Home Blog Page 5678

மருத்துவ அவசரம் என்று கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றவர் அங்கேயே அடைப்பு! நாகையில் ரணகளத்திலும் கிளுகிளுப்பு..!!

0

மருத்துவ அவசரம் என்று கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றவர் அங்கேயே அடைப்பு! நாகையில் ரணகளத்திலும் கிளுகிளுப்பு..!!

காரில் மருத்துவ அவசரம் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு கள்ளக்காதலி வீட்டுக்கு செல்ல முயன்ற நபர் வீட்டிலேயே அவர் நினைத்த இடத்திலே தனிமைபடுத்தப்பட்டார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா. கடந்த நாட்களில் தனது கணவரைப் பிரிந்து மலேசியாவில் ஓட்டல் வேலைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த அப்துல் அகமது மைதீன் என்பவருடன் அமுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தவறான உறவை அறிந்த பிறகு மைதீனின் மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் மலேசியாவில் இருந்து வேலை முடித்து தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் இருந்த தனது வீட்டில் அமுதா தங்கியிருந்தார். இதையடுத்து தனது கள்ளக்காதலியை பார்க்காமல் ராமநாதபுரத்தில் தவித்து வந்த அப்துல் அகமது ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏக்கத்துடன் எப்படி சந்திப்பது என்று யோசித்துள்ளார். பின்னர் கள்ளக்காதலியை சந்திக்க தனது காரில் மருத்துவ அவசரம் என்ற ஸ்டிக்கரை ஒட்டி சொகுசுகாரில் அமுதா வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

வாகனத்தைப் பார்த்த சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அமுதாவின் வீட்டில் சென்று சோதனை நடத்தினர். அங்கு அமுதா அவரது மகன் மற்றும் மகள்கள் ஆகிய நான்கு பேர் இருந்தனர். வாகன ஸ்டிக்கர் குறித்து விசாரித்தபோது ராமநாதபுரத்தில் இருந்து கள்ளக்காதலியை பார்க்க நாகை வரவே மருத்துவ அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டியதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அப்துல் அகமது மைதீன், அமுதா அவரின் குழந்தைகள் உட்பட 6 பேரும் அதே வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் வீட்டில் முடங்கி அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமலும், சமூக இடைவெளியில் தவித்து வரும் சூழலில் கள்ளக்காதலியை பார்க்க ஸ்டிக்கர் ஒட்டி வந்த சம்பவம் பலருக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது. இந்த இக்கட்டான ரணகளத்திலும் கிளுகிளுப்பு கேட்கிறதா என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

மக்களுக்காக களத்தில் இறங்கிய சச்சின்! 5 ஆயிரம் பேருக்கு ஒருமாத அத்தியாவசிய நிவாரண உதவி!

0

மக்களுக்காக களத்தில் இறங்கிய சச்சின்! 5 ஆயிரம் பேருக்கு ஒருமாத அத்தியாவசிய நிவாரண உதவி!

கொரோனோ பாதிப்பால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத மக்களுக்கு உதவும் வகையில் 5 ஆயிரம் மக்களுக்கு ஒரு மாத உணவுப் பொருட்களை வழங்குவதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் வீட்டில் முடங்கிய மக்கள் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய கஷ்டபடுகின்றனர். அந்தந்த மாநில அரசுகளும் முடிந்தவரை மருத்துவம், பாதுகாப்பு, விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை, ஊரடங்கு கண்காணிப்பு, உணவுப் பொருள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நிவாரண நிதியையும் தனியார் நிறுவனங்கள் மற்றும் சினிமா, விளையாட்டு பிரபலங்கள் அளித்து வந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கொரோனா பாதிப்பில் சிக்கிய மக்களுக்கு உதவிபுரயி முன்வந்துள்ளார்.

மும்பையில் உள்ள சிவாஜி நகர் மற்றும் கோவந்தி பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் ஏழை மக்களுக்கு ஒருமாத கால அத்தியாவசிய உணவுப் பொருட்களை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வழங்க சச்சின் முடிவு செய்துள்ளார். இதன்மூலம் அப்பகுதி மக்களின் அடிப்படை சிக்கல் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா களப்பணியில் உயிரிக்க நேர்ந்தால் 10 லட்சம் நிவாரணம்! -புதுவை முதல்வர் அறிவிப்பு

0

கொரோனா களப்பணியில் உயிரிக்க நேர்ந்தால் 10 லட்சம் நிவாரணம்! -புதுவை முதல்வர் அறிவிப்பு

கொரோனா களப்பணியில் வேலை செய்து வருபவர்கள் உயிரிழக்க நேரிட்டால் பாதிப்பின் தன்மைக்கேற்ப 2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படும்.

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த தகவல்களை அரசு வெளியிட்டு வருகிறது. புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை 6 பேர், மாஹேவில் ஒருவர் உட்பட மொத்தம் 7 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாதித்த பகுதிகள் சீல் வைத்துள்ளனர்.
அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அரசே வழங்கி வருகிறது.

மேலும் புதுவை மருத்துவர்கள் இதுவரை 8 லட்சம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியுள்ளனர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய்துறை, மின்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தொடர்ந்து பணிசெய்து வருகின்றனர். இதனால்தான் புதுச்சேரியில் கொரோனா அதிகம் பரவாமல் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பை தடுக்க இரவு, பகலாக உழைத்து வரும் பணியாளர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழக்க நேரிட்டால் முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தன்மைக்கு ஏற்ப ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழகம் ஆலோசனை செய்து வருகிறுது. ஒடிசா, பஞ்சாப், கர்நாடகா போன்ற மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்துள்ளது. பிரதமர் மோடி இதுகுறித்து நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பின்னரே அமைச்சரவை ஆலோசனையின் படி ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முடிவு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

17 லட்சத்தை நெருங்கிறது கொரோனா நோய் தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 16 லட்சத்து 99 ஆயிரத்து 565 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 3 லட்சத்து 76 ஆயிரத்து 326 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது, உலக அளவில் இந்த நோயால் பலியானவர்களின் எண்ணிக்கையில் பாதியை தொடுகிறது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

17 லட்சத்தை நெருங்கிறது கொரோனா நோய் தொற்று : பதற வைக்கும் பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 6,761 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 206 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 515 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / குணமடைந்தவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 1364/125/97
தமிழ்நாடு – 911/21/09
டெல்லி – 898/25/13
தெலுங்கானா – 471/45/11
கேரளா – 357/92/02
ராஜஸ்தான் – 463/42/07
உத்தரபிரதேசம் – 410/31/04
ஆந்திர பிரதேசம் – 363/10/04
கர்நாடகா – 197/30/06
குஜராத் -198/26/17
மத்திய பிரதேசம் -259/0/16
ஜம்மு & காஷ்மீர் -184/06/04
மேற்கு வங்கம் – 101/16/05
பஞ்சாப் – 130/18/10
ஹரியானா – 156/18/02
பீகார் – 58/17/01
அசாம் – 29/0/0
சண்டிகர் -18/07/0
உத்தர்கண்ட் – 35/5/0
லடாக் – 15/11/0
அந்தமான் & நிக்கோபார் -11/0/0
சத்தீஸ்கர் – 18/09/0
கோவா – 7/01/0
இமாச்சல பிரதேசம் – 28/02/01
ஒடிசா – 44/02/01
பாண்டிச்சேரி – 6/1/0
மணிப்பூர் – 01/01/0
ஜார்க்கண்ட் – 13/0/0
மிசோரம் – 01/0/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0/0
திரிபுரா – 01/0/0

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 21 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(புதிதாக தொற்று ஏற்பட்டோர்/ மொத்த எண்ணிக்கை);

சென்னை – 09/172
கோயம்புத்தூர் – 26/86
திண்டுக்கல் – 08/54
நெல்லை – 0/56
ஈரோடு – 02/60
திருச்சி – 0/36
நாமக்கல் – 0/41
ராணிப்பேட்டை – 9/36
செங்கல்பட்டு – 12/40
மதுரை – 0/25
கரூர் – 0/23
தேனி – 0/40
தூத்துக்குடி – 02/24
விழுப்புரம் – 03/23
திருப்பூர் – 0/26
கடலூர் – 01/14
சேலம் – 0/14
திருவள்ளூர் – 0/13
திருவாரூர் – 0/13
விருதுநகர் – 0/11
தஞ்சாவூர் – 0/11
நாகப்பட்டினம் – 0/12
திருப்பத்தூர் – 0/16
திருவண்ணாமலை – 01/10
கன்னியாகுமரி – 01/25
காஞ்சிபுரம் – 0/06
சிவகங்கை – 0/06
வேலூர் – 0/11
நீலகிரி – 03/07
தென்காசி – 0/03
கள்ளக்குறிச்சி – 0/03
ராமநாதபுரம் – 0/02
அரியலூர் – 0/01
பெரம்பலூர் – 0/01

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

ரேசன் கடைகளில் ரூ.500 க்கு மளிகை பொருட்கள்! தமிழக அரசு நடவடிக்கை!

0

ரேசன் கடைகளில் ரூ.500 க்கு மளிகை பொருட்கள்! தமிழக அரசு நடவடிக்கை!

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் ஊரடங்கு இன்னொரு பக்கம் வேலை, வருமானம் இல்லாத காரணத்தால் அவசிய தேவைகளை கூட வாங்குவது சிரமமாக உள்ளது. மேலும் மளிகை கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் ஆங்காங்கே சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத சூழல் உருவாகி கொரோனா தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக தமிழக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசே நியாயவிலைக் கடைகளில் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

ரேசன் கடைகளில் ரூ.500 க்கு மளிகை பொருட்கள்! தமிழக அரசு நடவடிக்கை!

பொதுமக்களின் அத்தியாவசிய சிக்கலை தீர்க்கும் வகையில் ரூ.500 க்கு 19 மளிகை பொருட்களை ரேசன் கடைகளின் மூலம் வழங்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சீரகம் உள்ளிட்ட 19 வகையான பொருட்களை வழங்க தமிழகஅரசு திட்டமிட்டுள்ளது. முதலில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக அத்தியாவசிய பொருட்கள் பிரித்து மண்டலவாரியான கூட்டுறவு பண்டக சாலைக்கு அனுப்பப்படும். அங்கிருந்து அந்தந்த ஊர் ரேசன் கடைகளுக்கு அனுப்பி மக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால் மக்கள் அத்தியாவசிய தேவையிட் காரணத்தால் மளிகை கடைகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அரசு இத்தகைய வழிமுறையை மேற்கொண்டு வருகிறது. விரைவில் ரேசன் கடைகளில் மளிகைப் பொருட்கள் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது கிடைக்காத விரக்தியில் 10 பேர் மரணம்! கொரோனாவை தாண்டும் மதுபோதை உயிரிழப்பு!

0

மது கிடைக்காத விரக்தியில் 10 பேர் மரணம்! கொரோனாவை தாண்டும் மதுபோதை உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளுக்கு மூடினர். இதில் மதுக்கடையும் ஒன்றாகும். மது இல்லாத காரணத்தால் அதற்கு அடிமையான பலர் மரணித்தி வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறுது. மதுக்கடையை பூட்டிய கடைசிநாளில் பாட்டிர்களை வாங்கி குவித்ததோடு பிளாக்கில் சிலர் விற்று வந்த நிலையில் அவர்களையும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும் காவல்துறை கைது செய்து வருகிறது.

இந்நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் குடிமகன்கள் பலர் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். குடிக்கு அடிமையான சிலர் மதுவுக்கு பதிலாக மற்றதை குடித்து இறந்த சம்பவங்களும் அரங்கேறியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆம் தேதி குளிர்பானத்தில் ஷேவிங் லோசனை கலந்து குடித்தனர். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இரண்டு நாட்களியேலே பலியாகினர். மதுவுக்கு அடிமையானதால் இவர்களை உயிரிழக்க நேரிட்டது.

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுவுக்கு அடிமையாகி மதுகிடைக்காமல் மரக் கட்டைகளுக்கு பூசும் வார்னிஷை கலந்து குடித்த மூன்று பேர் உயிரிழந்தனர். இவர்களை அடுத்து அறந்தாங்கியில் சரக்கு கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் இதுவரை மதுவுக்கு அடிமையானவர்கள் மது கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் 10 பேர் இறந்துள்ளனர். சில இடங்களில் மதுக்கடைகளின் சுவரை உடைத்து அதன்மூலம் சரக்கு பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவங்களும் நடந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இறந்த நபர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. மது கிடைக்காத விரக்தியில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. மேலும் உத்தரவு நீட்டிக்கப்பட்டால் மதுக்கடை மூடுவதும் நீட்டிக்கபட்டு இன்னும் பலர் உயிரிழக்க நேரலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மதுப்பிரியர்கள் கதிகலங்கிப்போய் உள்ளனர்.

உலகளவில் 1 லட்சம் உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா! ஊரடங்கு வாழ்க்கை நீடிக்குமா.?

0

உலகளவில் 1 லட்சம் உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா! ஊரடங்கு வாழ்க்கை நீடிக்குமா.?

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து கடந்துள்ளது. சீனாவின் வூகான் பகுதியில் உருவான கொரோனா என்னும் தொற்று வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவியதோடு பலாயிரம் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகள் உச்சகட்ட பாதிப்பை சந்தித்து வருகின்றன.

அமெரிக்காவில் 4.75 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அங்கு 17,820 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயின் நாட்டில் 1.57 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,969 பேர் இறந்துள்ளனர். இத்தாலி நாட்டில் 1.43 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் உலகில் அதிகபட்ச உயிரிழப்பாக 18,279 பேர் இதுவரை இறந்துள்ளனர். ஜெர்மனியில் 1.19 லட்சம் பேர் பாதிப்பான நிலையில் அங்கு 2,567 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

மேலும் இங்கிலாந்து மற்றும் பிரான்சு போன்ற நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு தொடர்ந்த அமலில் இருந்து வருகிறது. இந்தியாவில் அடுத்த 14 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்களின் குழு தகவலை வெளியிட்டுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவு இன்னும் வெளியாகவில்லை.

மலேசியாவில் கொரோனா பாதிப்ப தடுக்க ஏப்ரல் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு அமலில் உள்ளது. இதேபோல் ஒடிசாவிலும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பை அம்மாநில முதல்வர் நவீன்பட்நாயக் நேற்று முன்பு அறிவித்தார். விரைவில் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா அச்சத்தில் உள்ள மக்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

0

கொரோனா அச்சத்தில் உள்ள மக்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே மிதமான மழை மற்றும் மணிக்கு 30 – 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொது மக்கள் கடும் அச்சத்துடன் உள்ளனர். அதாவது நாளுக்கு நாள் கொரோனாவின் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகமாகி வருகிறது. அதனால் ஆரம்பத்தில் இருந்ததைவிட தற்போது சமூக விலகலையும், ஊரடங்கையும் மிக மிக தீவிரமாக அச்சத்துடன் கடைபிடித்து வருகிறார்கள். கொரோனா பயத்துடன் மக்கள் கடுமையான வெப்பத்திற்கும் ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் கூறியுள்ளதாவது வரும் ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் தேதிகள் தொடங்கி அடுத்து வரும் 4 நாட்களுக்கு நல்ல மழை பெய்யவுள்ளதாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து 2 தினங்களுக்கு முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பாகவும் மழை சம்பந்தமான தகவல் வெளியானது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக நீலகிரி, தேனி, கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய போவதாகவும், வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவித்துருந்தது.

இந்நிலையில், தற்போது அடுத்த வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் ஆங்காங்கே மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு, மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரை

0

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரை

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மருத்துவர் குழு பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அடுத்தடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனை செய்ய 14 பேர் கொண்ட மருத்துவ குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசு நியமித்திருந்த இந்த மருத்துவர் குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுனை நீட்டிக்கலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 14 உறுப்பினர்களை கொண்ட இந்த மருத்துவர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தமிழக அமைச்சரவைக் குழுக் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. நாளை நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில், தற்போதுள்ள இந்த லாக்டவுனை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் பரிந்துரைக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இது மட்டுமில்லாமல் நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமர் நடத்தவுள்ள அந்த ஆலோசனை கூட்டத்திலும் தமிழக மருத்துவர் குழுவினரின் அளித்த இந்த பரிந்துரையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒடிஷாவில் வரும் ஏப்ரல் 30 ஆம்  தேதி வரை தற்போதுள்ள லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிகளை ஏன் கோரோனா தாக்கவில்லை? தமிழ் கலாச்சாரமும் அதன் பின்னணியும்!

0

நமது மூதாதையர்கள் அந்த காலத்திலேயே அறிவியலில் சிறந்து வழங்கியுள்ளனர். நம் நாட்டில் பெண்கள் தாலி அணிவது கலாச்சாரமாக இருந்து வருகிறது.

நம் நாட்டில் பெண்கள் தாலிக் கயிற்றில் மஞ்சள் புசுவது நம் பாரம்பரியமாகும். அந்த பழக்கத்திற்கு பின்னால் மிகப்பெரிய ஆச்சரியம் ஒளிந்துள்ளது.

பெண்கள் குளிக்கும் போது மஞ்சளை தாலிக்கயிறு மற்றும் முகத்தில் புசுவார்கள். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அதிலும் குறிப்பாக திருமணமான பெண்கள் அடுத்த சில மாதங்களில் ஒரு கருவை சுமக்கிறாள். அந்த கால கட்டத்தில் பெண்கள் நோய் தொற்றாமல் இருப்பது அவசியமாகும். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதால் கர்ப்பிணி பெண்களை நோய் தாக்காமல் காக்கிறது.

கடந்த காலங்களில் பெண்கள் மஞ்சள்கயிற்றை தாலியில் கோர்த்து அணிந்து வந்தனர். அக்காலத்தில் நம் நாட்டில் நிறைய சுகபிரசவங்கள் நடந்துள்ளது. எப்போது பெண்கள் தங்கத்தில் தாலி அணிய ஆரம்பித்தார்களோ அப்போதே சுகப்பிரசவங்கள் குறைந்து விட்டன.

இதே போல் முன்பெல்லாம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்ப்பட்டதில்லை. ஆனால் இப்போது எத்தனை பெண்களுக்கு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இன்றும் பெண்கள் கர்ப்பம் தரித்த பிறகு வெளியில் செல்லும் போது தலையில் வேப்பிலையை வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிறந்த கிருமி நாசினியான வேப்பிலை கர்ப்பிணிகளை நோய் தொற்றில் இருந்து காக்கிறது.

வெளிநாட்டு விஞ்ஞானிகள் வேம்பு மற்றும் மஞ்சளின் மருத்துவ குணங்களை புரிந்து கொண்டு அவற்றை வியாபாரம் ஆக்கிவிட்டனர். ஆனால் பகுத்தறிவு பேசி இது போன்ற நல்ல பழக்கங்களை கைவிட்டு விட்டோம்.

தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப நம் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் இருந்து வந்துள்ளன. இவ்வாறான பழக்கங்கள் நம்மை பல்வேறு நோய் தொற்றில் இருந்து காக்கும்.