Home Blog Page 5677

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்: தமிழக முதல்வர் அறிவிப்பு

0

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்: தமிழக முதல்வர் அறிவிப்பு

உலகின் பல நாடுகளையும் தாக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பானது இந்தியாவையும் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்தது. இதனையடுத்து வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.

தொடர்ந்து மத்திய மாநில அரசுகளும் வைரஸ் பரவலை கட்டுபடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகமாகி வருகிறது.

இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த ஏற்கனவே விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வேண்டும் என அரசியல் தலைவர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் குழு என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தான் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்று, தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 1075 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாளையுடன் 21 நாட்களுக்கான ஊரடங்கு முடிகிறது. கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்துள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது செயல்படுத்தி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மேலும் ஊரடங்கு நீட்டித்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை தற்போது கடைபிடித்து வரும் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து மற்றும் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட மருத்துவ வல்லுநர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதாகக் கூறிய அவர், ஊரடங்கை தளர்த்தினால் நோய் தொற்று அதிகரிக்கும் என்பதால், தற்போது கடைபிடித்து வரும் ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெறப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தற்போதுள்ள ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், எல்லா குடும்ப அட்டை தாரர்களுக்கு வரும் மே மாதத்திற்கான அனைத்து ரேசன் பொருட்களும் விலையில்லாமல் இலவசமாக வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு மற்றும் ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மீண்டும் ரூபாய் 1000 நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பேக்கரிகள் செயல்படலாம் என்றும், ஆனால் பார்சல் முறையில் தான் விற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் பாகுபலியாக மாறிய ஜடேஜா : டிரண்ட் ஆகும் வைரல் வீடியோ!

0

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜா. நட்சத்திர ஆட்டக்காரரான ஜடேஜா ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜபுத்திர குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், பொதுமக்கள் என யாரும் அத்தியாவசிய காரணங்களை தவிர வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வீட்டில் இருக்கும்போது பொழுது போக்காக செய்ததை வீடியோ எடுத்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாகுபலி படத்தின் பாட்டிருக்கு அவர் தனது வாளை எடுத்து சுழற்றுவது போல் உள்ளது.

ரவீந்திர ஜடேஜா ராஜபுத்திர குடும்பத்தில் பிறந்ததால் அவர் வாளை எடுத்து சுழற்றுவது அவர்களுக்கு பெருமையான ஒன்றாகும். இந்த வீடியோவை அனைவரும் பகிர்ந்து வருவதால் தற்போது இணையதளத்தில் வேகமாக டிரண்டாகி வருகிறது.

ரயில் மேல் ஓடும் லாரிகள்! காரணத்தோடு அமைச்சர் வெளியிட்ட வீடியோவால் குவியும் பாராட்டுக்கள்

0

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து நாட்டின் சர்வதேச எல்லைகள், மாநில எல்லைகள், மாவட்டங்கள் உட்பட அனைத்தையும் மூடி போக்குவரத்து முடக்கப்பட்டது. இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டது.

அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தடை ஏற்பட்டதால் விலைவாசி கடுமையாக உயர்ந்து பொதுமக்களை கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவ்வாறான சூழ்நிலையை சமாளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசித்து முடிவு எடுத்தது.

அதன்படி அத்தியாவசிய பொருட்களை லாரிகளில் ஏற்றி, அந்த லாரிகளை சரக்கு ரயில்களில் ஏற்றி அதனை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. இந்த முயற்சியால் நேர விரயம் மற்றும் பல நடைமுறை சிக்கல்களை எளிதில் களைந்து பொருட்களை காலதாமதமின்றி கொண்டு செல்லலாம்.

இவ்வாறு லாரிகளில் ஏற்றப்பட்ட பொருட்கள் ரயில் மூலம் வெளியூர்களுக்கு பயணப்படுகிறது மீண்டும் அதனை இறக்கி இயற்ற வேண்டிய அவசியம் இல்லை, அந்த லாரிகளை மூலம் உரிய இடத்திற்கு எளிதில் கொண்டு செல்லப்படும். இந்த காரணங்களை குறிப்பிட்டு அதன் காணொளியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

18 லட்சத்தை கடந்து கோர தாண்டவமாடும் கொரோனா : பதற வைக்கும் பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 18 லட்சத்து 52 ஆயிரத்து 359 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 4 லட்சத்து 23 ஆயிரத்து 311 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

18 லட்சத்தை கடந்து கோர தாண்டவமாடும் கொரோனா : பதற வைக்கும் பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 8,447 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 273 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 764 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / குணமடைந்தவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 1895/208/127
டெல்லி – 1154/25/24
தமிழ்நாடு – 1075/44/11
தெலுங்கானா – 504/43/09
கேரளா – 374/142/02
ராஜஸ்தான் – 796/03/21
உத்தரபிரதேசம் – 480/45/05
ஆந்திர பிரதேசம் – 420/11/07
கர்நாடகா – 232/37/06
குஜராத் – 516/44/24
மத்திய பிரதேசம் -564/36/0
ஜம்மு & காஷ்மீர் – 245/06/04
மேற்கு வங்கம் – 134/19/05
பஞ்சாப் – 170/05/11
ஹரியானா – 185/29/03
பீகார் – 64/19/01
அசாம் – 29/0/01
சண்டிகர் -19/07/0
உத்தர்கண்ட் – 35/05/0
லடாக் – 15/10/0
அந்தமான் & நிக்கோபார் -11/0/0
சத்தீஸ்கர் – 25/09/0
கோவா – 7/01/0
இமாச்சல பிரதேசம் – 32/06/01
ஒடிசா – 48/02/01
பாண்டிச்சேரி – 07/1/0
மணிப்பூர் – 02/01/0
ஜார்க்கண்ட் – 17/0/01
மிசோரம் – 01/0/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0/0
திரிபுரா – 02/0/0

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 44 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / குணமடைந்தவர்கள் / இறந்தவர்கள்);

சென்னை – 199/19/04
கோயம்புத்தூர் – 119/05/0
திண்டுக்கல் – 56/0/0
நெல்லை – 56/0/0
ஈரோடு – 64/0/01
திருச்சி – 43/01/0
நாமக்கல் – 41
ராணிப்பேட்டை – 39/03/0
செங்கல்பட்டு – 43/01/0
மதுரை – 25/03/01
கரூர் – 25/0/0
தேனி – 41/01/01
தூத்துக்குடி – 24/0/01
விழுப்புரம் – 23/0/01
திருப்பூர் – 60/0/0
கடலூர் – 19/0/0
சேலம் – 17/01/0
திருவள்ளூர் – 29/0/0
திருவாரூர் – 13/0/0
விருதுநகர் – 11/0/0
தஞ்சாவூர் – 11/0/0
நாகப்பட்டினம் – 24/0/0
திருப்பத்தூர் – 16/0/0
திருவண்ணாமலை – 11/01/0
கன்னியாகுமரி – 15/01/0
காஞ்சிபுரம் – 08/01/0
சிவகங்கை – 06/0/0
வேலூர் – 12/0/01
நீலகிரி – 09/0/0
தென்காசி – 05/0/0
கள்ளக்குறிச்சி – 03/0/0
ராமநாதபுரம் – 02/0/1
அரியலூர் – 01/0/0
பெரம்பலூர் – 01/0/0

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி கடைபிடிக்க சொல்லும் பிச்சைக்காரர் : வீடியோவை பார்த்து பாராட்டும் நெட்டிசன்கள்!

0

உலகமெங்கும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருவதால் இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் வெளியில் வரவேண்டாம் என்று பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களும் உத்தரவிட்டனர்.

பொது இடங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும்போது மக்கள் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுத்தப்பட்டது. பொது வெளியில் சென்று வந்த பிறகு கைகளை 20 வினாடிகள் சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆதரவற்ற ஒருவர் சாலை ஓரமாக படுத்து இருந்ததாக தெரிகிறது. அவரைப் பார்த்த காவல்துறையினர் உணவு பொட்டலமும் நீரும் கொண்டு வந்தனர்.

இதை பார்த்த அந்த நபர் தன் அருகில் யாரும் வரவேண்டாம் உணவு பொட்டலத்தை சமூக இடைவெளி விட்டு வைக்குமாறு கூறுகிறார். அவ்வாறு உணவு பொட்டத்தை வைக்க அருகில் வரும்போது தன் சட்டையால் முகத்தை மூடிக்கொண்டு வைத்துவிட்டு செல்ல சொல்கிறார்.

சம்பந்தப்பட்ட காவல் துறையினரும் உணவு பொட்டலத்தை வைத்து விட்டு அங்கிருந்து செல்கின்றனர், அந்த உணவை எடுத்து தன் அருகில் எடுத்து கொள்கிறார் பிச்சைக்காரர். இதனை பார்த்த மக்கள் காவல்துறையினரின் மனிதாபிமானத்தையும் பிச்சைக்காரரின் சமூக அக்கரையும் பாராட்டி வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

18 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா நோய் தொற்று : அதிர்ச்சியூட்டும் பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 17 லட்சத்து 79 ஆயிரத்து 099 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 4 லட்சத்து 2 ஆயிரத்து 709 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

18 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா நோய் தொற்று : அதிர்ச்சியூட்டும் பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 7,703 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 242 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 653 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / குணமடைந்தவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 1574/188/110
தமிழ்நாடு – 969/44/10
டெல்லி – 903/25/14
தெலுங்கானா – 504/43/09
கேரளா – 364/123/02
ராஜஸ்தான் – 553/21/03
உத்தரபிரதேசம் – 433/32/04
ஆந்திர பிரதேசம் – 381/11/06
கர்நாடகா – 214/37/06
குஜராத் – 308/31/19
மத்திய பிரதேசம் -443/0/33
ஜம்மு & காஷ்மீர் – 207/06/04
மேற்கு வங்கம் – 126/16/05
பஞ்சாப் – 132/05/11
ஹரியானா – 177/29/03
பீகார் – 60/0/01
அசாம் – 29/0/01
சண்டிகர் -18/07/0
உத்தர்கண்ட் – 35/05/0
லடாக் – 15/10/0
அந்தமான் & நிக்கோபார் -11/0/0
சத்தீஸ்கர் – 18/09/0
கோவா – 7/01/0
இமாச்சல பிரதேசம் – 28/06/01
ஒடிசா – 48/02/01
பாண்டிச்சேரி – 07/1/0
மணிப்பூர் – 02/01/0
ஜார்க்கண்ட் – 17/0/01
மிசோரம் – 01/0/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0/0
திரிபுரா – 02/0/0

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 44 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை;

சென்னை – 182
கோயம்புத்தூர் – 97
திண்டுக்கல் – 55
நெல்லை – 66
ஈரோடு – 60
திருச்சி – 39
நாமக்கல் – 41
ராணிப்பேட்டை – 36
செங்கல்பட்டு – 41
மதுரை – 25
கரூர் – 23
தேனி – 40
தூத்துக்குடி – 24
விழுப்புரம் – 23
திருப்பூர் – 26
கடலூர் – 15
சேலம் – 14
திருவள்ளூர் – 29
திருவாரூர் – 13
விருதுநகர் – 11
தஞ்சாவூர் – 11
நாகப்பட்டினம் – 24
திருப்பத்தூர் – 16
திருவண்ணாமலை – 11
கன்னியாகுமரி – 15
காஞ்சிபுரம் – 06
சிவகங்கை – 06
வேலூர் – 11
நீலகிரி – 07
தென்காசி – 03
கள்ளக்குறிச்சி – 03
ராமநாதபுரம் – 02
அரியலூர் – 01
பெரம்பலூர் – 01

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் இன்ஸ்பெக்டர் செய்த அசிங்கம்! தட்டி கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி

0

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்று முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த உத்தரவை மீறி காரணமின்றி பொழுதுபோக்க வருபவர்களை மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பல ஊர்களில் சுற்றித் திரிந்தவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்வது அல்லது அபராதம் விதிப்பது என்று காவல்துறை நடவடிக்கை எடுத்துவந்தது.

இதற்கிடையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த இளைஞர் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அதில் ஊரடங்கு அமலில் உள்ள இந்த சமயத்தில் அப்பகுதியின் காவல் ஆய்வாளர் சுதாகர் பொதுமக்களிடம் லஞ்சம் வசூலித்து வந்ததாக கூறியிருந்தார்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வசூலிப்பதாகவும், தர மறுப்பவர்கள் மீது வழக்குப்பதிந்து வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அப்பாவி மக்கள் புகார் அளிக்க வந்தால் அவர்களிடம் 10,000 ரூபாய் கேட்பதாகவும். பணம் கிடைத்தவுடன் அவர்களை விரட்டியடிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதனால் அப்பகுதி ஆய்வாளரை 10,000 ரூபாய் காவல் அதிகாரி என்றும், கிரிமினல் ஆட்களுடன் தொடர்பில் இருப்பதால் ஜில்லா என்றும் அழைக்கப் படுவதாக கூறப்பட்டுள்ளது. அதோடு வரும் ஏப்ரல் 18ஆம் தேதி அனைத்து கட்சியின் சார்பாக இதனை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பதிவை பார்த்து ஆத்திரமுற்ற சின்னசேலம் பகுதி காவல் ஆய்வாளர் சுதாகர் அவரை அவரது வீட்டிலேயே விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் அடித்ததாக தெரிகிறது. அடி தாங்காமல் கூச்சலிட்ட சக்திவேலின் குரலை கேட்டு அங்கு வந்த ஊர்க்காரர்கள் காவல் ஆய்வாளரை தடுத்துள்ளனர்.

இதனால் வேறு வழியின்றி ஆய்வாளர் சுதாகர் சக்திவேலை வண்டியில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த இளைஞரை புகார் இன்றி அடித்து துன்புறுத்தியதாக அவரின் பெற்றோர்களும், அந்த ஊர் மக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து பொது மக்களை காக்க காவல்துறையினர் இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் வேலையில், இது போன்ற ஆய்வாளரின் செயலால் மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஐயம் வெய்ட்டிங்..!! எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்! -நரேந்திரமோடி பேச்சு

0

ஐயம் வெய்ட்டிங்..!! எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்! -நரேந்திரமோடி பேச்சு

கொரோனா பரவுவதை தடுக்க இந்தியாவில் கடந்த மாதல் 25 ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதுவரை 17 நாட்கள் முடிந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமானதே தவிர குறைந்ததாக தெரியவில்லை.

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. இந்த ஆபத்தான சூழலில் மக்களின் விருப்பத்திற்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டால் மிகப்பெரிய உயிர்சேதத்தை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

இந்த சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நரேந்திரமோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆன்லைன் மூலமாக ஆலோசனை நடத்தினார். இதன் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமல் செய்யப்பட்ட 21 நாட்கள் வருகிற செவ்வாய் கிழமை முடியவது, குறித்து முதல்வர்களிடம் கருத்துக்களை கேட்டார். பின்னர் அரசியல் மாற்றுக் கருத்துகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

மேலும், தான் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் பணியில் இருக்கிறேன். என்னை எப்போது வேண்டுமானாலும் மாநில முதல்வர்கள் தொடர்பு கொண்டு பேசலாம், கருத்துக்களை பரிமாறலாம் என்றும் கூறியுள்ளார். நாம் ஒருவருக்கொருவர் தோளோடு தோள் கொடுத்து ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பலாயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் 1 லட்சம் பேர் இறந்துள்ளனர். 17 லட்சம் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து இன்னும் சில தினங்களில் முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கோ நாட்டில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ்! மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் பலி!

0

காங்கோ நாட்டில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ்! மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் பலி!

உலக நாடுகள் கொரோனா பாதிப்பில் சிக்கி தவித்துவரும் நிலையில் காங்கோ நாட்டில் மீண்டும் எபோலா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கொரோனா பாதிப்பு காரணத்தால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் அங்கு குறைந்துள்ள காரணத்தால் நாளை (ஞாயிறு) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் அங்கு எபோலா வைரஸ் பரவல் பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

காங்கோவின் கிழக்கு பகுதியான பெணி நகரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர் கடந்த 17 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார். இதன் பின்னர் தொடர் பரிசோதனையில் பேரில் அவருக்கு எபோலா வைரஸ் இருந்தது உறுதியானுது. கிட்டத்தட்ட 50 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த மார்ச் 27 ஆம் தேதி அவருக்கு எபோலா வைரஸ் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்த அரசு நடவடிக்கை எடுத்த சூழலில் எபோலா வைரஸ் பாதிப்பு அந்நாட்டு மக்களை அச்சமடைய வைத்துள்ளது. ஏனெனில் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கொரோனாவின் தாக்கம் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் சமயத்தில் எபோலா வைரஸ் பாதிப்பு தலைதூக்கினால் என்னாவது என்று பலரும் அச்சமடைந்துள்ளனர்.

காங்கோவில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக 200 க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை போலவே எபோலாவும் உயிரை கொல்லும் ஆபத்தான நோய். காய்ச்சல், வாந்தி , சளி மற்றும் மனிதர்களின் வியர்வை மூலமும் மற்றவருக்கு பரவும் தன்மை கொண்டதாகும்.

2020 டிசம்பரில் பேரழிவு இருப்பதாக அதிரவைக்கும் சிறுவன்! கொரோனாவை தொடர்ந்து அடுத்த கணிப்பு! எது உண்மை.?

0

2020 டிசம்பரில் பேரழிவு இருப்பதாக அதிரவைக்கும் சிறுவன்! கொரோனாவை தொடர்ந்து அடுத்த கணிப்பு! எது உண்மை.?

உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவை விட வருகிற டிசம்பர் மாதல் அதிக பாதிப்பு ஏற்படும் என்று அபிக்யா என்கிற சிறுவன் யூடியூப் மூலம் தான் கணித்ததை கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி சிறுவன் அபிக்யா. ஆன்மீகம், ஜோசியம், இயற்கை கணிப்பு, வானவியல் சாஸ்திரம் போன்றவற்றில் திறன் பெற்றவராக உள்ளார். இவருடைய துல்லியமான கணிப்புகளின் மூலம் சில விருதுகளும் அபிக்யா பெற்றதாக கூறப்படுகிறது. இணையத்தின் மூலம் தனது கணிப்புகளையும், கருத்தையும் கூறுகிறார்.

கடந்த 2012 ஆண்டில் இருந்து பேரழிவு மற்றும் இயற்கை சார்ந்த கணிப்புகளை தனி யூடியூப்  கணக்கின் மூலம் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இவரது கருத்துகள் ஆங்கிலத்தின் மூலம் கூறப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள பலரும் இவரின் கணிப்பை கவனிக்க தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோவில், 2019 ஆகஸ்ட் முதல் 2020 ஏப்ரல் மாதம் வரை ஒரு மிகப்பெரும் பாதிப்பு இருக்கப்போவதாக குறிப்பிட்டார். அதனால் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பாதிக்கும் என்று கூறினார்.

சிறுவன் அபிக்யா சொன்னது போலவே கொரோனா பாதிப்பால் உலகநாடுகள் போக்குவரத்து மற்றும் விமான சேவைகளை தடைசெய்ய வேண்டிய சூழல் உண்டானது. பணக்கார நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும் என்று கூறினார். அதேபோல் வல்லரசு நாடான அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் இத்தாலி, ஸ்பெயின், பிரான்சு, ஜெர்மன், இங்கிலாந்து போன்ற நாடுகளும் பல்வேறு பாதிப்பை சந்தித்து வருகிறது.

https://youtu.be/jynGnm5o_SE (சிறுவன் கணிப்பு வீடியோ)

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குறித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி உலகிற்கே மிகப்பெரிய அழிவு காத்துக் கொண்டிருக்கிறது என்று எச்சரித்துள்ளார். இந்த அழிவானது அடித்த ஆண்டின் மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்றும் இது கொரோனாவை விட கொடியதாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆகவே உடல் ஆரோக்கியத்தை பேணுமாறு கோரிக்கையும் வைத்துள்ளார். ஏற்கனவே சிறுவன் அபிக்யா சொன்ன சில கணிப்புகள் நடந்துள்ள நிலையில் அவரது கணிப்பு பலரையும் கவனிக்க வைத்துள்ளது.