Home Blog Page 5686

கொரோனா பாதிப்பில் விஜய் ரசிகர்களின் மாஸ்டர் பிளான்! 250 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி..!!

0

கொரோனா பாதிப்பில் விஜய் ரசிகர்களின் மாஸ்டர் பிளான்! 250 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி..!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளது. இதனால் வேலையில்லாமல் வறுமையில் ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

கொரோனாவை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திரமோடி மக்களிடம் தாராள நிதிவேண்டி வேண்டுகோள் வைத்தார். இதனையடுத்து பல்வேறு பிரபல நிறுவனங்கள் நிதி அளிக்கத் தொடங்கின. சினிமா திரைப்பட நடிகர், நடிகை போன்றவர்களும் கோடிக்கணக்கில் நிவாரண நிதியை அளித்துள்ளனர். மேலும் சிறுவர் முதல் பெரியவர் வரை மக்கள் மூலமாக நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஜயின் ரசிகர்கள் வடசென்னையில் கொரோனா பாதிப்பால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு 1,000 பால் பாக்கெட் கொடுத்து உதவியுள்ளனர். இதேபோல் தேனி மாவட்டத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் 250 குடும்பங்களுக்கு அத்தியாவசிய தேவையான காய்கறிகளை வழங்கியுள்ளனர். நடிகர்கள் பெயரில் சினிமா தியேட்டரில் விசில் அடிப்பதோடு இல்லாமல் ஆபத்தான சூழலில் மக்களுக்கு உதவிய விஜய் ரசிகர்களுக்கு மக்கள் சார்பிலும் சமூக வலைதளங்களின் சார்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதற்கு முன்பு கொரோனா நிவாரண உதவியாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சார்பில் 150 அரிசி மூட்டைகள் மக்களுக்கு வழங்கியதும், தொடர்ந்து அவசரகாலத்தில் உதவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மஹாராஷ்டிராவில் இருந்து கையில் பணமில்லாமல் நடந்தே வந்த தமிழக இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!

0

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த அதிரடி உத்தரவால் காவல்துறை வெளியில் வருபவர்களிடம் கண்டிப்பு காட்டி வந்தது, இதனால் நாடு முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று தமிழக முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையில் வெளியூர்களில் வெளி மாநிலங்களில் வேலை செய்துவரும் கூலித் தொழிலாளர்கள் தாங்கள் பிறந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே சிக்கித்தவித்தனர். இவ்வாறு நாமக்கல் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த லோகேஷ் என்ற வாலிபர், ஊரடங்கு உத்தரவால் மகாராஷ்டிராவில் சிக்கி தவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் லோகேஷ் மகாராஷ்டிராவிலேயே தங்கியிருந்தார், அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கொரோனா அச்சுறுத்தலால் வீட்டை காலி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த வாலிபர் அங்கிருந்து புறப்பட்டு நடந்தே வீட்டுக்கு வர முடிவு செய்தார்.

லோகேஷ் நடந்து வரும்போது சில லாரி ஓட்டுநர்களின் உதவியோடு கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர்களை கடந்துள்ளார். வரும் வழியில் ஆந்திராவில் உள்ள முகாம் ஒன்றில் இரவு தங்கி உள்ளார், அங்கு அவர் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

லோக்கேஷன் பரிசோதனை செய்த டாக்டர் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சொந்த ஊரான நாமக்கல் அருகில் உள்ள பள்ளிபாளையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

கொரோனாவை வென்ற டொனால்ட் டிரம்ப்! இரண்டாவது முறையும் பாஸ்.!!

0

கொரோனாவை வென்ற டொனால்ட் டிரம்ப்! இரண்டாவது முறையும் பாஸ்.!!

சீனாவின் வூகான் பகுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் 199 உலக நாடுகளுக்கு பரவி பலாயிரம் உயிர்களை பலிவாங்கியது. குறிப்பாக இத்தாலி, பிரான்சு, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் கொரோனாவால் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்ததால் டிரம்ப்பிற்கும் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று முதலில் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்பது உறுதியானது.

இந்நிலையில், இரண்டாவது முறையாக அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்கிற பரிசோதனை நடத்தியபோது 2 வது முறையும் எவ்வித கொரோனா அறிகுறியும் டிரம்ப்புக்கு இல்லை என்று உறுதியானது. மேலும் அதிபர் டிரம்ப் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அமெரிக்கா வல்லரசு நாடாக இருந்தாலும் கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் அந்நாட்டு மக்களிடம் அதிகரித்து வருகிறது.

சாராயத்தை விட இதில் தான் போதை அதிகம் : இயக்குநர் பார்த்திபன் பரபரப்பு தகவல்!

0

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த உத்தரவால் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிகவளாகம், தியேட்டர், கோயில்கள், சர்ச்கள், ஒயின் ஷாப்கள், பார்கள், உள்ளிட்டவை அதிரடியாக மூடப்பட்டன. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் வர வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார்.

இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால் குடிமகன்கள் சாராயம் கிடைக்காமல் அல்லாடி வந்தனர். மேலும் சில மது பிரியர்கள் சாராயம் கிடைக்காத காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளனர்.

இதற்கிடையில் சில இடங்களில் கள்ள மார்க்கெட்டில் சாராய பாட்டில்களை அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு இயக்குனர் பார்த்திபன் பேட்டி ஒன்றை அளித்தார், அதில் கூறியதாவது;

“அரசு மதுபான கடைகளை மற்றும் பார்களை மூடியுள்ள நிலையில் மது பிரியர்கள் அந்த பழக்கத்தை கைவிட முயற்சி செய்ய வேண்டும். சாராயத்தை விட அதிக போதை வேண்டும் என்றால் ‘தியானம் செய்யுங்கள்’, இந்த போத பழகிவிட்டால் அந்த போதை மறந்துவிடும்” என்று கூறியுள்ளார்.

மதுக்கடை சுவரில் துளையிட்ட திருட்டு புள்ளீங்கோ! திருப்பத்தூரில் கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் உயிரிழப்பு!

0

மதுக்கடை சுவரில் துளையிட்ட திருட்டு புள்ளீங்கோ! திருப்பத்தூரில் கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் உயிரிழப்பு!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மூடப்பட்ட மதுபானக் கடையின் சுவரை துளையிட்டு மதுபாட்டிலை சிறுவன் திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா முழுக்க தேசிய ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் அத்தியாவசியமற்ற டாஸ்மாக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழலில் தினமும் குடிபழக்கம் கொண்ட மதுப்பிரியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

வருகிற ஏப்ரல் 14 வரை இந்த உத்தரவு தொடரும் என்கிற காரணத்தால் பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. மது விற்பனை இல்லாத காரணத்தால் கள்ளச் சாராயத்தை சிலர் தேட ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தின் அருகேயுள்ள மதுபான கடையின் சுவரை துளையிட்டு மதுவை திருட முயன்ற சிறுவன் சிக்கியுள்ளான். மேலும் திருடும் மது பாட்டில்களை திருட்டுத்தனமாக விற்று வந்துள்ளான். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் தரப்பட்டதை தொடர்ந்து, சிறுவன் போலீசாரிடம் பிடிபட்டான். பின்னர் எவ்வாறு திருட்டு நடந்தது என்பதை செயல்முறையாக நடித்துக் காட்டிய சம்பவம் நடந்துள்ளது.
வேலையின்மை காரணமாக பலர் தேவையற்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு காவல்துறையில் சிக்கிக் கொள்வது தொடர்ந்து வருகிறது.

மேலும் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது. ஆம்பூர் அருகே நாயக்கனேரி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தார். ஊரடங்கு உத்தரவின் போதும் பல்வேறு சட்டவிரோத செயல்களும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா உறுதியாகி தனிமைப்படுத்தப்பட்ட தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் செவிலியர்களிடம் அநாகரிகமான நடவடிக்கை!

0

உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று கோர தாண்டவம் ஆடிவருகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை ஏற்று பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை பொது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கும் முன்னதாக டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாஅதில் மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை இஸ்லாமிய மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாட்டில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இது தெரியாமல் பல மாநிலங்களில் இருந்து வந்த உறுப்பினர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கடந்த மார்ச் 29 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டோரை அரசு பரிசோதனைக்கு அழைத்துள்ளது, அதில் சிலர் ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வந்தனர்.

இதனையடுத்து அரசு உத்தரவின் பேரில் அவர்களை போலீஸ் பாதுகாப்புடன் பரிசோதனை மையங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதால் பல்வேறு மாநிலங்களில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் டெல்லி காஸியாபாத்தில் அனுமதிக்கப்பட்ட சிலர் இரவு வேளையில் செவிலியரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக தகவல் வந்தது. ஆரம்பத்தில் விருப்பப்பட்ட உணவுகளை கேட்டும், பீடி சிகரெட் தர செல்லி ரகளை செய்துள்ளனர், பின்னர் இரவு வேளையில் செவிலியர்கள் முன்பு நிர்வாணமாக நின்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நேற்று இரவு அந்த மருத்துவ முகாமில் இருந்து காஸியாபாத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு புகார் அளிக்கப்பட்டு போலீசார் நேரில் வந்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் 6 நபர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டது உறுதியாகி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் நேற்று மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு மருத்துவ முகாமில் சிலர் ஒத்துழைப்பு அளிக்க முறுத்து ரகளை செய்ததால் காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து நிலையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிகிறது.

ஏப்ரல் 5 ஆம் தேதி மின் விளக்குகளை அணையுங்கள்! மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

0

ஏப்ரல் 5 ஆம் தேதி மின் விளக்குகளை அணையுங்கள்! மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

கொரோனா தொற்று உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இதுவரை 53 பேர் இதனால் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி நேரலை வீடியோ மூலம் மக்களை சந்தித்து முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது;

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுத்து இருப்பதும் இந்த சவாலை எதிர்கொண்டு சிறப்பாக செயல்பட்டதற்கு நன்றி. அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து ஊரடங்கு உத்தரவை மதித்து நடக்கும் அனைவருக்கும் நன்றி. இந்திய மக்களின் ஊரடங்கு உத்தரவு உலகத்திற்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது.

அவரவர் வீட்டில் இருந்து ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனா வை கட்டுப்படுத்த முடியும். தேசிய ஊரடங்கு உத்தரவால் 130 கோடி மக்கள் வீட்டில் இருந்தாலும் பிரிவு இல்லாமல் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வரை உங்கள் மின் விளக்கை அணையுங்கள். வீட்டில் இருக்கும் 4 மூலைகளிலும் வெளிச்சத்தை தரும் டார்ச் விளக்கு, அகல் விளக்கு, செல்லபோன் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு முன்பு கொரோனாவிற்கு எதிராக போராடிவரும் மருத்துவர்களுக்கு வீட்டில் இருந்தே கைதட்டி உற்சாகம் தருமாறு மோடி கூறியதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

இளம்பெண்ணை அடைய ஈபி ஆபிசர் செய்த காரியம்! கணவன் கொடுத்த ஷாக் ட்ரீட்மெட்! அதிர்ந்து போன காவல்துறை..!!

0

இளம்பெண்ணை அடைய ஈபி ஆபிசர் செய்த காரியம்! கணவன் கொடுத்த ஷாக் ட்ரீட்மெட்! அதிர்ந்து போன காவல்துறை..!!

கள்ளக்காதலுக்காக மின்சார ஊழியர் செய்த தவறான செயலால் இளம்பெண்ணின் கணவரிடம் அடி வாங்கிய சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள நேரு நகரைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் மின்சார ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு விடுமுறை கிடையாது என்பதால் வழக்கம்போல மின்சார பணிக்கு சென்று வந்த பழனிசாமி, செவ்வாய் கிழமை அன்று ஊரடங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் தன்னை தாக்கிவிட்டதாக அவரது சக பணியாளர்களிடம் கூறினார்.

இதுகுறித்து சக மின்சார ஊழியர்கள் கேட்டபோது; சதுரங்கவாடி இந்தியன் வங்கி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தனது வாகனத்தை நிறுத்தி விசாரித்ததாகவும், மின்சார ஊழியர் என்று கூறிய பின்னரும் அதை நம்பாமல் தன்னை சராமாரியாக தாக்கினர் என்றும், மேலும் தனது அடையாள அட்டையை காட்டுவதற்குள் கடுமையாக தக்கியதாக தனது முதுகையும் பழனிசாமி சக பணியாளர்களிடம் காண்பித்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மின்சார ஊழியர்கள் பழனிசாமிக்கு நடந்த கொடுமை குறித்து சங்கத்தின் மூலம் மின்வாரிய தலைவருக்கு புகார் அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக சமூக வலைதளங்களிலும் அவர்கள் கண்டனத்தை பதிவு செய்ததோடு ஒரு கட்டத்தில் போலீசாரை கண்டித்து போராட்டம் வரை சென்றது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பான புகார் காவல்நிலையம் சென்றது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த துணை கண்காணிப்பாளர் செளந்தரராஜன் இதுகுறித்து விசாரணை நடத்த கூறினார்.

அத்தியாவசிய பணியில் இருக்கும் ஊழியரை யார் அடித்தது என்ற கேள்விக்கு, நாங்கள் யாரையும் தாக்கவில்லை என்று ஊர்க்காவல் பணியில் இருந்த போலீசார் பதில் கூறினர். இதனையடுத்து சிசிடிவியில் இச்சம்பவம் தொடர்பாக தேடியபோது மின்சார ஊழியர் பழனிச்சாமி போலீசார் இருந்த வழியில் வரவே இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சியான தகவல் வெளியானது.

மின்வாரியத்தில் பயிற்சிக்கு பழக வந்த 22 வயதான இளம்பெண்ணிடம் தவறான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள அவருக்கு நிரந்தர வேலை வாங்கி தருவதாக ஜாலியாகவும், தந்திரமாகவும் பேசி மயக்கி கள்ளக்காதலை வளர்த்து இருவரும் பழகி வந்துள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த இளம்பெண்ணின் கணவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் பழனிசாமியுடன் பழகுவதை இளம்பெண் தவிர்த்துள்ளார். ஆனாலும் பழனிசாமி தனது ஆசையை அடக்கமுடியாமல் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மனைவி மூலம் பழனிச்சாமியை வீட்டிற்கு வரவழைக்கு கணவன் திட்டமிட்டார். கணவர் சொன்னபடியே பழனிசாமியை அவரது வீட்டிற்கு இளம்பெண் அழைத்துள்ளார்.

செவ்வாய் கிழமையன்று வேலை முடிந்து தனது வீட்டுக்கு செல்லாமல், ஆசையுடன் இளம்பெண்ணின் வீட்டிற்கு பழனிசாமி சென்றுள்ளார். வீட்டிற்கு உள்ளே நுழைந்ததும் இளம்பெண் உடனடியாக கதவை சாத்திய பிறகு கனவோடு சென்ற பழனிசாமிக்கு இளம்பெண்ணின் கணவர் மூலம் தர்ம அடியும் கும்மாங்குத்தும் விழுந்தது. இதனையடுத்து தான் அடிவாங்கியது மனைவிக்கு தெரிந்தால் பிரச்சினையாகும் என்பதால் போலீஸ் மீது தவறான குற்றச்சாட்டை கூறி தப்பிக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதைக் கேட்டதும் மின்சார ஊழியர்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் பின்னர் பழனிசாமி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். சக ஊழியர்களும் காவல்துறையினரிடம் வருத்தம் தெரிவித்து சென்றனர். கள்ளக்காதலுக்காக காவல்துறை மீது பொய் குற்றச்சாட்டு கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 2144 பேருக்கு கொரோனா தொற்று : மாநில அளவில் பதர வைக்கும் எண்ணிக்கை!

0

சீனாவின் வூகான் மாநகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் பாரத பிரதமர் மோடி மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எண்ணிக்கை தற்போது 2144 ஆக உயர்ந்துள்ளளது. இந்த நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 50-ஐ கடந்துள்ளது, மேலும் 156 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில் அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை கீழே வழங்கப்பட்டுள்ளது;

மகாராஷ்டிரா – 355
கேரளா – 325
ராஜஸ்தான் – 108
தெலுங்கானா – 107
பஞ்சாப் – 45
ஹரியானா – 43
குஜராத் – 87
லடாக் – லடாக்
ஜம்மு – 62
தமிழ்நாடு – 309
பாண்டிச்சேரி – 3
மத்திய பிரதேசம் – 99
மேற்கு வங்கம் – 53
உத்தர்கண்ட் – 7
ஹிமாச்சல் – 3
ஒடிசா – 4

தமிழக அளவில் மாவட்ட வாரியாக நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை வருமாறு;

சென்னை – 46
ஈரோடு – 32
திருநெல்வேலி – 30
கோவை – 29
தேனி – 20
நாமக்கல் – 18
செங்கல்பட்டு – 18
திண்டுக்கல் – 17
கரூர் – 17
மதுரை – 15
திருப்பத்தூர் – 10
விருதுநகர் – 10
திருவாரூர் – 7
சேலம் – 6
ராணிப்பேட்டை – 5
கன்னியாகுமரி – 5
சிவகங்கை – 5
தூத்துக்குடி – 5
விழுப்புரம் – 3
காஞ்சிபுரம் – 3
திருவண்ணாமலை – 2
ராமநாதபுரம் – 2
திருவள்ளூர் – 1
வேலூர் – 1
தஞ்சாவூர் – 1
திருப்பூர் – 1

இந்த தகவல்கள் மத்திய மற்றும் மாநில அரசுகள் நேற்று மாலை வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை

0

வீட்டிலுள்ள செல்வம் பெருகவும் தொடர்ந்து நிலைத்திருக்கவும் நாம் சில ஆன்மீக வழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று இந்து ஆன்மிகம் கூறுகிறது.

ஒருவருவரும் அவரது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு அருந்த தண்ணீர் தர வேண்டும். அதன் பின்னர் மஞ்சள் மற்றும் குங்குமம் தர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்குண்டான ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து தொடர்ந்து பண வரவு ஏற்பட்டு செல்வம் பெருகும்.

ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் யாரும் அவர்களது வீட்டு வாசலில் கோலம் இடக்கூடாது. மேலும் தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. காலைப் பொழுதில் பூஜை எதுவும் செய்யக் கூடாது. இதனையடுத்து பிதுர்களை மட்டும் வழிபட்டுவர பணம் வரவு ஏற்பட்டு வீட்டில் செல்வம் பெருகும்.

ருத்திராட்சம்,ஸ்படிகம் மற்றும் துளசி மணி உள்ளிட்ட மாலைகளை ஜபம் மற்றும் ஹோமம் செய்யும் காலங்களைத் தவிர மற்ற நாட்களில் அணியக் கூடாது. மேலும் வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி மற்றும் நூல் உள்ளிட்டவைகளை வீட்டை விட்டு வெளியே கொடுக்கக் கூடாது. இப்படி செய்தால் வீட்டில் உள்ள செல்வம் மற்றும் பணமும் உங்களை விட்டு சென்று விடும்.

கோயிலுக்குச் செல்லும் நேரத்திலும்,பூஜை செய்யும் காலங்களிலும் பெண்கள் அவர்களது தலை முடியை அப்படியே தொங்கவிட்டு செல்லாமல் நுனியில் முடிச்சுப் போடவேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் பண வரவும் செல்வமும் தொடர்ந்து நிலைத்திருக்கும்.

பூஜை செய்யும் நேரத்தில் பூத்தட்டை பெண்கள் மடியில் வைத்து பூவெடுத்து பூஜை செய்யக் கூடாது. மேலும் வெறுங்கையில் பூவை பறித்து வந்து அதை இறைவனுக்கு படைத்து பூஜை செய்யக் கூடாது.

ஒவ்வொருவரும் நீங்கள் அணியும் ஒற்றை ருத்திராட்சத்தைக் கழுத்துக் குழிக்கு மேல் தான் கட்ட வேண்டும். அது அந்த இடத்திற்கு கீழே இறங்கக் கூடாது. மேலும் அது எப்பொழுதும் கழுத்தில் இருக்கலாம். துளசி மற்றும் வில்வம் உள்ளிட்டவற்றை செவ்வாய், வெள்ளி, அமாவாசை பெளர்ணமி, துவாதசி சாயங்காலம் மற்றும் இரவு நேரங்களில் பறிக்கக் கூடாது.

வீட்டில் சாமியிடம் ஏற்றிய பிறகு அந்த தீபத்தை வாயினால் ஊதி அணைக்கக் கூடாது. மேலும் விரலால் பால் தொட்டு வைத்தோ, குங்குமம் வைத்தோ, பூவாலோ அந்த தீபத்தை அணைக்கலாம். இதையெல்லாம் கடைபிடித்தால் வீட்டில் எப்பொழுதும் செல்வமும்,பணவரவும் நிலைத்திருக்கும் என்று இந்து ஆன்மிகம் தெரிவிக்கிறது.