Home Blog Page 5666

சீனாவில் இறக்குமதியாகும் புதிய வகை மாமிசங்கள் : அமோகமான விற்பனையால் பரப்பு!

0

சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல உயிர்களை கொன்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் 300 கோடிக்கும் அதிகமானோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுக்குள் வந்துவிட்டதால் அங்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இதனால் நாட்டில் பல பகுதிகளில் மாமிச விற்பனை அதிகமாக நடந்ததன் காரணமாக மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது.

இதனையடுத்து சீன அரசு சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பித்து வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்த அதிரடி உத்தரவால் மாமிச பிரியர்களான சீனர்கள் நாவை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் சீனாவிலுள்ள அமெரிக்க நிறுவனமான ஸ்டார்பக்ஸ் தற்போது செயற்கை மாமிசங்களை களமிறக்கியுள்ளது. அந்த மாமிசங்கள் சாப்பிட மற்றும் சுவைக்க இறைச்சியை போலவே இருப்பதால் அது சீனர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் தொடர்ந்து கேஎஃப்சி நிறுவனமும் செயற்கை மாமிச வகைகளை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறது. இந்த இரண்டு அமேரிக்க நிறுவனங்களும் இதனை ஃபேக் மற்றும் ஃபேக் நக்கட் என்ற பெயரில் செயற்கை மாமிசங்களை விற்பனை செய்ய உள்ளதாக தெரிகிறது.

கர்ப்பிணி மனைவிக்கு தெரியாமல் கணவன் செய்த கேவலமான செயல் : அதனால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

0

கர்ப்பிணி மனைவிக்கு தெரியாமல் கணவன் செய்த கேவலமான செயல் : அதனால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் பூங்கொடி. இவர் அதே பகுதியை சேர்ந்த அஜீத் என்ற வாலிபரை காதலித்து வந்தார்.

இவர்கள் காதல் விவகாரத்தில் இரு தரப்பிலும் பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர். பின்னர் அஜித் தனது பெற்றோரை மட்டும் சமாதானம் செய்து பூங்கொடியை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் நடந்து முடிந்த பிறகு பூங்கொடியின் பெற்றோர்களை அழைத்து அஜித்தின் உறவினர்கள் சமாதானம் செய்துள்ளனர். இதனால் இவர்களின் திருமண வாழ்க்கை 10 மாதங்களுக்கு மேலாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து வந்தது‌.

திருமணம் ஆனதில் இருந்தே அஜீத் எந்த வேலைக்கும் போகாமல் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து ஊர் சுற்றி வந்துள்ளார். இதனிடையே பூங்கொடி கர்ப்பமான போதும் அஜீத் வழக்கம் போலவே ஊர் சுற்றுவதையே வழக்கமாக கொண்டிருந்தார்.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவியதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சாராயம் கிடைக்காமல் தவித்து வந்த அஜீத் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க தொடங்கினார்.

இது பற்றி தெரிந்து கொண்ட பூங்கொடி தனது கணவனுடன் கடுமையாக சண்டை போட்டுள்ளார். இதை சட்டை செய்யாமல் கர்ப்பிணி மனைவியை திட்டிவிட்டு வழக்கம் போல் கள்ளச்சாராயம் விற்று வந்துள்ளார் போதை ஆசாமி.

இந்த நிலையில் 8 மாத கர்ப்பிணியான பூங்கொடி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதை கேட்டு ஆத்திரம் அடைந்த பெண்ணின் பெற்றோர் அஜீத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் தங்களது மகளின் மரணத்தில் மர்மம் என்றும் அஜீத்தின் குடும்பத்தார் தான் வரதட்சணை கேட்டு கொன்று விட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளனர். போதை ஆசாமி அஜீத் மற்றும் அவரது பெற்றோரை தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு திரௌபதி இயக்குனர் மோகன் ஜி கையிலெடுத்த அடுத்த பிரச்சனை

5 மாநகரங்களில் முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் வைக்கும் புதிய கோரிக்கை

0

5 மாநகரங்களில் முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் வைக்கும் புதிய கோரிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும்.

மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவு கட்டுபாடுகள் சில இடங்களில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா அதிகம் பாதித்த ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு தற்போதும் அமலில் உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில், முழு ஊரடங்கை பிறப்பித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின் மூலமாக சென்னை,மதுரை,கோவை,சேலம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 5 மாநகரங்களில் முழுமையான ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளில் அலை மோதுகின்றனர். இந்நிலையில் கடை திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க, பல இடங்களில் 26.4.2020 தொடங்கி, மூன்று முதல் நான்கு நாட்கள் வரை முழு ஊரடங்கை அமல்படுத்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அரசு முடிவெடுத்துள்ளது.

இதனை அனைவரும் உறுதியுடன் கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அரசு எடுத்துள்ள இந்த முடிவின் காரணமாக, இன்று ஒரே நாளில் தேவையான பொருட்களை வாங்க மக்கள் வீதிக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது; இதனால் மக்கள் நெரிசல் அதிகமாவதற்கான வாய்ப்பும் உள்ளது.

எனவே, இன்று ஒருநாள் மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மாலை வரை நீட்டிக்கவும், அப்போது தனிமனித விலகலைக் கடைப்பிடித்து மக்கள் பொருட்களை வாங்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அன்புமணி ராமதாஸ் கூறும் புதிய உத்திகள்

0

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அன்புமணி ராமதாஸ் கூறும் புதிய உத்திகள்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கமானது அதிகரித்து கொண்டே சென்றாலும் அரசு துரிதமாக செயல்பட்டு அதன் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் வைத்துள்ளது வரவேற்கதக்கது. இதற்கு தமிழக முதல்வர் அரசு அதிகாரிகள் கூறும் ஒவ்வொரு ஆலோசனைக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதை செயல்படுத்தி வருவதுமாகும். குறிப்பாக கூட்டணி கட்சியான பாமகவின் இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கொடுக்கும் ஆலோசனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருவதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த அன்புமணி ராமதாஸ் புதிய உத்திகளை கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் வருவது நிம்மதியளித்தாலும் கூட, சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. சென்னை போன்ற மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது சிக்கலான ஒன்று தான் என்றாலும், புதுமையான உத்திகளின் மூலம் நிலைமையை சமாளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக ஏற்பட்ட தோற்றுகளின் எண்ணிக்கை 72 ஆகும். இவற்றில் சென்னையில் மட்டும் 52 தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. அதாவது நேற்று புதிதாக ஏற்பட்ட தொற்றுகளில் 72% சென்னையில் ஏற்பட்டவையாகும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 1755 பேரில், 452 பேர் அதாவது 25.75% சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 15-ஆம் தேதி முதல் நேற்று வரையிலான 10 நாட்களில் தமிழகத்தில் புதிதாக பரவிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 513 ஆகும். அவற்றில் 238 தொற்றுகள், அதாவது 46.39% சென்னையில் நிகழ்ந்தவை.

கடந்த 10 நாட்களில் சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 275, அதாவது வெறும் 26.96% தான். அதேநேரத்தில் சென்னையில் மட்டும் கடந்த 10 நாட்களில் புதிதாக பாதிக்கப்பட்டோர் 238 பேர் ஆவர். இது அதற்கு முன் பாதிக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கையான 214-ஐ விட 111.21% அதிகமாகும். அதாவது தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பரவுவதை விட சென்னையில் 4 மடங்குக்கும் கூடுதலான வேகத்தில் கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதையும், சென்னை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதையும் இந்த புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடியும்.

சென்னையுடன் ஒப்பிடும் போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று வரை கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டமாக திகழ்வது ஒருபுறமிருக்க, கடந்த 10 நாட்களில் கன்னியாகுமரி, நீலகிரி, ராணிப்பேட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படவில்லை. குறிப்பாக கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தில் நிலைமை இந்த அளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பது பெரிய முன்னேற்றமாகும்.

அதேபோல், கரூர், தூத்துக்குடி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும், தேனி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும் மட்டும் தான் கடந்த 10 நாட்களில் புதிய தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். 15 மாவட்டங்களில் ஐந்துக்கும் குறைவானவர்களும், 25 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களும் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதிலிருந்தே நோய்ப்பரவல் தடுப்பில் தமிழகம் சரியான திசையில் செல்வதை அறிய முடியும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் விகிதத்திலும் சென்னையை விட பிற மாவட்டங்கள் முன்னணியில் உள்ளன. தமிழகத்தில் பிற மாவட்டங்களில் குணமடைந்தோர் விகிதம் 54.18 விழுக்காடாக உள்ள நிலையில், சென்னையில் இந்த விகிதம் 35.39% என்ற மிகக்குறைந்த அளவிலேயே இருக்கிறது. கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை விட, அதிக எண்ணிக்கையிலானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதும் நம்பிக்கையளிக்கும் ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்து விட்ட நிலையில், சென்னையில் நோயை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். சென்னையில் மொத்தம் 140 பகுதிகள் தீவிர நோய் பாதிப்பு பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. புதிதாக ஏற்படும் தொற்றுகள் அதிகமாக இருக்கும் போதிலும், பாதிக்கப்பட்டோரில் பலருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை என்றாலும், புதிய தொற்றுகள் அனைத்தும் தீவிர நோய் பாதிப்பு பகுதிகளுக்குள் (Containment Areas) தான் ஏற்படுகின்றன என்பது தான் சமூகப் பரவல் குறித்த அச்சத்தைப் போக்குகிறது. ஆனாலும் நிலைமை மோசமாகத் தான் இருக்கிறது.

நோய் பாதித்த பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு, தீவிர நோய் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருப்பதன் மூலம் மொத்தம் 420 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை மாநகரில், நோய் பாதிப்பு உள்ள பகுதிகள் மட்டும் 2 சதுர கிலோ மீட்டராக சுருக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் கொரோனா அறிகுறியுடன் காணப்படுபவர்களை உடனடியாக சோதித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதன் மூலம் தான் சென்னை மாநகரத்தை கொரோனா வைரஸ் நோயின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியும்.

சென்னையில் கொரோனா வைரஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட 6 மண்டலங்களில் மட்டும் 40 லட்சம் பேர் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் சோதனை செய்வது சாத்தியமில்லை; தேவையும் இல்லை. மாறாக, தீவிர நோய் பாதிப்பு பகுதிகளில் உள்ள சில லட்சக்கணக்கான மக்களை தனிமைப்படுத்துவது, அறிகுறி உள்ளவர்களுக்கு சோதனை செய்வது தான் ஆகியவை தான் இன்றைய சூழலில் சாத்தியமானது ஆகும். இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டியதும் மிகவும் அவசியம் ஆகும்.

தீவிர நோய் பாதிப்பு பகுதிகளில் உள்ளவர்களில் வாய்ப்புள்ளோரை அவர்களின் வீடுகளிலும், மற்றவர்களை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள கட்டிடங்களிலும் தனிமைப்படுத்த வேண்டும். நோய் அறிகுறிகள் கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால், அவர்களை எங்கு, எப்போது, எத்தகைய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கான செயல்திட்டத்தை வகுத்து, விரைந்து செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். இந்த பணிகள் முடிவடையும் வரை சென்னை மாநகர மக்கள் ஊரடங்கை தீவிரமாக கடைபிடித்து, நோய்த்தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கில் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்யும் இளம் மருத்துவர்! குவியும் பாராட்டு

0

ஊரடங்கில் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்யும் இளம் மருத்துவர்! குவியும் பாராட்டு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும்.மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவு கட்டுபாடுகள் சில இடங்களில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா அதிகம் பாதித்த ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு தற்போதும் அமலில் உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில், முழு ஊரடங்கை பிறப்பித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த ஊரடங்கு காலத்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களுக்குத் தேவையான பல்வேறு அடிப்படை உதவிகளை அரசியல் கட்சியினரும், தொண்டு நிறுவனங்களும் மற்றும் தன்னார்வலர்களும் தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்தவகையில் ஊரடங்கில் மருத்துவம் செய்ய பணமில்லாமல் ஏழை எளிய பொது மக்கள் சிரமம் அடைவதை உணர்ந்த மருத்துவர் ஒருவர், தன்னுடைய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்.

“ஊரடங்கில் மக்களுக்கு இலவச மருத்துவம்” : இளம் வயதிலும் சேவை செய்து நெகிழ வைக்கும் சிவகங்கை மருத்துவர்!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கண்டனூரைச் சேர்ந்தவர் மருத்துவர் பூபதிராஜா. ஆரம்பத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இவர், பின்னர் தான் வசிக்கும் ஊரிலேயே சொந்தமாக கிளினிக் ஒன்றை ஆரம்பித்து கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

மருத்துவர் பூபதிராஜா தான் வசிக்கும் சொந்த ஊரில் கிளினிக் நடத்துவதலால் அந்த மாவட்டத்திலேயே பொது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். மாவட்ட அளவில் சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவர் என இவர் மக்கள் மத்தியில் பெயரெடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க கருதி தனது கிளினிக்கை மருத்துவர் பூபதிராஜா மூடியுள்ளார்.

இதனையடுத்து இந்த ஊரடங்கு நேரத்தில் பிற மருத்துவமனையில் வசூலிக்கும் அதிக கட்டணத்தை செலுத்தி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றும், அரசு மருத்துவமனை௪ தொலைத் தூரத்தில் உள்ளதால் அங்கு சென்றும் சிகிச்சை பெற முடியாத சூழலில் உள்ளதால் அவருடைய கிளினிக்கை திறக்கும்படி ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

“ஊரடங்கில் மக்களுக்கு இலவச மருத்துவம்” : இளம் வயதிலும் சேவை செய்து நெகிழ வைக்கும் சிவகங்கை மருத்துவர்!

இதனையடுத்து மருத்துவர் பூபதிராஜா ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பிறகு போதுமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் மீண்டும் அவருடைய கிளினிக்கை திறந்துள்ளார். இந்த முறை அவரிடம் சிகிச்சைக்கு வரும் யாரிடமே பணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்க முடிவு செய்த மருத்துவர் பூபதிராஜா, தற்போது வரை பொது மக்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

குறிப்பாக அவரிடம் சிகிச்சைக்கு வரும் பெரும்பாலான நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து மருந்துகளை மட்டும் தற்போது எழுதிக் கொடுத்துவருகிறார். மேலும் பணம் இல்லாத சிலருக்கு தனது சொந்த செலவில் மருந்தும் வாங்கிக் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, முககவசம் இல்லமால் தன்னுடைய கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளுக்கு தனது கிளினிக் வாசலில் ஒரு பெட்டியில் முககவசம் வைத்து அவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

இவரிடம் தினம் கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றோர் என 50 க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இப்படி கட்டணம் வசூலிக்காமல் சிகிச்சை அளிக்கும் மருத்துவரை சிகிச்சை பெற்ற அப்பகுதி பொது மக்கள் மனமார பாராட்டிச் செல்கின்றனர். மேலும் இந்த ஊரடங்கு நேரத்தில் இலவசமாக மருத்துவம் பார்க்கும் இந்த மருத்துவரின் அரிய சேவைக்கு சமூகவலைதளங்களில் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

28 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 28 லட்சத்து 30 ஆயிரத்து 82 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 97 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 7 லட்சத்து 98 ஆயிரத்து 682 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

28 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 24,506 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 775 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 5,062 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 6,430/283
டெல்லி – 2,376/50
குஜராத் – 2,624/112
தமிழ்நாடு – 1,755/22
தெலுங்கானா – 984/26
கேரளா – 450/03
ராஜஸ்தான் – 2,034/27
உத்தரபிரதேசம் – 1,621/25
ஆந்திர பிரதேசம் – 955/29
கர்நாடகா – 474/18
மத்திய பிரதேசம் – 1,852/92
ஜம்மு & காஷ்மீர் – 454/05
மேற்கு வங்கம் – 571/18
பஞ்சாப் – 298/17
ஹரியானா – 272/03
பீகார் – 223/02
அசாம் – 36/01
சண்டிகர் -27/0
உத்தர்கண்ட் – 48/0
லடாக் – 20/0
அந்தமான் & நிக்கோபார் -27/0
சத்தீஸ்கர் – 36/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 40/01
ஒடிசா – 94/01
பாண்டிச்சேரி – 07/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 57/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 12/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 866 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

28 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் தைல தோப்பில் காதல் ஜோடி! டிரோன் கேமராவில் சிக்கியது வீடியோ

0

ஊரடங்கு நேரத்தில் தைல தோப்பில் காதல் ஜோடி! டிரோன் கேமராவில் சிக்கியது வீடியோ

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் சமூக விலகலை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கடைபிடித்து வருகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் மத்திய மற்றும் மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். ஒரு சில இடங்களில் அரசின் இந்த ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் மக்கள் வெளியில் சுற்றுவது நடைபெற்று வருவதால் அதையெல்லாம் கவனிக்க கேமராவுடன் கூடிய டிரோன்களை பறக்க விட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் தான் கும்மிடிப்பூண்டி சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த தைலத்தோப்பில் இணைந்திருந்த காதலர்கள் இந்த டிரோனை பார்த்ததும் வாகனத்தை எடுத்து கொண்டு பறந்த காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகளின் ஆணைக்கிணங்க 144 தடை உத்தரவை பிறப்பித்து அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து அங்கு வைரஸ் தொற்று உள்ள பகுதிகள் எல்லாம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அங்குள்ள சாலைகளை தடுப்பு கட்டைகளால் மறித்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அரசு அறிவித்துள்ள இந்த ஊரடங்கு உத்தரவின் கட்டுப்பாடுகளை மதிக்காமல் இந்த பகுதிகளில் உள்ள சாலையில் சுற்றித் திரிபவர்களை கண்காணிக்க ட்ரோன் கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் இந்த கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.

இவ்வாறு ட்ரோன் கேமரா மூலமாக கண்காணித்து கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ஊரடங்கு உத்தரவை மீறி தைல தோப்பில் மறைவாக இணைந்திருந்த காதல் ஜோடி, ஏரிக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் விளையாடிய இளைஞர்கள், என காவல் துறையினரின் ட்ரோன் கேமராவில் பதிவானது.

இதனையடுத்து காவலர்கள் டிரோன் கேமரா மூலம் தங்களை கண்காணிப்பதை அறிந்த காதல் ஜோடி இருச்ககர வாகனத்தை எடுத்து கொண்டு பதறியடித்து பறந்த காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் வகையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய நேரத்தில் காதல் ஜோடிகள் தைல தோட்டத்தில் தஞ்சமடைந்தது அப்பகுதி பொது மக்களிடையே முகம் சுழிக்க வைத்துள்ளது.

ஊரடங்கு நேரத்தில் மக்கள் துன்பத்தை கண்டுகொள்ளாமல் பணமாலையுடன் பிறந்தநாளை கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ

0

ஊரடங்கு நேரத்தில் மக்கள் துன்பத்தை கண்டுகொள்ளாமல் பணமாலையுடன் பிறந்தநாளை கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ

கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்த மற்ற அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தினக்கூலி வேலைக்கு செல்லும் பெரும்பாலான குடும்பங்களில் அன்றாட உணவுக்கே வழியில்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் இந்த சூழ்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏ பணமாலையுடன் பிறந்த நாளை கொண்டாடிய சம்பவம் பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 1683 பேர் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20 பேர் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அரசுடன் இணைந்து போராடி வருகின்றனர். குறிப்பாக பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தினம் தினம் மக்களின் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு அறிக்கைகள் மற்றும் காணொளி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுக மக்கள் நலனுக்காக போராடாமல் வழக்கம் போல குறை கூறும் அரசியலையே முன்னெடுத்து வருகிறது.இவ்வாறு தமிழக அரசை விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு கருத்திற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தக்க பதிலடி கொடுத்து வருகிறார். இறுதியாக திமுக தலைவர் என்ன மருத்துவரா அவரிடம் ஆலோசனை கேட்க என்று கடுமையாக சாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கொரோனாவை எதிர்த்து அரசுடன் இணைந்து பணியாற்ற மறந்த திமுகவினர் விளம்பரத்திற்காக அவ்வப்போது நேரிடையாக நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்சிகளை நடத்தி வந்தனர். சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ஸ்டாலினே அவருடைய தொகுதியில் மக்களை சந்தித்து நிவாரண உதவி வழங்கியது கடும் விமர்சனத்தை கிளப்பியது.

இந்நிலையில் இவ்வாறு மக்கள் நலனை மறந்து திமுக செயல்படுவதற்கு அடுத்த உதாரணமாக சிங்காநல்லூர் எம்எல்ஏ நா. கார்த்திக்கின் பிறந்த நாள் கொண்டாட்டம் தற்போது சமூக வலைத்தளங்களில் சிக்கியுள்ளது.

கோயம்பத்தூர் சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ நா.கார்த்திக்கிற்கு கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி பிறந்த நாளாகும். இதனையடுத்து அன்றைய தினம் அவர் தனது ஆதரவாளர்களுடன் பணமாலை அணிந்து உற்சாகமாக பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் மக்கள் துன்பத்தை கண்டுகொள்ளாமல் பணமாலையுடன் பிறந்தநாளை கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ

இதனையடுத்து இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படத்தை திமுக நிர்வாகியான நவீன் கார்த்திக் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்ட அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனம் எழுந்து வருகிறது. குறிப்பாக அவரை பொதுமக்கள் மட்டுமின்றி, திமுக உடன்பிறப்புகளே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், மக்கள் பணமில்லாமல் அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் திமுக எம்எல்ஏ பணமாலை அணிந்து அவருடைய பிறந்த நாளை கொண்டாடியது பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அரசை குறை கூறுவதை விட்டு, வாக்களித்த மக்களுக்காக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசுடன் இணைந்து செயல்பட முயற்சிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.

ஊரடங்கு நேரத்தில் மக்கள் துன்பத்தை கண்டுகொள்ளாமல் பணமாலையுடன் பிறந்தநாளை கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் செயல்பாட்டை விமர்சிக்கும் திமுகவின் உண்மை முகம் இதன் மூலமாக வெளிக்காட்டப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதோடு, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,முன்னாள் மத்திய சுகாாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் போன்றோர் மக்கள் நலனுக்காக தினமும் செயல்பட்டு அவர்களின் துயர் நீக்க அயராது உழைத்து வரும் சூழலில், இப்படியும் ஒரு மக்கள் பிரதிநிதியா என சமூக வலைதளங்களில் பொது மக்கள் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் பற்றிய புதிய தகவல்

0

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் பற்றிய புதிய தகவல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக நாளுக்கு நாள் பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தமிழகத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 1755 ஆக உயர்ந்துள்ளது.   

கொரோனா பாதிப்பால்  இன்று கொரோனா பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 22 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் குறிப்பாக சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 52 பேருக்கு புதிதாக கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது வரை சென்னையில் மட்டும் கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 452 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையானது  822 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாய் மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய முயற்சி

0

நாய் மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய முயற்சி

கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நாட்டு மக்களை வீட்டிற்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.உலகம் முழுவதும் 27 லட்சம் பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.1.9 லட்சம் நபர்கள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கண்டு பிடிப்பதை விட, வைரஸ் தாக்குதலுக்கு ஆளான நபரை கண்டறிந்து அவர்களை தனிமை படுத்துவதை தான் ஒவ்வொரு நாடுகளும் முதன்மை பணியாக செய்து வருகின்றன.இதற்காக ரேபிட் டெஸ்ட் கிட் எனும் உபகரணத்தை பல்வேறு நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்து கொரோனா பாதித்த நபர்களை கண்டறிய வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை அறிய நாய்களை கொண்டு கண்டுபிடிக்கும் நூதன முயற்சியில் இங்கிலாந்து இறங்கியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக கடும் பாதிப்பை சந்திருக்கும் நாடு இங்கிலாந்து. அந்த நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனையே கொரோனா தாக்கி மருத்துவமனையில் படுக்க வைத்துவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

இவ்வாறு கொரோனா வைரஸின் தொடர் பாதிப்புகளால் அந்நாடு செய்வதறியாது திகைத்துள்ளது. இந்நிலையில் தான் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள ஒரு புதிய உத்தியை அந்த நாடு கையில்எடுத்துள்ளது. அதாவது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என்பதை அறிய நாய்களை பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம் என்ற முயற்சியில் அந்நாடு தற்போது ஈடுபட்டுள்ளது.

இதற்கான முக்கிய காரணம் அந்த நாட்டில் மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே ஆகும். ஏற்கனவே மலேரியா மற்றும் புற்றுநோய் பாதித்தவர்களையெல்லாம் கண்டறிய நாய்களை பயன்படுத்தி அதில் இங்கிலாந்து வெற்றியும் பெற்றிருக்கிறது.

இந்த முயற்சியில் லேப்ரடார் இன நாய்களை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த நடைமுறையை கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.