Home Blog Page 5676

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறையில் வரும் மாற்றங்கள் என்னென்ன?

0

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறையில் வரும் மாற்றங்கள் என்னென்ன?

இந்தியாவில் தீவிரமாகும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது.  இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவானது 21 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் செயலாற்றி வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்றுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி நிலைமையை உணர்ந்து ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். குறிப்பாக நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த மாத இறுதி வரை தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிதுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு, நாடு முழுக்க உள்ள மாவட்டங்கள் அனைத்தையும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் அறிவித்துள்ளார்.

இது குறித்து இன்று டெல்லியில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதில் ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள், ஹாட்ஸ்பாட் இல்லாத மாவட்டங்கள், பசுமை மண்டல மாவட்டங்கள் என்று நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் வகைப்படுத்தப்படும். கொரோனா வைரஸ் பரவுவது அதிகமாக இருக்கக் கூடிய பகுதிகள், ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் என்ற பட்டியலின் கீழ் வரும்.

கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தும் அது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்க கூடிய பகுதிகள் ஹாட்ஸ்பாட் இல்லாத மாவட்டங்கள் என்ற பிரிவின் கீழ் வரும் என்றும், சுத்தமாக கொரோனா வைரஸ் பாதிப்பே இல்லாத மாவட்டங்கள் பசுமை மண்டலங்கள் என்ற பிரிவின் கீழ் வரும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய சுகாதார துறை அமைச்சரவை செயலாளர் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டிஜிபிக்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட எஸ்பி, மாநகராட்சி கமிஷனர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதில் கிடைக்கப் பெற்ற தகவல்களை கொண்டு நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து ஹாட்ஸ்பாட் இல்லாத பகுதிகளில் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறையில், பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதற்கு வசதியாக நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் எவையெல்லாம் பிரச்சனை இல்லாத இடங்கள் என்று வகைப்படுத்தும் பணிகளை அரசு தற்போது தொடங்கிவிட்டது என்பதை இன்று சுகாதாரத்துறை இணைச் செயலாளர் அளித்த பேட்டி உறுதிப்படுத்தி உள்ளது.

இதன் மூலமாக மத்திய அரசு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதும், மேலும் நாட்டில் ஹாட்ஸ்பாட் இல்லாத பகுதிகளில் தொழில் வளர்ச்சி மீண்டும் துவங்கும் என்பதும் இதன் மூலமாக தெளிவாகிறது.

உதவி தேடி தவித்த தமிழக அரசு : தானாக முன்வந்த தனியார் நிறுவனம்!

0

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை வரும் மே 3ஆம் தேதி வரை நீடித்துள்ளது. மேலும் இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கு காலத்தில் தான் நாம் மிகவும் கவனமாக இருந்து நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகாதாரத்துறையினர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களை கண்டுபிடிப்பதும் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதிலும் அக்கறை காட்டி வருகின்றனர். இந்த நோய் தொற்று பரிசோதனைகளை செய்ய துரித பரிசோதனை கிட்டுகள் இல்லாததால் அந்த வேலைகள் சற்று தாமதமாக நடந்து வந்தன.

இதற்கிடையில் தமிழக முதல்வர் பழனிசாமி பொதுமக்களிடம் சிறிய தொகையாக இருந்தாலும் நிவாரண உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் நோய் அறிகுறிகள் உள்ளவர்களை பரிசோதனை செய்ய தனியார் நிறுவனங்களிடம் துரிதமாக பரிசோதனை செய்யும் ரேப்பிட் கிட்டுகளை வழங்கும்படி கேட்டிருந்தார்.

இந்தநிலையில் டாட்டா நிறுவனம் தமிழக அரசிற்கு 8 கோடி மதிப்பிலான ரேப்பிட் கிட்டுகளை கொடுத்து உதவியுள்ளது. அதில் சுமார் 42,032 எண்ணிக்கையிலான கிட்டுகள் அடங்குகிறது, இதன் மூலம் தமிழக அரசு பரிசோதனை வேலைகளை துரிதப் படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

டாட்டா நிறுவனம் வழங்குவதாக அறிவித்த 8 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக டாடா நிறுவனம் 1500 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு நிவாரணத் தொகையாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தன்னர்வலர்களுக்கு தடை விதித்த தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் க்கு காட்டிய தாராளம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

0

தன்னர்வலர்களுக்கு தடை விதித்த தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் க்கு காட்டிய தாராளம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

உலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்துடன் பொது மக்களுக்கு பல்வேறு  கட்டுபாடுகளையும் விதித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அரசும் இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் வகையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த சமூக விலகல் தான் தற்போதைய தீர்வு என்ற நிலையில் அனைத்து மாநில அரசுகளும் அதை தீவிரமாக கடைபிடித்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலை ஓரளவு கட்டுப்படுத்தியிருந்தாலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் இந்த ஊரடங்கு உத்தரவை இந்த மாத இறுதி வரை நீட்டித்துள்ளன.

இதனையடுத்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்றுடன் முடிவடையும் சூழலில் பொது மக்களுக்கு உரையாற்றிய பாரத பிரதமர் மோடி வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். தமிழக அரசும் இந்த ஊரடங்கு உத்தரவை இந்த மாதம் இறுதி வரை நீட்டித்து அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இத்துடன் பல்வேறு கட்டுபாடுகளையும் பொதுமக்களுக்கு விதித்திருந்தது. குறிப்பாக பெரும்பாலான மாநகரங்களில் வெளியே செல்லும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், தன்னார்வலர்கள் யாரும் தனிப்பட்ட முறையில் மக்களை சந்தித்து நிவாரண உதவி அளிக்க கூடாது என்றும் தடை விதித்துள்ளது.

இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல்கட்சி தலைவர்கள் அனைவரும் அரசுக்கு எதிரான தங்களுடைய விமர்சன கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சியுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இணைந்து நிவாரண உதவிகளை செய்து வருவதாக கூறி எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

மழை,புயல் என எந்த விதமான இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆங்கங்கே தன்னார்வலர்களாக உதவி செய்வது வழக்கமானது தான் என்றாலும் தற்போது தமிழக அரசு தடை விதித்திருந்த சூழலில் நிவாரண பணியில் ஈடுபட்டு வருவது தான் விமர்சனத்திற்குள்ளானது.

இது குறித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் சமூக வலைத்தளமான ட்விட்டரில் #ChennaiCorpRemoveRSS என்ற ஹேஷ் டேக்கில் டிரென்ட் செய்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் இணைந்து தன்னார்வலர்கள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்ததை இவர்களுக்கு சாதமாக மறந்து விமர்சனம் செய்து வருகிறார்களோ என்ற சந்தேகமும் கிளம்புகிறது

தடையை மீறி திமுக பிரமுகர் செய்த காரியம் : அதனால் நேர்ந்த பரிதாபம்!

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருவதால் பிரதமர் மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார். மேலும் இது போன்ற இக்கட்டான தான் நாம் கவனமாக இருக்க வேண்டும், அப்போதுதான் நாம் கொடிய வைரஸுக்கு எதிரான போரில் வெல்ல முடியும் என்று கூறினார்.

இதற்கு முன்னதாக முதல்வர் பழனிசாமி தன்னார்வலர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் நிவாரண பொருட்களை வழங்குவதற்கு கடும் நிபந்தனைகளை விதித்திருந்தது. இவ்வாறு நிவாரண பொருட்கள் வழங்கும் போது வைரஸ் பரவ அதிகம் வாய்ப்புள்ளதால் இவ்வாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இவ்வாறு தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் மீதும் கடும் கட்டுப்பாடுகளை விதிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் திருநெல்வேலி ராதா புரத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஜெகதீஷ் அரசு உத்தரவை மீறி பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். கொரோனா தொற்று அபாயம் உள்ள நிலையில் அரசின் உத்தரவை மீறி ஜெகதீஷ் இவ்வாறு செய்தது பலரை அதிருப்தியில் ஆழ்த்தியது.

இந்த தகவலை அறிந்து நெல்லை திசையன்விளை காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள், நிவாரணப் பொருட்களை பறிமுதல் செய்து ஜெகதீஷையும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். திமுகவை சேர்ந்த அரசியல் பிரமுகர் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 லட்சத்தை நெருங்குகிறது உயிர் கொல்லி கொரோனா : பதற வைக்கும் பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 19 லட்சத்து 98 ஆயிரத்து 111 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 4 லட்சத்து 78 ஆயிரத்து 315 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

20 லட்சத்தை நெருங்குகிறது உயிர் கொல்லி கொரோனா : பதற வைக்கும் பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 10,815 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 353 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 1189 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 2,684/178
டெல்லி – 1561/30
தமிழ்நாடு – 1204/12
தெலுங்கானா – 624/17
கேரளா – 384/03
ராஜஸ்தான் – 897/03
உத்தரபிரதேசம் – 657/05
ஆந்திர பிரதேசம் – 473/09
கர்நாடகா – 260/09
குஜராத் – 617/26
மத்திய பிரதேசம் – 730/50
ஜம்மு & காஷ்மீர் – 270/04
மேற்கு வங்கம் – 190/07
பஞ்சாப் – 176/12
ஹரியானா – 199/03
பீகார் – 66/01
அசாம் – 31/01
சண்டிகர் -21/0
உத்தர்கண்ட் – 35/0
லடாக் – 15/0
அந்தமான் & நிக்கோபார் -11/0
சத்தீஸ்கர் – 31/0
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 32/01
ஒடிசா – 55/01
பாண்டிச்சேரி – 07/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 24/02
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 58 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

சென்னை – 21104
கோயம்புத்தூர் – 126/0
திருப்பூர் – 79/0
திண்டுக்கல் – 65/0
நெல்லை – 56/0
ஈரோடு – 64/01
திருச்சி – 43/0
நாமக்கல் – 45/0
ராணிப்பேட்டை – 39/0
செங்கல்பட்டு – 46/0
மதுரை – 41/01
கரூர் – 41/0
தேனி – 40/01
தூத்துக்குடி – 26/01
விழுப்புரம் – 23/01
கடலூர் – 20/0
சேலம் – 19/0
திருவள்ளூர் – 33/0
திருவாரூர் – 15/0
விருதுநகர் – 17/0
தஞ்சாவூர் – 16/0
நாகப்பட்டினம் – 31/0
திருப்பத்தூர் – 17/0
திருவண்ணாமலை – 12/0
கன்னியாகுமரி – 16/0
காஞ்சிபுரம் – 08/0
சிவகங்கை – 11/0
வேலூர் – 15/01
நீலகிரி – 09/0
தென்காசி – 08/0
கள்ளக்குறிச்சி – 03/0
ராமநாதபுரம் – 07/1
அரியலூர் – 01/0
பெரம்பலூர் – 01/0

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

நாடக காதல் கட்ட பஞ்சாயத்திற்கு துணை போகும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தடை செய்ய கோரிக்கை: தேசிய அளவில் ட்ரெண்டாகும் #BAN_PCR_ACT

0

நாடக காதல் கட்ட பஞ்சாயத்திற்கு துணை போகும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தடை செய்ய கோரிக்கை: தேசிய அளவில் ட்ரெண்டாகும் #BAN_PCR_ACT

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கண்டு அச்சமடைந்து வரும் சூழ்நிலையில் அதை விட கொடுமையான PCR என்ற வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தடை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களை தீண்ட தகாதவர்களாக பார்த்த காலங்களில் அவர்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட PCR என்றழைக்கப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிற்காலத்தில் அந்த சமுதாயத்தை சேர்ந்த சில கும்பல்களால் தவறாக பயன்படுத்தப்பட்டது என தொடர் குற்றசாட்டுகள் எழுந்த வண்ணமே இருந்தது.

இந்நிலையில் அம்பேத்கார் பிறந்த நாளான இன்று தேசிய அளவில் அவருடைய புகழ் பேசி கொண்டிருக்கும் நிலையில் இந்த வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பெரும்பாலான மக்களால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து #BAN_PCR_ACT என்ற ஹேஷ் டேக்கில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பதிவிட்ட கருத்துக்கள் தேசிய அளவில் டிரென்ட் ஆகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் என்பது இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை உடனடியாக இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தரு‍வதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அது 1976 ஆம் ஆண்டில் பி.சி.ஆர். சட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்துமாறு இயற்றபட்டிருந்தது. பழங்குடியின மக்களுக்கு இந்த சட்டமானது பொருந்தவில்லை. இவ்வாறு இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை பாராளுமன்றம் அமைத்தது. பாராளுமன்றம் அமைத்த அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் மிகவும் தாமதமாக 1995 ஆம் ஆண்டில் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.

இந்த சட்டமும் முறையாக பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றசாட்டு பரவலாக எழுந்தது. இதனால் ஏற்கனவே உள்ள வன்கொடுமை  தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்களை செய்து புதிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த திருத்தத்துடன் கூடிய  வன்கொடுமை தடுப்புச் சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி  மாதம் அமலுக்கு வந்தது. இந்த 2015 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான பெரும்பாலான வழக்குகளில் 15 முதல் 16 விழுக்காடு போலி வழக்குகள் என தெரியவந்தது.

இதனையடுத்து அப்பாவி பொது மக்களை இவ்வாறு மதம் அல்லது சாதியின் பெயரால் பாதிப்புக்குள்ளாக்குவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். சாதி ரீதியான கொடுமைகளை நீக்க கொண்டு வரப்பட்ட சட்டம் சாதியை நிலைநிறுத்தவும், தனிப்பட்ட முறையில் குற்றமே செய்யாத அப்பாவி மக்களை பழிவாங்க பயன்படக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

நாடக காதல் கட்ட பஞ்சாயத்திற்கு துணை போகும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தடை செய்ய கோரிக்கை: தேசிய அளவில் ட்ரெண்டாகும் #BAN_PCR_ACT

ஆரம்பத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்காக என்று கூறப்பட்டாலும் விரைவில் இந்த சட்டமானது அந்த மக்களால் தவறாக பயன்படுத்தபட ஆரம்பித்தது. அதாவது அரசியல் அல்லது தனிப்பட்ட முறையில் தனக்கு ஆகாத நபர்களின் மீது வேண்டுமென்றே இந்த வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் கொடுக்கபட்டு குற்றமே செய்யாத நபர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் வழக்கமும், இதை வைத்து கட்டபஞ்சாயத்து செய்து பணம் பறிக்கும் வழக்கமும் தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நடைபெற்று வந்தன. அவ்வப்போது இது குறித்து புகார்களும் பதிவு செய்யப்பட்டன.

குறிப்பாக தலித் மக்களுக்கு எதிராக எதாவது குற்றங்கள் நடைபெறும் சூழலில் அவர்களுக்கு ஆதரவாக பெரும்பாலான ஊடகங்களும்,முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் வரிசை கட்டி கொண்டு குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் அதே தலித் மக்களால் மற்ற சமுதாய மக்களுக்கு எதாவது பிரச்சனை ஏற்பட்டால் இந்த ஊடகங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் அமைதியாகி விடுகின்றனர் என்ற குற்றசாட்டுகள் பரவலாக எழுந்து வந்தன. இந்நிலையில் இவர்களின் துரோகத்தை எல்லாம் தோலுரிக்கும் விதமாக பெரும்பாலான மக்கள் ஆதாரத்துடன் குற்றசாட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில உங்களின் பார்வைக்ககாக.

14 வயதாகும் சிறுவன் பள்ளி மாணவியை கற்பழித்து விட்டு இந்த பி.சி.ஆர் சட்டத்தை பயன்படுத்தி தப்பித்துள்ளான். இந்த அளவிற்கு முட்டாள் தனமாக உள்ள சட்டம் நமக்கு தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

https://twitter.com/Rajesh03429820/status/1249943143971053574

தன்‌ வீட்டை தானே கொளுத்திக்கொண்டு அப்பாவி மீது போலி PCR வழக்கு பதிவு செய்த கொடுமை! என்று வன்கொடுமை தடுப்பு சட்டம் எவ்வாறெல்லாம் தவறாக பயன்படுத்தப்பட்டது என பத்திரிக்கை செய்தி ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/JacksonDurai11/status/1249962052959035392

95% வன்கொடுமை சட்டங்கள் போலியாகவே பதியப்படுவதாக ஆய்வுகளும் தரவுகளும் கூறுகின்றன. ஆக அடுத்தவனை பழிவாங்க பயன்படுத்தப்படும் சட்டமான வன்கொடுமை சட்டம் வாபஸ் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்

கெட்ட வார்த்தை சொல்லி திட்டினாலும் கூட சாதாரண வழக்கு தான் பதியப்படும். ஆனால் சில சாதி பெயரை சொல்லி திட்டினால் ஜாமினில் வரமுடியாத Pcr-ல் வழக்கு பதியப்படுகிறது. கெட்ட வார்த்தைகளை விட மிகப்பெரிய கெட்ட வார்த்தையாக சில சாதிகளை அடையாளப்படுதும் சட்டம் கைவிடப்படவேண்டும் என ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டம் அவர்களின் சுயநலனுக்காக அப்பாவி மக்களை பழிவாங்கும் நோக்கத்தில் பயன்படுத்தபடுவதை ஆதாரத்துடன் குறிப்பிட்டு குற்றம் சாட்டி வருவதால் விரைவில் இதில் சட்ட திருத்தம் செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

0

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. தற்போது இந்தியா இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 10 ஆயிரம் நபர்களுக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் 339 பேர் இந்த வைரஸ் பாதிப்பினால் மரணமடைந்துள்ளனர்.

இவ்வாறு அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து இன்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனையடுத்து வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பிற்கு ஏற்றவாறு சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்த படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏற்கனவே பல மாநிலங்களில் இந்த மாத இறுதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளார். இதனால் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான கடைகள்,வணிக வளாகங்கள்,கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது போக்குவரத்து என அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர்.

அந்த வகையில் தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழகத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் பல்வேறு வகையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுவை பதுக்கி விற்பவர்கள் பல மடங்கு விலையை உயர்த்தி விற்று கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சில மாநிலங்கள் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் மதுக் கடைகளை திறக்க அனுமதித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்திலும் இது போல கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை அரசு திறக்குமா? என குடிமகன்கள் சார்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் அப்படி திறக்க முடியாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குனர் பிர்லோஷ் குமார் கூறியதாவது. தற்போதைய நிலையில் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நீட்டித்து அறிவித்துள்ளதால் மதுக்கடைகளும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும், கடைகளை திறப்பதற்கான வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு

0

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது.  இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவானது 21 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு இன்று வரை நடைமுறையில் இருந்தது.  இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை தவிர்த்த பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. மேலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் செயலாற்றி வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று காலை 10 மணியளவில் உரையாற்றுகிறார் என பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் வெளியானது. பிரதமரின் இந்த உரையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது பற்றிய அறிவிப்பினை பிரதமர் மோடி வெளியிடுவார் என நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

இதனையடுத்து அறிவித்தது போலவே பிரதமர் மோடி முக கவசம் அணிந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.  அதில், ஆரம்பத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பொழுது இந்தியாவில் 500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதனையடுத்து நாட்டில் நோய் தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது.

பொது மக்கள் அளித்த ஒத்துழைப்பால் பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்த்து உள்ளோம்.  ஆரம்பத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவாலேயே என்று சாத்தியப்பட்டது என கூறினார். இதனையடுத்து  இந்த உரையில், நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

19 லட்சத்தை தாண்டிய கொலைகார கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 19 லட்சத்து 24 ஆயிரத்து 663 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 4 லட்சத்து 44 ஆயிரத்து 661 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

19 லட்சத்தை தாண்டிய கொலைகார கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 9,963 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 335 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 979 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / குணமடைந்தவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 2234/217/160
டெல்லி – 1154/27/24
தமிழ்நாடு – 1173/58/11
தெலுங்கானா – 562/100/16
கேரளா – 378/179/03
ராஜஸ்தான் – 897/21/03
உத்தரபிரதேசம் – 483/47/05
ஆந்திர பிரதேசம் – 439/11/07
கர்நாடகா – 247/59/06
குஜராத் – 572/47/26
மத்திய பிரதேசம் – 607/44/43
ஜம்மு & காஷ்மீர் – 270/06/04
மேற்கு வங்கம் – 152/29/07
பஞ்சாப் – 176/14/11
ஹரியானா – 185/29/03
பீகார் – 64/26/01
அசாம் – 31/0/01
சண்டிகர் -21/07/0
உத்தர்கண்ட் – 35/05/0
லடாக் – 15/10/0
அந்தமான் & நிக்கோபார் -11/10/0
சத்தீஸ்கர் – 31/10/0
கோவா – 07/05/0
இமாச்சல பிரதேசம் – 32/13/01
ஒடிசா – 54/12/01
பாண்டிச்சேரி – 07/1/0
மணிப்பூர் – 02/01/0
ஜார்க்கண்ட் – 19/0/02
மிசோரம் – 01/0/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0/0
திரிபுரா – 02/0/0
நாகாலாந்து – 01/0/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 58 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

சென்னை – 205/04
கோயம்புத்தூர் – 126/0
திருப்பூர் – 79/0
திண்டுக்கல் – 56/0
நெல்லை – 56/0
ஈரோடு – 64/01
திருச்சி – 43/0
நாமக்கல் – 45/0
ராணிப்பேட்டை – 38/0
செங்கல்பட்டு – 46/0
மதுரை – 39/01
கரூர் – 41/0
தேனி – 40/01
தூத்துக்குடி – 26/01
விழுப்புரம் – 23/01
கடலூர் – 19/0
சேலம் – 18/0
திருவள்ளூர் – 33/0
திருவாரூர் – 16/0
விருதுநகர் – 17/0
தஞ்சாவூர் – 12/0
நாகப்பட்டினம் – 29/0
திருப்பத்தூர் – 17/0
திருவண்ணாமலை – 12/0
கன்னியாகுமரி – 15/0
காஞ்சிபுரம் – 08/0
சிவகங்கை – 10/0
வேலூர் – 16/01
நீலகிரி – 09/0
தென்காசி – 05/0
கள்ளக்குறிச்சி – 03/0
ராமநாதபுரம் – 05/1
அரியலூர் – 01/0
பெரம்பலூர் – 01/0

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு

0

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழகத்திலும் பொது மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேண்டுகோளை கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா ஆபத்தை புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக பொது மக்கள் பலர் முக கவசம் அணியாமலே வெளியே சென்று வருவதை தொடர்கின்றனர்.

இதனையடுத்து பிரதமர் வேண்டுகோளை மேலும் கட்டயமகாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முதல் மக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.இதனையடுத்து சென்னையிலும் முக கவசம் அணிவது கட்டாயம் என மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை பிறப்பித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

வீடுகளில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தொற்றுநோய் சட்டம் மற்றும் பொதுசுகாதார சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் கீழ் உத்தரவிடப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் வெளியே எவ்வளவு நேரம் நடமாடுகிறார்களோ? அதுவரையில் அவர்கள் முக கவசம் அணிய வேண்டும்.

இந்த உத்தரவை மீறி முக கவசம் அணியாமல் அவர்கள் வெளியே சென்றால், அவர்கள் வெளியில் செல்வதற்காக மாநகராட்சி சார்பாக வழங்கப்படும் அனுமதி பாஸ் ரத்து செய்யப்படும். மேலும் அவர்களுடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, 3 மாதங்கள் சிறை வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் சென்னை, கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 3 மாவட்டங்கள் தான் கொரோனா பாதிப்பில் முறையே 3 இடங்களை வகித்து வருகின்றன. இதனையடுத்து தான் இந்த 3 மாவட்டங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை கட்டுபடுத்த தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இந்த நடைமுறையை பின்பற்றப்படுவது குறித்து அறிவிப்பு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தேசிய அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள டெல்லி, மும்பை போன்ற இடங்களில் முககவசம் அணிவது ஏற்கனவே கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது