நாய் மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய முயற்சி

0
90
Corona Infection find by Dog
Corona Infection find by Dog

நாய் மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய முயற்சி

கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நாட்டு மக்களை வீட்டிற்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.உலகம் முழுவதும் 27 லட்சம் பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.1.9 லட்சம் நபர்கள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கண்டு பிடிப்பதை விட, வைரஸ் தாக்குதலுக்கு ஆளான நபரை கண்டறிந்து அவர்களை தனிமை படுத்துவதை தான் ஒவ்வொரு நாடுகளும் முதன்மை பணியாக செய்து வருகின்றன.இதற்காக ரேபிட் டெஸ்ட் கிட் எனும் உபகரணத்தை பல்வேறு நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்து கொரோனா பாதித்த நபர்களை கண்டறிய வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை அறிய நாய்களை கொண்டு கண்டுபிடிக்கும் நூதன முயற்சியில் இங்கிலாந்து இறங்கியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக கடும் பாதிப்பை சந்திருக்கும் நாடு இங்கிலாந்து. அந்த நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனையே கொரோனா தாக்கி மருத்துவமனையில் படுக்க வைத்துவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

இவ்வாறு கொரோனா வைரஸின் தொடர் பாதிப்புகளால் அந்நாடு செய்வதறியாது திகைத்துள்ளது. இந்நிலையில் தான் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள ஒரு புதிய உத்தியை அந்த நாடு கையில்எடுத்துள்ளது. அதாவது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என்பதை அறிய நாய்களை பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம் என்ற முயற்சியில் அந்நாடு தற்போது ஈடுபட்டுள்ளது.

இதற்கான முக்கிய காரணம் அந்த நாட்டில் மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே ஆகும். ஏற்கனவே மலேரியா மற்றும் புற்றுநோய் பாதித்தவர்களையெல்லாம் கண்டறிய நாய்களை பயன்படுத்தி அதில் இங்கிலாந்து வெற்றியும் பெற்றிருக்கிறது.

இந்த முயற்சியில் லேப்ரடார் இன நாய்களை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த நடைமுறையை கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.