Home Blog Page 5667

ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி.! திமுக முன்னாள் அமைச்சரின் கல்லூரியில் நடக்கும் கெடுபிடி.!!

0

ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி.! திமுக முன்னாள் அமைச்சரின் கல்லூரியில் நடக்கும் கெடுபிடி.!!

கொரோனா பாதிப்பு காலத்தில் கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் செலுத்துமாறு தனியார் கல்லூரி நிர்வாகம் மாணவிக்கு ஒருவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால் 2 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ஆம் தேதி வரை போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதோடு வேலை இழந்தும், வருமானம் இன்றியும் தவித்து வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் பூங்கோதை அவர்களின் தந்தை ஆலாடி அருணா என்பவரின் பெயரில் இயங்கி வரும் “ஆலாடி அருணா காலேஜ் ஆஃப் நர்சிங்” என்ற கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் 3 ஆம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவருக்கு கல்விக்கட்டணம் விடுதிக் கட்டணத்தை கல்வி நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி.! திமுக முன்னாள் அமைச்சரின் கல்லூரியில் நடக்கும் கெடுபிடி.!!
கட்டணம் செலுத்த கூறிய கடிதம்

கொரோனா வைரஸ் தாக்கத்தில் நாடே முடங்கி போயிருக்கும் வேளையில் வீட்டு வாடகை கேட்க கூடாது, வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மூன்று மாத தவணைகள் ஒத்திவைப்பு, வீட்டை காலி செய்யக்கூடாது, என்று பல்வேறு விதிமுறைகளை மக்களுக்காக ஆதரவாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இக்கட்டான நிலையில் முன்னாள் திமுக அமைச்சரின் கல்லூரியில் படிக்கும் மாணவியை கல்விக்கட்டணம் மொத்தமாக செலுத்த கூறிய சம்பவம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

டாக்டர் வில்சன் விவகாரத்தில் கிறிஸ்துவ மத சிக்கல் உள்ளது : சர்ச்சையை கிளப்பும் அரசியல் விமர்சகர்!

0

கடந்த சில நாட்களுக்கு முன்பு நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் வில்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டாக்டர் வில்சன் கிறிஸ்துவர் என்பதால் அவரை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

டாக்டர் வில்சனின் உடல் அவரது மனைவி மகன் மற்றும் ஒரு மருத்துவருடன் ஆம்புலன்சில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சத்திரம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூடியிருந்த அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸில் வந்த அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்து, உடன் வந்த ஓட்டுநர் மற்றும் உறவினர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனால் அவரது உடல் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு தமிழக அரசின் பரிந்துரையின் பெயரில் வேலங்காட்டில் உள்ள இந்துக்களின் மயானத்தில் உடனடியாக அடக்கம் செய்யப்பட்டது. ஒரு மருத்துவரின் உடலை புதைக்க மறுத்தது மற்றும் உறவினர்களை தாக்கியது மனிதாபிமானம் அற்ற செயல் என்று கடும் கண்டனங்கள் பதிவானது.

இந்த விவகாரத்தில் மருத்துவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்யும் விதமாக சில நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு மருத்துவர்களை சமாதான படுத்தியதோடு மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை என்ற கடுமையான சட்டத்தையும் கொண்டு வந்தது‌.

இதற்கிடையில் மருத்துவர் வில்சனின் மனைவி ஆனந்தி தமிழக முதல்வருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அதில் தன்னுடைய கணவரின் உடலை அவசர அவசரமாக இந்துக்களின் சுடுகாட்டில் புதைக்கப்பட்டதால், அதன் தோண்டி எடுத்து தங்களது கிரிஸ்துவ முறைப்படி புதைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இந்த நிலையில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி தனது முகநூல் பக்கத்தில் மருத்துவர் வில்சன் விவகாரத்தில் பிரச்சினை வருவதற்கு காரணம் மத சிக்கல் தான் என்று கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது;

‘டாக்டரை அடக்கம் செய்ய எதிர்ப்பு.
இதன் பின்னணி இதுதான்..
இறந்த டாக்டர் கிறிஸ்தவர்.அதனால் அவரை கீழ்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய தீர்மானிக்கபட்டது.அப்போது அந்த டாக்டர் கத்தோலிக்க கிறித்துவ அமைப்பை சேர்ந்தவர் என்பதால் CSI கிறிஸ்துவ அமைப்பு ஆட்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்…

கடைசியில் இந்துக்கள் அடக்கம் செய்யப்படும் மையான பூமியில் டாக்டர் உடல் அடக்கம் செய்யப்பட்டது’ என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பல குழப்பங்கள் உள்ள போது கிஷோர் கே ஸ்வாமி இவ்வாறு மத ரீதியான சிக்கலை வெளிப்படையாக சொன்னதால் மேலும் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.

https://m.facebook.com/story.php?story_fbid=10216614435461704&id=1484264832

நீதிமன்ற தீர்ப்பை ஆதாரமாக காட்டி 30 ஆண்டுகள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

0

நீதிமன்ற தீர்ப்பை ஆதாரமாக காட்டி 30 ஆண்டுகள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது. உச்சநீதிமன்றமும் பல்வேறு தருணங்களில் இதை ஒப்புக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இதை வலியுறுத்தும் வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று “இடஒதுக்கீட்டில் அநீதி என உச்சநீதிமன்றம் கருத்து: சாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு, உண்மையிலேயே தேவைப்படும் பிரிவினருக்கு கிடைக்கவில்லை என்றும், அதனால் இட ஒதுக்கீடு பெறும் சமூகங்களின் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் நாட்டின் இடஒதுக்கீட்டை, சமூகநீதியை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைக்க நேரம் வந்துவிட்டது.

ஆந்திர மாநிலத்தில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளில் முழுக்க, முழுக்க பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்க வகை செய்யும் 2000-ஆவது ஆண்டின் சட்டத்தை ரத்து செய்து நேற்று முன்நாள் அளித்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.‘‘பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டின் பெரும்பகுதியை அந்தப் பிரிவுகளில் இடம் பெற்றுள்ள சில முன்னேறிய பிரிவினர் மட்டுமே அனுபவிக்கின்றனர் என்ற குமுறல் அதே பிரிவில் இடம்பெற்றுள்ள பிற சமுதாய மக்களிடம் காணப்படுகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில், இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்காத வகையில், இடஒதுக்கீடு பெறும் சாதிகளின் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’’ என்று உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறியுள்ளது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகிய ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவிலும் கடந்த காலங்களில் மிக அதிக சலுகைகளை அனுபவித்த சமுதாயங்களை நீக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்து விவாதத்திற்குரியது. அதேநேரத்தில் இட ஒதுக்கீட்டில் அநீதி நிலவுகிறது; ஒரே இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள வளர்ச்சியடைந்த சமுதாயங்கள், அதேபிரிவில் உள்ள பின்தங்கிய சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் கிடைப்பதைத் தடுக்கின்றன என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்து மிகவும் சரியானது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்த சிக்கலுக்கு சமூக நீதியின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும்; அத்தகைய தீர்வு எவரையும் பாதிக்கக்கூடாது என்றால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுதான் மிகச்சரியானதாக இருக்கும்.

தேசிய அளவில் எடுத்துக் கொண்டாலும், மாநில அளவில் எடுத்துக் கொண்டாலும் இட ஒதுக்கீட்டில் சில பிரிவினருக்கு துரோகம் இழைக்கப்படுகிறது என்பது உண்மை. மத்திய அரசின்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டை பிரித்து உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் கண்டுபிடிப்புகள் தான் இதற்கு ஆதாரம் ஆகும். ‘‘இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவில் மொத்தம் 2,633 சாதிகள் உள்ளன. அவற்றில் 25% இட ஒதுக்கீட்டை வெறும் 10 சாதிகள் மட்டுமே அனுபவித்து வருகின்றன.

1640 சாதிகளுக்கு வெறும் 3% மட்டுமே இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. மீதமுள்ள 983 சாதிகள் இதுவரை இட ஒதுக்கீட்டின் பயன்களையே அனுபவிக்கவில்லை’’ என்பது தான் ரோகிணி ஆணையம் தயாரித்துள்ள முதல் கலந்தாய்வு அறிக்கையின் முக்கிய அம்சமாகும். பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் எவ்வளவு துரோகம் இழைக்கப்படுகிறது என்பதற்கு இதுவே ஆதாரமாகும். மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் 10 விழுக்காட்டைக் கூட தாண்டாத நிலையில், இந்த அளவுக்கு பாகுபாடுகள் நிலவுவது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.

சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள சாதிகளை முன்னேற்றுவதற்கான சிறந்த ஏற்பாடு இட ஒதுக்கீட்டு என்பதில் ஐயமில்லை. ஆனால், கல்வி மற்றும் சமூகப் படிநிலையில் ஒவ்வொரு சாதிக்குமான இடம், மக்கள்தொகை உள்ளிட்ட எந்தவிதமாக காரணிகளையும் கருத்தில் கொள்ளாமல், உத்தேசமான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது தான் இப்போது நிலவும் அனைத்து குளறுபடிகளுக்கும் காரணமாகும். 1931-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததாலும், அதன்பின் இந்திய நிலப்பரப்பும், மக்கள்தொகை பரவலும் ஏராளமான மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டதாலும், இப்போதுள்ள சாதி புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு உண்மையான சமூகநீதியை பிரதிபலிக்கும் வகையில் இடஒதுக்கீடு வழங்குவது சாத்தியமில்லாதது.

அதனால் தான் நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது. உச்சநீதிமன்றமும் பல்வேறு தருணங்களில் இதை ஒப்புக்கொண்டிருக்கிறது. உண்மையான சமூகநீதியை நிலை நிறுத்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான் சிறந்தவழி என்று தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் 13.07.2010 அன்று அளித்தத் தீர்ப்பிலும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இப்போது அளித்துள்ள தீர்ப்பில் கூட இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையிலும், அரசியல் சாசனத்திற்கு உட்பட்டும் புதிய இடஒதுக்கீட்டுப் பட்டியலை தயாரிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதன் பொருள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டு பட்டியலை புதிதாக தயாரிக்க வேண்டும் என்பது தான்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது கடினமான ஒன்றல்ல. வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவத்தில் ஓபிசி-சாதி என்ற புதிய பிரிவை மட்டும் சேர்த்தால் போதுமானது. இதை மத்திய, மாநில அரசுகளிடம் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இன்று வரை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இப்போது உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், இப்போதாவது, தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டை தீர்மானிக்க வேண்டும். அதற்கு வசதியாக, தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பையே, சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.

கோயில் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!கொல்லிக் கட்டையால் தலையை சொறிந்த ஜோதிகா! தொடர் சர்ச்சையில் சிக்கும் சிவகுமார் குடும்பம்!

0

கோயில் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!கொல்லிக் கட்டையால் தலையை சொறிந்த ஜோதிகா! தொடர் சர்ச்சையில் சிக்கும் சிவகுமார் குடும்பம்!

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் கோயிலுக்கு ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்று பேசிய நடிகை ஜோதிகாவிற்கு இணையம் முழுக்க எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருது விழாவில் கலந்துகொண்டு கோயிலை பற்றி ஜோதிகா பேசிய வீடியோ சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் நடிகை ஜோதிகா கூறியதாவது; தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. நான் ஏற்கனவே பார்த்த உதய்பூர் அரண்மனை போலவே உள்ளது. அப்போது எனக்கு அங்கு இருந்த மருத்துவமனையில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. மருத்துவமனைக்கு நான் சென்றபோது அது சரியாகப் பராமரிக்கப்படாத நிலையில் மிக மோசமாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது.

மருத்துவமனையை பார்த்த பிறகு நான் கோவிலுக்கு போகவில்லை. பள்ளிகளும், மருத்துவமனைகளும்தான் முக்கியம். கோயில்களுக்கு செய்வது, உண்டியலில் காசு போடுவதை விட மருத்துவமனைகளை பராமரிக்கவும் பணம் கொடுங்கள் என்று நடிகை ஜோதிகா மேடையில் கூறியிருந்தார்.

ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு இணையத்தில் மற்றும் பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளப்பியுள்ளது. ஜோதிகாவின் வீடியோவை பகிர்ந்து அவரது குடும்பத்தினரையும் விமர்சித்து வருகின்றனர். அக்கறையோடு பேசும் ஜோதிகாவுக்கு பல நெட்டிசன்கள் கேள்வியுடன் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நடிகை ஜோதிகாவுக்கு 5 கோடியில் வீடு எதற்கு.? ஒரு கோடியில் கார் எதற்கு.? 300 கோடிக்கு சொத்து எதற்கு என்றும் மேலும் ஜோதிகாவை விமர்சித்து “குந்தவை” என்கிற இணைய ஐடியில் ஒருவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கோயில் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!கொல்லிக் கட்டையால் தலையை சொறிந்த ஜோதிகா! தொடர் சர்ச்சையில் சிக்கும் சிவகுமார் குடும்பம்!

மேலும் ,கோயிலுக்கு இவ்வளவு செலவு செய்து பெயிண்ட் அடிக்கனுமா.? என்று கேள்விகேட்கத் தெரிந்த ஜோதிகாவுக்கு இந்த விருது விழாவுக்கு செலவு செய்த பணத்தை பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுக்கச் சொல்லி இருக்கலாமே.? என்றும் சிலர் விமர்சனம் வைத்துள்ளனர். நடிகை ஜோதிகா இன்னும் வெளியுலகத்தை முழுமையாக அறியவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு ஒரு விழாவின் போது நடிகர் சிவகுமாருடன் இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றபோது போனை தட்டிவிட்ட சம்பவம் இணையத்தில் சர்ச்சையாக பேசப்பட்டது. இந்நிலையில் அவரது மருமகள் கோயிலை பற்றி பேசியதால் நடிகர் சிவகுமார் குடும்பம் தொடர்ந்து சர்ச்சையை சந்தித்து வருகிறது.

அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி! அதிர்ச்சியில் முதல்வர்!

0

அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி! அதிர்ச்சியில் முதல்வர்!

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளையும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகிறது.அந்த வகையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த கொரோனா பாதிப்பை கட்டுபடுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் தான் கொரோனா தொற்றை தடுக்க உதவும் முக்கிய நடவடிக்கையாக சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் ஒவ்வொரு மாநில அரசும் கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கும் விதமாக பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிராவில் அமைச்சர் ஒருவருக்கே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவம் பொது மக்களிடையேயும் அரசியல் தலைவர்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவும், அம்மாநிலத்தின் வீட்டுவசதி அமைச்சருமான ஜிதேந்திர அவ்ஹாத் பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்
அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்

அங்கு நடந்த பரிசோதனையில் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஒரு வாரகாலம் தன்னுடைய குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அமைச்சரின் பாதுகாவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அதிர்ச்சி அடைந்துள்ளார். எப்படி கொரோனா பரவியது என்பது குறித்து விசாரித்த போது புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத் ஏப்ரல் மாத தொடக்கத்தில் மும்ரா காவல்நிலைய இன்ஸ்பெக்டருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அடுத்த சில நாட்களில் அந்த இன்ஸ்பெக்டருக்கு  கொரோனா பாதிப்பு உறுதியானது.

கோரனாவால் பாதிக்கப்பட்ட இந்த இன்ஸ்பெக்டர் மும்ராவில் தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை விசாரிக்கும் பணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் ஆலோசனை நடத்திய ஜமாஅத் உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லாததால், இவருக்கு எங்கிருந்து கொரோனா வைரஸ் பரவியது என்பதை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

தற்போது அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், அவருடன் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பதையும் கண்டறிந்து வருகின்றனர்.

மேலும் படிக்க : டாக்டர் வில்சனை விவகாரத்தில் கிறிஸ்துவ மத சிக்கல் உள்ளது : சர்ச்சையை கிளப்பும் அரசியல் விமர்சகர்!

மேலும் படிக்க : பத்திரிக்கையாளர் பனிமலருக்கு நிர்வாண படத்தை அனுப்பிய பிரபலம்! சர்ச்சையை கிளப்பும் பனிமலர்

மேலும் படிக்க : ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி.! திமுக முன்னாள் அமைச்சரின் கல்லூரியில் நடக்கும் கெடுபிடி.!!

இன்று ரமலான் நோன்பு தொடக்கம்.! ஊரடங்கால் வீட்டிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்.!!

0

இன்று ரமலான் நோன்பு தொடக்கம்.! ஊரடங்கால் வீட்டிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்.!!

ரம்ஜான் நோன்பு பண்டிகை தொடக்கம் இன்று தொடங்குகிறது. ஊரடங்கு உத்தரவால் இஸ்லாமியர்கள் அவரவர் வீட்டிலேயே தொழுகை நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் ரமலான் பிறை கண்டு நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் வழக்கம். பொதுவாக ஆண்டுதோறும் மசூதிகளுக்கு சென்று அதிகாலையில் தொழுகை நடத்துவார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மசூதிகளில் கூட்டமாக கூடாமல் அரசின் உத்தரவை கடைபிடித்து அவரவர் வீட்டிலேயே தொழுகை நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று அதிகாலையில் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்து ரமலான் தொழுகை நடத்தினர். தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் இருப்போர் வீடுகளில் தனிமனித விலகலுடன் ரமலான் நோன்பை தொழுதனர். மேலும் வருடத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் கூடும் சவுதி மெக்கா மதினா போன்றவை அரேபிய அரசால் மூடப்பட்டுள்ளன.

சவுதியில் உள்ள மெக்கா, மதினா ஆகிய இரு இடங்கள் இஸ்லாமியர்களின் புனித தலங்களாக இருந்து வருகின்றன. இந்த இடங்களில் ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகைகள் நடப்பது வழக்கமான ஒன்று. இதனால் உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் லட்சக்கணக்கில் அங்கு கூடி தொழுவது புண்ணியமாப பார்க்கப்படுகிறது. சவுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுனர். மேலும் இதுவரை சவுதியில் 103 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க உம்ரா பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.

விஜய் ரசிகர் அடித்துக் கொலை.! கொரோனா நிவாரண நிதி பேச்சுவார்த்தையில் இருவர் மோதலால் நடந்த பயங்கர சம்பவம்!

0

விஜய் ரசிகர் அடித்துக் கொலை.! கொரோனா நிவாரண நிதி பேச்சுவார்த்தையில் இருவர் மோதலால் நடந்த பயங்கர சம்பவம்!

கொரோனா நிவாரண நிதி யார் அதிகம் கொடுத்தது என்ற தகராறில் விஜய், ரஜினி ரசிகர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு உயிரிழப்பு.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி சந்திகாப்பான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் யுவராஜ் கூலி தொழில் செய்துவந்தார். விஜய் ரசிகரும் ஆவார். இவரது வீட்டின் அருகே இருக்கும் சமையல் தொழிலாளி ஒருவரின் மகன் தினேஷ்பாபு என்பவர் ரஜினி ரசிகர் ஆவார். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர்.

விஜய் ரசிகர் அடித்துக் கொலை.! கொரோனா நிவாரண நிதி பேச்சுவார்த்தையில் இருவர் மோதலால் நடந்த பயங்கர சம்பவம்!
தினேஷ் பாபு (ரஜினி ரசிகர்)

ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருவரும் வீட்டில் இருந்தபோது, கொரோனா நிவாரண நிதி பற்றி விவாதம் நடத்தியுள்ளனர் குடிபோதையில் இருந்த இருவரும் யார் அதிகம் நிதி கொடுத்தது என்று பேசியபோது வாக்குவாதம் அதிகரித்து சண்டையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்பாபு நண்பன் யுவராஜை பலமாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைப்பார்த்த அவரது உறவினர்கள் மரக்காணம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யுவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து நண்பரை அடித்துக்கொன்ற தினேஷ் பாபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நடிகர்களுக்காக நண்பனையே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய்க்கு புதுச்சேரி முதல்வர் பாராட்டு! கொரோனா பாதிப்பிற்கு உதவுமாறு மற்ற நடிகர்களுக்கு வேண்டுகோள்.!!

0

நடிகர் விஜய்க்கு புதுச்சேரி முதல்வர் பாராட்டு! கொரோனா பாதிப்பிற்கு உதவுமாறு மற்ற நடிகர்களுக்கு வேண்டுகோள்.!!

கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் பெரிதும் பாதித்து வருவதால், நிதியுதவி அளித்த நடிகர் விஜய்க்கு நன்றி கூறியதோடு, மேலும் திரையுலகினர் கொரோனா நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.

இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவால் பலர் அத்தியாவசிய தேவைகளுக்கே சிரமப்பட்டு வருகின்றனர். சமூகத்தில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க சமூக இடைவெளி, வீட்டில் தனிமையுடன் இருத்தல், அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தல், ஆபத்து இருப்பதாக உணர்ந்தால் மருத்துவ மேலும் அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதனால் வேலையின்றி தினக்கூலிகள், ஒப்பந்த பணியாளர்கள், அமைப்புசாரா ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் தினசரி உணவுக்கே தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் சினிமா பிரபலங்களும் பொதுமக்களும் முதல்வர் மற்றும் பிரதமர் நிவாரணநிதிக்கு பணம் உதவியும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.30 கோடி வழங்கி இருந்தார். அந்த நிதியில் 5 லட்சம் புதுவை மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்தார். இதைக்கவனித்த புதுவை முதல்வர் நாராயணசாமி நடிகர் விஜய்க்கு வீடியோ மூலமாக நன்றி கூறியதோடு, மற்ற திரையுலக நடிகர்கள் கொரோனா பாதிப்பு பணிக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மத்திய அரசு தன் முடிவை மாற்ற வேண்டும்! இல்லையேல் போராட்டம் வெடிக்கும்! இந்தியன் வங்கி சம்மேளனம் எச்சரிக்கை!

0

மத்திய அரசு தன் முடிவை மாற்ற வேண்டும்! இல்லையேல் போராட்டம் வெடிக்கும்! இந்தியன் வங்கி சம்மேளனம் எச்சரிக்கை!

மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் இல்லையென்றால் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டியிருக்கும் என்று இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் கூறியதாவது; கொரோனா தொற்று தடுப்பு காரணமாக ஊடரங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முழு அடைப்பு ஏற்பட்டு விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கோடிக்கணக்கான தினக்கூலிகள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். பல லட்சம் தொழிலாளர்கள் சம்பளம் இழப்பு, வேலையிழப்பு போன்ற கொடுமைகளை சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கான உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும் சிறுகுறு தொழில்கள் மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. இதனை மீட்டெடுக்கவும் தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கவும் மத்திய அரசு பலவேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்நிலையை எதிர்கொள்ள நாட்டின் செல்வாதாரங்களை சுரண்டி கொடுத்துள்ள கார்ப்பரேட் நிறுவனம் ஆகியவற்றிடம் கூடுதல் வரி வசூலிக்க வேண்டும். அதைவிடுத்து அரசாங்க ஊழியர்களுக்கும், ஓய்வூதிய நபர்களுக்கும் 18 மாத கால பஞ்சப்படி வெட்டு என்கிற மத்திய அரசின் அறிவிப்பு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது.

ஏற்கனவே இக்கட்டான சூழலில் பணியாற்றி வரும் அரசு பணியாளர்களின் பஞ்சப்படி வெட்டு என்ற மத்திய அரசின் அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். இதனை மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் இறங்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று 27 லட்சத்தை கடந்தது : பதற வைக்கும் பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 27 லட்சத்து 18 ஆயிரத்து 108 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 7 லட்சத்து 45 ஆயிரத்து 694 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

கொரோனா தொற்று 27 லட்சத்தை கடந்தது : பதற வைக்கும் பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 21,700 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 686 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 4,325 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 6,427/269
டெல்லி – 2,248/48
குஜராத் – 2,624/112
தமிழ்நாடு – 1,683/20
தெலுங்கானா – 960/24
கேரளா – 447/03
ராஜஸ்தான் – 1,890/27
உத்தரபிரதேசம் – 1,509/21
ஆந்திர பிரதேசம் – 895/27
கர்நாடகா – 445/17
மத்திய பிரதேசம் – 1,695/83
ஜம்மு & காஷ்மீர் – 407/05
மேற்கு வங்கம் – 456/15
பஞ்சாப் – 277/16
ஹரியானா – 262/03
பீகார் – 148/02
அசாம் – 35/01
சண்டிகர் -27/0
உத்தர்கண்ட் – 46/0
லடாக் – 27/0
அந்தமான் & நிக்கோபார் -17/0
சத்தீஸ்கர் – 36/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 40/01
ஒடிசா – 83/01
பாண்டிச்சேரி – 07/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 49/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா 12/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 752 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

கொரோனா தொற்று 27 லட்சத்தை கடந்தது : பதற வைக்கும் பட்டியல்!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.