் வட்டம் பெருகியது. ஒரே நாளில் இருவரின் படமும் வெளியாகிறதென்றால், திரையரங்கிற்கு காவல்துறையின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரஜினியும் கமலும் ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாக வலம் வந்தாலும் அவர்கள் ரசிகர்களிடத்தில் அந்த இணக்கம் இல்லாமல் போனது. இதனால் ஒரு காலகட்டத்தில் இருவரின் படங்களும் ஒரே நாளில் மோதுவதைத் தவிர்த்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘சந்திரமுகி’ – ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படங்கள் ஒரே நாளில் வெளியானது.

தற்போது இருவரும் தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ள நிலையில், கமல் ‘இந்தியன் 2’ திரைப்படம் தான் தனது கடைசி படமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளார்.

அதே போல் தற்போது ‘அண்ணாத்த’ படத்தினில் நடித்து வரும் ரஜினி அடுத்து ஒரே ஒரு படம் நடித்து விட்டு, அத்துடன் திரைத்துறையிலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த படத்தைக் கமலின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நடித்துத் தரவுள்ளார்.

அந்த படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜை இயக்குநராக ஒப்பந்த செய்யப்பட்டுள்ளது. அப்போது தான் கமலுக்கு யோசனை ஒன்று உதித்துள்ளது. உடனடியாக ரஜினியைச் சந்தித்தவர், நம் இருவரின் கடைசி திரைப்படத்தை ஏன் ஒரே நாளில் வெளியிடக்கூடாது? என தன் யோசனையை ரஜினியிடம் கூறியுள்ளார்.

அவரும் அதைக் கேட்டு உற்சாகத்துடன் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதனையடுத்து பொங்கல் 2021ல் இருவரின் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

அதை நோக்கி இருவரும் திட்டமிட்டுப் பயணித்துக் கொண்டிருக்கும் போது தான் எதிர்பாராத விதமாக கொரோனா பரவல் ஏற்பட்டு இருவரின் படங்களும் முடங்கியுள்ளது.

‘இந்தியன் 2’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி இன்னும் 50 நாட்கள் நடித்துக் கொடுக்க வேண்டியிருப்பதால் அது முடித்துக் கொடுத்த பின்னர் தான் அவர் புதிய படத்தில் நடிக்க முடியும் என்ற நிலையுள்ளது.

கமலின் இந்த திட்டம் தற்போதைக்கு தள்ளிப் போயுள்ள நிலையில், கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்தவுடன் சாத்தியப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மிரட்டும் கொரோனா… அச்சத்தில் மக்கள்… உலக நாடுகளில் என்ன தான் நடக்கிறது?

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 33 லட்சத்து 7 ஆயிரத்து 677 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 10 லட்சத்து 39 ஆயிரத்து 181 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

மிரட்டும் கொரோனா... அச்சத்தில் மக்கள்... உலக நாடுகளில் என்ன தான் நடக்கிறது?

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 33,610 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 1,100 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 8,373 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 9,915/432
குஜராத் – 4,082/197
டெல்லி – 3,439/56
ராஜஸ்தான் – 2,556/58
மத்திய பிரதேசம் – 2,561/129
உத்தரபிரதேசம் – 2,134/39
தமிழ்நாடு – 2,323/27
தெலுங்கானா – 1012/26
கேரளா – 495/04
ஆந்திர பிரதேசம் – 1,403/31
கர்நாடகா – 565/21
ஜம்மு & காஷ்மீர் – 581/08
மேற்கு வங்கம் – 758/33
பஞ்சாப் – 480/19
ஹரியானா – 310/03
பீகார் – 422/02
அசாம் – 42/01
சண்டிகர் -56/0
உத்தர்கண்ட் – 55/0
லடாக் – 22/0
அந்தமான் & நிக்கோபார் -27/0
சத்தீஸ்கர் – 38/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 40/01
ஒடிசா – 128/01
பாண்டிச்சேரி – 08/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 107/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 12/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 27 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 1,258 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

மிரட்டும் கொரோனா... அச்சத்தில் மக்கள்... உலக நாடுகளில் என்ன தான் நடக்கிறது?

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவை வேகமாகக் கட்டுப்படுத்தும் ‘ரெம்டேசிவிர்’ – மருத்துவர்கள் நம்பிக்கை

கொரோனாவை வேகமாகக் கட்டுப்படுத்தும் ‘ரெம்டேசிவிர்’ – மருத்துவர்கள் நம்பிக்கை

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ துவங்கிய கொரோனா நோய்த் தொற்று தற்போது உலகம் முழுவதிலும் பரவி, மக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கியுள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு இது வரை 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ள நிலையில் சுமார் 32 லட்சத்திற்கு மேலானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

சமூக பரவலால் கொரோனா பரவாமல் இருக்கப் பல நாடுகளும் ஊரடங்கை அமல் படுத்தியிருந்தாலும் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவிற்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே உலகம் இதிலிருந்து மீள முடியும் என்ற நிலையில் உள்ளது. குறிப்பாக அமெரிக்கா கொரோனாவால் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.

சீனா, ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞ்சானிகள் கொரோனாவிற்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சீனா மற்றும் அமெரிக்கா கொரோனாவிற்க்காக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளை மனிதர்களுக்குச் செலுத்தி அதன் விளைவைச் சோதித்து வருகின்றனர். அந்த மருந்துகள் சரியாக வேலை செய்தாலும் அது மக்களின் பயன்பாட்டிற்கு வர ஜூலை மாதம் ஆகிவிடும் எனக் கூறப்படுகிறது.

தற்போது வரை அறிகுறியைப் பொருத்து அதற்கேற்றவாறு சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள். மலேரியா நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தும் ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ மருந்தை கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் அது அனைவருக்கும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ‘ரெம்டேசிவிர்’ எனும் மருந்து கொடுத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்கள் 31% விரைவாக கொரோனாவிலிர்ந்து மீள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு மற்ற மருந்தை எடுத்துக் கொள்பவர் 15 நாட்களில் கொரொனாவிலிர்ந்து மீண்டு விடுவார்கள் என்றால் இந்த மருந்தின் மூலம் 11 நாட்களிலேயே மீண்டு விடலாம் எனக் கூறப்படுகிறது.

இதனால் கொரோனாவிற்கு எதிராக நல்ல பலன் அளிக்கும் ஒரே மருந்தாக ‘ரெம்டேசிவிர்’ உருவெடுத்துள்ளது. இதனால் இந்த மருந்தை மேலும் சோதனைக்குப்படுத்தப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சி துவங்கப்பட்டுள்ளது.

புதிய அறிகுறிகளுடன் பரவும் கொரோனா வைரஸ் : வெளியான பகீர் தகவல்..!!

0

உலகமே கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி லட்ச கணக்கில் உயிர் இழப்புகளை சந்தித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றின் காரணமாக பல நாடுகளைச் சேர்ந்த 300 கோடிக்கும் அதிகமானோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வைரசால் பாதிக்கப்பட்டவருக்கு பெரும்பாலும் மூச்சு விடுதலில் சிரமம், இருமல், சளி, காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது. இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர் அருகில் இருக்கும் மருத்துவமனை அணுகி உரிய சிகிச்சையை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தங்கள் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களில் 80 முதல் 90 சதவீதம் வரை சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இல்லாமலேயே நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் இதே போன்று தான் தங்கள் நாட்டிலும் எந்த அறிகுறியும் இல்லாமல் நோய் பரவுகிறது என்று இந்தியா உட்பட பல நாட்டுத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று புதிய அறிகுறிகளுடன் ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் கருத்து ஒன்று பரவி வருகிறது. அதாவது நோய் தொற்று ஏற்பட்டவருக்கு கால்களின் விரல்களில் ‘நகச்சுத்தி’ போன்ற அறிகுறி பலருக்கு தென்படுவதாக கூறுகின்றனர்.

இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் பதிவிட்டு வருகின்றனர்.

நடுரோட்டில் நின்று போலீஸ் செய்த கேவலமான செயல் : வீடியோவை பார்த்து திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!!

0

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பிரதமர் மோடி அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். மேலும் இந்த காலகட்டத்தில் தான் நாம் கவனமாக இருந்து கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற முடியும் என்று கூறினார்.

இந்த உத்தரவின் எதிரொலியாக நாடு முழுவதும் அத்தியாவசிய தேவைகளுக்காக பொது இடங்களுக்கு வரும் மக்களிடம் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த ஊரின் அங்கு பணியில் மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காவல்துறையினர் ஆகிய மூன்று பிரிவினரும் அயராது பாடுபட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் காவல்துறையினரை குறை கூறி வந்த பொதுமக்கள் தற்போது பெரிதும் பாராட்டி வருகின்றனர். இதில் ஒருபடி மேலே சென்ற தன்னார்வலர்கள் சிலர் காவல்துறையினருக்கு உணவு நீர் முகமூடி போன்றவைகளை வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் காவலர் ஒருவர் நெல் போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி லஞ்சம் வசூலித்துள்ளதாக தெரிகிறது. இச்சம்பவம் திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் ராணி அண்ணா மகளிர் கல்லூரி முன்பு நடந்துள்ளது.

இந்த வீடியோவை பதிவிட்ட நெட்டிசன்கள் சிலர் சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு தமிழக அரசு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதுபோன்ற காவலர்களால் தான் காவல்துறையின் மீது இருக்கும் நல்ல அபிப்ராயமும் கெட்டுப் போகிறது என்று சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

ஓய்வை அறிவிக்கவிருக்கும் தோனி!

0

ஓய்வை அறிவிக்கவிருக்கும் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை பிரித்தால் தோனிக்கு முன் தோனிக்கு பின் பிரிக்கலாம். இன்றைக்கு கிரிக்கெட் உலகில் முதன்மையான அணியாக இந்திய அணி திகழ்கிறதென்றால் அதற்க்கு முக்கிய காரணம் மகேந்திர சிங் தோனி என அடித்து கூறலாம்.

இது குறித்து தொடர்வதற்க்கு முன் இந்திய அணி கடந்து வந்த பாதையை பார்ப்போம். 1983ல் நடைபெற்ற உலக கோப்பையை இந்திய அணி வென்ற பின்னர் தான் உலக அணிகள் நம்மை கவனிக்க துவங்கின. கபில்தேவ் தலைமையில் இங்கிலாந்துக்கு பயணித்த அந்த அணி உலக கோப்பையை வெல்லும் அதுவும் இறுதி போட்டியில் அப்போதைய கிரிக்கெட் உலகின் முதன்மையான ஜாம்பவான்கள் நிறைந்த மேற்க்கு இந்திய அணியை வீழ்த்தும் என கூறியிருந்தால் அனைவரும் சிரித்திருப்பார்கள்.

ஆனால் அதை சாத்தியமாக்கி உலக கோப்பையை இந்தியா வென்று நாடு திரும்பியது. அதற்க்கு அடுத்தடுத்த உலக கோப்பையில் இந்தியா மீது பெரும் எதிர்பார்ப்பிருக்க, அரை இறுதியில் தோற்று வெளியேறியது. கபில் தேவ், கவாஸ்கர் என இந்திய அணியில் ஜாம்பவான்கள் இருந்தாலும் இந்திய அணி பெரிய எழுச்சியை பெற முடியவில்லை.

அப்பொழுது தான் 1989ம் ஆண்டு 16 வயதே நிறவடைந்த ஓர் சிறுவன் இந்திய அணியில் அடியெடுத்து வைத்தான். அவன் தன் பிற்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் அடையாளமாக இருக்க போகிறான் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அவர் தான் சச்சின் டெண்டுல்கர். தன்னுடைய நேர்த்தி மற்றும் அதிரடியான ஆட்டத்தால் மீண்டும் உலக கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைத்தார்.

அது வரை 50 ஓவர் கிரிக்கெட்டில் 200 ரண்களை அடிப்பதே பெரிய ஸ்கோராக கருத்தப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில், ஓப்பனிங் பேட்டிங் என்பது எப்படி இருக்க வேண்டும், முதல் 15 ஓவர்களை எப்படி ஆட வேண்டும் என உலகுக்கே எடுத்துகாட்டாக விளங்கினார் சச்சின். ஆனால் அவரின் சிறந்த ஆட்டமே அவருக்கு சுமையாக மாறியது. ஒரு கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்து சென்று விட்டால் ஆட்டமே முடிந்து விட்டது என்ற நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது.

மற்றொரு பக்கம் கிரிக்கெட் ஃபிக்சிங் புகாரில் சிக்கினார் அப்போதைய தலைவரான முகமது அசாருதின். இதனால் பல வருடங்களாக அவர் வகித்து வந்த தலைவர் பதவியை யாருக்கு அளிப்பது என்ற கேள்வி எழுந்தது. உலக கிரிக்கெட் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கும் சச்சினிடம் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

அவரை நம்பி மட்டுமே இந்திய பேட்டிங் வரிசை இருந்ததால், தலைவர் பொறுப்பு அவருக்கு கூடுதல் சுமையானது. அது அவரது பேட்டிங்கையும் பாதிக்க ஒரு கட்டத்தில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சச்சின். அப்போது அணியில் பல மூத்த வீரர்கள் இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத சவுரவ் கங்குலியிடம் தலைவர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

அவர் அவ்வளவு சிறப்பாக அணியை வழி நடத்தி செல்வார் என யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. சரியாக ஆடாத ஆட்டக்காரர்களை அணியிலிருந்து நீக்கிய கங்குலி, மாநில அளவில் சிறப்பாக ஆடும் வீரர்களை கண்டறிந்து அவர்களை அணிக்குள் சேர்ந்து இந்திய கிரிகெட்டில் எழுச்சியை உருவாக்கினார். வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, முகமது கைஃப், ஜாகிர் கான், ஆஷிஷ் நேரா, ஹர்பஜன் சிங், திணெஷ் கார்த்திக், பார்த்திவ் பட்டேல் என கங்குலி தலைமையில் உருவான கிரிக்கெட் வீரர்களை அடுக்கி கொண்டே போகலாம்.

250 ரன்களை கடப்பதற்கே ஒரு காலத்தில் கஷ்டப்பட்ட இந்திய அணி கங்குலி தலைமையில் 300 ரண்களை எல்லாம் சர்வ சாதரணமாக கடந்தது. கங்குலி தலைமையிலான இந்திய அணி 2003ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது.

ஒவ்வொருவருக்கும் ஏற்ற தாழ்வான நேரம் இருக்கும் என்பது கங்குலியையும் விட்டு வைக்கவில்லை. ஒரு பக்கம் நடிகை நக்மாவுடன் காதல் கிசு கிசு மற்றொரு பக்க பேட்டிங்கில் சொதப்பல் என்றிருந்த கங்குலி, தலைவர் பதவி மட்டுமல்லாமல் அணியிலிருந்தும் விலக்கப்பட்டார். அவரை தொடர்ந்து மூத்த வீரரான ராகுல் டிராவிட்டுக்குத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

அப்போது பலமாகக் கருதப்பட்ட அந்த இந்திய அணி எதிர்பாராத விதமாக 2007ம் உலக் கோப்பையில் போட்டி சுற்றில் பங்களாதேஷிடம் தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்குச் செல்லாமலேயே வெளியேறியது. இது பெரிய அளவில் இந்திய வீரர்களின் மனநிலையைப் பாதித்தது. தோல்விக்குப் பொறுப்பேற்று டிராவிட் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் என்றாலே வெறுக்க ஆரம்பித்திருந்தனர். அந்த ஆண்டு முதன் முதலாக ICC 20 ஓவர் உலகக் கோப்பையை அறிவித்தது. சச்சின் உட்பட இந்திய அணியின் பெரும்பாலான மூத்த வீரர்கள் அதில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டாத நிலையில், சம்பிரதாயமாக புதிய வீரர்களை அணியில் சேர்ந்து அந்த போட்டிக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்தது.

மூத்த வீரர்கள் யாரும் முன் வராத நிலையில் இந்த போட்டிக்கு யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம் என்ற ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்ட சச்சின், தோனியின் பெயரைக் கூற, அவரை தலைவராக அறிவித்து இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பைக்குச் சென்றது.

அந்த அணியில் தோனி, ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், சேவாக் தவிர்த்த மற்றவர்கள் பெயரைக் கூட கிரிக்கெட் ரசிகர்கள் கேள்விப்படாத நிலையில், அந்த அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 20 ஓவர் உலக கோப்பையை வென்றது. 20 ஓவர் போட்டிக்கு ரசிகர்களிடையே இருக்கும் வரவேற்பைப் பார்த்த இந்திய கிரிக்கெட் வாரியம் 2008ம் ஆண்டு ஐபிஎல்லை அறிவித்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோணியை ஏலத்தில் எடுத்து அணி தலைவராக அறிவித்தது. அதே ஆண்டு தோனி டெஸ்ட், ஒரு நாள், 20 ஓவர் என அனைத்து கிரிக்கெட் அணிக்கும் தலைவரானார்.

தனது மென்மையான அணுகுமுறையால் அணியை வழிநடத்திய தோனி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் கவனம் செலுத்தி அதற்கான சரியான வீரர்களைக் கண்டறிந்து சிறந்த அணியாகக் கட்டமைத்தார். அதன் பலனாக சுமார் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது தலைமையிலான அணியின் மூலம் 2011ம் ஆண்டு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தார். அவரது தலைமையில் இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் என ஐசிசியின் அனைத்து தர வரிசையிலும் முதலிடம் பெற்றது. இன்று வரை ஐசிசியின் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே அணித் தலைவர் தோனி மட்டுமே.

இந்திய அணிக்குச் சிறப்பாகச் செயல்பட்ட அதே நேரத்தில் ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறந்த அணியாக ஆக்கினார். தோனி தலைமையில் 3 ஐபிஎல் கோப்பைகள், ஒரு சேம்பினஷிப் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பாராத விதமாக சூதாட்ட புகாரில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது.

அந்த காலகட்டம் தோனிக்கு மிகவும் சவாலான காலகட்டமாக மாறியது. அவரை நிர்பந்தப்படுத்தி இந்திய அணித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தது கிரிக்கெட் வாரியம். அந்த காலகட்டம் தனது வாழ்வில் மிகவும் சோதனையான காலகட்டம் என தோனி ஓர் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இரண்டு ஆண்டு தடைக்குப் பின் மீண்டும் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும்பாலும் பழைய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்த அணியை அப்பாக்கள் அணி என அனைவரும் கிண்டலடிக்க அந்த அணியை வைத்தே அந்த ஆண்டு சேம்பியன் பட்டத்தை வென்ற தோனி, சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் இறுதிப் போட்டி வரை அணியை வழிநடத்தி வந்தார். ஒரே ரன்னில் சென்னை அணி சேம்பியன் பட்டத்தைக் கோட்டைவிட்டது.

அதன் பின் சென்ற ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கான இந்திய அணியில் தோனியை தேர்ந்தெடுத்தற்கு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதையெல்லாம் உடைக்கும் விதமாகத் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் தோனி. அதில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, அரை இறுதியில் நியூசிலாந்திடம் மோதியது.

அந்த ஆட்டத்தில் சேசிங் செய்த இந்திய அணியில் பேட்டிங் வரிசை சொதப்ப, ஆட்டம் முடிந்ததென அனைவரும் நினைத்திருந்த நிலை தோனி ஆட்டத்தின் போக்கை மாற்றி வெற்றியை நோக்கி நகர்த்தி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் ரன் அவுட் ஆக இந்திய அணி ஒரு ரன்னில் உலகக் கோப்பை வாய்ப்பை இழந்து வெளியேறியது.

அதன் பின்னர் சில போட்டிகளில் தனது பெயரைப் பரிசீலிக்க வேண்டாம் என்று கூறிய தோனி, ரானுவத்திற்க்கு சென்று பயிற்சி மேற்கொண்டார். அவர் எப்போது வேண்டுமானாலும் தனது ஓய்வை அறிவிப்பார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த 20 ஓவர் உலகக் கோப்பைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்வி கிரிக்கெட் வாரியத்திடம் ஏற்பட்டது.

ஐபிஎல் போட்டிகளில் அவரின் ஆட்டம் எப்படி வெளிப்படுகிறது என்பதைப் பொருத்து அது முடிவு செய்யப்படும் என தேர்வுக் குழு தெரிவித்திருந்தது. இதனால் இந்த ஐபிஎல் போட்டிகளுக்கு தோனி ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் காலவரையின்றி போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது. 20 ஓவர் உலகக் கோப்பையும் நடைபெறுவதற்கான சாத்திய கூறு குறைவாக உள்ள நிலையில் மீண்டும் தோனியின் ஓய்வு விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

இந்தியா முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஹர்பஜன் தோனி நிச்சயம் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவார், ஆனால் மீண்டும் இந்திய அணிக்கு ஆடும் எண்ணமில்லை எனச் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

இந்திய அணிக்கு இவ்வளவு பெருமைகளை தேடி தந்த தோனிக்கு அவர் விரும்பும் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்தி அவருக்குப் பிரிவு உபசாரம் கொடுக்க வேண்டும் என்பதே அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இதைச் செய்யுமா இந்திய கிரிக்கெட் வாரியம்?

இந்திய தொழிலதிபர் துபாயில் தற்கொலை! தொழில்துறையினர் சோகம்

0

இந்திய தொழிலதிபர் துபாயில் தற்கொலை! தொழில்துறையினர் சோகம்

கேரளா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் துபாயில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் தொழில்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியைச் சேர்ந்த ஜாய் அரக்கல் என்பவர் துபாயில் எண்ணெய் வணிகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இவர் இன்னோவா குழும நிறுவனங்களின் தலைவர் பதவியையும் வகித்து வருகிறார். தனது குடும்பத்துடன் ஜூமைராவில் வசித்து வந்த இவர் பர்துபாய் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு தொழில்களை செய்து வந்தார். 

இதில் எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் வர்த்தகம், ஐஎஸ்ஓ தொட்டியை சுத்தம் சேவைகள், கப்பல் போக்குவரத்து சேவைகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காகன தொலைத் தொடர்பு நிறுவனம் உள்ளிட்டவை அவரது நிறுவனத்தின் முக்கியத் தொழில்களாக இருந்து வந்தன. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று தனது நண்பரின் வீட்டிற்குச் சென்ற அரக்கல், நண்பர் வசித்த அந்த குடியிருப்பின் 14 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த அந்நாட்டு காவல் துறையினர், இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், தொழிலில் ஏற்பட்ட கடன் பிரச்சனையால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அவரது உடலைச் சொந்த ஊரான கேரளா மாநிலம் வயநாட்டிற்கு எடுத்துவர அனுமதி பெறப்பட்டு, விரைவில் அவரது உடலை அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் கையால் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஜாய் அரக்கலின் இந்த இறப்பானது தொழில்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.